ஹாய் எவ்ரிபடி! ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்க முன்னாடி வந்திருக்கேன் நிரூ! சந்தோஷத்துக்குக் காரணம் இந்த விருது...
என் அன்பிற்கும் பாசத்துக்கும் உரிய, கலை அக்கா (கிராமத்துக் கருவாச்சி) எனக்கு இந்த விருதைக் கொடுத்திருக்காங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட அன்போட விருது தந்த அக்காவுக்கு நிறைய நிறைய நி்றைய நன்றி சொல்லிக்கறேன்.
ஆனா... அவங்க இந்த விருதை ஏன் தந்தாங்கன்றது உங்களுக்கெல்லாம் தெரியாதுதானே... சொல்றேன். உங்க மானிட்டரைக் கொஞ்சம் உத்துப் பாருங்க... கரெக்ட், அப்படித்தான். இப்ப வேகமா ஒரு கொசுவத்தி சுத்தறது உங்க கண்ணுக்குத் தெரிஞ்சிருக்குமே... எஸ்! ப்ளாஷ்பேக்தான்.
மூணாம் வகுப்பு படிக்கிற சமயம் நிரூவோட ஸ்கூல்ல ஆண்டு விழா வர்றதுன்னு பல போட்டிகள் வெச்சாங்க. மாறுவேடப் போட்டின்னு சொன்னதும், அவ ரொம்ப இன்ட்ரஸ்ட்டா ‘நான் கலந்துக்கறேன் மிஸ்’ன்னு சொல்லிட்டு வந்துட்டா. வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னதும், அம்மா ‘‘காந்தித் தாத்தா வேஷம் போட்டா நல்லா இருக்கும் நிரூ. எப்படிப் பேசணும்னு நான் சொல்லித் தர்றேன்’’ன்னு சொன்னாங்க. காந்தி வேஷம் போட்டா, இடுப்புல ஒரு துண்டை மட்டும் கட்டி, கைல ஒரு தடியக் கொடுத்தாப் போதும், மாறு வேஷத்துக்கு வேற செலவு பண்ண வேணாம்கற அம்மாவோட சூப்பர் ப்ளான் அவளுக்குத் தெரியாம அப்பாவி நிரூவும் சந்தோஷமா ஒத்துக்கிட்டா.
‘‘என் பெயர் மோகன்தாஸ் கரமசந்த் காந்தி. நான் வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்க உழைத்தேன். என்னை மகாத்மா என்று அழைக்கிறார்கள்’’ இதுதான் அம்மா சொல்லிக் கொடுத்த டயலாக். இதை மூணு நாளா சொல்லச் சொல்லி ப்ராக்டிஸ் கொடுத்தாங்க. நிரூவும் சரியாவே சொன்னா. அம்மாவுக்கு செம குஷி. ஆனா ஆண்டு விழா அன்னிக்கு காலையில நிரூவுக்கு அதிர்ச்சி காத்திருந்துச்சு. காந்தி வேஷத்துக்காக மொட்டை போட்டுக்கணும்னாங்க அம்மா.
நிரூவுக்கு பயங்கர கோபம். மாட்டேன்னா. ‘‘நிரூவுக்கு அழகான ஹேர். மொட்டைல்லாம் வேணாம். தலையில துண்டைக் கட்டி மொட்டைத் தலை மாதிரி பண்ணிடலாம்’’ன்னு நிரூவுக்கு சப்போர்ட் பண்ணாரு அவ மாமா. அம்மா அதெல்லாம் கேக்காம பிடிவாதமா, ‘‘சும்மாருங்கண்ணா. வளர்ற குழந்தைதானே... சீக்கிரம் வளர்ந்துடும்’’ன்னுட்டு மொட்டை போட வெச்சுட்டாங்க.
நிரூவுக்கு கோபமான கோபம். அழுகையான அழுகை. ஃபங்ஷனுககு வந்து ஸ்டேஜ் கிட்ட காந்தியா நின்னப்பவும் அவ கோபம் அடங்கலை. அவ பேரை அனவுன்ஸ் பண்ணி, கூப்பிட்டாங்க. மெதுவா நடந்து போய் ஆடியன்ஸைப் பாத்து நிக்கறா. கைதட்டல் கிடைச்சுது. ஆனா பாருங்க... கோபத்துல பேச வேண்டிய டயலாக் மறந்துடுச்சு. ‘‘நான்... நான்... மோகன்தாஸ் காந்தி’’ன்னு சொல்லிட்டு முழிக்கிறா.
நிரூவுக்கு கோபமான கோபம். அழுகையான அழுகை. ஃபங்ஷனுககு வந்து ஸ்டேஜ் கிட்ட காந்தியா நின்னப்பவும் அவ கோபம் அடங்கலை. அவ பேரை அனவுன்ஸ் பண்ணி, கூப்பிட்டாங்க. மெதுவா நடந்து போய் ஆடியன்ஸைப் பாத்து நிக்கறா. கைதட்டல் கிடைச்சுது. ஆனா பாருங்க... கோபத்துல பேச வேண்டிய டயலாக் மறந்துடுச்சு. ‘‘நான்... நான்... மோகன்தாஸ் காந்தி’’ன்னு சொல்லிட்டு முழிக்கிறா.
ஸ்டேஜ்ல சைட்ல இருந்த அம்மா, கோபமா, ‘‘சுதந்திரத்துக்குப் பாடுபட்டேன்னு சொல்லேண்டி’’ன்னு சின்னக்குரல்ல சீறினாங்க. நிரூ ஒரு செகண்ட்கூட லேட்டாக்காம, ‘‘சுதந்திரத்துக்கப் பாடுபட்டேன்னு சொல்லேண்டி’’ன்னு மைக்ல சத்தமாச் சொல்லிட்டா. ஆடியன்ஸ்லருந்து ஒரே சிரிப்புச் சத்தம். வெக்கப்பட்டுக்கிட்டு ஸ்டேஜுக்குப் பின்னாடி ஓடிட்டா நிரூ.
‘‘கடைசி நேரத்துல சொதப்பிட்டியேடி... உனக்கு ஒரு பிரைஸும் கிடைககாது.’’ன்னு அம்மா திட்டிககிட்டே இருக்க, அந்த நேரத்துல பரிசுகளை அறிவிச்சிட்டிருந்தாரு ஹெச்.எம். மாறுவேடப் போட்டியில நிரூவுக்கு ஆறுதல் பரிசு கிடைச்சுது. ஏன்னா... பரிசு தரலைன்னு ‘ஆங்ங்ங்...’ன்னு சைரன் குரல்ல நிரூ அழ ஆரம்பிச்சா, அவளோட சத்தத்துல பதினெட்டு பட்டி ஜனங்களும் ராவெல்லாம் தூங்க முடியாம சண்டைக்கு வருவாங்கன்னு ஹெச்.எம்.முக்குத் தெரியும். அதனாலதான் பரிசு கொடுத்தார். ‘‘அந்த பயம் இருக்கட்டும்...’’னு நிரூவும் பரிசை வாங்கிட்டு சந்தோஷமா வீட்டு்க்கு வந்தா.
இந்த விஷயம் கலைக்காவுக்குத் தெரிஞ்சதாலதான் நிரூவுக்கு விருது கொடுத்திருக்காங்க. முன்னயாவது ஸ்கூல்ல அழுதா பதினெட்டு பட்டியும் அலறும். ‘‘எனக்கு விருது தரலையே...’’ன்னு கலை அக்காவோட தளத்துல இப்ப நிரூ அழுதான்னு வைங்க... நெட் மூலமா அகில உலகமும் எதிரொலிக்குமே, உலகம் தாங்காதேன்னு பயந்து போயித்தான் கலைக்கா எனக்கு விருது தந்திருக்காங்க. ஹா... ஹா....
அச்சச்சோ... வேணாம் கலைக்கா... இதுக்கெல்லாம் கோபப்பட்டு கருக்கு மட்டையத் தூக்காதீங்க. என்னைப் பத்தி எதாச்சும் எழுதணும்னு சொன்னீ்ங்களேன்னுதான் இப்படிச் சொன்னேன். நீங்க அன்பா, பாசமாதான் கொடுத்தீங்கன்னு நம்ம மக்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும். சரிதானே ஃப்ரெண்ட்ஸ்!
இந்த விஷயம் கலைக்காவுக்குத் தெரிஞ்சதாலதான் நிரூவுக்கு விருது கொடுத்திருக்காங்க. முன்னயாவது ஸ்கூல்ல அழுதா பதினெட்டு பட்டியும் அலறும். ‘‘எனக்கு விருது தரலையே...’’ன்னு கலை அக்காவோட தளத்துல இப்ப நிரூ அழுதான்னு வைங்க... நெட் மூலமா அகில உலகமும் எதிரொலிக்குமே, உலகம் தாங்காதேன்னு பயந்து போயித்தான் கலைக்கா எனக்கு விருது தந்திருக்காங்க. ஹா... ஹா....
அச்சச்சோ... வேணாம் கலைக்கா... இதுக்கெல்லாம் கோபப்பட்டு கருக்கு மட்டையத் தூக்காதீங்க. என்னைப் பத்தி எதாச்சும் எழுதணும்னு சொன்னீ்ங்களேன்னுதான் இப்படிச் சொன்னேன். நீங்க அன்பா, பாசமாதான் கொடுத்தீங்கன்னு நம்ம மக்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும். சரிதானே ஃப்ரெண்ட்ஸ்!
கேக்கை எடுத்துக்கறேன் நிரூ.அப்புறம் வர்றேன்.
ReplyDeleteவெல்கம் Dear S.S. உங்களுக்காக நிரூ காத்துட்டிருப்பேன்...
Deleteவாழ்த்துகள் .. நீங்கள் விரைவில் குக்கர் சாரி புக்கர் பரிசு , பென்ஸ்கார் சீ வாய் குழருது ஆஸ்கார் பரிசு பெற வாழ்த்துகள்
ReplyDeleteநீங்கள்ளாம் தட்டிக் கொடுத்தா எல்லாக் கார் விருதும் கிடைச்சுடுமே Friend!
Deleteஉண்மையில் உங்கள் எழுத்து நடை அருமை .. ( இது காமெடி இல்ல சீரியஸ் )
ReplyDeleteOh, I Feel very very Happy. உங்களுக்கு என்னுடைய சந்தோஷம் நிறைந்த நன்றி My dear Friend!
Deleteவாழ்த்துக்கள் நிரூ என்னும் பல விருதுகள் வேண்ட
ReplyDeleteஇன்னும பல விருதுகள் கிடைக்க வாழ்த்தினதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ எஸ்தர்.
Deleteபதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்
ReplyDeleteபரிசு பெற்றமைக்கும் அழகான எழுத்து நடைக்கும்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பதிவை ரசித்துப் படித்தேன்னு நீங்க சொன்னதுலயும். அழகான எழுத்து நடைன்னு பாராட்டினதையும் பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷப்படறேன். என்னை Encourage பண்ணின உங்களுக்கு My Heartful Thanks.
DeleteTha.ma 4
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteதவறாமல் என் எழுத்தைப் படிச்சு இந்தத் தங்கையை வாழ்த்தும் உங்களுக்கு சந்தோஷம் நிரம்பிய என்னுடைய நன்றி.
Deleteவிரைவாக இந்த விருதை பெற்றதற்கு வாழ்த்துக்கள். இன்னும் சிறப்பாக எழுதுங்கள்.
ReplyDeleteநிச்சயமா இன்னும் இன்னும் பெட்டரா எழுத முயற்சிக்கிறேன் Friend. இப்படி விருது தந்தாலாவது நிரூ நல்லா எழுத மாட்டாளான்னு குடுத்துட்டாங்களோன்னு எனக்கும் தோணிச்சு. My Heartful Thanks to you!
Deleteம்..(:
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றிகள் ஐயா...
Deleteவிருதுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ..!
ReplyDeleteஉங்களின் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். Many Many Thanks to you!
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னை வாழ்த்திய உங்களுக்கு சந்தோஷததோட கூடிய என் நன்றி.
Deleteஇருந்தாலும மொட்டை போட்டது தப்புதான்!
ReplyDeleteஎழுத்து நடை அருமை!
சா இராமாநுசம்
நல்ல தமிழ்ல அழகழகா கவிதை எழுதற நீங்க என் எழுத்து நடையப் பாராட்டினதுல துள்ளிக் குதிச்சிட்டேன் ஐயா. உங்களுக்கு சந்தோஷத்தோட என் நமஸ்காரங்களும், நன்றியும்.
Deleteவாழ்த்துக்கள் நிரூ. இனி இப்படிலாம் அழுது அடம் பிடிச்சே முதுகுல நாலு சாத்து சாத்துவேன். தெரிஞ்சுதா? சமர்த்தா நல்ல புள்ளைன்னு பேர் எடுக்கனும். ஓக்கே?
ReplyDeleteஹம்மாடி... நீங்க சாத்துனா நான் தாங்க மாட்டேன்க்கா... இனிமே நல்ல புள்ளைன்னு பேர் எடுத்துடறேன். சரியா...! My Heartful Thanks to you Sis!
Deleteவிருதுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்போட வாழ்த்தின உங்களுக்கு சந்தோஷத்தோட என் நன்றிகள்!
Deleteஅட நிருக்குட்டிக்கு விருதா!!! க்ரேட். எஞ்சாய்.
ReplyDeleteஇனிமே அழாமலியே விருதுகள் கிடைக்க ஆசிகள்:)
நன்றிம்மா! உங்கள் ஆசிகள் கிடைச்சது மனசுக்கு நிறைவா இருக்கு எனக்கு!
Deletecongratilation friend
ReplyDeletecontinue your writings.
Best wishes
வாங்க ஃப்ரெண்ட்! சந்தோஷத்தோட என்னை வாழ்த்தியிருக்கீங்க. நானும் அதே மகிழ்வோட என் நன்றியை தெரிவிச்சுக்கறேன்.!
Deleteநிரூ விருது பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . நான் காலையிலே உன்னுடைய விருது பார்த்தவுடன் கருத்து தெரிவிக்கலாம் என்று வந்தால் கருத்து பெட்டி வெகு நேரம் ஆகியும் வரவில்லைடா .
ReplyDeleteஅதான் இப்ப வந்தேன் மிக்க மகிழ்ச்சிடாடாடா...
விஜிக்கண்ணா... வெரி ஸாரிடா. என் தளத்துல ‘உலவு’ன்ற திரட்டியோட ஓட்டுப்பட்டை இணைச்சிருந்தேன். அந்த தளத்துல எதோ பிரச்சனைங்கறதால தளம் திறக்க 10 நிமிஷத்துக்கும் மேல ஆச்சு காலையில எல்லாருக்கும். எப்படி சரி பண்றதுன்னு தெரியாம ஈவ்னிங் மாமா ஆபீஸ்லருந்து வந்ததும் சரி பண்ணித்தரச் சொன்னேன். இப்ப சீக்கிரமே ஓபன் ஆயிடும். ரொம்ப சிரமப்படுத்திட்டுதோ? ஆனாலும் நான் விருது வாங்கினதுக்கு சந்தோஷமா நீ வாழ்த்துச் சொல்ல வந்ததுல எனக்கு பெருமையா இருக்கு. ரொம்ம்ம்ப்ப தாங்க்ஸ்ம்மா...!
Deleteநல்ல பதிவருக்கு விருது கொடுத்த கலைக்கு நன்றி. நிரஞ்சனாவிற்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteநல்ல பதிவர் என்று வாழ்த்திய உங்களுக்கு சந்தோஷத்தோட கூடிய என்னுடைய மனம் நிறைந்த நன்றிகள் ஸார்!
Deleteவிருதுக்கு வாழ்த்துகள்! ரசிக்க வைத்தது கிடைத்ததற்கான காரணம்:)!
ReplyDeleteஎன்னை ரொம்ப சந்தோஷப்பட வெச்சது உங்களோட வருகை. ரொம்ப ரொம்ப நன்றி மேடம்!
Deleteவிருதுக்கு வாழ்த்துக்கள்.இதே போல் பிளாக் உலகில் மட்டுமல்ல அனைத்திலும் பற்பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள் நிரூ.
ReplyDeleteஉங்கள் மாமாவைப்[போல் நகைசுவை மிளிர எழுதுகின்றீர்கள் தொடருங்கள்
விருதுகள் பல கிடைக்கட்டும்னு நீங்க வாழ்த்தினதுல ரொம்ப ரொம்ப சந்தோஷப்படறேன் நான். நி்ச்சயம் நகைச்சுவை உணர்வை விடாமல் தொடர்கிறேன் Dear S.S. My Heartful Thanks to you!
Deleteவணக்கம் நிறு செல்லம் ...
ReplyDeleteதாமதமா வந்ததுக்கு ம்ன்னியுங்கோ ....
வாழ்த்துக்கள் நிருக் குட்டி ....
தாமதமா வந்தாப் பரவால்ல... கலைக்கா வராமலே இருந்துட்டாதான் அழுவேனாக்கும்! வாழ்த்துக்களுக்கு என்னோட மனம் நிறைய நன்றிக்கா!
Deleteஇதுக்குலாம் நான் கருக்கு மட்டைத் தேட மாட்ட்ணன் ,...ஏன் எண்டால் மீ நீங்கலாம் ஒரேக் குட்டையில் ஊறிய மட்டைகள் ....
ReplyDeleteநானும் அழுதே காரியத்தை சாதிப்பனாம் அப்புடின்னு என் அண்ணன் சொல்லுவான்
‘முணுக்’குன்னா கண்ல தண்ணி வந்திடுது இவளுக்கு-ன்னு என் வீட்ல சொல்லுவாங்க. நீங்களும் நம்ம டைப்தானா... நம்ம அக்காவாச்சே! பின்ன எப்புடி?
Deleteவாழ்த்துக்கள் பிரெண்ட்....
ReplyDeleteஎன்னமா எழுதுற நீ...!!! சூப்பர்பப்பா...
தொடர்ந்து இன்னும் நிறைய விருதுகள் வாங்க என்மனமார்ந்த வாழ்த்துக்கள்ப்பா...
Real Feel ஓட நீங்க வாழ்த்தியிருக்கறது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஃப்ரெண்ட்! என்னுடைய மனம் நிறைந்த நன்றி!
Deleteஇங்க....பார்டா நிரஞ்சனாக்குட்டிக்கு இன்னொருக்கா விருது.அதுவும் காக்கா குடுத்திருக்கு.காக்காவோட சேர்ந்துகொண்டு ஆடுமேய்க்க,வாத்து மேய்க்கப் போறேல்ல சொல்லிட்டன் உதைதான் விழும்.மாமாவுக்கு மட்டும்தான் சொக்லேட் குடுப்பன்.அழுத பிள்ளை பால் குடிக்குமாம்.இங்க விருதும் பரிசுமெல்லோ வாங்கியிருக்கு.சரி சரி அதுக்கும் அழுகிற சத்தம் சுவிஸ் மலைகளில மோதி என்ர வீட்டுக்கு வருது.இந்தாங்கோ கை நிறையச் சொக்லேட்.பிடியுங்கோ செல்லம்.அழாமல் இன்னும் இன்னும் விருது வாங்கவேணும்.பிந்தினாலும் என்ர அன்பு எப்பவும் உண்மையா இருக்கும் !
ReplyDeleteஅழாமல் இன்னும் நிறைய நிறைய விருது வாஙகணும்னு நீங்க சொல்லியிருக்கறது சந்தோஷமா இருக்கு. அன்போட நீங்க தந்த சொக்லேட்டுகள் மிக மிக இனிக்கிறதுககா. ‘பிந்தினாலும் என்ர அன்பு எப்பவும் உண்மையா இருக்கும்!’ -இதுதானே நான் ரொம்ப ஆசைப்படற விஷயமும்கூட. அது கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம் எனக்கு. My Heartful Thanks to you!
Deleteவிருதுக்கு வாழ்த்துக்கள்.ஸ்கூலில் வாங்கிய சோப்பு டப்பா பரிசுதானே பலரை உயரத்தில் போகச்செய்திருக்கிறது.
ReplyDeleteரொம்ப கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க ஸார். அன்னிக்கு எனக்கு பரிசாக் கிடைச்ச க்ரேயான் பாக்ஸ்தான் அதுக்கப்புறம் ஸ்கூல்ல வந்த போட்டிகள்ல கலந்துக்க வெச்சது. அன்னிக்கு கிடைச்ச அனுபவம்தான் மேடைக் கூச்சத்தை விரட்டிச்சு. நல்ல வார்த்தைகளால் என்னை உற்சாகப்படுத்தின உங்களுக்கு ஹேப்பியா நன்றி சொல்றேன் நான்!
Deleteபிளாஷ்பேக்கும் பொருத்தமான அந்த அழுகாச்சி பொண்ணு படமும் (அது நீங்களா?!) சூப்பரோ சூப்பர்! நான் நடுவரா இருந்திருந்தா எல்லாரயும் சிரிக்க வச்ச அந்த காந்தி பாப்பாவுக்கு முதல் பரிசு குடுத்திருப்பேன்.
ReplyDeleteவிருது பெற்ற உங்களுக்கும் கொடுத்த சகோதரி கலைக்கும் (எனக்கும் குடுத்திருக்காங்களே..) வாழ்த்துகள்!
ஐய, அது நான் இல்லீங்க. கூகிளார் கிட்ட கேட்டப்ப கிட்டத்தட்ட என் சாயல்ல இருக்கற இந்தப் பொண்ணு கிடைச்சுது. நான் கொஞ்சம் கறுப்பு நிறங்க. உங்களோட வாழ்த்துக்கு மகிழ்ச்சியோட என் நன்றியையும், நீங்க விருது பெற்றதுக்கு சந்தோஷமா என் வாழ்த்தையும் தெரிவிச்சுக்கறேன்.
Deleteவணக்கம் சின்னப்பொண்ணே!அக்கா கையால விருது வாங்கினப்போ,நான் மௌன விரதம்.அதனால வாழ்த்த முடியல!மனசார எப்ப வேணா வாழ்த்தலாமே?அதனால இன்னிக்கு வாழ்த்துறேன்.இது போல இன்னுமின்னும் ஆயிரமாயிரம் விருதுகள் வாங்கணும்.நல்லா படிக்கணும்.கணேஷ் மாமா,அப்பா,அம்மா சகோதரர்கள்,உறவுக்காரங்க பேர காப்பாத்தணும்.வாழ்த்துக்கள்,சின்னப் பொண்ணே!
ReplyDeleteவாங்க யோகாண்ணா. உங்களி்ன் மெளன விரதமும், ஹேமாக்காவின் கவிதையும் உண்மையில மனசைக் கலக்கி அழ வெச்சிடுச்சு என்னை. நீங்கல்லாம் எப்ப வேணா உரிமையோட இங்க வரலாம், வாழ்த்தலாம். உங்களின் ஆசிகள் எப்பவும் எனக்கு வேணும். நான் தொடர்ந்து செயல்பட அதுதானே பலம்! நிச்சயமா மூத்தவங்க எல்லாருக்கும் நல்ல பேர் வர்ற விதமா நடந்துப்பேன் நான். உங்களுக்கு My Heartful Thanks!
Deleteவிருதுக்கு வாழ்த்துக்கள் நிரூ! இனி அழவேண்டாம் செல்லம் அப்புறம் கலை வாத்து மேய்க்க கூட்டிக்கொண்டு போய் விடும் !ஹீஈஈஈஈஈஈஈ
ReplyDeleteஇனி அழவே மாட்டேன் நேசன் அண்ணா! ஏன்னா... வாத்துன்னா எனக்கு அலர்ஜி! ஓடிருவேன்ல...! மிக்க நன்றி!
Deleteநிரூ பரிசுக்கு வாழ்த்து. இன்னும் பல பரிசுகள் கிடைக்கட்டும். நல்வரவு எனது வலைக்கு.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
சந்தோஷமா என்னை வாழ்த்தின உங்களுக்கு என் நன்றி. இதோ புறப்பட்டுட்டேன் நான்.
Delete