Pages

Ads 468x60px

5 March 2012

நமது வருங்காலத் தூண்கள்?!!!!


நேத்து நான் டிவியில நேஷனல் ஜ்யாக்ரபிக் பாத்துட்டிருந்தப்ப ஜெயா டி.வி.ல ஜாக்பாட் பாட்தே தீரணும்னு மம்மி வந்து ரிமோட்டைப் பிடுங்கிக்கிட்டாங்க. வழக்கமா இந்த மாதிரி அவங்க பாக்க ஆரம்பிச்சா நான் நகர்ந்து வேற ஏதாவது படிக்கறதுக்குப் போயிடுவேன். நேத்திக்கு சென்னையிலருந்தும், திருவள்ளூர்லருந்தும் 10ம் கிளாஸ் படிக்கிற பசங்க ரெண்டு டீமா வந்து கலந்துக்கிட்டாங்கன்றதால நானும் மம்மி கூடவே பேசிக்கிட்டே பாக்க ஆரம்பிச்சேன். ஏன்தான் பாத்துத் தொலைச்சேன்னு ஆயிடுச்சு.

வந்திருந்த பசங்கள்ல ஒரு பொண்ணு பாட்டுப் பாடிச்சு. எதிர் டீம்ல ஒரு பொண்ணு நல்லாவே Dance ஆடிச்சு. கேள்வி - பதில் ரவுண்டு வந்தப்ப ஒரு வீடியோவைப் போட்டுக் காட்டினாங்க. காந்தியடிகள் பிரார்த்தனைக் கூடத்துக்கு நடந்து வர்றப்ப, அவரை வழியில வணங்கற கோட்ஸே சட்டுன்னு தன் பாக்கெட்லருந்து Gun எடுத்து மகாத்மாவை சுடற காட்சி அது. போட்டுக் காட்டிட்டு, ‘‘இந்த கிளிப்பிங்ல மகாத்மா காந்தி சுடப்படற காட்சியைப் பாத்தீங்க. மகாத்மாவைச் சுட்டவனோட பேர் என்ன?’’ன்னு சிம்ரன் கேள்வி கேட்டாங்க.


அதுக்கு ‘ஏ’ டீம்ல கேப்டனா இருக்கற பொண்ணு ‘முசோலினி’ன்னு சொல்லிச்சு. நான் அதிர்ந்து போயிட்டேன். Display Board Noன்னு ‌சொன்னதால (பின்ன.... அதுவுமா முட்டாளா இருக்கும்?) எதிர் டீம் கிட்ட இதே கேள்வியைக் கேட்டாங்க சிம்ரன். அங்க இருந்த பசங்களுக்கும் இதுக்கு பதில் தெரியல. ‘‘இதுங்கல்லாம் பள்ளிக் கூடத்துல என்னதான் படிச்சுதுகளோ’’ என்று என் மனதில் தோணிச்சு. அதே நேரம், ‘‘ஸ்கூல்ல உங்களுக்கு என்னதான் சொல்லித் தந்தாங்க?’’ன்னு சரியாக் கேட்டாங்க சிம்ரன். அந்த நாலு பிள்ளைகளில ஒருத்தன் தன் அம்மா ஹிஸ்டரி டீச்சர் அப்படின்னு வேற சொல்லி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அந்த டீச்சரையும் கை காட்டினான்.

பத்தாம் வகுப்பு வரை வந்து விட்ட மாணவச் செல்வங்களுக்கு மகாத்மா காந்தியின் வரலாறு சரியாத் தெரியலீங்க... My God! காந்திங்கற  தனிமனுஷனோட வரலாறா அது? நம்ம பாரத தேசத்தோட வரலாறும் அதுல கலந்திருக்கு இல்லையா? இதைக்கூட சரியாப் படிக்காம பத்தாம் கிளாஸ் வரைக்கும் இந்தப் பசங்க பாஸாகி வந்திருக்குன்னா... எங்க தப்பு இருக்கு? நம்ம Education System சரியா இல்லையா? இந்தத் தூண்களா வருங்காலத்துல பாரதத்தைத் தாங்கிப் பிடிக்கப் போகுது?

-இப்படி ஏராளமான கேள்விகள் எனக்குள்ள ஓடிக்கிட்டிருந்துச்சு. வெறுமனே பாழாப் போற கம்ப்யூட்டர் படிப்பை படிச்சு ஏதாவதொரு ஐ.டி. கம்பெனில இருபதாயிரம், நாப்பதாயிரம்னு சம்பளம் வாங்கிட்டு செட்டிலானா போதும்னு பெத்தவங்களோட எண்ணமா இருக்குமோ? அதனாலதான் இப்படி பசங்க, ‘ஹிட்லருக்கு சித்தப்பா காந்தி’ன்னு சொல்ற ரேஞ்சுல இருக்குதுங்களா? பேரண்ட்ஸ் தங்களோட பிள்ளைங்க என்னதான் படிக்குதுன்னு கவனிக்க மாட்டாங்களா...?

எங்க போயிட்டிருக்கோம் நாம?

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

26 comments:

  1. வருத்தபட வேண்டிய விசயம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... ரொம்பவே Feel பண்ண வேண்டிய விஷயமும் மாற்றப்பட வேண்டிய விஷயமும் கூட. முதல் முதலா வந்து என்னை கருத்திட்டு Encourage பண்ணின உங்களுக்கு My hearful Thanks.

      Delete
  2. starting லையே பட்டைய கிளப்புறீங்க. நல்ல பதிவு.

    எல்லாரும் யோசிக்கனும்.

    சம்பாதிப்பதற்காக மட்டும் படிக்க கூடாது, அறிவ வளர்க்கறதுக்கும் படிக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு Glucose Energy Tonic குடிச்ச மாதிரி இருக்கு உங்களோட பாராட்டு. நம்ம கல்வி முறையை மாத்தறதப் பத்தி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நான் நினைக்கிறேன். உங்க கருத்தினால என்னை Encourage பண்ணின உங்களுக்கு Many Many Thanks Sir.

      Delete
  3. நம் கல்விமுறை சரியில்லை என்பதுதான் என் எண்ணம். ஆனால் அதற்காக காந்தியை சுட்டது யார் என்று கூட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தெரியாமல் இருப்பது வருத்தப்பட வைக்கிறது. :(

    ஒரே ஒரு சஜஷன் - பத்திகளை left alingmentல் வைத்தால் பதிவின் லுக் இன்னும் பெட்டராக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நிகழ்ச்சியப் பாத்தப்ப எதையும் Easyயா எடுத்துக்கற எனக்கோ கோபம் பொத்துக்கிட்டு வந்ததுங்க. நேர்ல அந்தப் பசங்க கிடைச்சிருந்தாங்கன்னா அறைஞ்சிருப்பேன். என் Blog நல்லா இருக்கணும்கறதுக்காக சஜஷன் சொல்றீங்க... ரொம்ப ரொம்ப Thanks! நிச்சயம் அடுத்த பதிவுலருந்து மாத்திடறேன் Friend! Ok?

      Delete
  4. வருங்காலத்தூண்கள் செல்லரிச்சுப் போயிட்டு இருக்குது...:(((

    ReplyDelete
    Replies
    1. Yes! வருங்காலத் தூண்களை செல்லரிக்காம தடுக்கறதுக்கு ‌ஏதாவது செய்யணும்... என்ன செய்யணும்னு சொல்லத்தான் என் சிற்றறிவுக்கு எட்டலைங்கறது வேதனையா இருக்குங்க. என்னை மதிச்சு வந்து கருத்திட்ட உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  5. எதிர்பார்க்காம நீங்க என்க்குத் தந்த இந்த Sweet Surprise பார்த்தேன். எனக்கு எப்படி ந்ன்றி சொல்றதுன்னே தெரியல... Many Thanks to you.

    ReplyDelete
  6. உங்கள் பதிவில் உள்ள நியாயமான ஆதங்கம் புரிகிறது. இந்த நிலை மாறினால்தான் நல்லது

    ReplyDelete
    Replies
    1. மாறணும்... மாற வேண்டும் என எதிர்பார்க்கலாம். What Else todo? உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஸார்!

      Delete
  7. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  8. உங்கள் பதிப்பு மிக அருமை.. நீங்கள் பகிர்ந்து கொள்ளும் முறை மிக யதார்த்தமாக உள்ளது..

    ReplyDelete
    Replies
    1. ‌உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு சிஸ்டர்! My Heartful Thanks to You!

      Delete
  9. Yes madam, you are right, the one thing which stopped me from watching "manadu mayiladu" is, apart from the filthy dance movements of the participants, conveying the comments in English with lot of mistakes by the judges.

    ReplyDelete
    Replies
    1. உங்களோட அனுபவம் தந்த கருத்தைப் பகிர்ந்துக்கிட்டதுக்கும் என் கருத்தை ஆமோதித்ததற்கும் உங்களுக்கு Many Many Thanks Sir!

      Delete
  10. Replies
    1. நிரஞ்சனா,
      மகாத்மா காந்தியைப் பற்றி எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க, அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ஏன் அவரைச் சுட்டுக் கொன்றவனைப் பற்றிக் கேட்கவேண்டும் ? இது தவறில்லையா ? மாறாக, மோகன்தாஸ் என்ற சாதாரண மனிதன், பின்னாளில் மகாத்மாவாக உயரத் தூண்டுகோலாக இருந்தது எது ? , எந்த ஒன்றைப் பார்த்து அவர் தன் வாழ்வில் பொய்யே பேசக்கூடாது என முடிவெடுத்தார் ? என்பது போன்ற ஆக்கப்பூர்வமான கேள்வியைக் கேட்டிருக்கலாமே!

      நம் குழந்தைகளுக்கு வரலாறு தெரியவில்லையே என்ற தங்கள் ஆதங்கம் புரிகிறது !

      Delete
    2. பாஸிட்டிவ் திங்கிங் உங்களுக்கு குரு ஸார். அப்படிக் கேட்டிருந்தால் இன்னும நல்லதுதான். ஆனால் காந்தியின் வாழ்க்கைச் சரித்திரம் தெரியாமல் ஒரு தலைமுறை வளர்வதா என்ற ஆதங்கமும் கோபமும்தான் எனக்கு... ஆமோதித்து கருத்தளித்த தங்களுக்கு... Thanks என்று சும்மா வார்த்தையில் சொல்லாமல் I Really feel it!

      Delete
  11. நீங்கள் சூர்யாவின் நீங்களும் வெல்லலாம் பாருங்களேன். சிலசமயம் இரண்டாவது கேள்விக்கே திணறுகிறவர்கள் இருக்கிறார்கள்.

    ஆனால் புத்திசாலியான் 67 வயது தலைமை ஆசிரியை வந்து 12 லட்சம் ஜெயித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்ததும்மா.

    ReplyDelete
  12. உண்மையான விடயம், இங்கே இலங்கையிலும், கல்வி முறை, படு கேவலமாக தான் இருக்கிறது.

    ReplyDelete
  13. சென்ற காலத் தேசத் தலைவர்களை விட்டு நிகழ்கால, எதிர் காலத் தேசத்தலைவர்களான நம்ம திரைப்பட நடிகர், நடிகைகள் பற்றிக் கேள்வி கேட்டிருந்தால், டாண் , டாண் எனச் சரியான பதில் வந்திருக்கும்.

    ReplyDelete
  14. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_3.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  15. வணக்கம் சொந்தமே!வருத்தமான உண்மை இது!!!:( :(...
    வாழ்த்துக்கள் இப்பதிவிற்காய்.சந்திப்போம் சொந்தமே!

    ReplyDelete
  16. கரெக்ட்...இன்றைய மாணவர்களும் ஆசிரியர்களும் அப்படித்தான் இருக்காங்க..

    நீங்களும் பதறிப் போய் ' எங்க போயிகிட்டிருக்கோம்?' அப்படின்னு விக்கிச்சுப் போய் பதிவுல பதிஞ்சுட்டிங்க..

    இதயெல்லாம் கண்டிப்பா மாத்தணும்.. ஆனா, யாரு வந்து மாத்துவாங்க? யாராவது தேவகுமாரன் வந்து மாத்துவாங்கன்னு எல்லோரும் வெயிட் பண்ணிகிட்டிருந்தா யாரு வருவாங்க?

    தனித்தனியா நாம எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம்.

    உங்க வீட்டுல குழந்தைங்க இருந்தா, அவங்களைப் பேப்பர் படிக்கச்சொல்லுங்க..நூலகத்தில இருந்து வரலாறு எடுத்துப் படிக்கச் சொல்லுங்க..உங்க சொந்தக் காரப் பசங்களைப் படிக்கச் சொல்லுங்க..தமிழ் நூல்களைப் படிச்சக் சொல்லுங்க...

    நம்ம நிலையை நாமதான் மாத்தணும்..யாரும் வந்து மாத்த மாட்டாங்க !

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!