Pages

Ads 468x60px

9 May 2012

என் முதல் தொடர்கதை!


ன் இனிய தமிழ் மக்களே...! உங்‌களோடும் இந்த மண்ணோடும் விளையாடி வந்த உங்கள நிரஞ்சனா எழுதும் முதல் தொடர்கதை இது. இதற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டுமென்று வேண்டுகிறாள் உங்கள் பாசத்துக்குரிய இந்த நிரூ!

              காதல் (தோல்வி) வட்டம்

‘அப்படி எதை கண்ணன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்?’ சத்தம் இல்லாமல் பூனைப் பாதம் வைத்து அவன் பின்னால் சென்று எட்டிப் பார்த்தான் அவன் அறைத் தோழன் ஆனந்த். ‘‘அடப்பாவி..! உஷாவோட ஃபோட்டோ உனக்கெப்படிடா கிடைச்சது?’’ என்று ஆனந்த் குரல் கொடுக்க, தூக்கிவாரி்ப் போட்டவனாய் திரும்பினான் கண்ணன்.

‘‘டேய் ஆனந்த்! இதை உஷாவுககுத் தெரியாம சுட்டுட்டு வந்தேன். நான் அவளை உயிருக்குயிரா காதலிக்கிறேன்டா. இந்த ஜென்மத்துல அவளை விட்டா வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப போறதில்லன்னு முடிவோட இருக்கேன்டா... ஆனா, அவகிட்ட ‌சொல்லத்தான் தைரியம் வர மாட்டேங்குது...’’ என்று கண்ணன் சொன்னதைக் கேட்டு சிரித்தான் ஆனந்த்.

‘‘டேய், காதல்கிறது ஜலதோஷம் மாதிரிடா. எப்ப வேணா வரும். யாருக்கு வேணா வரும். ஆனா அதைச் சொல்றதுக்கு தயங்கக் கூடாதுடா. நான்கூட சமீபத்துல உஷாவோட ஃப்ரெண்ட் ராதிகா‌வை விரும்பிட்டிருக்கேன். நாளைக்கு அவ பர்த்டேங்கறதால தயங்காம போய் என் காதலைச் சொல்லப் ‌போறேன். தயங்கினா ‌வேலைக்காகாது கண்ணா. இப்பவே போய்ச் சொல்லிடு’’ என்ற ஆனந்தின் வார்த்தைகளி்ல் தைரியம் பெற்ற கண்ணன் ஒரு முடிவுடன் உஷாவைச் சந்திக்கப் புறப்பட்டான்.

                                                                 *   *   *   *

லைப்ரரியில் தனியாய் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த உஷாவை நெருங்கினான் கண்ணன். அ‌வனை ஏறிட்ட அவளிடம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கையிலிருந்த ஒற்றை ரோஜாவையும், காதல் சொல்லும் கடிதத்தையும் நீட்டினான். பொறுமையாகப் படித்த அவள், சைகை காட்டி அவனை லைப்ரரியை விட்டு வெளியே வரச் சொல்லி நடந்தாள். வெளியே வந்து மரநிழலில் நின்றதும் கண்ணனிடம் ‌சொன்னாள். ‘‘மிஸ்டர் கண்ணன்! நீங்க ரொம்ப நல்லவர். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்ங்கறதை நான் கவனிச்சிருக்கேன். ஆனா என்னால உஙகளை லவ் பண்ண முடியாது. ஏன்னா.... என் மனசை ஏற்கனவே ஒருத்தர்கிட்டப் பறி கொடுத்திட்டேன். ஸாரி கண்ணன்... என்னை மறந்துடுங்க’’ என்று விட்டு அவள் செல்ல, சிலையாய் உறைந்து நின்றான் கண்ணன்.

                                                                     *   *   *   *

ராதிகா பார்க்கில் தனியாய் அமர்ந்திருக்க, அவளை நெருங்கினான் ஆனந்த். ‘‘ஹாய் ராதிகா! மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே!’’ என்றவாறு அவளிடம் பொக்கேயை நீட்டினான். ‘‘தேங்க்யூ’’ என்று சிரித்தபடி வாங்கிக் கொண்டாள். ‘‘நீ எப்ப தனியாவேன்னு காலையில இருந்து காத்துட்டிருந்தேன் ராதி! நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பலை. ஐ லவ் யூ...!’’ என்றான் ஆனந்த். ‘‘ஸாரி ஆனந்த்! என்னை மன்னிச்சுடுங்க... நான் வேற ஒருத்தரை விரும்பறேன். இன்னிக்கு என்னோட லவ்வை அவர்கிட்டச் சொல்லிடறதா முடிவு பண்ணி, அவரை வரச் சொல்லியிருக்கேன். அவருக்காகத்தான் இப்ப வெயிட் பண்ணிட்டிருக்கேன்...’’ என்றாள். ரத்தமெல்லாம் இழந்தது‌ போல முகம் வாடியவனாய் தொய்வுடன் நடந்தான் ஆனந்த்.

ஆனந்த் நகர்ந்த ஐந்தாவது நிமிடம், கண்ணன் வந்தான். ‘‘என்ன ராதிகா... எதுக்கு ஃபோன் பண்ணி அவசரமா வரச் சொன்னீங்க?’’ என்று கேட்க, அவனிடம் தன் காதலைச் சொன்னாள் ராதிகா. கண்ணன் விரக்தியாய்ச் சிரித்தான். ‘‘உன் ஃப்ரெண்டு உஷாவை நான் லவ் பண்றேன் ராதிகா. அவ என்னை விரும்பலைன்னு ‌சொல்லிட்டா. இருந்தாலும் என்னால வேற ஒருத்தியை நினைச்சே பார்க்க முடியலை. ஸாரி...’’ என்றவன் மறுபேச்சு பேசாமல் கிளம்பிச் சென்றுவிட, அதிர்ந்தவளாய் உட்கார்ந்திருந்தாள் ராதிகா.

                                                                    *   *   *   *

பார்க்கை விட்டு தொய்ந்த நடையுடன் வெளியே வந்த ஆனந்த்தை, ‘‘ஹாய் ஆனந்த்!’’ என்ற குரல் நிறுத்தியது. உஷா! ‘‘உங்களைத் தனியாப் பாத்துப் பேசணும்னு பல நாள் நினைச்சதுண்டு. இப்பத்தான் கண்ணன் இல்லாம தனியா கிடைச்சிருக்கீங்க. இனியும் ‌ச‌ொல்லாம இருக்க முடியாது ஆனந்த். ஐ லவ் யூ!’’ என்றாள் உஷா. மேலும் ஒரு அதிர்ச்சி தாக்க, வியப்புடன் அவளைப் பார்த்தான் ஆனந்த். ‘‘உஷா1 கண்ணன் உ.ன்னை....’’

‘‘தெரியும் ஆனந்த். என்கிட்ட சொன்னார். ஆனா, உங்களை நினைச்சிருக்கற இந்த மனசில வேற யாருக்கும் இடமில்லைன்னு அவர்ட்ட சொல்லிட்டேன்’’ என்றாள் உஷா. ‘‘நானும் அப்படித்தான் உஷா. உன் ஃப்ரெண்ட் ராதிகாவை உயிருக்குயிரா விரும்பறேன். அவ என் காதலை மறுத்துட்டாலும், இந்த உயிர் இருக்கற வரைக்கும் வேற பொண்ணை என்னால ஏத்துக்க முடியாது உஷா’’ என்றவனாய் அந்த இடத்தை வி்ட்டு ஆனந்த் அகல, மனம் நொறுங்கிவளாய் திக்பிரமையுடன் நின்றிருந்தாள் உஷா.

                                                                      *   *   *   *

ன்னங்க பாக்கறீங்க...?

கண்ணன் உஷாவை விரும்ப, உஷா ஆனந்தை விரும்ப, ஆனந்த் ராதிகாவை விரும்ப, ராதிகாவோ கண்ணனை விரும்ப இவங்க யாரும் விட்டுக் கொடுக்காததால இந்தக் காதல் வட்டம் சன் டிவில வர்ற மெகா சீரியல்களே முடிஞசாலும்கூட முடியாம தொடரப்போற ஒரு தொடர்கதை தானே?

எப்பூடி இருக்குது நிரூ எழுதின தொடர்கதை! ஹய்யய்யோ... ஹேமாக்கா கருக்கு மட்டையத் தேடறாங்க. ராஜியக்கா கையில பூரிக்கட்டை தெரியுதே.... நிரூஊஊஊஊஊ ஓடிட்ரா செல்லம்!

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

39 comments:

 1. இது ஒரு நல்ல தொடர்கதை தான், எப்ப சாமி முடியல, இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் (நான் ஹேமாவையும் உஷாவையும் சொன்னேன்)

  தொடர்கதை என்று சொல்லிவிட்டு நான்கு காதல்கள் தொடராத ஒரு கதையை நீங்களும் தொடராமல் விட்டுவிடீர்கள். பாவம் அந்தக் காதல். (நான் பவ்வம் என்று சொல்லுவது காதலை மட்டுமே, மனிதர்களை இல்லை).

  மொத்தத்தில் ரசித்துப் படிக்கக் கூடிய சிறுகதை உங்கள் தொடர்கதை

  ReplyDelete
  Replies
  1. ம்... காதலு்ம் பாவம்தான், காதலிப்பவர்களும் பாவம்தான். நீங்கள் ரசித்துப் பாராட்டியதற்கு I Feel happy, Many Thanks to you!

   Delete
 2. ஆகா மிக அருமையான கதை

  -இப்படிக்கு எவ்வளவு மொக்கையானாலும் பொறுத்துக்கொள்வோர் சங்கம்.

  ReplyDelete
  Replies
  1. இப்படி மகா மொக்கையாப் ‌போடறோமேன்னு பயந்துட்டேதான் பப்ளிஷ் பண்ணினேன் Friend! ஆனா சங்கத்து நண்பரான நீங்க தைரியம் கொடுத்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்!

   Delete
 3. இதெல்லாம் டிவியிலதாங்க நடக்கும். நிஜ வாழ்க்கையில் வேற மாதிரி நடக்கும். இருந்தாலும் தொடர்கதை என்ற பெயரில் எழுதப்பட்ட சிறுகதை இது.

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான். ரியல் லைஃப்ல ஒரு பர்சன்ட் கூட இப்டிலலாம் நடக்க சாத்தியமே இல்ல. சும்மா ஃப்ரெண்ட்ஸ் கூட ஒரு சின்ன Fun இருக்கட்டுமேன்னுதான் எழுதினேன். My Heartful Thanks to you!

   Delete
 4. நல்லவேளை தொடரும் போடல...

  ReplyDelete
  Replies
  1. நிரூ மா என்ன ஆச்சி என்ன எப்படி இருக்கீங்க வலைப் பக்கம் பர்ர்க்க முடியலையே . ம்ம் கதை ஓகே ஓகே .

   Delete
  2. @ கோவை நேரம்

   நிம்மதிப் பெருமூச்சு விடறீங்களா... அப்ப நிஜமாவே ஒரு தொடர் எழுதிடலாமா? ஹா... ஹா... Thankyou verymuch Friend!

   @ சசிகலா

   சசிக்கா! உங்க தளத்துல கருத்துப் போட்டுட்டு இங்க வந்தா, நீங்க இங்க வந்திருக்கீங்க. என்ன ஒத்துமை நமக்குள்ள. இனி எல்லாப் பதிவுக்கும் உங்க வலைப்பக்கம் இருப்பா நிரூ! My Heartful Thanks to you!

   Delete
 5. காதல் வட்டம் - வாட்டம கொடுக்காத வாட்டமான கதை!

  ReplyDelete
  Replies
  1. Oh, திட்டுவீங்களோன்னு பயந்துட்டிருந்தேன். பாராட்டறதுல ரொம்ப சந்தோஷம். அடுத்த முறை இன்னும் நல்ல படைப்பாவே கொடுத்துடறேன். ஓ.கே. உங்களுக்கு My Hartful Thanks!

   Delete
 6. கண்ணன் உஷாவை விரும்ப, உஷா ஆனந்தை விரும்ப, ஆனந்த் ராதிகாவை விரும்ப, ராதிகாவோ கண்ணனை விரும்ப...
  >>>
  நிரூக்குட்டி இந்த வயசுல உனக்கு காதல் கதை கேக்குதா?! அதுவும் பல ஒருதலை காதல்கள்?! ம்ம்ம்ம்ம் அக்கா என்னை போல குழப்பாம ஒழுங்கா எழுது.(ஆமாம், ஏன் திடீர்ன்னு ரெண்டு பேரும் காதல் மேட்டர் பத்தி பதிவிடுறோம்?!)

  ReplyDelete
  Replies
  1. உண்மையில இன்னிக்கு உங்க பதிவைப் படிச்சதும் எனக்கும் இதே ஆச்சரியம்தான் வந்துச்சு. காதல் கதை தானேக்கா எழுதினேன்... நிரூ லைஃப்ல காதலிக்கல்லாம் மாட்டா. அக்கா பேரைக் காப்பாத்திடுவேன்ல... ஆனா... குழப்பாம எழுதறதா? எனக்கு ரொம்பக் கஷ்டமாச்சே... ட்ரை பண்றேன், சரியா? நன்றி உங்களுக்கு!

   Delete
 7. என்ன...என்ன காதல்...கார்ட்டூன் பாக்கிற வயசில.....பொறுமையா பிறகு வந்து வாசிக்கிறன் !

  ReplyDelete
  Replies
  1. பொறுமையா எப்ப வேணாலும் வந்து வாசியுங்க அக்கா... ஆவலோட காத்திருக்கேன் நிரூ!

   Delete
  2. நானும் காதல் தொடர்ன்னு நீட்டி முழக்கினதைப் பாத்தா மாமான்ர உதவியோட ஏதோ தொடர்கதை எழுதப்போறீங்களோ எண்டு வந்து பாத்திட்டு ஏமாந்திட்டேன்.நிரூக்குட்டி.மாமாவைத்தான் மனசுக்குள்ள திட்டினன்.இந்தச் சின்னப்பிள்ளையை கார்ட்டூன் பாக்கிற வயசில காதல் கதை எழுத வைச்சு வேடிக்கை பாக்கிறாரே எண்டு.சரி சரி ரெண்டு பேரும் தப்பிட்டீங்கள்.பிழைச்சுப் போங்கோ !

   Delete
 8. அப்ப்ப்ப்பபா... கோடு இல்லை இது.
  வட்டம் தான்.... ஓகே...ஓகே...

  ReplyDelete
  Replies
  1. தலையில நறுக்குன்னு குட்டாம, ஓ.கே. சொன்ன உங்களுக்கு... My Heartful Thanks!

   Delete
 9. நிரஞ்சனா9 May 2012 07:21

  உண்மையில இன்னிக்கு உங்க பதிவைப் படிச்சதும் எனக்கும் இதே ஆச்சரியம்தான் வந்துச்சு. காதல் கதை தானேக்கா எழுதினேன்... நிரூ லைஃப்ல காதலிக்கல்லாம் மாட்டா. அக்கா பேரைக் காப்பாத்திடுவேன்ல... ஆனா... குழப்பாம எழுதறதா? எனக்கு ரொம்பக் கஷ்டமாச்சே... ட்ரை பண்றேன், சரியா? நன்றி உங்களுக்கு
  >>>
  காதல் தப்பில்லை நிரூ. சரியான வயதில், சரியான நபரை காதலிக்கனும் அதுதான் முக்கியம்டா செல்லம். ஓக்கே?!

  ReplyDelete
  Replies
  1. டபுள் ஓக்கே! My Heartful Thanks to you!

   Delete
 10. நிறு நிறு முதல் தொடர் கதையா சூப்பர் டா செல்லம் ..கலக்குங்க ...

  ReplyDelete
  Replies
  1. முழுசாப் படிக்காம வாழ்த்தறீங்க... but, I like this!

   Delete
 11. .காதல் கதையா ........ஆஆஅ எனக்கு ஒரே ஷ்ய்யி யா இருக்கு ....நீங்க எழுதுங்க நான் வந்துப் படிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நானும் கூட வெக்கப்பட்டுட்டேதான் எழுதினேனாக்கும்... பொறுமையாப் படிங்க...!

   Delete
 12. நிறு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
  Replies
  1. கலைக்கா... இப்படி உககாருங்கோ... இந்தாங்கோ, இந்த ஃபான்டா குடியுங்கோ...!

   Delete
 13. அவ்வ்வ்வ் இதுக காதல் கதையாஆஆஆஆஆ....தெரியாம படிச்சிபுட்டேன் ....மகளே யு சீட் மீ

  ReplyDelete
  Replies
  1. ஸாரிக்கா. படிக்கிறவங்களை கொஞ்சம் சீட் பண்ற விஷயம்தான் இது. ‘ஏப்ரல் ஃபூல்’ன்னு விளையாடுவாங்களே, அந்த மாதிரி. அதுக்காக கோபிச்சுக்க மாட்டாங்க. நீங்களும் கோவிச்சுக்கலைதானே...! நல்ல அக்கா! My Heartful Thanks to you!

   Delete
 14. ஓஓஓஓஓஓஓஓ சூப்பர் நிரூ அழகான கதை
  தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... இப்புடி மொக்கையைத் தாங்கற எஸ்தர் மாதிரி ஃப்ரெண்ட்ஸ் வால்க! My Heartful Thanksma!

   Delete
 15. ரொம்ப குழப்ப்ரீங்களே நிரூ:)

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட்... நானும் குழம்பி, உங்களையும் குழப்பலாம்னுதான் ட்ரை பண்ணினேன். இந்த விபரீத முயற்சியை இனி பண்ண மாட்டேன் S.S. உங்களுக்கு என்னோட Heartful Thanks!

   Delete
 16. ஐயோ ஐயோ .. நீரூ கொடுமை தாங்கலையே .... என்னை காப்பத்த யாரும் இல்லையா ? பேசாம நீங்க மெகா தொடர் எழுத ஆரம்பிக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா.... மெகா சீரியல் எழுதற க்வாலிட்டி என்கிட்ட இருக்குன்னு எப்படியோ கரெக்டா கண்டுபுடிச்சிட்டிங்களே Friend! Super! Many Thanks to you!

   Delete
 17. இன்னு எழுத விஷயம் இருக்கு போல இருக்கே நிரூமா.

  சாதாரணமா முடிஞ்சுடுத்தே:( பரவாயில்லை எடுத்ததுமே சக்ஸஸ்னு சொல்லலைன்னால் அடுத்தாப்புல நல்ல கதை வரும் பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. இது ச்சும்மா... சீட்டிங் ஜாலிக் கதைதானே! அடுத்த முறை சீரியஸா எல்லாரும் கை தட்டற மாதிரி அருமையான கதை கொடுத்துடறேன்மா. My Heartful Thanks to you!

   Delete
 18. காதல் கதையா! ம்ம்ம்ம்..... கலக்குறீங்க.
  "கண்ணன் உஷாவை விரும்ப, உஷா ஆனந்தை விரும்ப, ஆனந்த் ராதிகாவை விரும்ப, ராதிகாவோ கண்ணனை விரும்ப "...... மிகவும் அருமையான கதை நிரஞ்சனா அவர்களே.

  ReplyDelete
  Replies
  1. ஓ... அருமையான கதைன்னு சொல்லி என்கரேஜ் பண்ணினதுக்கு ரொம்ப நன்றி மேடம்...

   Delete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!