ரொம்ப நாளா என் மனசுல உறுத்திட்டிருக்கற விஷயத்தை இப்ப உங்ககூட பகிர்ந்துக்கப் போறேன். முந்தா நாளா நான் மைலாப்பூர்லருந்து தி.நகருக்கு பஸ்ல வந்துட்டிருந்தேன். அப்போ ரோட்ல எதிர்ல ஒரு சவ ஊர்வலம் கிராஸ் பண்ணிச்சு. நடுரோட்டில வெடிகளை வெடிச்சு, டிராஃபிக்கை ஸ்தம்பிக்க வெச்சுட்டு கிராஸ் பண்ணினாங்க.
முன்னால ‘உற்சாகத்தோட’ ஆடிட்டு வந்த ரெண்டு பேரு மாலையில இருந்து பூக்களைப் பிச்சு சுத்திலும் எறிஞ்சுட்டே போனாங்க. அதில ஒரு பூ ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த என் மடில வந்து விழ... அருவெறுப்போட தூக்கி எறிஞ்சேன். அந்த சவ ஊர்வலம் கிராஸ் பண்ணி, ட்ராஃபிக் கிளியராகி பஸ் நகர்றதுக்குள்ள எனக்கு லேசா மயக்கமே வந்துடுச்சு.
பொதுவா... நம்மைச் சேர்ந்த சொந்தங்கள்ல ஒண்ணு பிரிஞ்சிடுச்சுன்னா... அது பெரிய வேதனை இல்லையா? அந்த நபரின் இறுதி ஊர்வலம் அமைதியாத்தானே நடக்கணும்? புராண காலத்துல நரகாசுரன்னு ஒருத்தன் தான் இறந்த தினத்தை மக்கள் துக்கம் எதுவுமில்லாம பட்டாசு வெடிச்சு, ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடணும்னு வரம் கேட்டானாம். அதான தீபாவளின்னு ஒரு விஷயம் கேள்விப்பட்டிருக்கேன்.

இப்படி இறந்தவரோட சவ ஊர்வலத்துல வெடியெல்லாம் வெடிச்சு கொண்டாடிட்டுப் போனா, அவங்க இறப்பினால உறவினர்களுக்கு துக்கம் இல்லை... சாவைக் கொண்டாடறாங்கன்னுதானே அர்த்தம் ஆவுது? இறந்து போனவங்க நரகாசுரன் மாதிரி ஏதாவது அசுரர்களா என்ன?
இந்த என் ஆதங் கத்தை எங்கம்மா கிட்ட (வழக்கம்போல) ஷேர் பண்ணிக் கிட்டப்ப ஒரு விஷ யம் சொன்னாங்க. ‘‘நிரூமா! மன்னர்கள் காலத்துல எல்லாம் முறையான சாலை கள் கிடையாது. வெளியூர்லருந்து வர்ற உறவினர்கள் ரோட்ல பூ கிடக்கறதைப் பாத்தா, பிண ஊர்வலம் புறப்பட்டுடுச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டு, அந்தப் பூக்களை ஃபாலோ பண்ணி, மயானத்துக்கு வருவாங்க. அதுக்காகத்தான் பாதையில பூக்களைத் தூவிக்கிட்டுப் போனாங்க. இதைத் தவிர பூக்களைத் தூவி இறந்தவரை சொர்க்கத்துக்கு அனுப்பறதுன்னும் ஒரு நம்பிககை உண்டு’’ அப்டின்னாங்க. முன்னோர்கள் காலத்துல ரோட்டு வசதி இல்லாததால அப்படிப் பண்ணினாங்கன்னா... இப்பவும் என்ன, ஏதுன்னு எதுவும் யோசிக்காம அதை அப்படியே தொடரணுமா என்ன?
இறந்த உடலை அதிக நாட்கள் வீட்ல வெச்சுக்காம உடனே புதைக்கவோ, எரிக்கவோ செய்யறதுக்குக் காரணமே இறந்த உடல்களிலிருந்து பரவும் கிருமித் தொற்று அதிகம்கறதுதான். அப்படிப்பட்ட பிணங்களின் மேல போடப்பட்ட மாலைகளை பிய்ச்சு, ரோடு பூரா எறிஞ்சுட்டுப் போறது என்ன நாகரீகம்னு புரியலை. பூவோட இதழ்களை உதிர்த்தாக் கூட கொஞ்சம் பரவாயில்லன்னு சொல்லலாம். பூக்களையே சுத்துப்பக்கம் யார் இருக்காங்கன்னுகூட கவனிக்காம, இப்படி வெறித்தனமா வீசிட்டுப் போறங்களே... என்ன அநியாயம்!
இந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, மத்தவங்களுக்குத் தொல்லை கொடுத்துட்டுப் போறவங்களுக்கு ‘நம்ம -------- இறந்தப்ப. சும்மா அமர்க்களமா எடுத்துட்டுப் போயி ஊரையே கலக்கிட்டோம்ல...’ என்று பெருமையடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன பிரயோஜனம்னு தெரியலை! இப்படி மத்தவங்களை எரிச்சலும் கோபமும் பட வெச்சுட்டு இறப்பு ஊர்வலம் நடத்தணும்னு எந்த மதத்திலயும், எந்த ஆன்மீக புத்தகங்களும் சொன்னதா எனக்குத் தெரியலை.
நான் பார்த்த ஒரு சினிமாவுல அதோட கதாநாயகி ரோட்ல ஆம்புலன்ஸ் கிராஸ் பண்றதைப் பார்த்தா, அதுல போறவங்களுக்கு என்ன கஷடமோ, அது உடனே சரியாகணும்னு சாமிகிட்ட ஒரு செகண்ட் வேண்டிக்கிட்டு அப்புறம்தான் நடப்பான்னு ஒரு விஷயம் சொல்லியிருந்தாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுமாதிரி சவ ஊர்வலங்கள் கிராஸ் பண்ணினா, ‘ஐயோ பாவம், யாரோ என்னவோ... ஒரு உயிர் போயிடுச்சே’ன்னு மனசுல பரிதாபமும் துயரமும் வரணும். இந்த மாதிரி ஊர்வலங்களைப் பாக்கிறப்பல்லாம் எனக்கு அந்தச் சவங்களின் மேலேயே வெறுப்பும் கோபமும்தான் வருது.
‘‘ரொம்பக் கொடூரமா சிந்திக்கறடி நீ’’ன்னு எத்தனை பேர் என்னை அடிக்கப் போறீங்களோ... இல்ல, ‘‘சரியாச் சொன்ன நிரூ!’’ன்னு எத்தனை பேர் கை குலுக்கப் போறீ்ங்களோ... தெரியலை. ஆனா... இந்த விஷயத்தை உங்க எல்லார் கிட்டயும் பகிர்ந்துக்கிட்டதுல எனக்கு மனசு ரொம்ப லேசாயிடுச்சு. பொறுமையாப் படிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்!