போன வாரத்துல ‘மின்னல் வரிகள்’ கணேஷ் Uncle வீட்டுக்குப் போயிருந்தப்ப குட்டிக் குட்டியா ஏழெட்டுப் புத்தகங்கள் வாங்கி டேபிள் மேல வெச்சிருந்தார். அட்டைப் படங்களே அழகா இருந்தது. அதுவும் சுஜாதா எழுதினதுங்கறதால எடுத்துப் பார்த்தேன். சுஜாதாவோட எழுத்துக்கள் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். சரி, படிச்சுப் பார்க்கலாம்னு தோணிச்சு.
‘‘நிறைய புத்தகங்கள் படிசசால்தான் அறிவு வளரும்’’ என்பார் அவர் என்கிட்ட அடிக்கடி. ‘‘நீங்க படிச்சு ‘அதை’ வளத்துக்கங்க அங்கிள்! நிரூவுக்கு ஆண்டவன் ஏற்கனவே ஏராளமா மூளையக் குடுத்திருக்கான். வளத்துக்கவே வேண்டியதில்லை’’ என்பேன். அவர் வெறியாகி தலையில் குட்ட ஓடி வருவார். நானா மாட்டுறவ..? Ok.Ok. Jokes apart.... 200, 300 பக்கம் இருக்கற புத்தகத்தைப் படிக்கல்லாம் எனக்குப் பொறுமை இருக்கறது கிடையாது. That is the Truth! இதெல்லாம் என் ஹேண்ட் பேக்ல அடங்கற சைஸ்ல இருந்ததால அந்தப் புத்தகங்கள்ல சிலதை அவர்ட்ட கேட்டு எடுத்துட்டுப் போயி படிக்க ஆரம்பிச்சேன். நான் படிச்சு ரசிச்ச ரெண்டு கதைகளைப் பத்தி உங்ககிட்ட Share பண்ணிக்கறேன்...
ஒரு சிக்கலில்லாத காதல கதை
சரிதாவும், சரஸ்வதியும் டாக்டர்கள். House Surgeon Hostelல் தங்கி பிராக்டிஸ் பண்ணுறவங்க. சரிதா பேரழகி. சரஸ்வதி சுமார். அவ கனவுல ஒரு ராஜகுமாரன் அடிக்கடி வர்றான். ஒருநாள் அவனைப் போன்ற ஒருவன் ஹாஸ்டலில் அவளை மீட் பண்றான். அவள் தூரத்து உறவு என்று சொல்லி அறிமுகமாகிறான். கோபிநாத் என்ற அவனிடம் தன் ராஜகுமாரனைப் பார்க்கிறா அவ. சரஸ்வதி கிட்டப் பேசுற அவன் அவளது விசாலமான அறிவைப் பாத்து பிரமிச்சுப் போறான்.
உயிர்மை * 48 பக்கம் * 25 ரூபாய் |
அவனையும் சரிதாவையும் சந்திக்க வைக்கிறாள் சரஸ்வதி. அந்தச் சந்திப்பில் சரிதாவை அவன் அலட்சியப்படுத்துகிறான். சரஸ்வதிக்கு அவன்கூட நெருக்கம் அதிகமாகிடுது. ஒருநாள் கோபியும் சராசரி ஆண் அப்படின்னு வெறுப்புடன் சொல்ற சரிதா, அவன் எழுதிய கடிதத்தை சரஸ்வதியிடம் காட்டுகிறாள். அதில் ‘ உன்னைப் பார்த்த கணமே காதலிக்க ஆரம்பித்து விட்டேன் சரிதா. சரஸ்வதியிடம் நிறையப் பேசினால் அதில் பாதியாவது உன்னை வந்தடையும். என்னைத் திரும்பிப் பார்ப்பாய் என்றுதான் அவளுடன் பழகினேன்.’ அப்படின்னு ஆரம்பிச்சு நிறைய உளறியிருக்கான் அவன்.
சரிதாவைக காதலிக்கத் தன்னை கருவியாகப் பயன்படுத்திட்டானே என்று அவள் இதயம் உடைஞ்சு போகுது. கார்டினால் மாத்திரைகளைத் முழுங்கி தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணி நைட் டைம்ல மாத்திரைய எடுக்க ஆஸ்பத்திரிக்குப் போறா அவ. மாத்திரை பாட்டிலை எடுத்துட்டு வர்றப்ப உயிருக்குப் போராடற ஒரு நோயாளியை சீஃப் டாக்டர் வர்றவரை காப்பாத்த வேண்டிய கட்டாயம் வந்துடுது. தன் மருத்துவ அறிவையெல்லாம் பயன்படுத்தி அந்த உயிரைக் காப்பாத்துறா அவ. சீஃப் டாக்டர் வந்து செய்ய வேண்டியவற்றைச் செய்துவிட்டு அவளின் முயற்சிகளைப் பாராட்டுகிறார். அவளுக்கு தன் ராஜகுமாரன் மருத்துவத் தொழில்தான் என்று அந்த நிமிஷம் புரிகிறது. தன் முடிவை அவள் கைவிட, கார்டினால் மாத்திரை பாட்டில் தரையில் விழுந்து மாத்திரைகள் சிதறுகின்றன.
எனக்கு் தெரிஞ்ச வரையில கதையோட Juice இங்க சொல்லியிருக்கேன். But, சுஜாதாவோட வார்த்தைகள்ல படிக்கிறப்ப அது எழுப்பின Feelings விவரிக்கிறது ரொம்பக் கஷ்டம். அழகான Dialogues, சரஸ்வதியோட ரசனைகள்ன்னு படிக்க ரொம்ப ரொம்ப ஈஸியான நடையில அருமையா எழுதியிருக்காருங்க. காதல் என்கிற விஷயத்தோட ஃபீலை படிக்கறவங்களுக்குள்ள அழகா உருவாக்கிட்டு, அந்த Climax மூலமா மனசுல உக்காந்துடறார்.
விளிம்பு
சாரதி என்கிற இளைஞனோட மன அவஸ்தைகளே கதை. அவனே சொல்வதாக கதை துவங்குது. அவன் பத்து ஆசாமிகளுக்குள்ள சிந்தனை ஓட்டத்தினால் ரொம்பவே சிரமப்படுகிறான். விஜயன் என்று அறிமுகமாகும் புதிய அலுவலகத் தோழன் அவனை சைக்யாட்ரிஸ்டை சந்திக்கச் சொல்கிறான். சாரதி பார்த்துவிட்டு வர, எதுவும் பலனில்லை. ‘உன் பிரச்னை எனக்குத் தெரியும். சின்ன வயதில் உன் அம்மாவோட தவறான நடத்தையும் அதை நீ பாத்ததும் தான்’ என்று விஜயன் சொல்ல, கடும் கோபமாகிறான் சாரதி. அப்புறமும் பல சந்தர்ப்பங்களில் விஜயன் ‘பச்சை’யாக நிஜம் பேச, Mental Agony தாங்காமல் அவனைக் கொன்றுவிட முடிவு பண்றான் சாரதி. அலுவலகத்தில் வார இறுதியில் நந்தி ஹில்ஸ் டூர் போகத் தீர்மானிக்கப்பட அங்கே விஜயனைக் கொல்வதென்று திட்டம் போடறான்.
சரிதாவைக காதலிக்கத் தன்னை கருவியாகப் பயன்படுத்திட்டானே என்று அவள் இதயம் உடைஞ்சு போகுது. கார்டினால் மாத்திரைகளைத் முழுங்கி தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணி நைட் டைம்ல மாத்திரைய எடுக்க ஆஸ்பத்திரிக்குப் போறா அவ. மாத்திரை பாட்டிலை எடுத்துட்டு வர்றப்ப உயிருக்குப் போராடற ஒரு நோயாளியை சீஃப் டாக்டர் வர்றவரை காப்பாத்த வேண்டிய கட்டாயம் வந்துடுது. தன் மருத்துவ அறிவையெல்லாம் பயன்படுத்தி அந்த உயிரைக் காப்பாத்துறா அவ. சீஃப் டாக்டர் வந்து செய்ய வேண்டியவற்றைச் செய்துவிட்டு அவளின் முயற்சிகளைப் பாராட்டுகிறார். அவளுக்கு தன் ராஜகுமாரன் மருத்துவத் தொழில்தான் என்று அந்த நிமிஷம் புரிகிறது. தன் முடிவை அவள் கைவிட, கார்டினால் மாத்திரை பாட்டில் தரையில் விழுந்து மாத்திரைகள் சிதறுகின்றன.
எனக்கு் தெரிஞ்ச வரையில கதையோட Juice இங்க சொல்லியிருக்கேன். But, சுஜாதாவோட வார்த்தைகள்ல படிக்கிறப்ப அது எழுப்பின Feelings விவரிக்கிறது ரொம்பக் கஷ்டம். அழகான Dialogues, சரஸ்வதியோட ரசனைகள்ன்னு படிக்க ரொம்ப ரொம்ப ஈஸியான நடையில அருமையா எழுதியிருக்காருங்க. காதல் என்கிற விஷயத்தோட ஃபீலை படிக்கறவங்களுக்குள்ள அழகா உருவாக்கிட்டு, அந்த Climax மூலமா மனசுல உக்காந்துடறார்.
விளிம்பு
சாரதி என்கிற இளைஞனோட மன அவஸ்தைகளே கதை. அவனே சொல்வதாக கதை துவங்குது. அவன் பத்து ஆசாமிகளுக்குள்ள சிந்தனை ஓட்டத்தினால் ரொம்பவே சிரமப்படுகிறான். விஜயன் என்று அறிமுகமாகும் புதிய அலுவலகத் தோழன் அவனை சைக்யாட்ரிஸ்டை சந்திக்கச் சொல்கிறான். சாரதி பார்த்துவிட்டு வர, எதுவும் பலனில்லை. ‘உன் பிரச்னை எனக்குத் தெரியும். சின்ன வயதில் உன் அம்மாவோட தவறான நடத்தையும் அதை நீ பாத்ததும் தான்’ என்று விஜயன் சொல்ல, கடும் கோபமாகிறான் சாரதி. அப்புறமும் பல சந்தர்ப்பங்களில் விஜயன் ‘பச்சை’யாக நிஜம் பேச, Mental Agony தாங்காமல் அவனைக் கொன்றுவிட முடிவு பண்றான் சாரதி. அலுவலகத்தில் வார இறுதியில் நந்தி ஹில்ஸ் டூர் போகத் தீர்மானிக்கப்பட அங்கே விஜயனைக் கொல்வதென்று திட்டம் போடறான்.
உயிர்மை * 54 பக்கம் * 25 ரூபாய் |
நந்தி ஹில்ஸ்! விஜயனுடன் பேசியபடி மலைச்சரிவுக்கு அழைத்து வரும் சாரதி, அவனைத் தள்ளிவிட, விஜயன் அவனை உடும்புப் பிடியாகப் பிடித்திருக்க... இருவரும் பள்ளத்தாக்கில விழுந்துடறாங்க. காலைல போலீஸ் வந்திருக்க... இன்ஸ்பெக்டர் சரிவில் விழுந்து சிதறியிருக்கும் ஒரு உடலுக்குப் பக்கத்தில நின்று விசாரிக்கிறார். ‘‘இந்த ஆள் உங்க குழுவோட வந்தவரா?’’ ‘‘ஆமாங்க...’’ என்று பதில் கிடைக்கிறது. ‘‘பேர் என்ன?’’ என்று கேட்க... ‘‘விஜய சாரதிங்க!’’
Hayooooooo! அந்தக் கடைசி வரி! promiseஆ நான் எதிர்பார்க்கலை! தடால்ன்னு ஒரே வரில கதையவே மாத்திப் போட்டு பிரமிக்க வெச்சுட்டார். Psychic Disorder உள்ள ஒரு ஆசாமியோட மன உணர்வுகள்தான் கதைன்னு முதல்லயே புரிஞ்சிட்டாலும் விஜயனும் சாரதியும ஒரே நபர்தான்கறதை சட்னு கெஸ் பண்ணிட முடியாதபடி கதையக் கொண்டு போனதுல... அசத்திட்டார் மாஸ்டர்!
ரெண்டு கதைகளையும் படிச்சு முடிச்சதுமே மீதி இருக்கற நாலையும் படிச்சே தீரணும்னு முடிவு பண்ண வெச்சுட்டார் சுஜாதா1 Ganesh Uncle பண்ற மாதிரி புத்தகத்தை எடுத்துட்டு Writer கிட்டப் போயி புக்ல ஆட்டோகிராப் வாங்கிட்டு வந்துடலாமான்னு கூட எனக்குள்ள ஒரு ஆசை வந்துச்சு. But... What to do? Sujatha is not with us now!
Hayooooooo! அந்தக் கடைசி வரி! promiseஆ நான் எதிர்பார்க்கலை! தடால்ன்னு ஒரே வரில கதையவே மாத்திப் போட்டு பிரமிக்க வெச்சுட்டார். Psychic Disorder உள்ள ஒரு ஆசாமியோட மன உணர்வுகள்தான் கதைன்னு முதல்லயே புரிஞ்சிட்டாலும் விஜயனும் சாரதியும ஒரே நபர்தான்கறதை சட்னு கெஸ் பண்ணிட முடியாதபடி கதையக் கொண்டு போனதுல... அசத்திட்டார் மாஸ்டர்!
ரெண்டு கதைகளையும் படிச்சு முடிச்சதுமே மீதி இருக்கற நாலையும் படிச்சே தீரணும்னு முடிவு பண்ண வெச்சுட்டார் சுஜாதா1 Ganesh Uncle பண்ற மாதிரி புத்தகத்தை எடுத்துட்டு Writer கிட்டப் போயி புக்ல ஆட்டோகிராப் வாங்கிட்டு வந்துடலாமான்னு கூட எனக்குள்ள ஒரு ஆசை வந்துச்சு. But... What to do? Sujatha is not with us now!
நான் படிக்க எடுத்து வெச்சிருக்கேன் இதையெல்லாம்! |
தன் ராஜகுமாரன் மருத்துவத் தொழில்தான் என்று அந்த நிமிஷம் புரிகிறது. //
ReplyDelete‘‘பேர் என்ன?’’ என்று கேட்க... ‘‘விஜய சாரதிங்க!’’ //
சுஜாதாவின் அருமையான கதைகள் தேடித்தேடி படித்திருக்கிறேன்,,
மின்னல் வரிகளாய் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..
நீங்களும் ரசிச்சுப் படிச்சிருக்கீங்களா... நான் ரொம்ப லேட். மின்னல் வரிகளாய்... கணேஷ் பார்த்தா உங்களை கோவிச்சுக்கப் போறார். என்னோட வரிகள் சாதாரணமானவைங்க. அவரின் வரிகள் தானே மின்னல். என்னை தட்டிக் கொடுத்த உங்களுக்கு... My Heartful Thanks!
Deleteennoda thalaivara pathi ennannu ninaichinga....avarukiNai avarey thaan...orutharum nerunga kood amudiyaadhu...naanellaam avara vachirukira idamaey vera....
Delete"என் இனிய இயந்திரா " படித்து பாருங்கள் அருமையான கதை
ReplyDeleteI See. நிச்சயம் நீங்க சொன்ன கதையப் படிச்சுப் பாக்கறேன். Thanks Brother!
Deleteஒரே நாளில் தலைவருடைய இரண்டு கதைகளைப் பற்றி மீண்டும் படித்துப் பார்க்க ஒரு வாய்ப்பு! நல்லா எழுதி இருக்கீங்க நிரஞ்சனா. கீழே படத்தில் இருக்கும் மற்றவற்றையும் படித்துவிட்டு எழுதுங்க!
ReplyDeleteவாழ்த்துகள்.
தலைவர்..? அவரோட எழுத்துக்கள் அவ்வளவு பிடிக்குமா ஸார்..! நிச்சயம் படிச்சதும் எழுதறேன். (சரியாத்தான் எழுதறேனா..?) நல்லா எழுதிருக்கேன்னு நீங்க சொன்னதுல I Feel Happy and Many more Thanks to you!
Deleteஅந்த புத்தகங்களை என்னுடனும் பகிரலாமே நிரூ.. ஈழத்து இலங்கியங்களை மட்டுமே படித்து கொண்டிருக்கிறேன்..
ReplyDeleteசுஜாதா பற்றி கேள்விப் பட்டுள்ளேன். பட் அவரின் புத்தகங்கள் கிடைத்ததில்லை
நானே இப்பத்தான் பாட புத்தகம் தவிர மத்த புத்தகங்களை படிக்க ஆரம்பிச்சிருக்கேன் எஸ்தர். படிச்சதுல பிடிச்சதை உங்களோட கண்டிப்பா ஷேர் பண்ணிக்கறேன். Thanks for your encouraging comment Sis!
Deleteநல்ல முயற்சி.அறிவு வளரட்டும்!. வாழ்த்துகள் நிரூ!
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நீங்களும் Uncle மாதிரியே வாழ்த்திருக்கீங்கக்கா. My Heartful Thanks to you!
Deleteவசந்த் வசந்த் மிகவும் சிறுமையான நாவல். வாத்தியாரின் கதைகளில் பலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட நாவல். நல்ல முயற்சி. எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteகணேஷ் வஸந்த் கேரக்டர்கள் ரொம்ப Famous இல்ல... நிச்சயம் நீங்கள சொன்ன புத்தகத்தைப் படிச்சுப் பாக்கறேன் ஸார். (சீனு)குரு சொன்னா கேக்கணும்ல... My Heartful Thanks to you Brother!
Deleteஎனக்கு நாலு விஷயம் புதியதாக சொல்லித்தரும் அனைவருக்குமே நான் சிஷ்யன் தான். குரு பகவான் தனித்துவம் வாய்ந்தவர் அவரை எனக்குப் பிடிக்கும் என்ற காரணத்தினால் எப்போதும் என்னுடனேயே வைத்துள்ளேன். அந்த கமேண்டில் அருமையாக என்று இருக்க வேண்டும் ஒரு எழுத்து மாறியதால் சொல்ல வந்த கருத்தே மாறிவிட்டது. தவறுக்கு மன்னிக்கவும்
DeleteDear friends if you want sujatha stories, Drama ,article ?
ReplyDeletecome to my blog and downlod all
www.nilanilal.blogspot.com
Dear friends if you want sujatha stories, Drama ,article ?
ReplyDeletecome to my blog and downlod all
www.nilanilal.blogspot.com
சுஜாதா கொஞ்சம் படிச்சதுமே நிறையப் படிக்கணும்கற எண்ணதை உண்டாக்கிட்டார் எனக்கு. அவரோட புத்தகங்களை நீங்க தர்றீங்கன்னா Vey Happy! Wonderful! உடனே நான் டவுன்லோட் பண்ணிப் படிக்கறேன் My Dear Friend! Thanks!
DeleteBut... What to do? Sujatha is not with us now!
ReplyDelete>>>>
அடடா நிரஞ்சனா குட்டிக்கு இம்புட்டு அறிவா?! சுஜாதா சார் நம் மனசுல மட்டுமே இருக்கார்ன்றதை கண்டுபிடிச்சுட்டுதே!
என்னக்கா... போன வாரம் தானே நிரூ செல்லத்துக்கு உங்க அறிவுல பாதியைக் கடனாத் தந்தீங்க... மறந்துட்டிங்களா? My sincere Thanks to you!
Deleteஇப்பவாச்சும் நிறையப் படிக்கணும்னு உனக்குத் தோணியிருக்கே... ரொம்ப சந்தோஷம்மா... நல்லாத்தான் எழுதியிருக்கே.
ReplyDeleteThank you very much to you!
Deleteமுதல் முறையாக தங்களது வலைக்கு வருகிறேன் என நினைக்கிறேன்.வந்தவுடனே என்னுடைய ஃபேவரட் ரைட்டர் சுஜாதா அவர்களின் கதைகளை பற்றிய சிறிய தொகுப்பு..என் சொல்ல..மிகவும் அருமையாக எழுதியிருக்கீங்க.மீதமுள்ள கதைகளையும் எழுதுவீங்க என்ற நம்பிக்கையில் விடைப்பெறுகிறேன்.நன்றி.
ReplyDeleteஆம். முதல் வருகை தந்திருக்கீங்க. உங்க எழுத்து எதையும் நான் படிச்சு கருத்துச் சொல்லாத போதிலும் என் எழுத்தை ரசிச்சுப் பாராட்டின உங்களுக்கு... My Heartful Thanks Kumaran Sir!
DeleteDear sister heartfull thanks for wrote my maas writer come to my blog download all sujatha stories , Drama , etc
ReplyDeleteif u want more means mail me i will sent
if u read sujatha u will be extradinary persion
Read more , write more
Thank u
www.nilanilal.blogspot.com
Sure Brother! Now he became my favourite also. So, definitely I will write more. Tks.
Delete’அங்கிள், பழைய புத்தகங்களை வெச்சுக்கிட்டு கதைய ஓட்டிட்டிருக்கீங்க... நான்லாம் எழுத வந்தா உங்களைத் தூக்கிச் சாப்ட்டிருவேன்...’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். //நிரஞ்சனா ,கணேஷ் அண்ணாவை அப்படி சொல்லிட்டு நீங்களும் அந்த ஸ்டைலை கடைபிடிக்கறீங்க பார்த்தீங்களா?
ReplyDeleteஉண்மையில் உங்கள் வாசிப்பும்.வாசிப்பனுபவமும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது தொடருங்கள்.
Dear S.S... அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி, என் தலைல குட்டிட்டீங்களே... ஹெக்... ஹெக்... (நிரூ அழுவுறா) பழைய புத்தகங்களை வெச்சுட்டு கதைய ஓட்டிட்டிருக்கீங்கன்னு நான் சொல்லலை. (ஹெக்) உங்கண்ணன் என்னை வம்புக்கிழுக்க எழுதினது அது. ‘நானும் உங்களை மாதிரி பெரிய ஆளா வருவேன்’னு மட்டும்தான் நான் சொன்னேன். (ஹெக்) நிரூவோட தாட்ஸையும், ரசனையையும் ஷேர் பண்ணிக்க மட்டும்தான் எனக்கு ஆசை. (ஹெக்) அவர்தான் அப்பப்ப பார்க்கறது, ரசிக்கறதோட படிக்கறதையும் எழுதணும் நிரூன்னு சொன்னாரு. (ஹெக்) சரின்னு எழுதினேன். மாட்டி விடறாருன்னு இப்பத்தான் புரியுது. இனி அவர் பேச்சைக் கேக்கப் போறதில்ல... போங்க...!
Deleteநாவல்களில் அறிவியலை புகுத்தி
ReplyDeleteஎழுதும் எழுத்துலக வித்தகர் சுஜாதா
அவர்களின் எழுத்துக்கள் பற்றிய
உங்கள் பதிவு அருமை சகோதரி...
Dear Anna, அருமைன்னு பாராட்டின உங்களுக்கு என்னோட Many Many Thanks!
Deleteதொடருங்கள்.
ReplyDeleteநிச்சயமா Sister! உங்களுக்கு என்னோட Heartful Thanks!
Deleteரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க நிரஞ்சனா.... எனக்கும் சுஜாதா அவர்களின் எழுத்தை படிக்கும் போது ஒரு விறுவிறுப்பு , பிரமிப்பு எல்லாம் ஏற்பட்டிருக்கிறது. படித்து முடிக்கும் வரை கீழே வைக்க தோன்றாது.
ReplyDeleteஎப்போதும் பெண், ஓடாதே இதுவும் முடிந்தால் படித்துப் பாருங்க.
எப்போதும் பெண் பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.
http://kovai2delhi.blogspot.in/2011/09/blog-post.html
மீதிக்கதைகளை பற்றியும் எழுதுங்க.
உங்க ஸார் சுஜாதாவை தலைவர்ன்னு சொன்னார். நீங்களும் பிடிக்கும்கறீங்க. உண்மைல இவ்வளவு ரசிகர்களை வெச்சிருக்கறவரை இவ்வளவு நாள் படிக்காம போயிட்டமேன்னு எனக்கு ஒரு Guilty Feel கூட வருது மேடம்! நீங்க சொன்னதை அவசியம் படிச்சுப் பாக்கறேன். என்னை Encourage பண்ணின உங்க Presence and Comment ரெண்டுக்கும்... My Heartful Thanks!
Deleteஇரு பெண் டாக்டர்கள் குறித்த முதல் கதை என் . பல நேரங்களில் பல இடங்களில் நான் மேற்கோள் காட்டும் கதை அது. பெயர் எப்போதும் நினைவிருக்காது. இன்று உங்கள் பதிவு மூலம் அறிந்து மகிழ்ச்சி
ReplyDeleteஎனது பதிவில் உங்கள் ப்ளாக் பற்றியும் இக்கதை பற்றியும் பின்னர் எழுதுகிறேன்
சுவாரஸ்யமான எழுத்து தொடர்ந்து எழுதுங்கள்
WoW! New comer ஆன என்னைப் பத்தி உங்க தளத்துல எழுதறேன்னு சொல்றீங்களே... Really I am Honoured. தொடர்ந்து எழுதுன்னு எனக்கு உற்சாக Injection போட்ட உங்களுக்கு என்னோட Many Many Thanks Sir!
Deleteநிரூ...விக்கி விக்கி ரொம்ப அழுதுட்டீங்க...இந்தாங்க கமர்கட்டும் டிஷ்யூபேப்பரும்..எங்கே சிரிங்க...ஆ..ஆ..ம்ம்ம் இப்ப குட் கேர்ள்...:)
ReplyDeleteDear S.S. சின்னப் பொண்ணான என்னை நீங்கன்னு கூப்பிடறதை நிறுத்திட்டு, நீன்னு கூப்ட்டா இன்னும் சந்தோஷமாச் சிரிப்பேனே...! கமர்கட்டுக்கு Many Thanks!
Deleteசுஜாதா எழுத்துகள் பிடிக்காதவர் மிகச் சிலரே.
ReplyDeleteஅவர் கதைகள் எல்லாமே டாப். சிபாரிசு செய்தால் ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் பட்டியலிட வேண்டும். பதினாலு நாட்கள் முதல் வானமெனும் வீதியிலே முதல்....பிரிவோம் சந்திப்போம் என்று....வரிசையாக படித்து வாருங்கள்
அவர் எழுதிய கதைகளை விட கட்டுரைகள், குறிப்பாகக் கற்றதும் பெற்றதும், சில எண்ணங்கள் போன்றவையும், கேள்வி பதில்கள், குறிப்பாக 'ஏன் எதற்கு எப்படி' விஞ்ஞானக் கேள்வி பதில்களும்...இன்னும்...இன்னும்...
Sure Sir! ஒவ்வொரு ஏரியாவாக அவர் எழுத்தைப் படிக்கணும்னு ஆசை வந்துடுச்சு. உங்களுக்கு My Heartful Thanks.
DeleteThank u sister for giving coment. Sujatha is wonterfull all roundar writer and great scientist . Now days we are using voting machine that machine
ReplyDeletesujatha invention
Best wishes for your colourfull feature.
Thank u sister for giving coment. Sujatha is wonterfull all roundar writer and great scientist . Now days we are using voting machine that machine
ReplyDeletesujatha invention
Best wishes for your colourfull feature.
Thank u sister for giving coment. Sujatha is wonterfull all roundar writer and great scientist . Now days we are using voting machine that machine
ReplyDeletesujatha invention
Best wishes for your colourfull feature.
பகிர்வு அருமை நிரஞ்சனா.
ReplyDeleteSenior Blogger, Good Photographer, Good Writer இப்படிப் பல முகங்கள் கொண்ட உங்கள்ட்டருந்து இப்படி ஒரு வார்த்தை வந்ததுல... Really I Feel proud and Very Happy. My Heartful Thanks to You Sis!
Delete" சுஜாதா " - இந்த மூன்றெழுத்து வார்த்தையில் மின்சாரம் இருக்கிறது. அவருடைய வரிகள் ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கவை. படிக்கும் வாசகர்களை வசியம் பண்ணக் கூடியவை. அவர் எழுத்துக்களில் எப்போதும் இளமையில் துள்ளல் இருக்கும், கிச்சுகிச்சு மூட்டும் எள்ளல் இருக்கும், சமூகத் தவறுகளின் மீதான கிள்ளல் இருக்கும், ஒவ்வொரு வரியிலும் இனிமையின் விள்ளல் இருக்கும், யதார்த்தத்தின் அள்ளல் இருக்கும், கற்பனையின் ' வள்ளல் ' இருக்கும், நம் மனச்சுமைகளின் மீதான தள்ளல் இருக்கும், இப்படி எத்தனையோ " ள்ளல்கள் " .........
Deleteஎன்னை யாராவது ஒரு சிறையில் அடைத்து, என் வாழ்நாள் பூராவிற்குமான சுஜாதாவின் நாவல்களைக் கொடுத்து விட்டால், ஆயுள் முடியும் வரை அவரைப் படித்துக் கொண்டே அங்கேயே இருப்பேன். நான் சுஜாதாவின் ரசிகன், இல்லை வெறியன், இல்லையில்லை பைத்தியம் ,,,,,,,,,,,,,,,,,,,,,
சுஜாதாவைப் பற்றி எழுதத் தூண்டிய தங்களுக்கும் தங்களது பதிவிற்கும் கோடி நமஸ்காரங்கள் !!!
யப்பா... இந்தப் பதிவை எதேச்சையாதான் எழுதினேன் Friend! ஆனா அவரோட தீவிர வாசகர்களின் கருத்துக்களையும். என்னை Encourage பண்றதையும் பாக்கறப்ப இன்னும் ஒண்ணு விடாம தேடிப் படிச்சுட்டு பகிர்ந்துக்கணும்னு பேராசையே வந்துட்டுது. விரிவான உற்சாகம் தந்த கருத்துரைத்த உங்களுக்கு... My Heartful Thanks!
Deleteசுஜாதாவின் வரிகளுக்கு எப்போதுமே உற்சாகம் குறையாது... நீங்கள் அதை விவரித்துள்ளது மிக அருமை.. பயணம் தொடரட்டும்...
ReplyDeleteசுஜாதாவை ரசித்து, என்னை உற்சாகப்படுத்தும் விதமாய் கமெண்ட் தந்த உங்களுக்கு... என்னோட Heartful Thanks!
Deleteசுஜாதா இன்றும் என்றும்.. லைவ்..
ReplyDeleteWoW! ரொம்பப் பெரிய பதிவரான உங்களோட கருத்து எனக்கு Vitamin Tonic! உங்களுக்கு Many Many Thanks with full of my heart Sir!
Deleteஉங்களை அறிமுகம் செய்து இந்த பதிவில் எழுதியுள்ளேன் நிரஞ்சனா. படித்தீர்களா என தெரியலை
ReplyDeletehttp://veeduthirumbal.blogspot.in/2012/04/blog-post_25.html
Dear Sir, ஸாரி, கொஞ்சம் லேட்டாத்தான் பாத்தேன். அழகான விதத்தில் என்னை அறிமுகம் செஞ்சிருக்கற உங்களுக்கு My Heartful Thanks!
Deleteவாத்தியார் கதையை படிப்பவர்களுக்கு , அந்த எழுத்து நடையை தொற்ற வைத்துவிடுவார் ...படித்தவுடன் பகிரும் ஆர்வத்தை நம் மனதுக்குள் உருவாக்கிவிடுவார் ... இரண்டு கதைகளையும் அழகாக பகிர்ந்துள்ளீர்கள் .. வாழ்த்துக்கள்
ReplyDeleteஇப்புடி எல்லா கால இளைய வாசகர் பட்டாளத்த பித்து புடிக்க வச்ச மனுஷன். ரெண்டு சுஜாதா வாசகர் சந்திச்சு பேசுறத எட்ட நின்னு பார்த்தாலே குதூகலமா இருக்கும். சுஜாதா சுஜாதா தான்.. no matter what..
ReplyDeletenallathoru muyarchi vazhukkal
ReplyDeletenallathoru muyarchi vazhukkal
ReplyDelete