Pages

Ads 468x60px

18 April 2012

மஞ்சள் நிறத் தவளை கண்டதுண்டா!


நிரூ எவ்வளவு பெரிய அறிவாளின்னு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும்தானே... (சரீ... சரீ... கம்பைக் கீழ போடுங்க) சின்ன வயசுலருந்தே அவ எம்புட்டு அறிவாளியா இருந்தாங்கறதை விளக்கமா நான் எடுத்துச் சொன்னாத்தானே நீங்க புரிஞ்சிக்க முடியும். சில சாம்பிள் சம்பவங்களைப் பாருங்க...

                                                                     சம்பவம் : 1

ப்பா டி.வி.யில் ‘சன் மியூசிக்’ வைத்து, மீனாவை ஊஞ்சல் ஆட்டி, நதியாவைப் பார்த்து காதல் பாட்டுப் பாடும் ‘ராஜகுமாரன்’ பிரபுவை ரசித்துக் கொண்டிருக்கிறார். குட்டி நிரஞ்சனா அருகில் வருகிறாள்.

நிரூ : அப்பா...

அப்பா: நிரூக்குட்டி! இந்த கவுன் .உனக்கு ரொம்ப அழகா இருக்கே... வாடா, செல்லம்! (மடியில் அமர்த்திக் கொள்கிறார்.)

நிரூ: அப்பா... Frag எல்லாம் Green கலர்லதானே இருக்கும்..?

அப்பா: ஆமாண்டா குட்டி! தவளை பச்சையாத்தான் இருக்கும்!

நிரூ: எனக்கு Yellow Colour தவளையைப் பார்க்கணும் டாடி... கூட்டிட்டுப் போயி காட்டுங்க... ப்ளீஸ்!

அப்பா: (குழப்பமாய்) Yellow Colour தவளையா? அப்படி ஒண்ணு கிடையாதும்மா...

நிரூ: போங்க டாடி..! பொய் சொல்றீங்க... (டி.வி.யைக் காட்டி) அந்த அங்கிள் ஆன்ட்டியப் பாத்து, ‘அந்தி மஞ்‌சள் நிறத் தவளை’ன்னு பாட்டு பாடிட்டிருக்கார். ஐயாங்... எனக்கு உடனே மஞ்சள் நிறத் தவளையப் பாத்தாகணும் டாடி... காட்டுங்க...!

அப்பா: அவ்வ்வ்வ்வ்வவ்!

*********************************************************

                                                             சம்பவம் : 2

ம்மா, குட்டி நிரஞ்சனாவை அருகில் வைத்துக் கொண்டு பூஜையறையில் பூஜையை ஆரம்பிக்கிறாள். டேப்பில் கந்தசஷ்டி கவசத்தைப் போட்டுவிட்டு...

அம்மா: நிரூ செல்லம்! முருகக் கடவுளைப் பத்தினது இந்தப் பாட்டு. நல்லாக் கவனிச்சுக் கேளு. முருகன் எவ்வளவு பெரியவர்னு தெரியும். சரியா...?

நிரூ: சரிம்மா... (உன்னிப்பாக பாடலைக் கவனிக்க ஆரம்பிக்கிறாள்.) சற்று நேரத்தில் பூஜையை முடித்து விட்டு...

அம்மா: நிரூ... கந்தசஷ்டி கவசம் கேட்டியா? உனக்கு என்ன புரிஞ்சுது?

நிரூ: (அருகில் படுத்துக்கிடந்த கைக்குழந்தையான தங்கையைக் காட்டி) இவளுககு நான் நிறைய ஹெல்ப் பண்ணனும்னு புரிஞ்சுக்கிட்டேம்மா...

அம்மா: (குழப்பமாக) என்னடி சொல்ற நீ? கந்தசஷ்டி கவசத்துக்கும், தங்கச்சிக்கு ஹெல்ப் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்?

நிரூ: போம்மா, உனக்கு ஒண்ணுமே தெரியல... ‘சிஸ்டருக்கு உதவும் செங்கதிர் வேலா’ன்னு பாடினாங்களே... முருகனே சிஸ்டருக்கு உதவறார்ன்னா... நான் உதவ வேண்டாமா?

அம்மா: ங்ங்ங்ங்ங்ஙே...!

*********************************************************

                                                                  சம்பவம் : 3

10ம் வகுப்பு படிக்கும் நிருவின் அருகில் பள்ளித் தோழி அனு அமர்ந்திருக்கிறாள்.

நிரூ: ஏய் அனு! நேத்து தமிழ் மிஸ் திருக்குறள் பத்தி சொந்தமா யோசிச்சு ஒரு கட்டுரை எழுதிட்டு வரச் சொன்னாங்களே. எழுதினியாடி.

அனு: எழுதிட்டேன். படிச்சுப் பாருடி... (நோட்டை நிரூவிடம் தந்துவிட்டு) நீ என்ன எழுதியிருக்க... குடு பாப்போம்... (நிரூவின் நோட்டை வாங்கிப் புரட்டுகிறாள்.)

நிரூ: ம்... பரவால்லடி. நல்லாவே எழுதியிருக்க... நான் எழுதினது எப்படி இருக்கு?

அனு: என்னுதை விட நல்லாவே எழுதியிருக்க... அதுசரி நிரூ... உனக்கு இப்பவே கல்யாண ஆசை வந்துடுச்சா? நான் வேணா உன் மம்மி கிட்ட சொல்லட்டுமா, உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கச் ‌சொல்லி...

நிரூ: (குழப்ப முகத்துடன்) என்னடி உளர்ற? நான் எவ்வளவோ படிக்கணும்னு ப்ளான் வெச்சிருக்கேன். என்னைப் போய் இப்பவே கல்யாணம் பண்ணிக்கச் சொல்றே...?

அனு: இல்லடி... ‘அறம் வலியுறுத்தல்’ங்கற அதிகாரத்துல ஒரு குறளை ரெஃபர் பண்ணி எழுதும் போது, ‘அத்தான் வருவதே இன்பம்’ன்னுல்ல எழுதியிருக்கியே...

நிரூ: (நோட்டைப் பார்த்து) ஸ்பெல்லிங் மிஸ்டேக்டி! 'அறத்தான் வருதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல்'ன்னு வந்திருக்கணும். அவ்வ்வவ்வ்வ்!

*********************************************************

நோ... நோ...நிரூவோட புத்திசாலித்தனத்து மேல பொறாமைப்பட்டு தக்காளி, அழுகின முட்டை எல்லாம் கைல எடுக்கக் கூடாது.... எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம், சரியா? நல்ல புள்ளையா இப்பப் ‌போயிட்டு என்னோட அடுத்த பதிவுக்கும் வந்துடுங்க. அது போதும்...!

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

50 comments:

  1. ரொம்ப இயல்பா எழுதி இருக்கீங்க. இதெல்லாம் நீங்க சீனா வயசுல பண்ணின குறும்பு தானா ? இல்ல பண்ண நினைச்சத பதிவா எழுதி இருக்கீங்களா. எது எப்படியோ பதிவு அருமை

    ReplyDelete
    Replies
    1. சேச்சே... நிரூ பொய் சொல்ல மாட்டா. நடந்ததை ‘கொஞ்ச்ச்சம்’ மசாலா சேர்த்துச் சொல்வா. அம்புட்டுதேன்! அருமைன்ற வார்த்தையால எனக்கு சக்தி கொடுத்த உங்களுக்கு My Heartful Thanks Brother!

      Delete
  2. ஜயோ நிரூ நீங்க எவ்வளவு பெரிய அறிவாளி. என் சின் வயசு குறும்க சொன்னா உலகம் தாங்காது. சூப்பரா எழுதியிருக்கீங்க நிரூ

    ReplyDelete
    Replies
    1. உலகம் தாங்காதா... அவ்வளவு சேட்டைக்காரியா நீங்க எஸ்தர்? அவசியம் எழுதணும் எஸ்தர். சின்னப் புள்ளைங்க என்ன சேட்டை பண்ணாலும் எல்லாரும் ரசிப்பாங்கதானே... நான் நல்லா எழுதிருக்கேன்னு சொன்னதுக்கு Many Many Thanks!

      Delete
  3. //அந்த அங்கிள் ஆன்ட்டியப் பாத்து, ‘அந்தி மஞ்‌சள் நிறத் தவளை’ன்னு பாட்டு பாடிட்டிருக்கார். ஐயாங்... எனக்கு உடனே மஞ்சள் நிறத் தவளையப் பாத்தாகணும் டாடி... காட்டுங்க...!
    //

    நீங்க உலகமகா புத்திசாலிங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... என் புத்திசாலித்தனத்த வியந்து பாராட்டின உங்களுக்கு... Many many Thanks!

      Delete
  4. எப்படி இப்படி ???? பிறக்கும் போதேவா ?

    ReplyDelete
    Replies
    1. பின்ன...? சைல்ட் பிராஜிடியாச்சே நிரூ... ஹி... ஹி...

      Delete
  5. சுவையோ சுவை! மஞ்சள் நிறத் தவளை, சிஸ்டருக்குதவும், அத்தான் வருவதே இன்பம் - முச்சுவையும் உணர்ந்தேன். :)

    வாழ்த்துகள் நிரஞ்சனா.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைங்க புரியாம பண்ற சேட்டைங்களும், அடம் புடிக்கிறதும் தனி அழகுதானே! வீட்ல உள்ளவங்க சின்ன வயசுல நீ அப்டி இருந்த, இப்படிப் பண்ணினன்னு சொல்லும் போது பல சமயங்கள்ல என்னை நானே ரசிச்சிருக்கேன். இப்ப நீங்களும் ரசிச்சு வாழ்த்து சொல்லியிருக்கீங்க. My Heartful Thanks to you Sir!

      Delete
  6. நிரஞ்சனா அருமையான பதிவு. சின்னக் குறும்பு. ரசித்தேன். தொடரட்டும் உமது பணி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்களை ஆசிகளாக எடுத்துக் கொள்கிறேன். Many Thanks to You!

      Delete
  7. நிரூ மா என்னால தாங்க முடியல சிரிச்சி சிரிச்சி நான் ஒரு வழி ஆகிட்டேன் தொடரட்டும் ....

    ReplyDelete
    Replies
    1. Really? அவ்வளவு ரசிச்சுச் சிரிச்சீங்களா சசிக்கா? My Heartful Thanks to you for your encouraging comment.

      Delete
  8. ஆகா....என்ன ஒரு புத்திசாலித்தனம்.உங்ககிட்ட நிறையப் படிக்க இருக்கு நிரஞ்சனா !

    ReplyDelete
    Replies
    1. My Dear Kavithayini Akka! உங்க கிட்ட, நீங்கன்னு சொல்றதைல்லாம் முதல்ல நிறுத்துங்க. அப்புறம் நிரூவுக்கு கோபம் வரும், ஆமா! என்னை வாழ்த்தின உங்களுக்கு Thanks with full of my heart!

      Delete
    2. எனக்கு நீன்னு கதைக்க வாறதில்லையே நிரஞ்சனாக்குட்டி.வீட்லயும் சின்னவங்களை கோவம் வந்தா மட்டுமே நீ போட்டுத் திட்டுவேன்.என்ன செய்ய நான் !

      Delete
    3. its okay! உங்களுக்கு எப்படி வசதியோ அப்படியே அழையுங்க. நான் கம்ப்பெல் பண்ணவே மாட்டேன். சரியா..?

      Delete
  9. குறும்புக்காரி நிரஞ்சனா! அத்தான் வருவதே இன்பம், மஞ்சள் நிறத் தவளை, சிஸ்டருக்கு உதவும், சூப்பர்...

    எப்படி??????????

    ReplyDelete
    Replies
    1. என் குறும்பை ரசித்து நீங்கள் வாழ்த்தியிருப்பது எனக்கு 100 Elephant பலம் கிடைச்ச மாதிரி இருக்கு. Many Many Thanks to you!

      Delete
  10. My Dear S.S.! எங்க இருக்கீங்க... நிரூ கூப்புடறது கேக்கலியா? நீங்க வரலைன்னா... அழுதுருவேன்! சீக்கிரம் வாங்க...

    ReplyDelete
  11. அப்பா டி.வி.யில் ‘சன் மியூசிக்’ வைத்து, மீனாவை ஊஞ்சல் ஆட்டி, நதியாவைப் பார்த்து காதல் பாட்டுப் பாடும் ‘ராஜகுமாரன்’ பிரபுவை ரசித்துக் கொண்டிருக்கிறார். குட்டி நிரஞ்சனா அருகில் வருகிறாள்.
    >>
    உன்னைய மாதிரி கோக்கு மாக்கா அடம்புடிக்கும்ன்னுதான் என் புள்ளைங்களை பாட்டு வரிகளே புரியாத வொய் திஸ் கொலைவெறி பாட்டை கேட்க விட்டுட்டேன்

    ReplyDelete
    Replies
    1. உங்க புள்ளைங்க அப்ப என்னைவிட புத்திசாலியா இருக்கும்னு நல்லாவே புரிஞ்சிட்டுதுககா...

      Delete
  12. நல்ல புள்ளையா இப்பப் ‌போயிட்டு என்னோட அடுத்த பதிவுக்கும் வந்துடுங்க. அது போதும்...!
    >>
    இப்ப வந்ததுக்கே ஏண்டா வந்தோம்ன்னு நொந்துக்கிட்டு இருக்கேன். இதுல அடுத்த பதிவுக்கு வேற வரனுமா? ஏன் தாயி நான் நல்லா இருக்குறது உனக்கு புடிக்கலையா?!

    ReplyDelete
    Replies
    1. ஹய்... இந்த வார்த்தைய நான் சுட்டதே உங்க பதிவுலருந்துதான். இப்ப சமத்து மாதிரி பேசறீங்களாக்கும்... உங்க பதி‌வெல்லாம் படிச்சுட்டு நானே நல்லாருக்கும் போது என் பதிவுக்கு வந்தா நீங்க சூப்பரா அறிவுஜீவியாயிடுவீங்க. Ha... Ha...

      Delete
  13. ங்ங்ங்ங்ங்ஙே...!

    அவ்வ்வ்வ்வ்வவ்!

    நல்லா கத்துக்கிட்டீங்க நீரூ.

    // எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம், சரியா? நல்ல புள்ளையா இப்பப் ‌போயிட்டு என்னோட அடுத்த பதிவுக்கும் வந்துடுங்க. அது போதும்...!// எங்கேயோ போய்ட்டீங்கப்பா.:)

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... நான் தேறிட்டேன்னு சொல்றீங்க. அப்படித்தானே S.S. உங்களுக்கு என்னோட Heartful Thanks!

      Delete
  14. My Dear S.S.! எங்க இருக்கீங்க... நிரூ கூப்புடறது கேக்கலியா? நீங்க வரலைன்னா... அழுதுருவேன்! சீக்கிரம் வாங்க.//என்னையா கூப்பீட்டீங்க நிரூ.........?

    அப்படீன்னா வந்துட்டேன்.கொஞ்சம் பிஸி அதான்...

    ReplyDelete
    Replies
    1. என்னங்க இது...? உங்களைத் தவிர வேற யாரை நான் S.S.ன்னு சொல்லுவேன். அப்புறம்... நீங்க, வாங்கன்றதை கட் பண்ணுங்கன்னு போன முறையே சொன்னேன்ல...? Pl... Call Me நீ... வா...

      Delete
  15. அறத்தான் வருதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல்'ன்னு வந்திருக்கணும். அவ்வ்வவ்வ்வ்!//ஹா ஹா ஹா..சிரித்து சிரித்து முடீல....

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்து நீங்க சொல்ற இந்த வார்த்தைகளுக்குத்தான் Lollypop க்கு ஏங்கற குட்டி நிரூ மாதிரி ஏங்கிட்டிருந்தேன். Now, I'm Very Very Happy!

      Delete
  16. நிரூ..கல்லூரியில் படிக்கும் என் பையன்களையும் நான் வா போ என்று அழைப்பதில்லை.வாங்க போங்க தான்.அப்படித்தான் நிரூவையும்..என் பசங்களை கோபம் வந்தால்த்தான் வா போ என்பதெல்லாம்...ஆனால் நீரூ குட்டி மேல் எனக்கு கோபமே வராது dont worry!

    ReplyDelete
    Replies
    1. Okay! நிரூ கிட்ட நீங்க Comfortableஆ பழகணும்னுதான் அப்படிச் சொன்னேன். உங்களுக்கு இப்படி்த்தான் பழக்கம்னா நிரூவுக்கும் ஓ.கே. தான். Niru Kutty Unga Dearன்னு நீங்க சொன்னதே எனக்குப் போதும்! I'm Happy!

      Delete
  17. என்ன அறிவு! என்ன அறிவு! ஆமா மஞ்சள் தவளை பார்த்தீங்களா......

    ReplyDelete
    Replies
    1. நிரஞ்சனா,
      எதையும் நுணுக்கமாக சிந்திப்பவர்களுக்கே நகைச்சுவை உணர்வு வரும். தங்களுக்கு அது அதிகமாகவே இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் அந்த உணர்வை மற்றவர்களுக்கும் எப்படியோ ஊட்டி விடுகிறீர்கள். பிணியேதும் இன்றித் தங்கள் பணி, இன்னும் துணிவோடு தொடர்ந்து, உலக நகைச்சுவையாளர்களின் அணியில் தாங்கள் இடம் பெற்று, எத்தனையோ நெஞ்சங்களின் கவலைகளைத் தாங்கள் தணிக்க, மகிழ்ச்சியுணர்வை அவர்கள் உள்ளங்களில் நீங்கள் திணிக்க, வாழ்த்துக்கள் !

      Delete
    2. இல்லீங்க Friend! டாடி அப்ப சாக்லெட்டோ, ஐஸ்க்ரீமோ ஏதோ குடுத்து சமாதானம் பண்ணிட்டார். அப்புறம் காட்டவே இல்லை. உங்களுக்கு என்னோட Heartful Thanks!

      Delete
    3. குருச்சந்திரன் ஸார்...! உங்களின் பாராட்டு நிஜமாவே எனக்கு ரொம்ப ரொம்ப புத்துணர்ச்சியைத் தந்திருக்கு. ரசிக்கும்படியா இன்னும் நிறைய எழுதணும்கற ஒரு FORCE கூட எனக்குள்ள வந்துட்டதா FEEL பண்றேன். Many Many Many Thanks to You!

      Delete
  18. நிரஞ்சனா குட்டி சகோதரி ராஜிகிட்ட மல்லு கட்டாதே, அவங்க மதுரையைஆளும் மீனாட்சி ஆக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மீனாட்சி கைல இருக்கற கிளி ஆச்சுதே நிரூ. அதனால திட்ட மாட்டாங்க Friend! வருகை தந்து உற்சாகம் தந்த உங்களுக்கு My Heartful Thanks!

      Delete
  19. சிறுவயதிலேயே
    வார்த்தைகளை சரியாக
    கவ்வியிருக்கிறீர்கள் போங்கள்...

    சின்னவயது சமத்து விஷயங்கள் எல்லாம்
    அருமையா தொடுத்து இருக்கீங்க ..
    நல்லா இருக்குது..

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்குன்னு சொல்லி எனக்கு Energy தந்த கவிஞர் அண்ணாவுக்கு என்னுடைய Heartful Thanks!

      Delete
  20. Replies
    1. My Heartful thanks to you for your Valuable Comment friend!

      Delete
  21. Replies
    1. குட்டி நிரூவை ரசிச்ச உங்களுக்கு... Many Many Thanks!

      Delete
  22. நிரஞ்சனா...
    உங்களுக்கு எப்படி இப்படி யெல்லாம் தோணுது...?

    ReplyDelete
    Replies
    1. அதுவா வருதுங்க... சின்னப் புள்ளைலருந்தே கடிச்சு கடிச்சுப் பழக்கம்ல! Ha... Ha.. My Heartful Thanks to you!

      Delete
  23. சிஸ்டருக்கு உதவும் செந்தமிழ்வேலோன்:)
    தூள் நிரூ!!!!!

    ReplyDelete
    Replies
    1. படிச்சு ரசிச்சு தாராளமாப் பாராட்டற உங்களுக்கு எப்படி Thanks சொல்றதுன்னே புரியாம குழம்பிட்டா நிரூ...! இந்த Encouragement எப்பவும் வேணும்னு கேட்டுக்கிட்டு, என்னோட Many Many Thanks to you!

      Delete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!