Pages

Ads 468x60px

20 July 2012

ஆடிவெள்ளி - தொடர் பதிவு!


ன் மனசுல தோணற சில விஷயங்களை நான் மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கறது கிடையாது. அப்படி ஷேர் பண்ணிக்கிட்டா செமத்தியா திட்டு விழும்கறதால டைரில மட்டும் எழுதி வெச்சுக்கறது என் பழக்கம். தென்றல் சசிகலா அக்கா தன்னோட ‘ஆடிவெள்ளி’ங்கற பதிவுல என்னைத் தொடரச் சொன்னதும் என் டைரிப் பக்கம் ஒண்ணை ஷேர் பண்ணா சரியா இருக்குமனு தோணிச்சு. இங்க தரேன். கல் வீசறவங்க தாராளமா வீசலாம்....

நிரஞ்சனாவின் டைரியிலிருந்து...


பொதுவா நான் பெரிய பக்திமான், பக்திப்புலி எதுவும் கிடையாது. வெள்ளிக்கிழமை கோயில்களுக்குப் போகணும்னோ, விசேஷ நாட்கள்ல போகணும்னோ எந்தக் கட்டாயமும் வெச்சுக்கறதில்லை. அம்மாவோ இல்ல மத்த ரிலேஷன்ஸோ கூட வந்தாத்தான் போவேன். வீட்லயும் ஸ்லோகம் சொல்றது, சாமி கும்பிடறதுங்கற பழக்கம் அம்மாகிட்டத்தான் உண்டு. எனக்கு இல்லை. இதுக்காக அம்மாட்ட திட்டு வாங்கினதும் உண்டு. அவங்க மனசு கோணக் கூடாதுன்னுதான் அம்மாவோட கோயிலுக்குப் போறது வழக்கம். நானாப் போக மாட்டேன். இப்படிப்பட்ட எனக்கு இந்த ஆடி மாசத்துல மட்டும் ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ன்னு கூச்சலிட்டுட்டு நாத்திகமா ஆயிடலாம்னுதான் தோணும்.

இன்னிக்குத் தேதியில தமிழ்நாட்டுல முக்கிய நகரங்கள்ல எல்லாம் நெருக்கம் நெருக்கமா வீடுகள் கட்டப்பட்டிருக்கு. ஏறக்குறைய ரெண்டு தெருக்களுக்கு ஒரு கோயில் (சின்னதோ, பெரிசோ) உண்டு. எல்லாத்துலயும் பெரிசா கூம்பு மைக் வெச்சு, அதிகாலையிலயே பாட்டைப் போட்ட அலற ஆரம்பிச்சுதுன்னா, மதியம் வரைக்கும் ஓயறதில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தா கான்சென்ட்ரேட் பண்ணிப் படிக்க முடியாது. இந்தப் பக்கம் தாத்தாவானா தூக்கம் கலைஞ்ச எரிச்சல்ல, எழுந்து புலம்பிட்டிருப்பாரு.

‘இந்த சனியன் பிடிச்ச கோயிலை இடிச்சுட்டு வந்தா என்ன’ன்னு எனக்கு கோபம் பொங்கும். ஆனா வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஒருமுறை சொன்னதுக்கு, ‘‘பொண்ணா லட்சணமாவா திங்க் பண்ற நீ? தீவிரவாதி ரேஞ்சுக்குப் பேசறியே... கொஞ்சமாவது பக்தி இருக்கா உனக்கு?’’ன்னு ஆரம்பிச்சு அரை மணி நேரம் அம்மா டோஸ் விட்டாங்க. நிஜமா எனக்குப் புரியலைங்க. திங்க் பண்றதுலகூட பெண்ணா இருந்து திங்க் பண்றது வேற, ஆணா இருந்து திங்க் பண்றது வேறயா? மூளைங்கற வஸ்து எல்லாருக்கும் ஒரே மாதிரிதானே வைக்கப்பட்டிருக்குது?

சரி... பேசவந்த விஷயத்துக்கு வர்றேன். ஏன் இந்துக் கோயில்கள்ல இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், கொண்டாட்டங்கள்ங்கற விஷயம் எனக்கு எப்பவுமே புரியாத புதிர்தான். சர்ச்ல ஸ்பீக்கர் வெச்சு பாடினாலும், பேசினாலும் அந்த பில்டிங்கைத்தாண்டி ஓசை வராது. மசூதிகள்ல தொழுகைக்கு அழைக்க நேரம் மட்டும்தான் ஸ்பீக்கர் சத்தம் எழும். நம்ம இந்துக் கோயில்கள்லதான் இப்படி ஸ்பீக்கர் வெச்சுக் கத்தறதும், அமர்க்களம் பண்றதும். தவிர, திருவிழான்னா, சாமிய மேளம், வாத்தியம் முழங்க ஊர்வலமா எடுத்துட்டு வர்றதும், அது கிராஸ் பண்ற வரைக்கும், ட்ராபிக்கே ஸ்தம்பிக்க ‌வெக்கறதும் ஏன்? ஜீசஸ் சிலைய ஊர்வலமா எடுத்துட்டு வந்து பாத்திருக்கீங்களா நீங்க? இந்துக்கள் பெரும்பான்மையா இருக்கற தேசம்ங்கறதால இப்படியா? சாமியக் கும்பிடணும்னு விரும்பறவங்க கோயிலுக்குப் போய்க் கும்பிட்டுக்கட்டும். அது ஏங்க தெருவுக்கு வரணும்?

இதே ஆடி மாசத்துல இஸ்லாமியர்கள் பக்தி செலுத்த பட்டினி இருந்து, ஆறு வேளையும் தொழுது ரம்ஜான் விரதம் இருப்பாங்க நம்ம பயபுள்ளைங்க இந்த மாசத்துல ஆர்ப்பாட்டம் பண்ணி, ஏரியாவையே அலற வெச்சு தங்களோட பக்திய வெளிப்படுத்துவாங்க... கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா... பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும்னும். கிருஷ்ணருக்கு வெண்ணை பிடிக்குமனும் சொல்லி அவங்க பேரைச் சொல்லி இவங்க சாப்பிடுவாங்க. ஏன் எந்தக் கடவுளுக்கும் கட்லெட். ப்ரைட் ரைஸ்லாம் பிடிக்காதா? கூழ்தான் பிடிக்குமா? ஏன்னா... கடவுள் தத்துவத்தை உருவாக்கின முன்னோர்கள் காலத்துல இந்த ஃபுட்லாம் இல்ல. அதனாலதான் கடவுள்கள் இதை சாப்பிடலை.

இது பத்தாதுன்னு ஒரு கும்பலே கைல ஒரு நோட்டை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வீடு படையெடுத்துடுவாங்க- கோயில் திருவிழாவுக்கு வசூல் பண்றோம்னு. அந்தப் பணம்லாம் கோயிலுக்குப் போய்ச் சேருதோ... இல்ல ‘களவாணி’ படத்து விமல் குரூப் மாதிரி ‘நீராகாரம்’ சாப்பிடப் போய்த் தொலையுதோ... சம்பந்தப்பட்ட சாமிகளுக்கே வெளிச்சம்!

சின்னப் பிள்ளைங்க பொம்மைகளை வெச்சுக்கிட்டு, அதுங்களை சாப்பிட வெக்கறதாயும், சண்டை போட்டுக்கறதை சமாதானம் பண்றதாகவும் தனியா ஒரு பொம்மை உலகத்தை நிர்மாணிச்சுக்கிட்டு வாழும். எனக்கு கோயில்களைப் பாத்தா அப்படித்தான் பெரியவங்க நிர்மாணிச்சுட்டிருக்கற பொம்மை உலகமா தோணுது. குழந்தைங்களோட சின்ன சைஸ் பொம்மைகளுக்குப் பதிலா பெரிய சைஸ் விகரகங்கள். அதைக் குளிப்பாட்டறதும், தூங்க வெக்கறதும்...! ஒரு பக்கம் புராணங்கள்ல சாமி தூங்கவே தூங்காது தூங்கற மாதிரி நடிக்கும்னு பெருமையடிச்சுப்பாங்க. இன்னொரு பக்கம் ராத்திரியானா சாமியை சயன அறைல விடறதுக்கு ஒரு சம்பிரதாயம்!  நீங்க வேணும்னா தூங்கப் போங்கப்பா... அவங்களும் தூங்கியாகணுமா என்ன?

 ‘‘சாமிக்கு கோயில்ல சமையலறை (மடப்பள்ளி) கட்டிருயிருக்கீங்க. சாமி தூங்கறதுக்கு சயன அறைன்னு கட்டியிருக்கீங்க. சாமிக்கு ஒரு பாத்ரூம் கட்டினீங்களாடா? சாமிக்கு அதெல்லாம் போகணும்னா என்னடா பண்ணுவாரு...?’’ன்னு பெரியார் கேட்டது சரியான கேள்விதான். இதுக்கு பதில் யாரும் சொன்னதாத் தெரியலை. இறை நம்பிக்கைன்ற விஷயத்துல இப்படி எனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கறதாலதான் நான் சாமி கும்பிடறதையும், கோயில்களுக்குப் போறதையும் அம்மாவோட விருப்பத்துக்காகத்தான் செஞ்சுட்டிருக்கேன்.

அதே சமயம் இன்னொண்ணையும் இங்க சொல்லி முடிக்கறேன். கடவுள் உருவங்கள்ல விநாயகரும் கிருஷ்ணனும் எனக்கு ரொம்பவே பிடித்தமானவை. கண்ணன் பத்தி பாரதியார் பாடின பாட்டுக்கள்லருந்து கோவை சரளா அக்கா எழுதின கவிதைகள் வரை அனைத்தையும் விரும்பி ரசிக்கறவ நான். நிரஞ்சனா ஒரு முரண்பாட்டு மூட்டை.

இந்த விஷயம் பத்தி தங்களோட கருத்துக்களைத் தொடர்ந்து சொல்ல நான் அழைக்கறவங்க... 1) தோழி அதிஸயா 2) நண்பர் சீனு  3) (விரும்பினால்) கோவை சரளா அக்கா.


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

69 comments:

 1. நிரூ மா சின்ன வயசில என்னைய போலவே இருந்திருக்க. இதில் இந்து முஸ்லிம் கிறிஸ்துவ வேறுபாடெல்லாம் இல்ல . என்னன்னா இந்துக்களுக்கு நிறைய பண்டிகை அதனால இப்படி நிறைய தொல்லைகள் மத்தபடி எங்க வீட்டு பக்கதுள ஒரு ஆஸ்டல் இருக்கு அங்க வாரம் வாரம் ஞாயிறு அன்று அல்லுலே◌ாயானு ஒரே சத்தம் என்ன செய்ய முடியும் நாம வீட்டில இருப்பது ஒரு நாள் அன்னிக்கும் இப்படி ஆனாலும் சகிச்சுட்டுதான் போகனும் கேட்க போன என்னவாகும் நீங்க ஆடி முழுக்க கத்தவுடுறிங்க என்று மத பிரச்சினை வரும் இதெல்லாம் நாம எதுவும் செய்ய முடியாது மா. நாமா வேடிக்கை பார்த்துட்டே இருக்க வேண்டியது தான்.
  தொடர் பதிவுக்கு அழைத்ததும் உடனே எழுதியது குறித்து மிகவும் மகிழ்ந்தேன் நன்றிமா.

  ReplyDelete
  Replies
  1. என்னது... சின்ன வயசுலயா? இப்பவும் நான் சின்ன வயசுதான்க்கா. சகிச்சுக்கிட்டுப் போக நானும் பழக்கப்பட்டாச்சு. இருந்தாலும் ஒரு வருத்தமும் நிறையக் கேள்விகளும் எனக்குள்ள இருக்கு. அதுக்கெல்லாம் இங்க வர்ற பின்னூட்டங்கள் மூலமா விடை கிடைச்சா நான் தெளிவாயிடலாம்னு பாக்கறேன். என்னை எழுத வெச்சதுக்கு நன்றி சசிக்கா.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. // எனக்கு கோயில்களைப் பாத்தா அப்படித்தான் பெரியவங்க நிர்மாணிச்சுட்டிருக்கற பொம்மை உலகமா தோணுது.//

  நிரஞ்சனா இந்த வயதில் இருக்க கூடிய தெளிவு உன்னிடம் இருக்கு

  என் பால்யம் நினைவுகள் மீளுது உன் வார்த்தைகளில் .........

  மேலே நீ குறிப்பிட்ட இந்த வரிகள் உளவியல் சார்ந்த விஷயம் ........அதை என் தளத்தில் நாளை விவரித்து எழுதுகிறேன் ........

  உனக்கும் சசிகலாவிற்கும் என் வாழ்த்துக்கள் எங்களின் என்ன சிறகுகளை தட்டி எழுப்பும் தென்றலாக ( சசி )இருந்ததற்கு ..........

  இன்னும் அலசுவோம் மூலையில் பதிந்து இருக்கும் மரபு மூட அழுக்கை ..........

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்லத்துணியாத நிறைய செய்திகளை நிரூ மா நம்ம எல்லோரையும் சொல்ல வைப்பதில் மகிழ்வே. நன்றி சரளா.

   Delete
  2. கடவுள்ங்கற விஷயத்துல எனக்குள்ள நிறையக் கேள்விகள் இருக்குது. அதுக்கு உங்கள் கட்டுரை எனக்குத் தெளிவைத் தருதான்னு பாக்க ஆவலோட நான் காத்திருக்கேன் சரளாக்கா.

   Delete
 4. என்னையும் தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி தோழி... சகோதரி சசி தோழி நிரஞ்சனாவிற்காக நிச்சயமாக எழுதுகிறேன்

  // ஜீசஸ் சிலைய ஊர்வலமா எடுத்துட்டு வந்து பாத்திருக்கீங்களா நீங்க? இந்துக்கள் பெரும்பான்மையா இருக்கற தேசம்ங்கறதால இப்படியா? சாமியக் கும்பிடணும்னு விரும்பறவங்க கோயிலுக்குப் போய்க் கும்பிட்டுக்கட்டும். அது ஏங்க தெருவுக்கு வரணும்?// சில விஷயங்கள் பதிவு பண்ணலாம் சில விஷயங்கள் நேரில் தான் பேச முடியும்... கோவில் ஆன்மீகம் இதில் எனக்கு இருக்கும் ஈடுபாட்டை விட இது போன்ற விவாதங்களில் இருக்கும் ஈடுபாடு எனக்கு அதிகம். சில விஷயங்கள் தேவை பல விஷயங்கள் தேவை இல்லை...

  உங்கள் சில கருத்துக்களில் ஒத்துப் போகிறேன் பல கருத்துகளில் முரண் படுகிறேன். முடிவாக என் கருத்து மதம் என்று மதம் பிடித்து அலைபவர்களை வெறுக்கிறேன். போலி மத சாயம் பூசுபவர்களைக் கண்டால் (நித்தியானந்தா) தீவிரவாதி ஆகிவிடலாம என்று யோசிக்கிறேன்... என் குரு விவேகானந்தர் போன்ற மகான்கள் வாழ்ந்த நாட்டைக் கெடுக்கும் அயோக்கியர்களை அழிக்க நினைக்றேன் ... மனம் என்ற ஒன்று இறைவனை நம்புவதால் அவனை மட்டும் வெறுக்க மாட்டேன் அன்பு வழியில் இருந்து மாறவும் மாட்டேன். காரணம் மதம் அன்பைத் தான் போதிக்கிறது.

  பெரும்பான்மையாக எந்த மதம் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த மத விஷயங்கள் சற்று அதிகமாக தலை தூக்குவது இயற்கை... அதே மதத்திற்கு எதிர்பாளர்கள் அதிகம் இருப்பதும் இயற்க்கை.... இது இந்தியாவிற்கு மட்டும்மல்ல இந்து மதத்திற்கு மட்டும் அல்ல என்பது பல விவாதங்களில் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம்.

  த ம 3

  ReplyDelete
  Replies
  1. மதம் அன்பை போதிக்கிறதுங்கறது சரி. மனிதர்கள் ஏற்று நடக்கணுமே நண்பா.. பெரும்பான்மை மதத்திற்கு அதன் சார்ந்த விஷயங்கள் தலை தூக்குவது இயற்கைங்கறது ரொம்பச் சரி. நடைமுறை வாழ்வுல பார்த்துட்டுதான் இருக்கேன். விவேகானந்தர் போன்ற மகான்களை நினைச்சுததான் பெருமைப்பட்டாலும் இப்ப உள்ள நித்யானந்தா மாதிரி ஆட்களை என்னால மன்னிக்க முடியலை. தங்கள் கருத்துக்கு நன்றி.

   Delete
 5. மற்றபடி உங்கள் மனதில் பட்டதை அப்படியே கூறும் தைரியம் இருக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

  // இந்த சனியன் பிடிச்ச கோயிலை இடிச்சுட்டு வந்தா என்ன// இது போல் தைரியமாக எழுத எத்தனை பேரால் முடியும் என்று தெரியவில்லை... ஆனால் என் கோவத்தை அதிகமாகியதும் இந்த வரிகள் தான் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.... கோவில் என்பது பல காரணங்களுக்ககா கட்டியது .... ஒருவரியில் அதன் மகத்துவத்தை உணர உணர்த்த முடியாது. நான் சிறுவன் எனக்கு போதிய பக்குவமும் கிடையாது அதற்க்குக் காரணமும் இன்றைய வாழ்க்கை முறைகள் தான்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே... நிறையத் திட்டு விழும்னு தெரிஞ்சேதான் தைரியமா எழுதினேன். மனசுல நினைக்கறதை எழுதி திட்டு வாங்கினாலும் பரவாயில்ல.... என்னைத் திருத்திக்க அவை உதவும்னுதான் நான் நம்பறேன். உங்களின் கோபத்தை ஒரு வரி தூண்டியதுன்னா.. ஸாரி. ஆனா அந்த நிமிஷம் என் மனசுல தோணினதைத்தான் டைரில பதிவு பண்ணிருக்கேன். சில வார்த்தைக்ள் தான் இப்ப சேர்த்தவை. மிக்க நன்றி நண்பரே...

   Delete
 6. //நிரஞ்சனா ஒரு முரண்பாட்டு மூட்டை.//

  நிறைய இருக்கு... உங்கள் சிந்தனை வித்தியாசமானவை... எங்கள் தலைவர் பெரியாரை அதிகம் பிடிக்குமோ...

  ReplyDelete
  Replies
  1. சங்கவி சார் நான் பெரியாரின் கொள்கை படி நடப்பவள்.

   Delete
  2. நிஜம்தான் சங்கவி ஸார்... பெரியார் புத்தகங்கள் எல்லாம் படிச்சுடலை நான். சில குட்டி புத்தகங்கள் வாசிச்சேன். அதுல அவர் கேட்டிருக்கற இறை நம்பிக்கைக்கு எதிரான கேள்விகள் நியாயமானதா பட்டது எனக்கு. அதுக்கு சரியான பதிலை ஆன்மீகத்துல யாராவது சொன்னா சரியா இருக்கான்னு பாத்து என்னைத் திருத்திக்கறேன்.

   Delete
 7. //இன்னிக்குத் தேதியில தமிழ்நாட்டுல முக்கிய நகரங்கள்ல எல்லாம் நெருக்கம் நெருக்கமா வீடுகள் கட்டப்பட்டிருக்கு. ஏறக்குறைய ரெண்டு தெருக்களுக்கு ஒரு கோயில் (சின்னதோ, பெரிசோ) உண்டு.//

  இது சுயநலத்திற்காக அந்தந்த வீதி மக்கள் கொண்டு வந்தது...

  கோயில் சாமி கும்பிடத்தான் போகனும் என்பது இல்லை... ஆடி மாதம் அறிவியல் ரீதியாக நிறைய இயற்கை சீற்றங்கள் உள்ள மாதம்... இதற்காகத்தான் திருவிழா....

  கோயில்களில் சத்தமாக கூம்பு வைத்து பாடுவது மிக தவறு தான் ஆனால் அந்த கோயில் திருவிழாவை மிக அருகில் இருந்து ரசிச்சு செயல்படுங்க.. மனது மிக ஆனந்தமாக இருக்கும்...

  முடிந்தால் எனது கிராம நினைவுகள் பதிவை படிச்சுபாருங்க... எப்படி அனுபவிப்போம் திருவிழாவையும் ஆடிமாதத்தையும்....

  ReplyDelete
  Replies
  1. எனக்கு எரிச்சலூட்டிய அந்த கூம்பு ஸ்பீக்கர்கள் உங்களுக்கும எரிச்சலூட்டியதில் வியப்பில்லை. திருவிழாவையும் கிராமங்களையும் ரசிக்கற வாய்ப்பு இதுவரை அமைஞ்சதில்லை. இம்முறை உங்கள் வார்த்தைப்படி திறந்த மனதோட என்னை மாற்றிக் கொண்டு அந்த அனுபவத்தை உணரப் பார்க்கறேன். சரியா...? கருத்திட்டதுக்கு நன்றி ஸார். அவசியம் உஙக தளத்துக்கு வந்து கிராம நினைவுகளைப் படிச்சுப் பாத்து கருத்து போடுவா நிரூ.

   Delete
 8. உங்கள் கோபம் நியாயமானதே! என்ன பண்றது சிலருக்கு இதனால பிழைப்பு நடக்குதுன்னு விட்டுட வேண்டியதுதான்!

  ReplyDelete
  Replies
  1. என் கருத்துக்களை ஆமோதித்த உங்களுக்கு... My Heartful Thanks!

   Delete
 9. //ஒருமுறை சொன்னதுக்கு, ‘‘பொண்ணா லட்சணமாவா திங்க் பண்ற நீ? தீவிரவாதி ரேஞ்சுக்குப் பேசறியே... கொஞ்சமாவது பக்தி இருக்கா உனக்கு?’’ன்னு ஆரம்பிச்சு அரை மணி நேரம் அம்மா டோஸ் விட்டாங்க.//
  நிரூ இந்த இடத்தில் நான் படிக்கும் பொழுது சிரித்துவிட்டேன் ஹிஹிஹிஹிஹிஹிஹி ..... அம்மா உன்னை தீவிரவாதி என்று சொன்னதற்கு....

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்.. அம்மா கடுங்கோபத்தோட அப்ப அப்படிச் சொல்லி தலையில குட்டினாங்க. ஆனா இப்ப நினைச்சா எனக்கும் சிரிப்புதான் விஜி...

   Delete
 10. கருத்துக்கள் அருமை நிரஞ்சனா ! உங்கள் சந்தேகங்களும் சரியானதே. கடவுள் என்ற கற்பனை கூட அச்சம் தந்த நம்பிக்கை இது கவிஞர் வைரமுத்து எழுதியது. அதனால் நம் நம்பிக்கைகள் யாரையும் தொந்திரவு செய்யாத வரையில் தவறில்லை. ஆனால் அடுத்தவரின் எல்லைக்குள் நுழையும் போது கேள்விகள் தேவை. பெரியாரும் பக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுசொத்து என்று கூறினார். மேலும் எதையும் கேள்வி கேள்,அலசிப்பார்,சிந்தி,பகுத்தறி.மதம் சொல்லுது,சாதி சொல்லுது,அது சொல்லுது.இது சொல்லுது நான் சொல்றேன் என்பதற்காக ஏற்காதே. உங்களது சுதந்திர நினைப்பு அனுபவம் உணர்ச்சி ஆகியவற்றால் பரிசீலனை செய்து ஒப்பக் கூடியவைகளை ஒப்பி தள்ளக் கூடியவைகளை தள்ளிவிடுங்கள் என்று கூறுகிறார். என்னுடைய கருத்தும் அதேதான் நம் பகுத்தறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுப்போம். மேலும் பண்டிகைகள் அனைத்துமே ஒரு ஒன்று கூடலுக்குத்தான். அதனை இப்படித்தான் செய்ய வேண்டும் எனும் கட்டாயங்கள் இல்லை.எல்லாமே நாம் வகுத்த வழிமுறைகள் தான் .கால்த்திற்கேற்ப மாற்றம் அவசியம் .உங்களைப் போன்ற இளைய சமுதாயக் குமுறல்கள் ஒரு புதிய எழுச்சிக்கு பாதை வகுக்கும்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பெரியாரின் ஒருசில புத்தகங்களைப் படிச்சுட்டு, பல ஆன்மீகப் புத்தகங்களைப் படிச்சும்கூட எனக்கு பெரியாரின் பக்கம்தான் தராசு சாயிற மாதிரி இருக்கு. எதையும் நாம் சிந்தித்து அறிந்து ஏத்துக்கணும்னுதான் அவர் அழுத்தமாச் சொல்றாரு. பண்டிகைகள் எல்லாம் ஒன்றுகூடிக் களிக்க என்பது எனக்கும் பிடித்தமானது. நாளடைவில் ஒன்றுகூடி தின்று களிக்க என்றாவதைக் கண்டுதான் எனக்கு வருத்தம். மொத்தத்துல என் அலைவரிசை சிந்தனை உங்களிடமும் தென்பட்டதில் மகிழ்ச்சி. உங்களின் வாழ்த்துக்கள் சந்தோஷத்தைத் தந்தது. மிகமிகமிக நன்றி.

   Delete
 11. நிரூ நான் பின்னர் கருத்து தெரிவிக்கிறேன் தோழி...

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்... பாராட்டவும் திட்டவும் உனக்கில்லாத உரிமையா விஜி... உன் கருத்து எதுவானாலும் தெரிஞ்சுக்க ஆவலோட காத்திருக்கேன் இந்தத் தோழி.

   Delete
 12. நிரு வணக்கம்....முதல்ல ஒரு பெரிய சபாஷ்!!!பேசத்துணியா விடயங்கள் பேசக்கூடா விடயங்கள் என்று வரைமுறைக்குள் இருந்து வெறிவந்து விட்டீர்கள்.இந்த விடயத்தில் அப்படியே என் ஜெராக்ஸ் நீரு..!நானும் முரண்பாட்டு மூடை,அதாவது மகிமைக்கு அஞ்சிய பிச்சைக்காரா' போர என்பார்கள்.அதே தான் நானும் அண்ணன் முக்கால் நாத்திகம்.நானும் அப'படி ஆனால் அம்மா மனவேதனைக்கு உள்ளாவா.அம்மா நிரம்பி வழியும் பக்தி.நான் இப்படி என்றால் விமர்சனங்கள் உண்டாகும் என நினைத்து மௌனித்ததுண்டு.இதைபற்றி விவாதிக்க ஆரம்பித்தால் என் தலை தான் சுற்றும்.அதிலும் அம்மம்மா இணைந்து கொண்டால் என் கதி அதோ கதி.
  சரி நிரு.விடயத்திற்கு வருகிறேன்.மாதம் குறித்து நாள் குறித்து தான் வழிபட வேண்டும் என்று அவசியமில்லை.முன்னாளில் செவ்வாய்,வெள்ளி,ஞாயிறு போன்ற நாட்கள் வழிபாட்டு நாட்களாக வகுக்கப்பட்டது அந்நாள் வழக்கங்கள் சட்டங்களின் அடிப்படையில் மட்டும் தான்.கடவுளர்கள் இறங்கி வந்து நாட்குறிக்கவில்லை நிரு.தவிரவும் இந்து சமயம் அதிக ஆரம்பரங்களை கொண்டதாக தோன்ற காரணம் அது நமது அதாவது தமிழர்களின் பாரம்பரிய மதம்.பிறழ்வுகளிற்கு உட்பட்டு மாறுதல்அடையவில்லை.கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற ஏனைய மதங்கள் அரேபியர் மற்றும் மேல்நாட்டரால் புகுத்தப்பட்டது.அவர்களின் கலாச்சாரம் ஆடம்பரமற்றது.அதன் வழி மதங்களும் அமைதிகொண்டன.இந்து மதம் தூயதமிழின் ஒட்டி வந்தது.காலப்போக்கில் மிகைப்படுத்தல்களும் புகந்து இத்தனை ஆர்ப்பாட்டமாக மாறி விட்டது.கிறிஸ்தவர்களும் மெதுவாய் ஊர்வலங்களை ஆரம்பித்த விட்டார்கள்.

  எது எப்பிடியோ கலாச்சாரம் பேணப்பட்வேண்டும்.அதிலுள்ள மிகைப்படுத்தல் மூடத்தனங்கள் களையப்பட வேண்டும்.மனம் மனச்சாட்டி இரண்டிற்கும் முரண்படாமல் நடந்தால் மதங்கள் கடவுள் இவை எதுவும் இன்றியும் சரியாக வாழ முடியும்.நாத்திக கொள்கை கூட இன்று சமூக நோய் என்கிறார்கள்.அதனால் தான் உலகம் கெட்டழிகிறது என்கிறார்ிகள் பெரியோர்.கடவுள் ஈல்லை என வாதிடவில்லை.மிகைப்படுத்திய நம்பிக்கைகள் நேர்திகள் கூச்சல்களுக்கு நான் எதிராளி என்று கூறவே விரும்புகிறேன்.அடுத்தவர் மனம் நோகாமல் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்தால் போதும்.சாமி எதுவும் வந்து கண்ணை குத்த போவதில்லை.அப்படி என்றால் முதலில் எனக்குக் குத்தட்டும்.

  சந்திப்போம் தோழி.

  பதிவிட வேண்டுமா??எனக்கு தங்கள் கோரிக்கை புரியவில்லையடா

  ReplyDelete
  Replies
  1. புரிந்தது அதிஸயா... வெளிநாட்டினர் மதம் என்பதால் பிற மதங்களின் பழக்க வழக்கங்களுக்கும் இந்து பழக்க வழக்கங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தேன். மிகைப்படுததிய நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்தால் போதும் என்பது மிகச் சிறப்பான கருத்து. எனக்குச் சற்று தெளிவு தந்தமைக்கு நன்றி தோழி. (தொடர் பதிவு என்பது ஒரு விஷயம் குறித்து தங்கள் கோணத்தில் நட்புகள் எழுதுவது. இங்கேயே விளக்கமாக நீங்கள் எழுதிட்டீங்க.)

   Delete
  2. ஓகேம்மா.இப்போ நேரம் இல்லடா.இன்னொரு தரம் இதை பற்றி தெளிவா பேசுறன்.!

   Delete
 13. நிரஞ்சனா... கையைக் குடுடா... ஒரு குலுக்கு குலுக்கிடுறேன்.

  அருமையான யோசிக்கத் துாண்டிய பதிவு. நீங்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளும் ஆறாம் அறிவை யுஸ் பண்ணுற அனைவரின் மனத்திலும் எழும் கேள்விகள் தான்.
  நிரஞ்சனா... மதம் என்பது என்னவென்று சுறுங்கச் சொன்னால் “மனிதத்தின் பயத்தைப் போக்கிக்கொள்ள மனத்திற்கு அவனே அமைத்துக்கொண்ட கற்பனை வேலி“ என்று சொல்லலாம். அதற்கு பலபல உருவங்கள்,வழிபாடுகள்... போன்றவைகள் வழிமுறையினருக்கு வழிகாட்டிச் சென்றார்கள். பின் வருபவர்களும் அறிவின் கண்களை மூடிக்கொண்டு பின் தொடர்கிறார்கள்.

  யோசித்தவர்கள் உங்களைப் போல தைரியமாக வெளியிடுகிறார்கள். பயந்தவர்கள் கடவுள் என்ற பெயரின் பின் ஒளிந்து கொள்கிறார்கள்.

  திரும்பவும் வருவேன் நிரஞ்சனா...

  பின்னோட்டங்களும் அருமையாக வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. மதத்திற்கு நீங்க கொடுத்த விளக்கம் அருமை ஃப்ரெண்ட். மிக்க நன்றி.

   Delete
 14. நிரூமா. கோயில்களை இடிக்க வேண்டாம். அதில் கும்பிடுவதாகச் சொல்லி ப் பணம் பறிப்பவர்களை இடிக்கலாம்.நாங்கள் வளரும் காலத்தில் ,திருவிழா வராதா என்று ஏங்குவோம். இப்பொழுதோ தொலைக்கட்சியில் தினம் ஒரு க்ராஃபிக்ஸ் அம்மன் வந்து மிரட்டுகிறார்.
  அதிசயமாக எங்கள் தெருவில் இந்தச் சத்தங்கள் இல்லை.
  தெய்வங்கள் பேரால் மனிதர்கள் நடத்தும் கூத்துக்கு தெய்வத்தை நொந்து பயனில்லை அம்மா. நல்ல பளிச் பதிவு. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வல்லிம்மா... திருவிழா இன்பங்களை நான் அனுபவித்ததில்லையே... என்ன செய்ய? தெய்வத்தின் பெயரால் மனிதர்கள் நடத்தும் கூத்துக்கள். அருமையாச் சொன்னீங்க. எனக்கும் இதே கருத்துதான்... ஆனா அழகா எழுதத் தெரியலை. எனக்கொரு தெளிவு தந்த உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிம்மா.

   Delete
 15. பல பின்னூட்டங்கள், தெளிவாக சொல்லப்பட்டதையே நானும் வழி மொழிகிறேன். எல்லா மதத்தினரும் செய்யும் கலாட்டா தான். அதுவும் போட்டி வேறே!

  இதெல்லாம் பத்தி கவலைப்படாமல், நமது கடவுள்கள் வேடிக்கை பார்க்கிறார் போல் தான் எனக்கு தோணுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வெற்றி மகள்ங்கற உங்க பேரே ரொம்ப நல்லா இருக்குது தோழி. உங்களின் கருத்தும் பேரைப் போலவே அழகுதான். மிக்க நன்றி.

   Delete
 16. //இங்க வர்ற பின்னூட்டங்கள் மூலமா விடை கிடைச்சா நான் தெளிவாயிடலாம்னு பாக்கறேன்//

  பதிவெல்லாம் ஓகே வாழ்த்துக்கள் தைரியமாக கூறியிரிக்கிங்க.. கண்டிப்பா நீங்க தலைகீழா நின்றாலும் இதற்க்கு உமக்கு பதில் கிடைக்க போவதில்லை.. வாதமும் தர்க்கமும் தான் வளரும்.. எனக்கு புரியவில்லை மதம் வேண்டாம்.. பகுத்தறிவு போதும் என்பவர்களின் ஒரே கொள்கை சண்டை வேண்டாம் பேதம் வேண்டாம் என்பதே.. ஆனால் அந்த பகுத்தறிவு கூட மதம் ஆகி போகிறது இப்படி ஆன வாதங்களினால்.. பிரச்சனை பண்ண காரணம் வேண்டும் இதற்க்கு புதிய வழி பகுத்தறிவு, உளவியல்..

  நன்றாக ஒரு மணி நேரம் இருந்து யோசித்து பாருங்க மதம் அல்ல மனம் தான் காரணம் என்று அறிவீங்க..
  (இப்ப நெட்.ல தேடி பாருங்க ஹிந்து - முஸ்லிம் - கிறிஸ்டியன் சண்டை எல்லாம் குறைஞ்சு போய்ட்டு பகுத்தறிவாளன் தான் இந்த மூவரோடும் சண்டை பிடிக்கிறான். இதுக்கு முன்னைய மததிலயே இருந்து இருக்கலாம் கடைசி ஓரிரு மதத்தோடு தான் சண்டை பிடித்து இருப்பான்.. இப்ப ஓவர் டியூட்டி.. ஹி ஹி)

  நண்பன் சீனுவின் பிளாக்கில் இருந்து தான் இங்கு வந்தேன்.. மன்னிக்கவும் எனது முதல் கமேண்டிலே உங்களை பாராட்ட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.. இருந்தாலும் தைரியத்துக்கு சின்ன பாராட்டு..

  ReplyDelete
  Replies
  1. இந்த விஷயத்துக்கு நிறையத் திட்டுதான் கிடைக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் ஹாரிபாட்டர் பிரதர். மனிதர்கள் மனங்கள் கொண்ட பித்தினால்தான் மதங்களின் ஆர்ப்பாட்டமும். சண்டைகளும்கற விஷயம் வந்த கருத்துக்களிலருந்து நான் எடுத்துக் கொண்டது. திருவிழாக்கள் மனிதர்கள் கூடி மகிழ ஏற்பட்டவைங்கற விஷயத்தையும். அவற்றை வெறுக்க வேண்டாம்கறதும் நான் கத்துக்கிட்ட விஷயம். இவ்வளவு கிடைச்சதுல சந்தோஷம். உங்களின் கருத்தும் எனக்கு மிக உதவியது. உங்களுக்கு.... My Heartful Thanks!

   Delete
 17. சகோதரியே... ஓய்வு நேரத்தில் கீழே உள்ள லிங்கில் என் பதிவை படிக்கிறீர்களா....?

  மறக்காம அதில் உள்ள பாட்டையும் கேட்டு பாருங்க...

  ஒரு சின்ன பொறி உங்கள் மனதில் ஏற்பட்டாலும் சந்தோசப்படுவேன்..

  பகிர்வுக்கு நன்றி...(த.ம. 7)

  தெய்வம் இருப்பது எங்கே ?

  ReplyDelete
  Replies
  1. அவசியம் பார்க்கறேன் தனபாலன் ஸார். எனக்குள் சில முடிவுகளுக்கு வர அனைவரும் உதவுகிறீர்க்ள். அதற்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியோட நன்றி சொல்லிக்கறேன்.

   Delete
 18. நிரஞ்சனா... உங்களோட கருத்துக்களை ரொம்ப தைரியமா சொல்லி இருக்கீங்க... எதுவுமே நம்ம அனுபவிக்காத வரைக்கும் அது நம்மளுக்கு reality இல்ல... அது போலத்தான் கடவுள் இருக்கார என்பதும்... ஆனால் மத்தவங்களுகுகு தொந்தரவு செய்யும் மைக் செட் விசயம் பத்தி நீங்க சொல்லி இருக்கரது அருமை... முடிஞ்சா என் வலைப்பதிவில் கடவுள் பற்றிய விளக்கம் தர முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. மைக்செட் சத்தம் மத்தவங்களுக்கு தொந்தரவு செய்யறதால அது எனக்குப் பிடிக்கறதில்லை. யாருக்கும அது பிடிக்காதுன்ற விஷயம் இப்ப புரிஞ்சது. கடவுள் பற்றின உங்களின் கோணத்தில் விளக்கம் அறிஞ்சுக்க ஆவலோட இருக்கேன். ரொம்ப நன்றிம்மா.

   Delete
 19. நீங்க வெளிப்படையாக எழுதியதற்கு நன்றி. எனக்கு தோன்றிய சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

  //திங்க் பண்றதுலகூட பெண்ணா இருந்து திங்க் பண்றது வேற, ஆணா இருந்து திங்க் பண்றது வேறயா? மூளைங்கற வஸ்து எல்லாருக்கும் ஒரே மாதிரிதானே வைக்கப்பட்டிருக்குது?

  பெண்கள் உணர்வுப்பூர்வமாக சிந்திக்க கூடியவர்கள். ஆண்கள் அப்படி அல்ல. கோபம் வந்தால் அடித்து விடுவது ஆண்கள் குணம். கோபம் வந்தாலும் அதை உண்டாக்கியவரைக் குறித்தும் கவலைப்படுவது பெண்ணின் குணம். ஆகவேதான் உங்கள் அம்மா அப்படி சொல்லி இருக்கிறார்.

  ஊர்வலங்கள், கோஷங்கள் ஆர்பாட்டங்கள் எல்லா ஊர்களிலும், எல்லா மதங்களிலும் உண்டு. இங்கே நிறைய பேர் இந்துக்கள். ஆகவே உங்களுக்கு இந்துக்கள் மட்டும் அப்படி செய்வது போலத்தோன்றுகிறது.

  சாமிக்கு படைத்து சாப்பிடுவது என்பது, அன்னதானத்தை ஊக்குவிப்பதற்காக கொண்டு வந்த பழக்கம். அதை அவர்கள் கொச்சை படுத்தினாலும், அதையே கட்லெட் பிரைட்ரைஸ் என்று நீங்களும் கொச்சை படுத்த வேண்டாம்.

  கோவில் சம்பிரதாயம் மடப்பள்ளி போன்ற விஷயங்களில் இன்னும் எனக்கே தெளிவு பிறக்கவில்லை. ஆகவே கருத்து கூற விரும்பவில்லை. ஒரு காலத்தில் சிறிய அளவாக இருந்தது இப்போது பெரிய சம்பிரதாய லிஸ்ட் ஆகி விட்டது. கடவுளை கற்பனை செய்ய மனிதனால் முடியாது. ஆகவேதான் அவனை பொறுத்த வரை உயர்ந்த படைப்பான மனித உருவில் கற்பனை செய்து கொள்கிறான், பிறகு அதற்கு பணிவிடைகள் செய்கிறான். விக்ரகங்கள் கடவுள் அல்ல, குறியீடுகள்.

  பெரியார் எழுதிய விஷயங்களும் விவேகானந்தர் எழுதியவையும் ஒரே மாதிரியான விஷயங்கள்தான். நாம்தான் குழம்புகிறோம். இரண்டு பேருமே தாங்கள் சொல்வதை யாரையும் பின்பற்ற சொல்லவில்லை. எதையுமே சொந்த அறிவை பயன்படுத்தி சிந்திக்கவே சொன்னார்கள். ஆகவே இருவர் சொன்னதுமே சரியானவை என்று நம்ப தேவை இல்லை. பகுத்தறிவு என்பது சுயமாக சிந்திப்பதே. பெரியாரே சொன்னாலும் அதை நம்ப தேவை இல்லை, என்பதுதான் பகுத்தறிவு சொல்வது.

  //அம்மாவோட விருப்பத்துக்காகத்தான் செஞ்சுட்டிருக்கேன்.
  தயவு செய்து நிர்பந்தத்தின் பேரில் கோவிலுக்கு செல்லாதீர்கள். பக்தி என்பது ஒரு குழந்தையின் மீது வைக்கும் அன்புபோல எந்த நிர்பந்தமும் இல்லாமல் வர வேண்டியது.

  தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்கங்க....

  ReplyDelete
  Replies
  1. புரியுது பாலா ஸார்.தெய்வங்களுக்கு படைச்சுட்டு அப்பறம் சாப்பிடறதுங்கற உங்கனின் விளக்கம் அருமை. அதை ஏத்துக்கறேன். விக்ரகங்கள் கடவுள் அல்ல குறியீடுகள்ன்ற விஷயமும் என் சிந்தனையத் தூண்டுது. ஆனா... கடவுள் இல்லைன்னு தீவிரமா சொன்ன பெரியாரே ராஜாஜி அவர் வீட்டுக்கு வந்தப்ப விபூதி கொடுத்ததா படிச்சிருக்கேன். மத்தவங்க உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து செயல்படறதுங்கறதை அதிலருந்தும் எடுத்துக்கிட்டேன். அப்படித்தான் அம்மாவோட கோயிலுக்குப் போறது. என் செயல் அவங்களுக்கு சந்தோஷததைத் தருதுன்னா அதைவிட இந்த மகளுக்கு என்ன பெரிசு? எனக்காக அக்கறை எடுத்துக்கிட்டு விளக்கம் தந்த உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஸார்...

   Delete
 20. ம்ம் நிறைய விளக்கம் கிடைக்குது மா.

  ReplyDelete
 21. நிரஞ்சனா உங்கள் வார்த்தைகள் என்னை கோபப்படுத்தியது என்பது உண்மை தான்... ஆனால் மனத்தில் தோன்றும் எண்ணங்களைச் சொல்லும் துணிவு இருக்கும் உங்கள் தைரியதிக்கு என் வாழ்த்துக்கள்... தொடருங்கள்.... பெரியாரைப் பற்றி ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன், அதனை உங்கள் பதிவிற்க்கான எதிர் பதிவு போட்டிப் பதிவு சண்டைப் பதிவு என்று மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் தோழி .

  ReplyDelete
  Replies
  1. என் ப்ரண்ட்ஸ் மேல எனக்கு கோபமே வராது சீனு. பெரியாரை எனக்கும் ரொம்பப் பிடிக்கும்கறதால உடனே ஓடி வந்துடுவேன். மிக்க நன்றி.

   Delete
 22. எனது தெய்வம் இருப்பது எங்கே ? பதிவைப் படித்து விட்டு கருத்து கூறியதற்கு நன்றி... மேலே உள்ள என் கருத்துரையில் சின்ன தவறு உள்ளது. அதை நீங்கள் கவனிக்கவில்லை என்பதே போதும்.

  /// கல் வீசறவங்க தாராளமா வீசலாம் /// என்று உங்கள் பதிவின் ஆரம்பத்தில் சொல்லி இருந்தீர்கள்... நான் கல் வீசவில்லை... பூவை தான் வீசி உள்ளேன் என்று சந்தோசப்படுகிறேன். மிக்க நன்றி சகோதரி... தொடருங்கள்... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க... பூ எறிந்து மகிழ்ச்சி தந்தீங்க நீங்க. நானும் சந்தோஷத்தோட நன்றி சொல்லிக்கறேன்.

   Delete
 23. நிரஞ்சனா....
  ‘இந்த சனியன் பிடிச்ச கோயிலை இடிச்சுட்டு வந்தா என்ன’ன்னு எனக்கு கோபம் பொங்கும். - என்று எழுதியிருந்தீர்கள்.
  ஒரு கோவிலையே சனியன் பிடித்தக் கோவில் என்று எழுதிய தைரியசாளியான நீங்கள் சனியனைப் பார்த்திருக்குறீர்களா...? இதில் சனியன் என்பது என்ன?
  யோசியுங்கள்!!
  நாம் நம் முன்னோர்கள் சொன்ன வழிதான் பாதையில் தான் போய் கொண்டு இருக்கிறோம் என்பது உங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும். நாமும் நம்மை அறியாமல் அந்த வலைக்குள் தான் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

  நான் ஏன் திரும்பவும் வருகிறேன் என்று சொன்னது இதற்கு தான் நிரஞ்சனா.
  யாராவது இதைக் குறித்துக் கேட்பார்கள் என்று நினைத்தேன். கேட்காததால் நான் கேட்கிறேன்.
  நிரஞ்சனா... ஒரு எம்.ஜி.ஆர் படத்தில் ”கோவிலைக் கட்டி வைப்பது எதற்காக?“ என்று என்.எஸ்.கே அவர்களிடம் பாட்டாக கேட்பார். அதற்கு பதிலா “நம் வேலைக்கு பெருமையுண்டு அதற்காக“ என்று எம்.ஜி.ஆர் பதில் சொல்வார். இது தான் உண்மை.

  நிரஞ்சனா... அடுத்தவர்கள் அமைத்துத் தந்த பாதையில் நடக்காதீர்கள். உங்கள் பாதையைச் சுயமாகச் சிந்தித்து அமைத்துக்கொள்ளுங்கள்.
  அதில் நிறைய அனுபவங்கள் தரும் பாடங்கள் தடைகற்களாகவும் படிகற்களாகவும் அமையலாம். தேர்ந்தெடுத்துச் செயல்படுங்கள்.

  எனக்குத் தோன்றியதை எழுதினேன். என்னிடம் கோபம் வேண்டாம் தோழி. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அருணா... ஆழ யோசித்தா.. சனியன் என்று குறிப்பிட்டதன் தவறை உணர முடிகிறது. நான் ஆழ்ந்து யோசிக்க உதவினதுக்கு நன்றிப்பா. எனக்கென தனியாக பாதை போட்டுக்கச் சொன்ன அக்கறைக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

   Delete
 24. நிரூ ம்ம்ம்ம் கருத்துகள் நிறைய வந்து குவிகின்றன... நிரூ மேலே கூறியுள்ள கருத்துக்களை வைத்தே பத்து பதிவுகள் போடலாம் என்று தோன்றுகிறது....
  நிரூ நீ கூறிஉள்ளபடி கோவில்களில் மைக்செட் வைத்து அனைவரையும் தொந்தரவு செய்யும் விடயம் எனக்கும் பிடிக்காது .... அது நம் மனிதர்கள் செய்யும் விஷயம்...
  திருவிழாக்களை கிராமப்புறங்களில் பார்த்தால் எவ்வளவு நல்ல இருக்கும் தெரியுமா நிரூ.... நல்ல பகிர்வு நிறைய தெளிவு கிடைக்குது என் தோழிக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான் விஜி... என் அரைகுறை சிந்தனைகளையும் மதி்ச்சு நிறைய நல்ல உள்ளங்கள் கருத்து சொன்னதுல நான் கத்துக்கிட்டது நிறைய. பின்னால தனியா எழுதுவேன் அதை. ரொம்ப நன்றி தோழி.

   Delete
 25. இஸ்லாமியர்கள் பக்தி செலுத்த பட்டினி இருந்து, ஆறு வேளையும் தொழுது ரம்ஜான் விரதம் இருப்பாங்க//நிரு ஆறு வேளை அல்ல ஐந்து வேளை

  ReplyDelete
  Replies
  1. அடாடா... இதுலயும் தப்பு பண்ணியிருக்கேனா... ஸாரி்க்கா... கொஞ்ச நாளக்கப்புறம் உங்களப் பாத்ததுல மகிழ்ச்சி. அடிக்ககடி வாங்க.

   Delete
 26. I read all these things.
  http://kovaikkavi.wordpress.com/
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. நிறைய நாள் வராம இருந்துட்டேன் உங்க பக்கம். நாளைலருந்து வருவேன். ரொம்ப நன்றிக்கா...

   Delete
 27. ஆடி வெள்ளி பற்றி உனக்கு தெரியாது நிரூ பட்

  இப்பதிவின் மூலம் அறிய முடிந்தது...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ரொம்ப நன்றி எஸ்தர்.

   Delete
 28. உண்மையில் நிரூ இந்த அதிக இரைச்சல் தரும் செயல்பாட்டை நிச்சயம் சீர்திருத்த வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. என் கருததை ஆமோதித்து சந்தோஷம தந்த நேசன் அண்ணாவுக்கு மிக்க நன்றி.

   Delete
 29. நிரஞ்சனா,
  கொஞ்சம் கொஞ்சமாக மேலை நாட்டுக்
  கலாச்சாரத்திற்குத் தாவிக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களிடம்
  கொஞ்சமேனும் பாரம்பரிய உணர்வைத் தக்க வைப்பவை இது போன்ற விழாக்கள் தான் !

  ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக இந்துக்கள் நினைக்கிறார்கள் !
  கலாச்சாரம் என்ற ஒன்று தேவையா என்று நீங்கள் கேட்கலாம், தேவைதான் !
  கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைக்கு கலாச்சாரம் மிக அவசியம் ! அடுத்ததாக
  கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை தேவையா என்றும் நீங்கள் கேட்கலாம்,
  கட்டாயம் தேவைதான் !

  இந்துக்களுக்கு எதையுமே சத்தமாக செய்துதான் பழக்கம் ! ஒரு பாமரனுக்கு
  லாட்டரியில் ஒரு லட்சம் பரிசு விழுகிறது என்றால் அவனால் சும்மாயிருக்க
  முடியாது. அதைக் கொண்டாட வேண்டும் ! ஊருக்கே சொல்லி அதை தடபுடலாக விருந்து வைத்துக் கொண்டாடுவது தான் அவன் மனநிலை ! இதே மனநிலை தான் இந்துக் கோவில்களிலும் பிரதிபலிக்கிறது ! உண்மையில் இந்துக் கோவில்களில் உள்ள அறிவியலை அயல் நாட்டவர் கண்டு வியக்கின்றனர் ! உதாரணத்திற்கு.........

  திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் கோபுரத்தில் சனி ( saturn )
  கிரகத்தில் இருந்து ஊதா கதிர்வீச்சுக்கள் வந்து விழுகின்றன என்று அயல்
  நாட்டவர் கண்டு வியந்ததாக செய்தியொன்று சமீபத்தில் வந்தது. சனி பகவானுக்கு உகந்த நிறம் ஊதா ( violet )


  பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடினார். நிச்சயம் அவரை
  அதற்காகப் போற்ற வேண்டும் ! மற்றபடி அவரது கடவுள் மறுப்புக் கொள்கையில் அவரது சொந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து !

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்... நம் மெய்ஞானத்தில் விஞ்ஞானமும் கலந்திருக்கிறது என்பது மகிழ்வளிக்கும் விஷயம்தான். சத்தம் அதிகம் ஏன் தமிழனுக்கு பிடிக்கிறது என்பதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் என்னை சிந்திக்க வைக்கிறது. மிக்க நன்றி.

   Delete
 30. நிரஞ்சனாக்குட்டி...சுகமா செல்லம்.நான் சுகம்.வந்திட்டேன்.என்னைப்போலவே இருக்கிறீங்களே.நானும் இதேபோல அத்தனையும் நினைக்கிறதுண்டு.ஆனால் ஒரு பழக்கம்போல காலை முகம் கழுவினதும் வீபூதி பூசிக்கொள்ளுவன்.நம்பிக்கை உள்ளவங்க சாமி கும்பிடட்டும்.ஆனால் எதுக்கு ஆர்ப்பாட்டம்.சத்தங்கள்,வர்ணங்கள்...அட்டகாசம்.அதுவும் வெளிநாடுகளில் வந்தபிறகும் பண்ற கூத்து...சிலநேரம் வெக்கமா இருக்கு வெள்ளைக்காரன் பகிடி பண்றான் காணிவேலான்னு !

  ReplyDelete
  Replies
  1. நான் பக்தியாக இருக்கறதுக்கு எதிரியோ, பக்தியை கேலி பண்றவளோ இல்லக்கா. பக்தியின் பேரால ஓவர் சத்தமும் மத்தவங்களுக்கு இடைஞ்சலும் கூடாதுன்னுதான் சொல்ல வந்தேன். உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

   Delete
 31. ஹாய் நிரஞ்சனா!! நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.. நானும் நிறைய டென்ஷன் ஆகி இருக்கேன்... பக்தியா ஏன் அமைதியான முறைல கொண்டாடவும் வெளிபடுத்தவும் தெரியல?? இன்னொரு கொடுமை, திருவிழா டைம்ல மதுபானம் கூட அதிகமா விற்பனை ஆகுது... சில பக்தர்களால்!!!

  ரொம்ப சீரியஸ் விஷயத்த ரொம்ப நகைசுவைய சொல்லி இருக்கறத கண்டிப்பா பாரட்டனும்.... சிந்திக்க வைக்கும் பதிவு!!!

  ReplyDelete
  Replies
  1. ஆமா சமீரா... திருவிழா சமயங்கள்ல மதுபானம் அதிகம் விற்பனையாகறதுங்கற விஷயம் நான் குறிப்பிட மறந்துட்டேன். அதையும் நினைவுபடுத்தி, என்னையும் பாராட்டின உங்க அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.

   Delete
 32. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்....

  ReplyDelete
  Replies
  1. உங்களின் அன்புக்கு மிக்க நன்றி செழியன் ஸார். சமயம் கிடைக்கும் போது உஙகள் தளம் நிச்சயம் வருவேன்.

   Delete
 33. நிரஞ்சனா,

  சூப்பர் பதிவு!!!!!

  ஸ்பீக்கர்லே பாட்டு போட்டு ஊர்சனத்தை எழுப்புன்னு சாமி சொல்லுச்சா?

  ஊர்வலத்தில் சாமி வரும்போது பண்டைய நாட்களில் நல்ல இசையை நாதஸ்வரமா வாசிச்சுக்கிட்டே வருவாங்க.அதுவும் இரவு ஒரு 9 மணிக்கு மேல். பிசிறில்லாத அந்த இசை மனசை அப்படியே அமைதியாக்கிரும்.

  இப்ப என்னடான்னா..... ப்ச்...என்னவோ போங்க:(

  இதுலே எல்லா மதங்களும் ஒன்னுபோலதான். ஆனா விகிதாச்சாரம் வெவ்வேற அளவில் என்பதே உண்மை:(

  மனதில் இருக்கும் கடவுளை உணர்ந்து ஓசைப்படாமல் தியானிப்பதே கடவுளுக்குப் பிடிக்கும். ஆனால் மனுஷ்யனுக்கு ஆர்ப்பாட்டம் வேண்டிக்கிடக்கே!

  ReplyDelete
  Replies
  1. மனதில் இருக்கும் கடவுளை உணர்ந்து தியானிக்க அமைதியே சரின்றதுதான் என் எண்ணமும் டீச்சர். நீங்க ஆமோதிச்சதுல ரொம்ப சந்தோஷம். மிக்க ந்ன்றி.

   Delete
 34. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே
  இது ஒரு கலவை
  - சென்று பார்க்கவும். நன்றி !

  ReplyDelete
  Replies
  1. எனக்காக வந்து தகவல் சொன்ன உங்களின் பண்புக்கு என் தலைதாழ்ந்த நன்றி ஸார். உடன் சென்று பார்க்கிறேன்.

   Delete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!