என் மனசுல தோணற சில விஷயங்களை நான் மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கறது கிடையாது. அப்படி ஷேர் பண்ணிக்கிட்டா செமத்தியா திட்டு விழும்கறதால டைரில மட்டும் எழுதி வெச்சுக்கறது என் பழக்கம். தென்றல் சசிகலா அக்கா தன்னோட ‘ஆடிவெள்ளி’ங்கற பதிவுல என்னைத் தொடரச் சொன்னதும் என் டைரிப் பக்கம் ஒண்ணை ஷேர் பண்ணா சரியா இருக்குமனு தோணிச்சு. இங்க தரேன். கல் வீசறவங்க தாராளமா வீசலாம்....
நிரஞ்சனாவின் டைரியிலிருந்து...
பொதுவா நான் பெரிய பக்திமான், பக்திப்புலி எதுவும் கிடையாது. வெள்ளிக்கிழமை கோயில்களுக்குப் போகணும்னோ, விசேஷ நாட்கள்ல போகணும்னோ எந்தக் கட்டாயமும் வெச்சுக்கறதில்லை. அம்மாவோ இல்ல மத்த ரிலேஷன்ஸோ கூட வந்தாத்தான் போவேன். வீட்லயும் ஸ்லோகம் சொல்றது, சாமி கும்பிடறதுங்கற பழக்கம் அம்மாகிட்டத்தான் உண்டு. எனக்கு இல்லை. இதுக்காக அம்மாட்ட திட்டு வாங்கினதும் உண்டு. அவங்க மனசு கோணக் கூடாதுன்னுதான் அம்மாவோட கோயிலுக்குப் போறது வழக்கம். நானாப் போக மாட்டேன். இப்படிப்பட்ட எனக்கு இந்த ஆடி மாசத்துல மட்டும் ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ன்னு கூச்சலிட்டுட்டு நாத்திகமா ஆயிடலாம்னுதான் தோணும்.
இன்னிக்குத் தேதியில தமிழ்நாட்டுல முக்கிய நகரங்கள்ல எல்லாம் நெருக்கம் நெருக்கமா வீடுகள் கட்டப்பட்டிருக்கு. ஏறக்குறைய ரெண்டு தெருக்களுக்கு ஒரு கோயில் (சின்னதோ, பெரிசோ) உண்டு. எல்லாத்துலயும் பெரிசா கூம்பு மைக் வெச்சு, அதிகாலையிலயே பாட்டைப் போட்ட அலற ஆரம்பிச்சுதுன்னா, மதியம் வரைக்கும் ஓயறதில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தா கான்சென்ட்ரேட் பண்ணிப் படிக்க முடியாது. இந்தப் பக்கம் தாத்தாவானா தூக்கம் கலைஞ்ச எரிச்சல்ல, எழுந்து புலம்பிட்டிருப்பாரு.
‘இந்த சனியன் பிடிச்ச கோயிலை இடிச்சுட்டு வந்தா என்ன’ன்னு எனக்கு கோபம் பொங்கும். ஆனா வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஒருமுறை சொன்னதுக்கு, ‘‘பொண்ணா லட்சணமாவா திங்க் பண்ற நீ? தீவிரவாதி ரேஞ்சுக்குப் பேசறியே... கொஞ்சமாவது பக்தி இருக்கா உனக்கு?’’ன்னு ஆரம்பிச்சு அரை மணி நேரம் அம்மா டோஸ் விட்டாங்க. நிஜமா எனக்குப் புரியலைங்க. திங்க் பண்றதுலகூட பெண்ணா இருந்து திங்க் பண்றது வேற, ஆணா இருந்து திங்க் பண்றது வேறயா? மூளைங்கற வஸ்து எல்லாருக்கும் ஒரே மாதிரிதானே வைக்கப்பட்டிருக்குது?
சரி... பேசவந்த விஷயத்துக்கு வர்றேன். ஏன் இந்துக் கோயில்கள்ல இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், கொண்டாட்டங்கள்ங்கற விஷயம் எனக்கு எப்பவுமே புரியாத புதிர்தான். சர்ச்ல ஸ்பீக்கர் வெச்சு பாடினாலும், பேசினாலும் அந்த பில்டிங்கைத்தாண்டி ஓசை வராது. மசூதிகள்ல தொழுகைக்கு அழைக்க நேரம் மட்டும்தான் ஸ்பீக்கர் சத்தம் எழும். நம்ம இந்துக் கோயில்கள்லதான் இப்படி ஸ்பீக்கர் வெச்சுக் கத்தறதும், அமர்க்களம் பண்றதும். தவிர, திருவிழான்னா, சாமிய மேளம், வாத்தியம் முழங்க ஊர்வலமா எடுத்துட்டு வர்றதும், அது கிராஸ் பண்ற வரைக்கும், ட்ராபிக்கே ஸ்தம்பிக்க வெக்கறதும் ஏன்? ஜீசஸ் சிலைய ஊர்வலமா எடுத்துட்டு வந்து பாத்திருக்கீங்களா நீங்க? இந்துக்கள் பெரும்பான்மையா இருக்கற தேசம்ங்கறதால இப்படியா? சாமியக் கும்பிடணும்னு விரும்பறவங்க கோயிலுக்குப் போய்க் கும்பிட்டுக்கட்டும். அது ஏங்க தெருவுக்கு வரணும்?
இதே ஆடி மாசத்துல இஸ்லாமியர்கள் பக்தி செலுத்த பட்டினி இருந்து, ஆறு வேளையும் தொழுது ரம்ஜான் விரதம் இருப்பாங்க நம்ம பயபுள்ளைங்க இந்த மாசத்துல ஆர்ப்பாட்டம் பண்ணி, ஏரியாவையே அலற வெச்சு தங்களோட பக்திய வெளிப்படுத்துவாங்க... கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா... பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும்னும். கிருஷ்ணருக்கு வெண்ணை பிடிக்குமனும் சொல்லி அவங்க பேரைச் சொல்லி இவங்க சாப்பிடுவாங்க. ஏன் எந்தக் கடவுளுக்கும் கட்லெட். ப்ரைட் ரைஸ்லாம் பிடிக்காதா? கூழ்தான் பிடிக்குமா? ஏன்னா... கடவுள் தத்துவத்தை உருவாக்கின முன்னோர்கள் காலத்துல இந்த ஃபுட்லாம் இல்ல. அதனாலதான் கடவுள்கள் இதை சாப்பிடலை.
இது பத்தாதுன்னு ஒரு கும்பலே கைல ஒரு நோட்டை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வீடு படையெடுத்துடுவாங்க- கோயில் திருவிழாவுக்கு வசூல் பண்றோம்னு. அந்தப் பணம்லாம் கோயிலுக்குப் போய்ச் சேருதோ... இல்ல ‘களவாணி’ படத்து விமல் குரூப் மாதிரி ‘நீராகாரம்’ சாப்பிடப் போய்த் தொலையுதோ... சம்பந்தப்பட்ட சாமிகளுக்கே வெளிச்சம்!
சின்னப் பிள்ளைங்க பொம்மைகளை வெச்சுக்கிட்டு, அதுங்களை சாப்பிட வெக்கறதாயும், சண்டை போட்டுக்கறதை சமாதானம் பண்றதாகவும் தனியா ஒரு பொம்மை உலகத்தை நிர்மாணிச்சுக்கிட்டு வாழும். எனக்கு கோயில்களைப் பாத்தா அப்படித்தான் பெரியவங்க நிர்மாணிச்சுட்டிருக்கற பொம்மை உலகமா தோணுது. குழந்தைங்களோட சின்ன சைஸ் பொம்மைகளுக்குப் பதிலா பெரிய சைஸ் விகரகங்கள். அதைக் குளிப்பாட்டறதும், தூங்க வெக்கறதும்...! ஒரு பக்கம் புராணங்கள்ல சாமி தூங்கவே தூங்காது தூங்கற மாதிரி நடிக்கும்னு பெருமையடிச்சுப்பாங்க. இன்னொரு பக்கம் ராத்திரியானா சாமியை சயன அறைல விடறதுக்கு ஒரு சம்பிரதாயம்! நீங்க வேணும்னா தூங்கப் போங்கப்பா... அவங்களும் தூங்கியாகணுமா என்ன?
‘‘சாமிக்கு கோயில்ல சமையலறை (மடப்பள்ளி) கட்டிருயிருக்கீங்க. சாமி தூங்கறதுக்கு சயன அறைன்னு கட்டியிருக்கீங்க. சாமிக்கு ஒரு பாத்ரூம் கட்டினீங்களாடா? சாமிக்கு அதெல்லாம் போகணும்னா என்னடா பண்ணுவாரு...?’’ன்னு பெரியார் கேட்டது சரியான கேள்விதான். இதுக்கு பதில் யாரும் சொன்னதாத் தெரியலை. இறை நம்பிக்கைன்ற விஷயத்துல இப்படி எனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கறதாலதான் நான் சாமி கும்பிடறதையும், கோயில்களுக்குப் போறதையும் அம்மாவோட விருப்பத்துக்காகத்தான் செஞ்சுட்டிருக்கேன்.
அதே சமயம் இன்னொண்ணையும் இங்க சொல்லி முடிக்கறேன். கடவுள் உருவங்கள்ல விநாயகரும் கிருஷ்ணனும் எனக்கு ரொம்பவே பிடித்தமானவை. கண்ணன் பத்தி பாரதியார் பாடின பாட்டுக்கள்லருந்து கோவை சரளா அக்கா எழுதின கவிதைகள் வரை அனைத்தையும் விரும்பி ரசிக்கறவ நான். நிரஞ்சனா ஒரு முரண்பாட்டு மூட்டை.

இந்த விஷயம் பத்தி தங்களோட கருத்துக்களைத் தொடர்ந்து சொல்ல நான் அழைக்கறவங்க... 1) தோழி அதிஸயா 2) நண்பர் சீனு 3) (விரும்பினால்) கோவை சரளா அக்கா.