Pages

Ads 468x60px

14 May 2012

மறுக்க முடியாத சாட்சி!


ங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் அரதன குப்தன்ங்கற ஒரு வணிகன் தன் மனைவியோட வாழ்ந்துட்டிருந்தான். அவனுக்கு ஒரு தாய்மாமன் புகார் நகரத்துல இருந்தார். அவருக்கு ஒரு மனைவியும் ரத்னாவளி என்கிற ஒரு மகளும் இருந்தாங்க. மதுரையில இருக்கற தன்னோட மருமகன் கல்யாணமானவனா இருந்தாக்கூட மனிதர்கள்ல ஒரு மாணிக்கம் போல நல்ல கேரக்டர் உள்ளவன்கறதால அவனுக்கே தன் மகள் ரத்னாவளியை கல்யாணம் பண்ணிக் குடுத்துடலாம்னு நினைச்சாரு அந்தத் தாய்மாமன்.

அந்தப் பு்ள்ள ரத்னாவளிக்கும் அரதனகுப்தனைக் கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டம் இருந்துச்சு. அதனால, அரதனகுப்தனுக்கு லெட்டர் மேல லெட்டரா அனுப்புனாரு தாய்மாமன். ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஊர்ல இருக்கறவங்களும், உறவுகளும் என்ன பேசுமோன்னு பயந்து போயி, பதிலே சொல்லாம இருந்துட்டான் இந்த ஆள். இந்த நேரத்துல தாங்க விதி விளையாடிச்சு... ஒரே நாள்ல ரத்னாவளியோட தாயும், தந்தையும் இறந்து போயிட்டாங்க. அவ தனியா நின்னா.

தகவல் தெரிஞ்சதும் அரதனகுப்தன் வேகவேகமா புகாருக்குப் புறப்பட்டுப் போனான். மாமன் மகளைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டு, அவளைக் கூட்டிக்கிட்டு மதுரைக்கு பயணம் புறப்பட்டான். ரத்னாவளி கட்டுசாத மூட்டை கட்டி எடுத்துக்கிட்டா. ரெண்டு பேருமா வர்ற வழியில ஒரு புன்னைவனம் இருந்ததைப் பாத்தாங்க. அந்த வனத்துல ஒரு வன்னிமரம் இருந்துச்சு. அதுக்கருகில ஒரு சிவலிங்கமும், தேனான சுவை நீருடன் ஒரு கிணறும் இருந்துச்சு. ஈஸ்வரனே காவலுக்கு இருக்கற அந்த இடத்தில நைட் தங்கிட்டுப் போலாம்னு முடிவு பண்ணி, கட்டுச் சோத்தை அவுத்துச் சாப்ட்டுட்டு, கிணத்துத் தண்ணிய அள்ளி அள்ளிக் குடிச்சாங்க.

நடந்து வந்த களைப்பும், உண்ட மயக்கமுமாச் சேர்ந்ததுல சொகமா வந்துச்சு உறக்கம். வன்னி மரத்தடியில தலைசாய்த்துப் படுத்து உறங்கிட்டாங்க. நட்டநடு ராத்திரியில ஒரு நல்லபாம்பு அந்தப் பக்கமா வாக்கிங் வந்துச்சு. கெரகம், சும்மாப் போகாம அது அரதனகுப்தனைக் கொத்தி போட்டுப் போய்டுச்சுங்க. அவன் ஆயுசு முடிஞ்சிடுச்சு. காலையில ரத்னாவளி எழுந்ததும் அவன் பாம்ப கடிச்சு செத்துக் கிடக்கறதப் பாக்கறா. ‘ஐயோ...’ன்னு அலறுறா. உருண்டு புரண்டு ஒப்பாரி வெச்சு அழறா...

அப்ப அந்த இடத்தை பக்தர்கள் புடைசூழ கிராஸ் பண்ணிட்டிருந்தார் தமிழ்நாடு டூர் அடிச்சுட்டிருந்த திருஞானசம்பந்தர்ங்கற மகான். அவரோட காதுல அந்தப் பெண்ணோட கதறல் கேட்டுச்சு. புன்னை வனத்துக்குள்ள வந்தாரு. இறந்து கிடந்த இளைஞனையும், அழுது பொலம்பற பொண்ணையும் பாத்துட்டு, ‘‘என்ன நடந்தது?’’ன்னு கேட்டாரு. அவ சொல்லி அழுதா. அவர் ஈசனை நினைச்சு இரு கரம் நீட்டி முறையிட்டாரு அந்தப் பொண்ணுக்காக. உடனே ஒரு அதிசயம் நடந்துச்சு. அரதனகுப்தனைக் கடிச்ச பாம்பு மறுபடி வந்து அவன் உடம்புல இருந்த தன்னோட விஷத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சின மாதிரி உறிஞ்சி வாபஸ் எடுத்துக்கிச்சு. அவன் தூங்கி எந்திரிச்ச மாதிரி கண்ணு முழிச்சு, எல்லாரும் கேக்கற ‘‘நான் எங்க இருக்கேன்’’கற டயலாக்கை தவறாம கேட்டான். ரத்னாவளிக்கு ரொம்ப குஷியாய்டுச்சு.

சம்பந்தர் சுவாமிகள் அவங்களைப் பத்திக் கேட்டதும் எல்லாத்தையும் விரிவாச் சொன்னாங்க. அவர் சிரிச்சாரு. ‘‘எப்போ, ஈஸ்வரன் எதிர்ல  ரெண்டு பேரும் ஒண்ணா இரவைக் கழிச்சீங்களோ, அப்பவே உங்களுக்கு கல்யாணமானதாதான் அர்த்தம். அதனால, மதுரைக்கு போய் கல்யாணம் பண்ணிக்கறதவிட, ஈசனுக்கு எதிர்லயே ஒரு தாலியக் கட்டி இவளை மனைவியாவே மதுரைக்குக் கூட்டிட்டுப் போ’’ன்னாரு.  பெரியவர் சொன்னா மறுபேச்சு ஏதுன்னு அவனும் ஈசன் எதிர்லயே ரத்னாவளிக்கு ஒரு தாலியக் கட்டி மதுரைக்கு தன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனான். அவளோட குடும்பம் நடத்த ஆரம்பிச்சு, அவங்களுக்கு ரெண்டு குழந்தைங்களும் பொறந்துடுச்சு.

ரு நாள் விளையாட்டு சண்டையில, மூத்தவளின் குழந்தைகளை இளையவள் (ரத்னாவளி) குழந்தைங்க அடிச்சிடுச்சுங்க. அந்தப் புள்ளைங்க அழுதுட்டே அம்மாட்ட கம்ப்ளைண்ட் பண்ணிச்சு. ஏற்கனவே தன் லை‌ஃபை பங்கு போட்டுக்கிட்ட ரத்னாவளி மேல அந்தம்மாவுக்கு காண்டு. அதனால அவ, ரத்னாவளிய வைப்பாட்டின்னும், முறையா தாலி கட்டிக்காம தன் கணவனை மயக்கினவன்னும் தி்ட்டி சண்டை போட்டு, அவளை வீட்டை விட்டு விரட்டிட்டா. தான் தாலி கட்டின மனைவின்னு வாதாடினதை அவ கேக்காததால ரத்னாவளி அவள் மேல வழக்குப் போட்டா.

மதுரை ஆலயத்தோட மைய மண்டபத்துல அவளோட வழக்கை விசாரிச்சாங்க. (அப்பல்லாம் அதான் கோர்ட் போல) வன்னி மரத்தடியில, கிணற்றங்கரையில, ஈசன் முன்னிலையில தன் கல்யாணம் நடந்துச்சுன்னு ரத்னாவளி சொல்ல, அதை பொய்யின்னு சொன்னா மூத்தவள்.  தான் உத்தமின்னும், பத்தினின்னும் ரத்னாவளி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், யாரும் நம்பலை. நாட்டாமை மாதிரி சாட்சி என்னன்னு கேக்கவும், ரத்னாவளி வேற வழி இல்லாம ஐ விட்னஸா இருந்த ஈசன் கிட்ட அழுது முறையிட்டா. ஈசன் அசரீரியா குரல் கொடுத்தாரு. ‘‘ரத்னாவளி வன்னி மரத்தடியில என் முன்னால கல்யாணம் பண்ணிக்கிட்டது உண்மைதான். அவ கல்யாணத்துக்கு சாட்சியா இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் இந்தக் கோயில்ல என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில ‌கொண்டுவந்திருக்கேன். அதைப் பாத்தீங்கன்னா, ரத்னாவளி களங்கமற்றவன்னு உங்களுக்கே புரியும்’’ன்னு சொல்லிச்சு அசரீரி.

உடனே எல்லாரும் ஓடிப் போய் சொக்கநாதர் சன்னதியோட ஈசானிய மூலையில பாத்தாங்க. அங்க சிற்ப வடிவுல வன்னி மரமும், கிணறும், லிங்கமும் இருந்துச்சு. அவ்வளவு தான். லார்ட் ஈஸ்வரனே சாட்சி சொன்னப்புறம் கேஸ் நிக்குமா? ரத்னாவளிக்கு சாதகமா தீர்ப்பு கொடுத்தாங்க. மூத்தவளும் வாய் பேசாம அவளை ஏத்துக்கிட்டா. அன்னிலருந்து ரெண்டு பேரும் ஒத்துமையா, சண்டை போடாம அரதனகுப்தனோட குடும்பம் நடத்தத் தொடங்கினாங்க. இந்தக் கதை திருவிளையாடற் புராணம் என்கிற நூலில் சொல்லப்பட்டிருக்கு.

-சமீபத்துல மதுரைக்குப் போயிருந்தப்ப, சிவன் சன்னிதி மூலையில இந்தக் கிணறு, லிங்கம், மரம் மூணையும் மக்கள் சுத்தி வந்து கும்பிடறதப் பாத்துட்டு நான் கேட்டதுக்கு எங்கம்மா சொன்ன கதை இது. உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா... வெல், மறுபடி சாமி கதையப் படிச்சா தப்பில்ல தானே... கேள்விப்பட்டதில்லைன்னு சொன்னீங்கன்னா... நான் தெரிஞ்சுகிட்டதை உங்களோட ஷேர் பண்ணிக்கிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! ஸீ யு!

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

36 comments:

  1. நல்ல கதை. எனக்குத் தெரியாது. அந்தக்காலத்தில் மட்டும் என்னனமோ நடந்திருக்கு. பதிவாக்கியமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதைக் கேட்டப்ப எனக்கும் புதுசாத் தான் இருந்துச்சு. அதான் Share பண்ணினேன். உங்களோட வாழ்த்து பாத்ததும் Happy ஆயிட்டேன். My Heartful Thanks to you Sir!

      Delete
  2. இறைவனின் சாட்சியல்லவா !!! மறுக்க முடியாத சாட்சி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... மனித சாட்சி பொய் பேசலாம். இறைவன் பேச்சை யார் தான் மறுப்பாங்க. உங்களுக்கு Many Many Thanks!

      Delete
  3. ஓஓஓ அறியாத கதை. உங்க எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும் நிரூ.
    அந்த கால கதைகள் எவ்வளவோ வெளியில் வராம இருக்கு. அதில ஒன்னுதான் இது போல..
    சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

    ReplyDelete
    Replies
    1. ஐ... என்னோட எழுத்து நடை பிடிக்கும் சொன்னதுல துள்ளிக் குதிச்சிட்டேன் எஸ்தர்... ஸோஓஓஓ நைஸ் யூவார். தாங்க்யூம்மா.

      Delete
  4. கதை நல்லா சுவாரசியமா இருக்கு. புராண கதையை லோக்கல் தங்லீஷில் கலக்கலாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்லா சுவாரஸ்யமா இருக்குன்னு சொன்னதுல சந்தோஷம் Friend! Thank you! எனக்கு இந்த தங்கிலீஷ் ரைட்டிங்தான் ஈஸியா வருது. What to do?

      Delete
  5. nice way of expressing the story :-)

    ஒரு நல்லபாம்பு அந்தப் பக்கமா வாக்கிங் வந்துச்சு
    லெட்டர் மேல லெட்டரா அனுப்புனாரு தாய்மாமன்
    தன்னோட விஷத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சின மாதிரி
    தமிழ்நாடு டூர் அடிச்சுட்டிருந்த திருஞானசம்பந்தர்
    லார்ட் ஈஸ்வரனே சாட்சி சொன்னப்புறம் கேஸ் நிக்குமா?

    ReplyDelete
    Replies
    1. Oh... What an encouraging words! Thank you very much my dear friend!

      Delete
  6. நல்லவருக்கெல்லாம் ரெணு சாட்சி. ஒண்ணு மன்சாட்சி, ரெண்டு தெய்வத்தின் சாட்சியம்மான்னு சிவாஜி பாட்டு ஒண்ணு அடிக்கடி கேட்பேன். அதை நிரூபிக்குற மாதிரி இந்த கதை இருக்கு. ஆமா, உன் வயசை தாண்டி திடீற்ன்னு ஆன்மீகத்துல இறங்கிட்டியே ஏன்?

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்... கார்ட்டூன் பாக்கற வயசுல காதல் கதையான்னு ஹேமாக்கா கேக்கறாங்க. சரின்னு நான் கேட்ட ஆன்மீக கதை எழுதினா இந்த வயசுல ஏண்டின்னு நீங்க கேக்குறீங்கக்கா.... ஒரே கன்ப்யூஊஊஊஊஊஷன்!

      Delete
  7. செல்லமே கதை படிக்க நேரமில்லை யடா ...கொஞ்சம் வேலையால் வெளிக் கிடுறேன் ...அப்புறமா வந்து படிக்கிறேன் குட்டி

    ReplyDelete
    Replies
    1. கலைக்கா... நீங்க வந்தாலே சந்தோஷம்தான் எனக்கு. எப்ப டைம் இருந்தாலும் வந்து படிச்சுட்டு சொல்லுங்கோ... Niru Eagerly Waiting for you!

      Delete
  8. இனி தமிழ்ப் பதிவுலயும் இணைச்சிடேறேன் ப்ரெண்ட். நன்றி.

    ReplyDelete
  9. குட்டி நிரூவுக்கு இப்படிக்கூட எழுத வருமா?வெரி குட்.அரியாத விஷயங்கள்,

    ReplyDelete
    Replies
    1. எழுதினது உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப சந்தோஷம் Dear S.S. My Heartful Thanks!

      Delete
  10. மிகவும் அருமையான கதை நிரஞ்சனா . என்னுடைய வலைப்பபூவின் உறவினராக வாருங்கள் . தொடரட்டும் நம் நட்பு.

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டேன். இனியும் வருவேன். ஃப்ரெண்ட்ஸ் நிறைய எனக்கு வேணும். அருமையான கதைன்னு பாராட்டினதுக்கு நன்றி.

      Delete
  11. நிரஞ்சனா.... கதை சொன்ன விதம் அழகா இருந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Oh... இதை ரசிச்சு நல்லா இருக்குன்னு சொன்ன உங்களுக்கு My Hertful Thanks!

      Delete
  12. சமத்துக் குட்டி நிரூ எத்தனை நல்ல கதையைச் சொல்லி இருக்கு. சூப்பர் பதிவு. ஞானசம்பந்தர், ஈஸ்வரன் எல்லாரும் வந்து கல்யாணத்தை நடத்த அந்தப் பொண்ணு என்ன புண்ணியம் பண்ணித்தோ
    .ரொம்ப தான்க்ஸ் நிரூக்குட்டி.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்களைப் போன்றவங்களோட ஆசியும் தூண்டுதலும் தான் வல்லிம்மா. உங்களுக்கு இது பிடிச்சதுல எனக்கு ரொம்ப Happy. Many Thanks to you!

      Delete
  13. ஒரு வித குழந்தை தனமான எழுத்து நடை...

    படிக்க வித்தியாசமா இருக்கு.. ஆனா நல்லா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. Yes, என் எழுத்து கொஞ்சம் Childish தான். இனிமே கொஞ்சம் இம்ப்ரரூவ் பண்ணிக்கறேன். Encourage பண்ணின உங்களுக்கு என் நன்றி.

      Delete
  14. ஒரு ஆன்மீகக் கதை.கதையில் சுவாரஸ்யம்.சாமியை நம்பவச்சுடுவா போல இருக்கே நிரஞ்சனாக்குட்டி !

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமா இருந்ததுன்னு நீங்க சொன்னதுலயே குஷியாயிட்டேன். நீங்க நம்பாட்டி பரவால்லக்கா... அவங்கவங்க நம் இயல்புப்படி இருப்போம். பாசமான கவிதாயினிக்காவுக்கு சந்தோஷமா என் நன்றி.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. பாத்து சந்தோஷப்பட்டு அங்கயே துள்ளிக் குதிச்சிட்டேன். My heartful Thanks to you!

    ReplyDelete
  17. ஆன்மீகத்தில் நிஜம் அது .அதுவும் படித்த கதை மீண்டும் உங்கள் எழுத்தில் படித்ததில் சந்தோஸம் நிரூ! மேலும் மதுரையும் சன்நிதி பார்த்த பரவசம் மீண்டும் வருகின்றது !

    ReplyDelete
    Replies
    1. ஓஓஓஓ.... உங்களுக்குத் தெரிந்த கதையா? ஆனாலும் என் எழுத்தில படிச்சா சந்தோஷம்னு சொல்லி Encourage பண்ணின அண்ணாவுக்கு ரொம்ப நன்றி!

      Delete
  18. திருவிளையாடற் புராணம் எமக்கு 10ம் வகுப்புப் பாடப் புத்தகம். மறுபடி நினைவு வருகிறது. கதை சொன்ன விதமும் அருமை நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. பாடப் புத்தகத்துல இந்தக் கதை இருந்துச்சா? புதுத் தகவல் எனக்கு. கதை சொன்ன விதத்தைப் பாராட்டினதுல I Feel Happy. Thankyou Verymuch!

      Delete
  19. தாமதமாக வர வேண்டிய கட்டயத்திற்கு தள்ள பட்டேன். அதையே தனியொரு பதிவாக எழுத விருப்பம், அதனால் இத்தனை நாள் அனைவரின் ப்ளாக் பக்கம் வராமல் இருந்ததர்க்கு காரணம் அதில் சொல்கிறேன்.

    உங்கள் கதை, அல்லது கதையாகிய புராணம், அதை நீங்கள் சொன்ன விதம் அனைத்தும் அருமை. எனக்கு இது புதிய தகவல் அதனால் என்னுடன் பகிர்ந்தமைக்கு மிக மிக நன்றி

    ReplyDelete
  20. கதை அருமை... இந்த மாதிரி ஸ்வாரஸ்யமான கதைகளைத் தேடிப் பிடித்து எழுதுங்க... படிக்க நாங்க இருக்கோமில்ல.... கதையின் சுவையை தங்களது இயல்பான எழுத்து மேலும் மெருகூட்டியது! நன்றி!

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!