Pages

Ads 468x60px

5 May 2012

தேவதை பெற்ற விருது


ஹாய்... எல்லாரும் நலம்தானே...!

ஏதோ மனசுல தோணறதையும், கண்ணுல படறதையும் உங்க எல்லாரோடையும் ஷேர் பண்ணிக்கலாம்னு எழுத ஆரம்பிச்சேன். ஆனா எனக்கு நிறைய Friends இங்க கிடைப்பாங்கன்றது நான் எதிர்பார்க்காதது. அதைவிட முக்கியமானது என்னை தங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளையா ஏத்துக்கிட்ட உறவுகள கிடைச்சிருக்கிறது. இப்ப இந்த சந்தோஷங்களை விடப் பெரிசா இனனொரு விஷயம் நடந்திருக்கு.


‘கிராமத்து கருவாச்சி’ என்கிற தளத்துல கவிதைகளும், கட்டுரைகளும், அழகழகா எழுதிட்டு வர்ற கலை அக்கா எனக்கு 'Sunshine Award' கொடுத்திருக்காங்க. புதுசா வந்திருக்கற என்னை அங்கீகரிச்சு எனக்குக் கிடைச்சிருக்கற முதல் விருதுங்கறதால ரொம்ப ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். கலைக்காவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். அவங்களுககு மட்டுமில்ல... என் தளத்தைப் படிச்சுக் கருத்திடற ஒவ்வொருத்தருக்கும் என் மனமார்ந்த நன்றி.
                                                                   * * * * * *

‘நிழல் நிஜமாகிறது’ ங்கற படம் பார்த்திருககீங்களா? அதுல ‌வீட்டு வேலைககாரியா இருக்கற ஷோபா மனசுக்குள்ள தன்னை ஒரு மகாராணியா கனவு கண்டு தர்பார் நடத்துவாஙக. அந்த மாதிரி கேரக்டர் தான் நானும்! பலதடவை என் மனசுல ஒரு அரசவைய உண்டாக்கி அரசியா கற்பனை பண்ணி தர்பார் நடத்தினதுண்டு.

சின்ன வயசுல நான் படிக்கிற புத்தகங்களும், பார்த்த சினிமாக்களும் இரவு கனவுல வரும். ‘Alice in Wonderland' படிச்சுட்டுத் தூங்கின அன்னிக்கு கனவுல நான் அந்த கேரக்டர்களோட பேசற மாதிரியும், ஆடிப் பாடற மாதிரியும் கனவு. ‘ஸ்பைடர் மேன்’ படம் பார்த்த அன்னி்க்கு கனவுல நான் ‘ஸ்பைடர் கேர்ள்’ஆ சாகசங்கள் பண்ணினேன்.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ங்கற படம் பாத்துட்டு, நானே யுத்த பூமியில இருக்கற மாதிரியும், என்னைச் சுத்தி ஷெல் வெடிக்கற மாதிரியும் கனவு கண்டு கத்தி, அப்பா அம்மாவை எழுப்பி, திட்டு வாங்கினதுண்டு. ‘‘அவளுக்கு பயந்த சுபாவம்னு தெரியும்ல... இப்படிப் படத்துக்கு ஏன் கூட்டிட்டுப் போறீங்க’’ன்னு அம்மாகிட்ட அப்பா திட்டு வாங்கினார். ஆனா அந்தப் படத்துல மேம்போககாதான் சொல்லியிருக்காங்கன்னு நிஜத்துல அதைவிடப் பலமடங்கு கொடுமையான விஷயங்கள் நடந்துச்சுன்னும் அப்பா சொல்லி, நியூஸ் பேப்பர் கட்டிங்குகளையும், சில வீடியோக்களையும் காட்டினப்ப, கண் கலங்கி அழுதுட்டேன். பாவம் அவுங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க!

இப்பல்லாம் இந்த மாதிரி கனவுகள் என்னை வந்து அடிக்கடி தொந்தரவு பண்றதில்லைதான். (வளர்ந்துட்டேன்ல...) ஆனாலும்கூட கற்பனை கன்னாபின்னானனு தறிகெட்டு ஓடறது நடக்கத்தான் செய்யுது. இந்த அவஸ்தைய எப்படி உங்களுககுப் புரிய வெக்கிறதுன்னுதான் தெரியல... உதாரணமாச் சொல்றதுன்னா, போன பதிவுல எழுதின ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’ நாடகத்தைப் படிககிறப்பவே, கோர்ட் ஒண்ணுல ஆர்க்யூமெண்ட்ஸ் நடக்கறது என் மனசுல படமா ஓடுச்சு. நானும் அங்கயே இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங். இதே மாதிரி சில சினிமாக்களைப் பார்க்கற போதும் நடக்குது.

அம்மா கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கற மாதிரி இதைப் பத்தியும் சொன்னேன். எனக்கு ஏதோ மனசுல கோளாறோன்னு பயப்படறாங்க. அப்பாவானா, இதுல்லாம் சகஜம்... இன்னும் சில வருஷங்கள்ல இதுவும் இவகிட்டருந்து போயிடும். மாறிடுவாங்றார். இந்த மாதிரியான அனுபவம் எனக்கு மட்டும்தானா? இல்ல, இது எல்லாருக்கும் நடக்கற விஷயமா...? படிக்கிற நீங்க என்ன நினைககிறீங்கன்றத தெரிஞ்சுக்க ரொம்ப ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்.

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

37 comments:

 1. //'Sunshine Award' // ya sun is shining...

  விருது கொடுத்தவருக்கும், வாங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  இன்னிக்கு அதிகாலை ல கூட விட்டுப் போன என் friend கூட பேசுற மாதிரி கனவு வந்தது. ரொம்ப நேரம் நாங்க ரெண்டு பெரும் பேசிட்டு இருந்தோம், முழிப்பு வந்தததும் தான் தெரிஞ்சது, அது கனவு நு, ஆனா சுகமான கனவு.

  நம் ஏக்கங்கள் தீர்க்கும் வடிகால் கனவுகள் தானே, என் மனதில் பட்டதை பகிர்ந்து கொள்ள ஒரு தளம் அமைத்து கொடுத்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ’படிப்பை முடிக்கற ஸ்டேஜ் வந்துட்டா. வேலைக்குப் போய் நிறைய ஆட்களோட பழகினா மாறிடும்’ன்னார் அப்பா. நீங்க சொன்னதைப் படிச்சதும் இப்பத்தான் எனக்கு ஆறுதலாச்சு. Thankyou Verymuch Friend!

   Delete
 2. அவார்ட் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நிரூ.இன்னும் நிறைய விருதுகள் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  இதுல்லாம் சகஜம்... இன்னும் சில வருஷங்கள்ல இதுவும் இவகிட்டருந்து போயிடும். மாறிடுவாங்றார். இந்த மாதிரியான அனுபவம் எனக்கு மட்டும்தானா?//உண்மைதான்..எனக்கு கூட டெரரான கதைகள் படிக்கும் பொழுது,உறவினர் நட்பு வட்டங்களின் மரணத்தின் பொழுதும் கூட தனியாக மாடி செல்வதற்கு மிகவும் பயப்படுவேன்.இப்பொழுதும் கூட அந்த பயம் முழுதாக மறைந்து விட்டது என்று சொல்ல இயலாது.

  நேற்றிரவு கூட யூ டியூபில் இஸ்லாமிய மரணச்சடங்குகளைப்பற்றி பார்த்துக்கொண்டிருந்து விட்டு தூக்கத்தை தொலைத்து விட்டேன்:)

  ReplyDelete
  Replies
  1. Dear S.S., எங்கம்மாக்கு இந்த ‘சந்திரமுகி’ படத்தை டிவில பார்த்ததுலருந்துதான் ரொம்ப பயம். ஜோதிகா இந்த மாதிரி கற்பனை பண்ணிட்டதாலதான் மனநோயாளியானாங்கன்னு சூப்பர் ஸ்டார் சொல்றதைப் பார்த்ததும் பயந்துட்டாங்க. இப்ப உங்க கருத்துக்களை எல்லாம் காட்டினா க்ளியராயிடுவாங்கன்னு தோணுது, My Heartful Thanks to you!

   Delete
 3. இதெல்லாம் சகஜம் தான்.

  விருதுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸார்... என் பயத்தைப் போக்கினதுக்கும், விருதுக்கு வாழ்த்தினதுக்கும், எனக்குத் தரும ஆதரவுக்கும் எல்லாத்துக்கும்.

   Delete
 4. நிரு என்னோட விருதை வாங்கியமைக்கு மிக்க நன்றி அம்மு

  ReplyDelete
  Replies
  1. ஹை! எங்கப்பா கூப்பிடற மாதிரி கூப்டிருக்கீங்க கலைக்கா... ஹேப்பி!

   Delete
 5. நீங்க சுப்பரா எழுதுறிங்க நிரு ...

  ReplyDelete
  Replies
  1. ஸ்வீட்டே எனக்கு ஸ்வீட் கொடுத்த மாதிரி... நீங்க பாராட்டறது! Many Thankskka!

   Delete
 6. சேம் சேம் ஸ்வீட் டா ....

  செல்லம் இது எல்லாமே அப்புடியே நான் செய்வேன் ....

  ReplyDelete
  Replies
  1. ஹப்பா... நீங்க சொல்றது எனக்குத் தெம்பா, ஆறுதலா இருக்கு...

   Delete
 7. இல்ல, இது எல்லாருக்கும் நடக்கற விஷயமா...? படிக்கிற நீங்க என்ன நினைககிறீங்கன்றத தெரிஞ்சுக்க ரொம்ப ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்.///


  இதுக்கு மேலயும் எனக்கு லாம் நடக்கும் ...

  தூக்கத்துல சத்தம் போடுவேன் நிறைய பேசுவேன் ....தூங்கும் போது ஏதாவது நல்லா உலருவனாம் ..........

  ReplyDelete
  Replies
  1. நான் தூக்கத்துல சிரிப்பேன்னு மட்டும் அம்மா சொல்வாங்க... ஆனா பேசுனதில்லையாம்!

   Delete
 8. நிரு மா இதல ஒரு சூப்பர் ஆனா டெக்னாலஜி இருக்கு ..அது என்ன எண்டு அப்புறம் வந்து சொல்லுறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ... நீஙக அடிக்கடி வரணும்னுதான் ஆசை எனக்கு. My Heartful Thankskka!

   Delete
 9. இவ்வள்வு சீக்கிரமா எல்லார் மனசலயும் இடம் பிடிச்சதுதான் அழகு. வாழ்த்துகள் மா. கொடுத்துவருக்கும் உங்களுக்கும் .

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வாழ்த்துககளு் ஆசிகளும் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கேன். Thank You ma!

   Delete
 10. வணக்கம் நிரு!!!என் மருமகள் கலையிடமிருந்து விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!உங்கள் மாமா கணேஷ் தன் வலைச்சரத்தில் என் மருமகளின்(கலை) வலைப்பூவை அறிமுகம் செய்திருந்தார்!வேறொரு வலையில் நீங்கள் அவர் மருமகள் என்று சொன்னார்!நல்ல மனங்கள் நீடூழி வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மருமகள் என்னைத் தங்கையா ஏத்துக்கிட்டு அன்பாய் இருக்காங்கன்றது எனக்கு சமீபத்துல கிடைச்ச பரிசு. உங்களின் வாழ்த்தும் ஆசியும் இப்ப எனக்குக் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்! My Heartful Thanks to you!

   Delete
 11. அழகான விருதை கருவாச்சிகிட்ட வாங்கினதுக்கு சரியான சந்தோஷம் நிரஞ்சனாக்குட்டி.உங்களோட நானும் வாங்கினன்.நான் நன்றி மட்டும்தான் சொல்லிட்டேன் காக்காவுக்கு.பதிவு போட நேரமில்லை.இன்னும் இன்னும் வாங்கணும் நிறைய விருதுகள்.உங்களுக்கு மாமா நல்ல துணையா இருக்கார்.எனக்குப் பொறாமை இப்ப.எனக்கொரு மாமா இல்ல இப்பிடின்னு !

  கனவுகள்,பயம் இயல்பு செல்லம்.நானும் ஊரில இருக்கிறப்போ யார்கூடவும் பேசக்கூட மாட்டேன்.எல்லாத்துக்கும் பயம்.பிறகு எங்கட வாழ்வு,போராட்டம் எவ்வளவு துணிச்சலைத் தந்தது.இப்ப இங்க தனியா இருக்கேன்.பயம்ன்னா என்ன விலைன்னு கேக்கிற அள்வுக்கு நம்பிக்கையும் துணிச்சலும்.வாழ்வு பக்குபவப்படுத்தும் எல்லோரையும்.நீங்க சின்னப்பிள்ளைதானே.இன்னும் காலம் இருக்கு.அதுவரைக்கும் பயம் இருக்கிறது பாதுகாப்பும் கூட.நல்லது !

  ReplyDelete
  Replies
  1. உங்களோட Guidance எனக்கு தெம்பா இருக்கு கவிதாயினிக்கா. நீங்க சொன்னது நல்லாவே புரியுது. உங்களுககு இப்ப இங்க கலைககா கிட்ட விருது வாங்கினதுக்கு வாழ்த்து சொல்லிக்கறேன். உங்கள் தளத்துக்கும் வந்து சொல்றேன். My Heartful Thanks to you!

   Delete
 12. இதெல்லாம் சகஜ நிகழ்வே! ... விருதுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி தந்தது உங்களின் கருத்தும் வாழ்‌த்தும். உங்களுக்கு என்னோட நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன் ஸார்!

   Delete
 13. விருதுக்குப் பாராட்டுகள். இந்தப் பிரச்னை எல்லாம் காலப் போக்கில் சரியாகி விடும். இது பிரச்னையாகி விடுமோ என்ற எண்ணம் வந்ததே அதுவே அந்த எண்ணத்தை, கனவுகளை விட்டு வெளி வர வைத்து விடும்!

  ReplyDelete
  Replies
  1. சந்தோஷமா பாராட்டினதுக்கும், என்மேல care எடுத்துக்கிட்டு கருத்து சொன்னதுககும் My Heartful Thanks Friend!

   Delete
 14. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் நிரூ! இந்த கனவுகள் கடந்து போகும் இவையும் ஒரு ஆழ்மன உணர்வு தான்.

  ReplyDelete
  Replies
  1. முதல் தடவையா என்னோட இடத்துக்கு வந்திருக்கீங்க. இந்த சூடான காஃபி உங்களுக்கு! உங்க வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் என் நன்றி!

   Delete
 15. அது எண்ண மாமாவும் மருமகளும் ,இந்த தனிமரத்தையும் கைபேசியில் பின்னூட்டம் போட முடியாமல் வலையை பூட்டி வைத்து இருந்தால் என்ன செய்வது!

  யோகா மாமாவிடம் கருக்கு மட்டை அடிதான் விழும்! இல்லை ஸ்பைட்ட்ர் மான் ஆகி வ்ந்து என்னால் பின்னூட்ட்ம் போட் முடியாது கருவாச்சி காக்கா வாத்து மேய்க்க விடும் அவ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆஆ! எனக்குத் தெரியலைன்னு அவர்கிட்ட கேட்டா... இந்த மொபைல்லருந்து கமெண்ட் போடற விஷயத்துல எப்படி சரி பண்றதுன்னு தெரியாமத்தானே மாமாவும் முழிச்சிட்டிருக்கார். யாருக்காவது தெரிஞ்சால் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்..! கருக்கு மட்டையக் கண்டா ஓடி ஒளிஞ்சிடுவேனாக்கும் நான்..!

   Delete
 16. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நிரஞ்சனா.

  தவிர... கனவு காணுவது என்பது நம் வாழ்க்கையில் வாழும் போதே நிறைவேராமல் இருக்கும் ஆசையின் எதிரொலி தான் நிரஞ்சனா.

  ReplyDelete
  Replies
  1. தெளிவும் மகிழ்வும் தந்த உங்களின் வருகை ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ரொம்ப தாங்க்ஸ்.

   Delete
 17. நானும் பெற்றுக் கொண்டேன் கலை அக்காவிடம் இருந்து இப்போது நீங்களும் நிரூ. வாழ்த்துக்கள் இது உங்கட முதல் விருதும் இல்லையா.. சூப்பர்... தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. ஆமா எஸ்தர்... நான் எழுத ஆரம்பிசசதுல இருந்து கிடைச்சிருக்கற முதல் அங்கீகாரம் இது, என்னை Encourage பண்ற உங்களுக்கு மிக்க நன்றி.

   Delete
 18. உலகத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளர்களுக்கும் ஒரு கதையைப் படிக்கும்
  போது தங்களைப் போன்ற படக்காட்சிகள் தோன்றி இருக்கின்றன. ஒரு கதையைப்
  படிக்கும் போது, அக்கதையின் காட்சி அமைப்புகள் படம் போல தங்கள் மனதில்
  தோன்றுகிறதா ? கை கொடுங்கள். அபாரமான கற்பனைத் திறன் தங்களுக்கு
  இருக்கிறது. அதனை முறையாக முறைப்படுத்தினால் மிகச்சிறந்த தமிழ்
  எழுத்தாளர்களின் பட்டியலில் நிரஞ்சனா என்ற பெயரும் இடம் பெறும்.

  ReplyDelete
  Replies
  1. ஓ... உங்க வார்த்தையக் கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு. நிறைய நிறைய உற்சாகமும் பிறக்குது. நீங்கள்ளாம் கூட் இருந்தா நிறைய செய்ய முடியும்னு தோணுது. உங்களுக்கு வெறுமன தாங்க்ஸ மட்டும் சொல்றது தப்புன்னு தோணுது. ஆனாலும் வேற் வழியில்லாம இப்ப அதைத்தான் சொல்ல வேண்டியிருக்கு, Thanks for Your Encouragement to Niru!

   Delete
 19. மிகவும் அருமை. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
  நான் உங்கள் வலைப்பூவிற்கு புதுமையானவள். என்னுடைய வலைப்பூவை திறந்துபாருங்கள் .

  ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!