Pages

Ads 468x60px

14 July 2012

புதிரான ‘மாஸ்’ சைகாலஜி!


நிரஞ்சனாவின் டைரியிலிருந்து...

கரத்தின் மத்தியில குறுக்கும் நெடுக்குமா விர்விர்ன்னு வாகனங்கள் பறந்துக்கிட்டிருக்கற ஒரு சாலை. அந்த பரபரப்பான சாலையில. ரோட்டோரமா தயங்கி நிக்கிறா நிரஞ்சனா. வாகனங்களுக்குக் குறுக்கே புகுந்து கடக்கறதுன்னா ஒரே பயமா இருக்குது நிரூவுக்கு. ஏதாவது வண்டி நிக்காமலோ, பிரேக் பிடிக்காமலோ இடிச்சு, நிறையப் பேர் மத்தியில கீழ விழுந்து அடிபட்டுடுச்சுன்னா என்ன பண்றதுன்னு மனசுல ஒரு உதறல் அவளுக்கு. டிராபிக் எப்படா குறையும்னு சுத்திமுத்தி பாத்துட்டிருக்கா. ‌சில நிமிஷங்கள்ல அவளைச் சுத்தி ஏழெட்டுப் பேர் அவளை மாதிரியே டிராபிக்கை கடக்கறதுக்காக நிக்கிறாங்க. இப்ப எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டு, கையைக் காட்டியபடி சாலையின் குறுக்கே போகறாங்க. நிரூவும் அவங்களோடவே ஓடிடறா. விரைஞ்சுட்டிருக்கற வாகனங்கல்லாம் அவங்க கடந்து போற வரைக்கும் நிக்கிதுங்க.

ல்லூரியில முதல் வருடத்தில் சேர்றதுக்காக வர்ற அந்தப் பொண்ணோட முகத்தில பயம் பரதநாட்டியம் ஆடிட்டிருக்கு. திருவிழாவுல காணாமப் போன குழந்தை மாதிரி சுத்திச் சுத்திப் பாத்தபடி மெதுவா தயங்கித் தயங்கி நடந்து வர்றா. அவளுக்கு எதிர்ல வந்து நிக்கறா ப்ரியா. ‘‘ஹாய், நான் ப்ரியா. இங்க தேர்ட் இயர் படிக்கிறேன். உன் பேர் என்னம்மா?’’ன்னு கேக்கறா. அவளோட அழகான புன்னகை முகத்தையும், இனிமையான குரலையும் பாத்ததும் அந்தப் பெண்ணுக்குத் தெம்பு வருது. அவ பேச ஆரம்பிக்கிறதுக்குள்ள ப்ரியாவோட க்ளாஸ் மேட்ஸ் அங்க வந்துடறாங்க. ‘‘ஏய்... ப்ரியா! ஃபர்ஸ்ட் இயர் பார்ட்டி ஒண்ணப் பிடிச்சுட்டியா?’’ன்னு குஷியாக் கேட்டுக்கிட்டே ராகிங் பண்ண ஆரம்பிக்கிறாங்க. ப்ரியாவும் வேற வழியில்லாம அவங்களோட சேர்ந்துக்கறா.

டைத்தெருவோட ஓரத்துல பெட்டிக் கடை வெச்சிருக்கான் மாரி. திடீர்னு ரோட்டுல ஒரு கும்பல் ஆவேசமா ஓடி வருது. ‘‘தலைவரு இறந்துட்டாராம். இங்க என்னடான்னா... கடையத் திறந்தாடா வெச்சிருக்கீங்க? மூடுங்க...’’ன்னு கத்திக்கிட்டு கைல கிடைச்ச கல்லு, கட்டை எல்லாத்தையும் திறந்துருக்கற கடைங்க மேல வீசுது. கார்களை மறிச்சு கண்ணாடியை ‌உடைக்கிது. மாரி பதறிப் போய் கடையை அடைக்கிறான். மனசுக்குள்ள ‘உன் தலைவன் செத்தா அவன் வீட்டுலதானடா இழவு. அதுக்கு என் பொழப்பை ஏண்டா பாவிகளா கெடுக்கறீங்க?’ன்னு கதறல். கூட்டத்துக்கிட்ட கேக்கவா முடியும்? கேட்டா உயிர் மிஞ்சாதேன்னு பயந்து ஓடிடறான் இடத்தை விட்டு.

ரு தனியார் தொலைக்காட்சி நடத்தற இசை நிகழ்ச்சி மேடை அது. காம்பயரிங் பண்ணற பொண்ணு வந்து நிக்கறா. பாடப் போறவங்களைப் பத்தி அறிவிக்கிறா. கூட்டம் சத்தம் போடுகிறது. ‘‘ஹலோ சென்னை... இவ்வளவுதானா உங்க சத்தம்...! உற்சாகமா குரல் கொடுங்க...’’ என்று அவள் கூற (கத்த?) கூட்டம் மொத்தமும் இப்போது அரங்கமே அதிர்ற அளவுக்கு, வீட்டில் டி.வி. பார்ப்பவர்களின் ஸ்பீக்கர்கள் கிழியற அளவுக்கு ‘ஓஓஓஓ’ன்னு கத்துது.

-இந்த மாதிரி சம்பவங்கள்ல பாக்கறப்ப ‘கூட்டம்’ அல்லது ‘குழு’வோட மனப்பான்மை என்னை ஆச்சரியப்பட வெக்குது. தனியா டிராபிக்கை க்ராஸ் பண்ண பயப்படற நிரஞ்சனா கூட்டத்தோட சேர்ந்ததும் தைரியமா க்ராஸ் பண்றா. ராகிங் பண்ணத் தயங்கற ப்ரியா கூட்டம் சேர்ந்ததும் தானும் கலந்துக்கறா. தனியா ஒரு ரவுடி வந்தா ஒரு கை பாக்கற தைரியமுள்ள மாரி, கூட்டத்துக்கு பயந்து ஓடிடறான். அமைதியா இசையை ரசிக்க வந்தவங்க கூட கூட்டமா கத்தறப்ப தாங்களும் குரல் கொடுக்க வேண்டியிருக்கு.

பிக்பாக்கெட் செஞ்ச ஒருத்தன் மாட்டிக்கிட்டா, அவனை ஒருத்தன் அடிச்சுக் கொன்னா அது கொலை, ஆனா ஒருத்தன் அடிக்க ஆரம்பிச்சதும் உடனே நாலஞ்சு பேரா சேந்து வீரத்தக் காட்ட ஆரம்பிச்சுடுவாங்க. கூட்டம் அடிக்கறதுல அவன் செத்துட்டா அது கொலையில்ல... தப்பிச்சுரலாம்.

இந்தக் குழு மனோபாவத்தை நான் என் குடும்பத்துலயே பாத்து ஆச்சரியப்பட்டிருக்கேன். ரொம்பக் Calmஆ இருக்கற எங்கப்பா நான் கிரிக்கெட் பாக்கும் போது விராட் கோலி அதிரடியா செஞ்சுரி போட்டாக்கூட கை தட்ட மாட்டார். அதுவே வீட்ல ஒரு விசேஷம்னு பாமிலி மெம்பர்ஸ் எல்லாரும் கூடியிருக்கற போது டிவியில கிரிக்கெட் மேட்ச் ஓடி, டோனி செஞ்சுரி போட்டதுக்கு எல்லாரும் கைதட்டி சத்தம் போட்டா, அப்பாவும் கை தட்டிச் சிரிக்கறதைப் பாத்து வியந்திருக்கேன்.

என்னோட இந்த கவனிப்பை ரொம்பத் தயக்கத்துக்கப்புறம் என் ஃப்ரெண்ட் உஷாகி்ட்ட பகிர்ந்துக்கிட்டேன் ஒரு நாள். அவ சொன்னா... ‘‘சி்ன்ன வயசுல என்னோட க்ளாஸ் மிஸ் சொல்லியிருக்காங்க. நீ ஒரு ரோட்டுல நின்னுக்கி்ட்டு, சுவத்தில வராட்டி த்ட்டியிருக்கறதையே உத்துப் பாத்துட்டு பத்து நிமிஷம் இரு. உன்னைச் சுத்தி நாலஞ்சு பேரு நின்னு அந்த மாதிரி பாக்க ஆரம்பிச்சுடுவாங்க. சத்தம் காட்டாம நீ அங்கருந்து நகந்துட்டாக் கூட அந்தக் கூட்டம் அங்கருந்து நகராதுன்னு சொல்லியிருக்காங்கடி. அதான் மாஸ் சைக்காலஜி’’ அவ ‌சொன்னது ரொம்பவே வியப்பா இருந்துச்சு எனக்கு. Is it true?

இந்த மாதிரி கூட்டம்னு ஒண்ணு சேரும் போது அதுல இருக்கறவங்களோட சொந்த அடையாளங்கள், முகங்கள், குணங்கள் மறைஞ்சு கூட்டத்துக்குன்னு தனியா ஒரு முரட்டுத்தனம் உண்டாயிடறது எனக்கு ஆச்சரியத்தைத் தர்றதா இருக்கு. கூட்டம் அப்படிங்கற விஷயத்துக்கு எத்தனையோ தலைகள் இருந்தாலும் மூளைங்கற ஒண்ணு மட்டும் இருக்கறதி்ல்லைன்னு எப்பவோ படிச்சதுதான் நினைவுக்கு வருது.


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

33 comments:

 1. தமிழ் பதிவர்களைக்கான புதிய திரட்டி

  உங்கள் பதிவுகளை பதியுங்கள்

  ReplyDelete
 2. உங்கள் தோழி கூறியது உண்மை தான், தனி மனிதனுக்கு ஒரு முகமும் கூடத்திற்கு ஒரு முகமும் உண்டு, ஆனால் அந்தக் கூடத்திற்கு தலைவன் இல்லாவிட்டால் பல முகங்களும், இருப்பின் தலைவனின் முகம் கூட்டத்தின் முகமாகவும் இருக்கும்,

  தனியொருவனாக லீவ் போட்டால் அது ஆப்பு
  கூட்டமாக லீவ் போட்டால் அது பாதுகாப்பு

  இரண்டாம் ரகத்தில் பாதுகாப்பு அதிகம் பலம் அதிகம். நீங்கள் கூறிய நான்கு வெவேறு நிகழ்வுகளிலும் ஒவ்வொரு விதமான பாதுகாப்பும் பய உணர்வும் ஒரு சேர அடங்கி இருக்கும்

  த ம் மூன்று

  படித்துப் பாருங்கள்

  தல போல வருமா (டூ) பில்லா டூ

  http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html

  ReplyDelete
  Replies
  1. தலைவன் முகம்தான் கூட்டத்தின் முகமாக இருக்கும். -இந்த விஷயம் எனக்கு புதுசா இருக்கு. யோசிச்சுப் பாத்தா இரு சரின்னும் புரியுது. ரொம்ப ரொம்ப நன்றி சீனு.

   Delete
 3. நல்ல பகிர்வு. கூட்டமா இருந்தா, கோழைக்கும் தன்னால ஒரு கெத்து வந்துரும்!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. நல்ல பகிர்வுன்னு பாராட்டின உங்களுக்கு மனசு நிறைய என்னோட நன்றிகள் ஸார்.

   Delete
 4. மாஸ் சைக்காலஜி இப்போது தான் இது பற்றி தெரிந்து கொள்கிறேன். உண்மைதான் பா இப்படியும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது.

  ReplyDelete
  Replies
  1. இப்படிப் பல கூட்டங்களை கவனித்துப் பார்த்தபின்தான் எழுதத் துணிந்தேன்க்கா. உங்களுக்கு- My Hertful Thanks!

   Delete
 5. ரொம்பவே யோசிக்க வைக்கும் இடுகை..! யோசிக்காம இதுக்கு பதில் அளிக்கிறதா இருந்தா "எந்த இடத்திலேயும் யார் முதலில் துவங்குரதுங்கிறது தான் பிரச்சனை..ஒருத்தன் துவங்கிட்டா போதும் எல்லோரும் சேர்ந்து கும்மியடிக்க ஆரம்பிச்சுருவாங்க-என் அறிவுக்கு எட்டியது"

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட்... முதல்ல யார் துவங்கறதுன்றது தான் கேள்வி. சரியாச் சொன்னீங்க ஸார். உங்களுக்கு நிறைய நிறைய நன்றி.

   Delete
 6. நிரஞ்சனா.... அருமையான பதிவுப்பா....

  நீங்கள் சொன்ன அனைத்து விசயமும் மனிதத்தின் தற்காப்புத் தன்மை தான் காரணம். இது தவறு இல்லை. இதை மேற்போக்காகப் பார்த்தால் ஆட்டு மந்தைத்தனம் போல்தான் தெரியும்.... ஆனால்..
  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதில் தான் இதை அடக்கவேண்டும்.

  அருமையான பதிவிற்கு வாழ்த்துக்கள் ஃபிரெண்ட்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்பா அருணா. பள்ளிக்கூட நாட்கள்ல ஸ்போர்ட்ஸ்ல குரூப்பா பிரிக்கறதுகூட இந்த மாதிரி மனப்பான்மைய வளர்க்கத் தானோன்னு நான் எண்ணினதுண்டு. ரொம்ப ரொம்ப நன்றி ஃபிரெண்ட்.

   Delete
 7. //கூட்டம் அப்படிங்கற விஷயத்துக்கு எத்தனையோ தலைகள் இருந்தாலும் மூளைங்கற ஒண்ணு மட்டும் இருக்கறதி்ல்லைன்னு எப்பவோ படிச்சதுதான் நினைவுக்கு வருது.// ;)))))

  கட்டுரை நல்லாவே எழுதியிருக்கீங்க.

  // அதான் மாஸ் சைக்காலஜி’’ அவ ‌சொன்னது ரொம்பவே வியப்பா இருந்துச்சு எனக்கு. Is it true?//

  ஆம், அதுதான் உண்மை.

  பகிர்வுக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.

  ReplyDelete
  Replies
  1. வயதிலயும் அனுபவத்திலயும் மூத்தவரான உங்களோட கருத்து எப்பவும் சரியானது ஐயா. உங்களுக்கு என்னோட மனம் நிறைய நன்றிகள்.

   Delete
 8. அப்படி சொல்லிவிட முடியாது டா ....

  நம் அக மனதின் தோற்றத்தை நாம் எப்போதும் தனித்து பிரதிபலிப்பதில்லை .ஆனால் கூட்டமாக இருக்கும் போது குறைந்த பட்சம் அதை வெளிபடுத்த முனைகிறோம் காரணம் சமூகத்தின் அங்கீகாரத்திற்காக .......ஆனாலும் நம் உண்மை முகத்தை யாரும்விரும்புவதில்லை ........அதனால் ஒரு முகமூடி கொண்டு நாம் எப்போதும் மறைக்க வேண்டியிருக்கு .............இது இயல்பு ...........உன் சிந்தனை நீண்டு சிறகு விரிகிறது ......இன்னும் பறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாக்கா... நல்லா யோசிச்சுப் பாத்தா முகமூடி இல்லாம யாரும் இருக்கறதில்லைங்கறதா உணர முடியுது. என் சிந்தனைப் பறவை சிறகு விரிக்க நீங்க வாழ்த்தினது எனக்கு ரொம்ப ரொம்ப தெம்பா சந்தோஷமா இருக்கு. My Heartful Thanks to youkka!

   Delete
 9. கூட்டம் அப்படிங்கற விஷயத்துக்கு எத்தனையோ தலைகள் இருந்தாலும் மூளைங்கற ஒண்ணு மட்டும் இருக்கறதி்ல்லை

  கூட்டத்திற்கு பலம் அதிகம்தான் !

  ReplyDelete
  Replies
  1. அதாங்க என்னை ரொம்பவே வியக்க வெச்சது. என்னை உற்சாகப்படுத்தற உங்களோட வருகைக்கு சந்தோஷத்தோட என் நன்றிகள்.

   Delete
 10. நிரூ "மாஸ் சைக்காலஜி’’ அருமைடா... உன்னுடைய எழுத்து திறன் வியப்படைய வைக்கிறது.... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய என் ஃப்ரெண்டுக்கு என் சந்தோஷமான நன்றி.

   Delete
 11. நிரஞ்சனா
  நுணுக்கமான தங்கள் அறிவுக்கூர்மை வியக்க வைக்கிறது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சம்பவங்களைச் சொல்லி, இறுதியில் அந்த சம்பவங்களுக்கெல்லாம் ஆதாரமான ஒரு கருத்தைச் சொன்னது, பல வகையாக பூக்களை ஒரு தங்க இழையில் கோர்த்தது போல அருமையாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. என் அறிவு(?)கூர்மையப் பாராட்டினதுல ரொம்பவே சந்தோஷமாயிட்டேன் நண்பரே. உங்களுக்கு... My Heartful Thanks!

   Delete
 12. மாஸ் சைக்கொலாஜி
  நல்ல ஒரு சிந்தனை
  யதார்த்தமான சொலும் எழுத்தும் அருமை

  சிறந்த எண்ணம்
  அழகிய முறையில் எடுத்துரைத்த விதம் அழகு

  இதுபோன்ற நல்ல சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பாராட்டுக்கள் எனக்கு க்ளூக்கோஸ். இம்முறையும் அது கிடைச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷப்படறேண்ணா. மிக்க நன்றி.

   Delete
 13. நீரு....சூப்பர்.!இதே கதை தான் நாங்களும்:)கூட்டம் சேந்தா சொல்லவா வேணும்???அருமையானன நடை..
  சந்திப்போம ; சொந்தமே!

  ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பகிர்வை ரசித்துப் படிச்சு பாராட்டினதுக்கு நன்றி சொந்தமே.. மிக்க நன்றி. இப்பவே புறப்பட்டாச்சு உங்க தளத்துக்கு நிரூ.

   Delete
 14. \நீ ஒரு ரோட்டுல நின்னுக்கி்ட்டு, சுவத்தில வராட்டி த்ட்டியிருக்கறதையே உத்துப் பாத்துட்டு பத்து நிமிஷம் இரு. உன்னைச் சுத்தி நாலஞ்சு பேரு நின்னு அந்த மாதிரி பாக்க ஆரம்பிச்சுடுவாங்க. சத்தம் காட்டாம நீ அங்கருந்து நகந்துட்டாக் கூட அந்தக் கூட்டம் அங்கருந்து நகராதுன்னு சொல்லியிருக்காங்கடி\
  இது நிதர்சனமான உண்மை. ஒரு சமயம் வெளிநாடு சென்ற பொது, Frankfurt விமான நிலையத்தில் நானும் மற்ற இரு நண்பர்களும் நின்று பேசிக்கொண்டு இருந்தோம். சில நிமிடங்களுக்கு பிறகு, எங்கள் பின்னாடி ஒரு queue ஆகி விட்டது. நாங்கள், நமுட்டு சிரிப்போடு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டோம். எங்கள் பின்னாடி நின்றவர்கள் நிச்சயம் குழம்பி இருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நான் கேள்விப்பட்டதை அனுபவத்துலயே உணர்ந்து சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி.

   Delete
 15. தினமும் பார்க்கும் விசயங்கள் என்றாலும் உங்கள் அணுகுமுறை புதிது வாழ்த்துக்கள். மந்தை ஆடுகள்தான் மாஸ் சைக்காலஜி என்பது என் எண்ணம். நமக்குள் ஒளிந்திருப்பதுதான் கூட்டத்தில் தைரியமாய் வெளிவருகிறது.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து என்னை உற்சாகப்படுத்திய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

   Delete
 16. சிறுவயதுக் கதை ஒன்று ஒற்றுமையே பலம் என்பது போல. ஒரு குச்சி 2 குச்சி இலேசாக உடைக்கலாம் ஒரு கட்டாக இருந்தால் உடைக்க முடியாதது போல சைக்கோலஜி தான் இதுவும் என்று எண்ணுகிறேன். நல்ல படைப்பு நிரஞ்சனா.எங்கே உம்மைக்காணோமே என்பக்கம். நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. அழகா சைக்காலஜி விஷயம் சொல்லி ரசிச்சிருக்கீங்க, எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப ரொம்ப நன்றிக்கா.

   Delete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!