Pages

Ads 468x60px

30 May 2012

கதை சொல்லப் போறேன்!

ஹாய்... ஒரு பழைய்ய புத்தகத்துலருந்து ‘சுட்ட’ கேள்வியை நான் இங்க குடுத்திருக்கேன். ரொம்ப ஸிம்பிளான இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கணும் நீங்க. யோசிச்சுக கண்டுபிடிச்சுட்டா, எனக்குச் சொல்லுங்க. சாக்லெட் தர்றேன்.
 
 
 
இப்ப... கணக்குப் போடற வரைக்கும் உங்களுக்கு போரடிக்காம இருக்க ஒரு கதை சொல்லப் போறேன்.

கதறிய கழுதை!

ரு வியாபாரி தன்னோட வீட்ல ஒரு கழுதையையும், நாயையும் வளர்த்துட்டிருந்தான். நாய் கழுதையோட நட்பா பழகிட்டிருந்தது. ஆனா விஸ்வாசத்தைக் காட்டி நல்ல பேர் வாங்கறதுக்காக கழுதை பேசறதை முதலாளி கிட்ட போட்டக் கொடுத்துடும். இந்த விஷயம் தெரியாம கழுதை நாயை நம்பிட்டிருந்தது.

அந்த வியாபாரி எப்ப வியாபாரத்துக்காகப் போனாலும் கழுதை மேல தன் சுமைகளை ஏத்திக்கிட்டுப் ‌போவான். ஒவ்வொரு முறை சுமை அதிகமாக சுமத்தப்படும் போதும் கழுதை கனம் தாங்காமல் முனகல் குரல் எழுப்பும். வியாபாரியும் அதன் மேல பரிதாபப் படற மாதிரி நடிச்சு, அதோட சுமையிலருந்து கொஞ்சத்தைக் குறைப்பான். அப்பாவிக் கழுதையும் தனக்காக சுமையக் குறைச்சிருக்கானேன்னு கஷ்டப்பட்டு பாரத்தைச் சுமந்துக்கிட்டு நடை போடும்.

அந்தக் கழுதை தனக்கு இருந்த ஒரு மனக்குறைய தன் தோழன் (என்று நம்பி) நாயிடம் சொன்னது. ‘‘இந்த முதலாளி என்னைக் கடுமையா வேலை வாங்கறான். ஆனா எனக்குச் சரியான சாப்பாடு தர்றதில்லை. ஆறிப் போன சோறும், அழுக்கான தண்ணியும் தான் தர்றான். அதை நினைச்சாத்தான் கடுப்பா வருது’’ அப்படின்னு கழுதை சொன்னதும், ‘‘அடப்பாவமே!’’ன்னு அதுக்கு ஆதரவாப் பேசின நாய், வழக்கம் போல முதலாளிகிட்ட போட்டுக் குடுத்துடுச்சு.

அந்த மனுஷன் பாத்தான். ஒரு ஐடியா பண்ணினான். அடுத்த நாள் கழுதையக் கட்டிப் போட்டுட்டு, அதனோட மூக்குக் கிட்ட சாப்பாட்டையும், தண்ணியையும் காட்டிட்டு வீட்டுக்குக் கொண்டு போயிட்டான். அதுவும் கயிறு அனுமதிக்கற தூரம் வரை ஓடி வந்து ஏமாந்துடுச்சு. இப்படியே அதை சாப்பாடு, தண்ணி தராம அஞ்சாறு நாள் பட்டினி போட்டான். காஞ்சு ‌போய்க் கிடந்த கழுதையோட மனசுல, ‘‘அது கிடைச்சாலே போதுமே, அதுக்காக கஷ்டப்பட்டாலும் பொறுத்துக்கலாமே... இப்படிக் கிடைக்காம கஷ்டப்படறது கொடுமையால்ல இருக்கு?’’ன்னு நினைப்பு ஓடிச்சாம்.

அதுக்கப்புறமா ஒருநாள் வந்து கழுதையோட கட்டை அவுத்துவிட்டுட்டு, அதுக்கு எதிரா ஆறின சோறையும், அழுக்குத் தண்ணியையும் வெச்சான். காஞ்சு ‌போயிருந்த கழுதை மடமடன்னு சாப்பிட்டுட்டு, தண்ணியைக் குடிச்சிடுச்சு. முதலாளியைப் பார்த்து அது கண்ணீர் விட்டு, ‘‘ஐயா... நான் இனிமே எதுவும் கேக்க மாட்டேன். இந்த பழைய சோறும், அழுக்குத் தண்ணியும் எனக்குக் கிடைச்சாலே போதும்...’’ன்னு கதறி அழுதுச்சாம். தன்னோட தந்திரம் பலிச்சுப் போச்சேன்ற சந்தோஷத்துல நாயைக் கூட்டிட்டு வீட்டுக்குள்ள போனானாம் மனுஷன்.

-என்ன, சின்னப் பசங்களுக்கு சொல்ற ‘பஞ்சதந்திரக் கதை’ மாதிரி இருக்கேன்னு நினைக்கறீங்களா? ரெண்டு நாளா பஸ்(நெரிசல்)லதான் போய் வந்துட்டிருக்கேன். பஸ் பிரயாணத்தின் போது இந்தக் கதை மனசுல தோணிச்சு. உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன். மத்தபடி மனசுல வேற எதையும் நினைச்சுக்கிட்டு இந்தக் கதைய நான் சொல்லலைப்பா..!

இப்ப, அந்தக் கணக்கைச் சரியாப் போட வராதவங்களுக்காக இங்க விடையைத் தர்றேன்:



பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

44 comments:

  1. கிடைத்ததை நினைத்து சந்தோசமடைய வேண்டும்
    இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்..
    நமக்கு எது கிடைக்குமோ அது கிடைத்தே தீரும்....

    இப்படி பல சிந்தனைகளை சொல்லிப்போகிறது கதை..

    கதையும் புதிரும் நல்லா இருக்குது சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. கதையும் புதிரும் பிடிச்சிருந்துச்சா அண்ணா... ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு. உங்களுக்கு My Heartful Thanks!

      Delete
  2. ஆஹா............. அந்த அஞ்சரை கிராம் பூசணிக்காயை உடனே இங்கு அனுப்புங்க.

    நோ ஒர்ரீஸ்.... இங்கே காஞ்சுதான் கிடக்கோம் மக்கா;-)))))))

    ReplyDelete
    Replies
    1. Ha... Ha... அனுப்பிட்டாப் போச்சு... டீச்சருக்கில்லாததா? மிக்க நன்றிங்க.

      Delete
  3. X+Y=9(1)
    X+2=Y(2)
    Let us take (2)
    X=Y-2
    (Y-2)+Y=9
    2Y=9+2
    2Y=11
    Y=11/2
    Y=5 1/2
    X+2=5 1/2
    X= 5 1/2 -2
    X=3 1/2
    ennoda answer step correct thaney niru ?
    Scooty ku enna aachu niru bus il pora
    petrol problem ma ?

    ReplyDelete
    Replies
    1. நீங்க வாத்தியார்ங்கறதை நிரூபிச்சுட்டீங்க நிரூவுக்கு. பெட்ரோல் கிடைக்காம ஸ்கூட்டிய பங்க் பஙக்கா தள்ளிட்டு அலைஞ்சு கதைல வர்ற கழுதை மாதிரி காஞ்சு போய்ட்டா நிரூ. அதான் நிலைமை மார்ற வரைக்கும் பஸ்ல போகலாம்னு முடிவு ப்ரெண்ட்!

      Delete
  4. விடை கீழே போய் பாக்காமலேயே கண்டுபிடிச்சேனே... :)

    நல்ல கருத்துள்ள கதை. இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்பட்ட கதைதான்....

    ReplyDelete
    Replies
    1. நீங்க க்ளெவரானவர்னு ஒரு கெஸ் வெச்சிருந்தேன். ரொம்பச் சரிதான் அது. கதையையும் நல்லா இருக்குன்னு நீங்க சொன்னதுல குஷியாய்ட்டேன். Many More Thanks! (ஊர்ப் பயணமெல்லாம் சுகமா அமைஞ்சிருந்துச்சா ஸார்)

      Delete
  5. அந்த காலத்துக்கதைய இந்தக்காலத்துல படிக்கிறதுக்கு குடுத்து வச்சிக்கனும்...இல்லாட்டி ஒன்னாங் கிளாசு புக்கத்தான் தேடனும்.அடிக்கடி இப்படி கதைகள சொல்லிட்டு போங்க...:)

    ReplyDelete
    Replies
    1. ம்மம்... குழந்தைங்க கதைதானே... நிறைய சொல்லலாம். முடியறப்பல்லாம் சொல்றேன் நட்பே. நன்றி.

      Delete
  6. நான்கேலாம் தினமும் பஸ்ல போறோம் .. அப்ப எவ்வளவு கதை தோணும் ? நாங்க சொல்ல ஆரம்பிச்சா நாடு தாங்காது

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்க பிரதர்... நாடு தாங்குதோ இல்லையோ... நிரூ தாங்குவா.

      Delete
  7. கணக்கு புதிர் அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கனின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  8. கணக்கு விடை எளிதாக காணக்கூடியதாயிற்றே?
    கத்தரிக்காய் a என்றும் பரங்கிக்காய் b என்றும் கொண்டால்
    a + b = 9 ; b - a = 2. இரண்டு சமன்பாட்டையும் இருபக்கமும் கூட்டினால்
    a + b + b - a = 9 + 2 அதாவது 2b = 11. ஆகவே b = 5.5 ஆகவே a = 3.5
    சரியா?

    ReplyDelete
    Replies
    1. உங்க ரேஞ்ஜுக்கு எளிதாச் சொல்லிட்டீங்க. நான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதாயிடுச்சு. என்னை Encourage பண்ண உங்களுக்கு My Heartful Thanks!

      Delete
  9. அட என்ன நிரூ விடைய நான் சொல்லைக்கு முன் நீங்க சொல்லிட்டீங்களே..

    ஓகே ஏன் தீடீர் பெயர் மாற்றம்??
    பாலா என்ற பெயருக்கும் எனக்கும் நிறைய
    தொடர்புண்டு அதை விட கோபமும் அதிகம் உண்டு பாசமும் அதிகம் உண்டு..

    ReplyDelete
    Replies
    1. அதுவா எஸ்தர்... ப்ளாக் ஆரம்பிக்கறப்ப மாமாவோட ஈமெயில் ஐடிலயே ஆரம்பிச்சுட்டேன். இப்ப என்னோட மெயில் ஐ.டிக்கு மாத்தினதால அப்பா பேரும் சேர்ந்து இனி என் பேர் இப்படி வரும். அதுசரி... உனக்கு பாசமும், கோபமும் கொள்ள வைக்கிற அந்த பாலா யாரும்மா..? எனக்கு மட்டும் சொல்லேன் ப்ளீஸ்..!

      Delete
  10. வித்தியாசமாக யோசித்து இருக்கீங்க நீரு.

    ReplyDelete
    Replies
    1. கதையின் கதையைச் சரியாகப் புரிஞ்சுக்கிட்டு என்னை பாராட்டியிருக்கீங்க S.S. ரொம்ப குஷியாயிட்டேன் நான். உங்களுக்கு என்னோட்... Heartful Thanks!

      Delete
  11. Google Plusல உங்க பிளாக் Link போட்டு வைங்க.....ஏன்னா? நீங்க ஒரு பதிவுல கமெண்ட் போட்டால் அந்த புரபைல் மூலமா வருவாங்க.....நான் சிரமப்பட்டு தேடி வந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. இப்ப செஞ்சுட்டேன் ஸார். என் மேல் அக்கறை கொண்டு நல்வழி சொன்ன உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  12. கதையும் கணக்கும் ரொம்ப நல்லாயிருந்தது ஃபிரெண்ட்.
    பாவம்பா கழுதை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ப்ரெண்ட்... கழுதை ரொம்பவே பாவம்தான்! கணக்கு நல்லாயிருந்ததுன்னு சொன்னதுக்கு என்னோட ஸ்பெஷல் தாங்க்ஸ்!

      Delete
  13. காஞ்சி போன கழுதை ! பாவம் !

    ReplyDelete
    Replies
    1. ‌எனக்கும் கூட ‘கழுதை’யோட நிலையை நினைச்சால் பாவமாத்தான் இருக்கு. My Heartful Thanks to you!

      Delete
  14. "நினைச்சாத்தான் கடுப்பா வருது’’ அப்படின்னு கழுதை சொன்னதும், ‘‘அடப்பாவமே!’’ன்னு அதுக்கு ஆதரவாப் பேசின நாய், வழக்கம் போல முதலாளிகிட்ட போட்டுக் குடுத்துடுச்சு."

    அந்த நாய் போன்று சிலர் நடை முறையிலும் உண்டு நிரூ . நீ கல்லூரிக்கு ஏன் பஸ்ஸில் போறடா உன்னுடைய வண்டி எங்கடா ...........

    ReplyDelete
    Replies
    1. மனிதர்களிடமும் சிலசமயம் மிருகங்களின் குணங்கள் இருக்கு இல்லையா விஜி... நாலு நாளா பெட்ரோலுக்காக நான் கழுதையா அலைஞ்சு கிடைக்காமதான் வண்டிய வீட்ல போட்டுட்டு பஸ்ல போறேன்ப்பா...

      Delete
  15. இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழவேண்டும் என்பது இக்கதையின் கரு மிகவும் அருமையாக இருந்ததுடா...
    உன்னுடை கணக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் ................. சூப்பர்டாஆஆஆஆஆஆஆஆஆ........................

    ReplyDelete
    Replies
    1. கதையையும் கணக்கையும் சூப்பர்ன்னு சொன்ன ஃப்ரெண்டுக்கு My Heartful Thanks!

      Delete
  16. முதல்ல அந்த நாயை நண்பனா வைத்துக் கொண்ட கழுதை மேல கோபம் வருது. பாவம் அந்தக் கழுதை.
    மனுஷ புத்தி கெட்ட புத்திமா.
    கணக்கு சூப்பர்,. கடைசில விடை கொடுத்ததற்கு நன்றி.
    காமதேனு பக்கத்துப் பெட்ரோல் பங்கில பெட்ரோல் கிடைச்சுதேம்மா.

    ReplyDelete
    Replies
    1. அங்கயும் ஒரு முறை போனேன் வல்லிம்மா... நான் போன நேரம் க்ளோஸ் பண்ணியிருந்துச்சு, வெறுத்துப் போய்ட்டேன். கணக்கு சூப்பர்னு நீங்க சொன்னதுல குஷியாயிட்டேன். My Heartful Thanks to you!

      Delete
  17. கதை சொல்லி நிரஞ்சனா குட்டிக்கு கைதட்டல் கணக்குலயும் சமத்துதான் நீ .

    ReplyDelete
    Replies
    1. ஹய்யா... கதையும் கணக்கும் உங்களுக்குப் பிடிச்சிருக்காக்கா... Happy Happpy! Many Many Thanks to you!

      Delete
  18. பெட்ரோல் பிரசனையாடா இங்கும் அதேதான் ... அதனால இன்று மும்பையில் கடை அடைப்புடா...

    ReplyDelete
    Replies
    1. கடையடைப்பு இங்கயும் நடந்துச்சு. ஆனா தீவிரமா இல்லை விஜி.

      Delete
  19. நிரூ உன்னுடைய கணக்கை என் மாமாவிடம் சொன்னேன்டா அதற்க்கு அவங்க
    x+y=9
    x+2=y
    x + y = 9
    x - y = -2 (+/-)y --> நீக்கபட்டுவிட்டது
    -------------
    2x = 7
    x = 7/2 = 3.5
    x = 3.5
    y = 5.5

    என்று சொன்னாங்க நிரூ.....

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கணக்குக்கு இன்னும் ஒரு வழிமுறை இருக்குன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி விஜிம்மா...

      Delete
  20. நிரூ என்னுடைய வலைதளத்தில் தமிழ் எழுத்துக்கள் வரவில்லை அதனாலே என்னால் பதிவிட முடியவில்லைடா.
    எனக்கு ஏதாவது சொல்லேன் நிரூ... இப்பொழுது நீ வலைசரத்திதான் இருக்கிறாயா நிரூ.........

    ReplyDelete
    Replies
    1. நேத்து நைட் லேட்டாயிட்டதால வலைப்பக்கம் வரலை. காலேஜ்ல தோழிகள்ட்ட கேட்டு ஏதாவது ஐடியா கிடைச்சா, இன்னிக்கு ஈவ்னிங் சொல்றேன் விஜிம்மா... உன் வாசகியாச்சே நான்... பதிவைப் படிக்கற ஆவல் எனக்கு இருக்காதா என்ன..?

      Delete
  21. சும்மாவே கணக்கு வராது...இதில கதை வேறயா????ஆனாலும் ரொம்ப நல்லவங்க நீங்க.அடில விடையையும் சொல்டீங்க.இது ரொம்ப புடிச்சிருக்குஅருமையாய யதார்தமான கதை

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பாராட்டின உங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றியை தெரிவிச்சுக்கறேன்.

      Delete
  22. நான் புத்திசாலி இல்லை என்பதை நிருபிப்பதர்க்கான ஒரு பதிவு. காரணம் கணக்கு பண்ணுவதில் நான் ரொம்ப வீக் என்று என் நண்பர்கள் சொல்லுவார்கள் (சிரிக்க மட்டும் சிந்திக்க இல்லை):-). கழுதை கதை அருமை.

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!