Pages

Ads 468x60px

21 April 2012

எலி பிடிக்க எலிய வழி!

‘எலி’ங்கற வார்த்தையை யாராவது சொன்னா, மிஸ்டர் ரங்கமணிக்கு ‘கிலி’ பிடித்து விடும். ஏன்னா... அவர் அடைஞ்ச அனுபவம் அப்படி. போன வாரத்துல ஒரு நாள்...

‘‘என்னங்க... வீட்டுல ஒரு எலி நடமாடிக்கிட்டிருக்கு. அதோட தொல்லை தாங்க முடியலை. அதை ஒழிக்க வழி ‌சொல்லுங்களேன்...’’ என்றாள் தங்கமணி.

‘‘இதுக்கேன்டி மண்டைய .உடைச்சுக்கற...? பொறி வாங்கி வெச்சுட்டா எலி மாட்டிக்கும்...’’ என்றார் ரங்கமணி.

‘‘அது என்ன மீனுன்னு நினைச்சீங்களா, பொரி வெச்சா கடிச்சு மாட்டிக்கறதுக்கு?’’

‘‘நாசமாப் போச்சு... பொரி இல்லடி... பொறி! எலிப்பொறியை வாங்கி ‌அது, அடிக்கடி நடமாடற இடத்துல வையின்னு சொன்னேன்’’ அப்படின்னார், அதோட விபரீத விளைவை உணராதவராக.

டுத்த தினம் குளித்து விட்டு, தலை சீவுவதற்காக ட்ரஸ்ஸிங் டேபிள் அருகில் வந்தவர், ‘ஆ’வென்று பெரிதாக அலறினார். காலை உதறிக் கொண்டு, புதுவிதமான பரதநாட்டியம் ஆடினார். காலுக்குக் கீழ் கட்டை இருக்க, காலுக்கு மேல்புறத்தை கம்பி அழுத்தமாக கவ்விக் கொண்டிருக்க, எலிப்பொறி அவர் காலைக் கவ்வி இருந்தது. பதறிப் போய் ஓடி வந்த தங்கமணி அதை அவர் காலிலிருந்து விடுவித்தாள்.

‘‘அடிப்பாவி! இதை வெக்கறதுக்கு உனக்கு வேற இடம் கிடைக்கலியாடி?’’ என்றார் வே‌தனைக் கண்ணீருடன். ‘‘நீங்கதானே அது நடமாடற இடத்துல வெக்கச் சொன்னீங்க. அது ட்ரஸ்ஸிங் டேபிள் பக்கம் ஓடறதை ரெண்டு மூணு தடவை பார்த்தேன். அதான் அங்க வெச்சேன். வாங்க, உடனே டாக்டர்கிட்டப் போகலாம்...’’ அப்படின்னா தங்கமணி.

ட்டோவுல போயி டாக்டரைப் பார்த்து காலி்ல் மருந்து வைத்து கட்டுப் போட்டுக் கொண்டு வந்ததும், ‘‘ஆபீஸ் கிளம்பணும். லீவில்லைடி.’’ என்றார் ரங்கமணி. தன் காலைப் பார்த்து வேதனைப் பெருமூச்சு விட்டபடி, ‘‘கொழுக்கட்டை பணணித் தான்னு ஒரு வாரமா கேட்டுட்டிருந்தேன். இப்படி என் கா‌லை கொழுக்கட்டை மாதிரி ஆக்கிட்டியேடி’’ என்றபடி டிரெஸ் பண்ணிக்கிட்டு கிளம்பினார்.

அடிபட்ட காலை தரையில் ஊன்றாமல் மற்றொரு காலால் அவர் துள்ளித் துள்ளிக் குதித்து பைக்கை நோக்கிப் போக, ‘‘ஹை! நாங்க ஓட்டாஞ்சில்லு எறிஞ்சு பாண்டி விளையாடுவோம் சின்ன வயசுல. அது மாதிரியே அழகாத் தாவறீங்களே...’’ என்றாள் தங்கமணி. பைக்கை நெருங்கி விட்டிருந்த அவர் வெறி கொண்டு திரும்ப, அவள் வீட்டினுள் எஸ்கேப்!

மாலை வீட்டுக்கு வரும்போது வேறொரு எலிப்பொறியை வாங்கிட்டு வந்தார் அவர். ‘‘அடியே... இதுல இங்க கம்பி இருக்கு பாத்தியா... இதுல தின்பண்டத்தை வெச்சுட்டு இப்படி இழுத்து விட்டுட்டயின்னா, எலி கடிச்சதும் கூண்டு மூடிக்கும். நாம அதை வீட்டுக்கு வெளியில தூக்கிப் போட்டுரலாம்டி’’ என்றார்.

‘‘சரிங்க... நான் இப்பவே அதிரசம் செய்யறேன்’’ என்றாள் அவள்.

‘‘எலி விழுந்தப்புறமா ஸ்வீட் செஞ்சு கொண்டாடலாம். இப்பவே எதுக்குடி பண்ற?’’ என்றார் அப்பாவி ரங்கமணி.

‘‘ஆசையப் பாரு... ஸ்வீட் உங்களுக்கில்ல... கூண்டுல வெக்க... எலிக்கு!’’ என்று அவள் சொல்ல, அவர் முகம் ஆயிரம் கோணலானது. அதிரசம் செய்து கூண்டில் வைத்தாள் தங்கமணி. அன்று எலி விழவில்லை. அடுத்த நாள் போளி செய்து வைத்தாள். அப்போதும் எலி கூண்டில் விழவில்லை.

‘‘என்னங்க இது... எலி மாட்டவே மாட்டேங்குது?’’

‘‘அந்த எலிக்கு ஒருவேளை டயபடிஸ் இருக்கும்னு நினைக்கிறேன்... எதுக்கும் அதுகிட்ட விசாரிச்சுட்டு நீ ஸ்வீட் வெச்சிருக்கணும்’’ என்றார் ரங்கமணி. 

அடுத்த கணம் அவரை நோக்கிப் பறந்து வந்த பூரிக் கட்டையை அவர் கேட்ச் பிடித்த அழகை செலக்ஷன் டீம் பார்த்திருந்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு செலக்ட் ஆகியிருப்பார் ரங்கமணி.

‘‘கோபிச்சுக்காதடி. நான் சொல்றதைக் கேளு. மசால் வடையைப் பண்ணி அதுக்குள்ள வை. கண்டிப்பா எலி அதைக் கடிச்சுட்டு மாட்டிக்கும்...’’ என்றார். ‘‘மசால்வடை ‌பண்ணிக் குடுன்னு ரெண்டு நாளா சொல்லிட்டிருந்தீங்க. எலியைச் சாக்கு வெச்சு சாப்பிடலாம்னு ப்ளானாக்கும்... சரி, அதையும் செஞ்சு பாக்கறேன்...’’ என்றாள் அலுப்பாக தங்கமணி.

ரவு. கட்டிலை யாரோ ஆட்டுவது போலிருந்தது. கட்டிலிலிருந்து உருண்டு கீழே விழுந்ததில் அலறிக் கண் விழித்தார் ரங்கமணி. சில கணம் கழித்துத்தான் நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது புரிந்தது. அத்தனைக்கும் கண் விழிக்காத தங்கமணி, எலிப் பொறியின் கதவு ‘டப்’பென்று மூடிக் கொண்ட சத்தத்திற்கு கண் விழித்தாள்.

‘‘என்னங்க... விழுந்துடுச்சு...  விழுந்துடுச்சு...’’ என்று அலறினாள்.

‘‘அறிவு கெட்டவளே! என்னமோ பரிசுப் போட்டியில பரிசு விழுந்துடுச்சுங்கற மாதிரி கத்தறியே..! நிலநடுக்கம்டி... வா, வீட்டுக்கு வெளில ஓடலாம்....’’ என்றபடி வெளியே ஓடினார் ரங்கமணி. வாழ்க்‌கைல முதல் முறையா கணவனை பின்பற்றினா தங்கமணி. நில நடுக்கம் நின்னதுக்கப்பறம் வீட்டுக்குள்ள வந்து பார்த்தப்ப, கூண்டு மூடிக்கிட்டிருந்தது; எலி மாட்டலை.

அப்புறம்தான் தங்கமணிக்கு ஞானோதயம் ஏற்பட்டுது. ‘‘பொதுவா சமையலறை பரண்லதாங்க எலிங்க ஒளிஞ்சுக்கும்னு சொல்லுவாங்க... அதை க்ளீன் பண்ணினா மாட்டிடும்...’’ என்று அவரைப் பாடாய்ப் படுத்தி பரணில் இருக்கும் பாத்திரங்‌களை இறக்கச் சொன்னாள். எலி கீழே குதித்தால் அடிக்க கையில் ஒரு தடிக் கம்புடன் நின்றிருந்தாள் தயாராக.

ஒரு பெரிய அண்டாவை அவர் எடுக்க, எலி அதிலிருந்து அவர் தோளில் குதிக்க... அடுத்த கணம் பொடேரென்று அடித்தாள் தங்கமணி- எலியை இல்லீங்க... அவரை! அந்தப் பொல்லாத எலிதான் அவர் தோளிலிருந்து லாங் ஜம்ப் பண்ணி ஜன்னல் மேல் தாவி, அங்கருந்து ஹை ஜம்ப் பண்ணி வீட்டை விட்டு வெளில போய்டுச்சே!

தங்கமணி அதிகம் ஒண்ணும் எடையில்லங்க... 90 கிலோதான். அந்த வெயிட்டோட தடியோட ஸ்பீடும் சேர்ந்து தாக்கினதுல, 45 கிலோ எடையுள்ள ரங்கமணி... ‘‘ஐயோ, அம்மா’’ன்னு அலறிட்டு விழுந்தவர் எழுந்திருக்கவே இல்ல. அவரோட மயக்கத்தை தெளிய வெச்சு, ஆறுதல்படுத்தி, ஸாரி கேட்டு எல்லாம் ஆனப்பறம், வீட்டுல எல்லா ஜன்னல்களுக்கும் வலைக் கம்பி அடிச்சு, எலி என்ன... கொசு கூட வர முடியாதபடி பண்ணிட்டா தங்கமணி.

டுத்தநாள் ராத்திரி எலித் தொந்தரவு இல்லாம ஏ.ஸி.யப் போட்டுக்கிட்டு ரொம்பவே நிம்மதியாத் தூங்கினா தங்கமணி. ஆனா, பாவம்... ரங்கமணி தான் தூங்கவே இல்ல.ஏன்னா கேக்கறீங்க..? ஏ.ஸி. மிஷின் போடற சத்தத்தை விட நாலு மடங்கு சத்தம் தங்கமணி கிட்டருந்து வந்துக்கிட்டிருந்ததே ‘குறட்டை’ங்கற பேர்ல. அந்த எட்டாவது ஸ்வரத்தைக் கேட்டுடடிருக்கற அவரால எப்படிங்க தூங்க முடியும்?

பின்குறிப்பு : இனிய வலைத்தள நட்புகளே... உறவுகளே...! ஃபர்ஸ்ட் டைமா குட்டியா கதை எழுதலாம்னு ட்ரை பண்ணியிருக்கேன். நல்லா இருந்தது்ன்னு நினைச்சா தட்டிக் கொடுங்க... இல்லன்னாலும் ‘‘சின்னப் புள்ள தானே நிரூ, தட்டிக் கொடுத்தாதான் இனிமேயாவது நல்லா எழுதுவா’’ன்னு அப்பவும் தட்டிக் ‌கொடுங்க. ஹி... ஹி...

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

46 comments:

 1. நிரூக்குட்டி! ‘படிச்சுட்டு உங்களுக்குத் தோணறதை மறைக்காம சொல்லணும்’னு ‌நீ கேட்டதால சொல்றேன்...

  எலி’ங்கற வார்த்தையை யாராவது சொன்னா, மிஸ்டர் ரங்கமணிக்கு ‘கிலி’ பிடித்து விடும். ஏன்னா... அவர் அடைஞ்ச அனுபவம் அப்படி.

  இப்படி ஆரம்பிச்சிருக்கே. இது தப்பு. ஒண்ணு வழக்கு தமிழ்ல எழுது இல்லன்னா இலக்கண சுத்தமா எழுது. புரியலையா... ‘யாராவது சொன்னா’ அப்படின்னு வழங்கு தமிழ்ல ஆரம்பிச்சா ‘கிலி பிடிச்சுடும்’னு வழங்கு தமிழ்லயே முடிக்கணும். இல்லன்னா ‘யாராவது சொன்னால்’ அப்படின்னு இலக்கண சுத்தமா ஆரம்பிச்சு, ‘கிலி பிடித்து விடும்’னு நீ இப்ப எழுதியிருக்கற மாதிரி முடிககலாம். ரெண்டையும் போட்டுக் குழப்பிக்கிட்டேன்னா படிக்கிற சுவாரஸ்யம் குறைஞ்சிடும். இப்ப கதைய மறுபடி படிச்சுப் பாரு... பல இடங்கள்ல இந்த மாதிரி ரெண்டு நடையையும் நீ குழப்பிகிட்டிருக்கறது உனக்கே புரியும்.

  மத்தபடி... சிறுகதைன்னா ஒரு பிரச்னைல ஆரம்பிக்கணும், அது வளரணும், கடைசில தீர்வு கொடுக்கப்படணும்னு சொன்னதை நல்லா புரிஞ்சிக்கிட்டிருக்கேன்னு தெரியுது. என்கிட்ட கடன் வாங்கிட்டுப் போன நகைச்சுவை உணர்ச்சியை பத்திரமா வெச்சிருக்கேன்னும் தெரியுது. ஹி... ஹி... நம்ம பேரைக் காப்பாத்திடுவன்னு நம்பிக்கை வந்தாச்சு. ஆல் த பெஸ்ட்!

  ReplyDelete
 2. Thank you Verymuch for your Valuable Comment Uncle. அடுத்த கதை நிரூ எழுதும் போது இன்னும் பெட்டராப் பண்ணுவா... என்னது... உங்க கிட்ட கடனா வாங்கிட்டு வந்தேனா... இப்படி வேற நினைப்பிருக்கா உங்களுக்கு? அப்ப எனக்கு விழுவற கல், தக்காளி எல்லாத்தையும் உங்க ப்ளாக் பக்கம் திருப்பி விட்டுடறேன். Ha... Ha...

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரி,
  முதல் முயற்சி..
  நல்லா இருக்குது...
  நண்பர் கணேஷ் அவர்களின் கருத்து மிகச் சரி.
  ஒரே நடையில் இருந்தால் நன்றாக இருக்கும் படிக்க..

  தங்கமணி ரங்கமணி என்ற குணாதிசயங்கள் ஏற்கனவே
  நிறையப்பேர் எடுத்துக்கொண்டார்கள்... நீங்கள்
  வேறு இரு கதாபாத்திரங்களை எடுத்துக்கொள்ளுங்கள்..

  உதாரணத்திற்கு கவிஞர் மதுமதி அவர்கள் சின்ராசு மாமா, அம்மணி
  என்று எடுத்துள்ளார்... அதுபோல
  அப்போதுதான் உங்கள் பெயர் நிலைக்கும் அந்த குணாதிசயங்களை
  பார்க்கையில்...

  எழுத்து கோர்வை நல்லா இருக்குது சகோதரி..

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹஸ்பெண்ட் அண்ட ஒய்ஃப்ங்கறதுக்கு தங்கமணி ரங்கமணின்னு சொல்வாங்களேன்னு வெச்சுட்டேன். (சட்னு பேர் எதுவும் தோணலை) நீங்க சொல்ற மாதிரி இனிமே எழுதறப்ப புது கேரக்டர்களை உண்டாக்கிக்கறேன். உங்க வாழ்த்தினால I Feel Happy. Thankyou Verymuch Anna!

   Delete
 4. நிரூ செல்லம் உங்க மாமா தொந்தரவு தாங்கலை. எங்க வீட்டுலயும் எலிங்க அட்டகாசம் தாங்கலைடா. இதை சாக்கா வச்சு உங்க மாமாவுக்கும் இதுப்போல் ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுடலாமா?!

  ReplyDelete
  Replies
  1. இதப்படிச்சதும் உஷாராயிடுவாரே... சொல்லாமயே குடுத்திருக்கணும்க்கா... உங்களுக்கு நான் வேற நல்ல ஐடியா நான் தர்றேன். Okay! Tks!

   Delete
 5. நானும் உங்களைப் போல் உங்கள் நிலையில் இருந்து எழுதும் சிந்திக்கும் நிலையில் உள்ளவன் என்பதால் குறைகள் கண்ணில் படவில்லை. ஆனால் கணேஷ் சார் சொல்வது போல் ஒரே விதமான நடை என்பது அருமையான கருத்து. அவர் எனக்கும் சேர்த்து அறிவுரை கூறியது போலவே நான் கருதுகிறேன்.

  இப்போது கதைக்கு வருவோம்

  தொடக்கம் முதல் முடிவு வரை சிரிப்பை மட்டுமே சிந்திக்க வைக்கும் கதை. இது போன்ற கதை முயற்சியை அதிகம் பண்ணுங்கள். சிந்திக்க வைக்க பலர் உள்ளார்கள் சிரிக்க வைக்கத் தான் ஆள் இல்லை. பல இடங்களில் வசனமும் வசனத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு தாவும் திரைக்கதையும் ( எனக்குத் தெரிந்த வரை இதன் பெயர் திரைக்கதை) அருமை.

  வாழ்த்துக்கள் சகோதரி முதல் கதை என்று சொல்லமுடியாத அளவிற்கு முதல் கதையை படைத்த உங்கள் முதலுக்கு ( இங்கே முதல் என்பது உங்கள் சிந்தனைத் திறனைக் குறிக்கும் ) வாழ்த்துக்கள்

  http://seenuguru.blogspot.in/2012/03/blog-post_26.html inthak kathaiyai neram irunthal padithup parungal...

  ReplyDelete
  Replies
  1. WoW! நல்ல விஷயங்கள் சொல்ற எல்லாருக்கும் நான் சிஷ்யன்-னு நிரூகிடட சொன்னதை கணேஷ் மாமாவோட அறிவுரைய ஏத்துக்கிட்டு நிரூபிச்சுட்டிங்க சீனு, நான் சீரியஸா எழுதணும்னு நினைச்சா வருமான்னு தெரியல Brother! தொடர்ந்து ஹ்யூமர் பண்றதுதான் என் ஆசை. நிஜமா திரைக்கதை, வசனம்லாம் எனக்குத் தெரியாது. இனி இன்னும் ஷார்ப்பா எழுத Try பண்றேன். அவசியம் நீங்கள் சொல்லியிருப்பதை இன்னிக்கு Evening படிச்சுடறேன். விரிவான கருத்தால என்னைத் தட்டிக் கொடுத்த உங்களுக்கு My Heartful Thanks!

   Delete
 6. ஃபண்டாஸ்டிக். சிரிச்சு மாளலை:) நிரூ. ஃபர்ஸ்ட் கதையா.
  வாவ்.வோட் ஹௌஸுக்கப்புறம் விடாம சிரிச்சது இந்தக் கதையில் தான்.
  ரங்கமணி ரொம்பப் பாவம்பா.:))))))))))))))))

  நகைச்சுவை நல்லாவே வருது. அதனால் விதவிதமான கதை களை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. My Goodness! P.G.Woodhouse? எவ்வளவு பெரிய ரைட்டரோட ஒரு சின்னப் பொண்ண‌ை கம்பேர் பண்றீங்க! அவ்வளவு ரசிச்சீங்கன்றதுல எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா! சந்தோஷத்துல ஒரு சுத்து பெருத்துட்டேன். Really I Feel like That! My Heartful Thanks to you!

   Delete
 7. ‘‘அறிவு கெட்டவளே! என்னமோ பரிசுப் போட்டியில பரிசு விழுந்துடுச்சுங்கற மாதிரி கத்தறியே..! நிலநடுக்கம்டி... வா, வீட்டுக்கு வெளில ஓடலாம்....’’ // சிரிக்கும் படி நல்லா இருந்தது உங்களுக்கு கதை நடை நல்லாவே வருது மா எழுதுங்க .

  ReplyDelete
  Replies
  1. சசிக்கா... நீங்க சிரிக்கும்படி நல்லா இருந்ததுன்னு சொன்னது எனக்கு Energy Tonic. உங்கள் ஆதரவோட தொடர்கிறேன். Many Many Thanks!

   Delete
 8. எலி மாட்வேயில்லை கடைசி வரைக்கும்...கதை நல்லாயிருக்கு!

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பொல்லாத எலி மாட்டாததாலதானே ரங்கமணி மாட்டினார்... நல்லாயிருக்குன்னு சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு My Heartful Thanks Friend!

   Delete
 9. நகைச்சுவை நல்லாவே வந்திருக்கு நிரஞ்சனா... வாழ்த்துகள்.

  ஆனா இந்த ”எலி”ன்ற பெயரைக் கேட்டவுடனேயே கட்டில் மேலே ஏறி நின்று விடத் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. Haiyoo! எலின்னா உங்களுக்கு அவ்வளவு பயமா? எங்க வீட்ல எலிய‌ை அடிக்கணும்னா நிரூவைததான் கூப்பிடுவாங்க. நகைச்சுவை எனக்கு வருதுன்னு சொல்லி Energy Tonic குடுத்த உங்களுக்கு Many Many Thanks!

   Delete
 10. சூ...சூ எலித்தொல்லை....ப்ளீஸ் ஒரு எலிப்பொறி அனுப்பிவிடுங்கோ சுவிஸ்க்கு.....சரி சரி பொறிக்குள்ள என்ர கால் அகப்பட்டா ஆஸ்பத்திரிக்கெல்லோ போகவேணும்.அதனாலா நானே வலை வாங்கிக்கொள்றன்.கணேஸ்ன்னு ஒரு எலி சரியான குழப்படி நிரஞ்சனா.எப்பிடிச் சமாளிக்கிறீங்கள் நிரஞ்சனாக்குட்டி !

  ReplyDelete
  Replies
  1. ரொம்பச் செல்லமான சமத்து எலியாக்கும் அது! எனக்குத் தொல்லையே குடுக்காதுக்கா! உங்களுக்கில்லாத எலிப்பொறியா, இல்ல வலையா... நிச்சயம் ஸ்விஸ்க்கு பார்ஸல் அனுப்பிடறேன் நிரூ... Many Thanks for your encouraging visit And Energetic Comment!

   Delete
 11. நன்றாகவே சுருக்கமாக எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்.

  விரிவாகவும் நகைச்சுவையாகவும் எலியைப்பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள என் கீழ்க்கண்ட பதிவுக்குப் போய் பாருங்கள்.

  http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html

  அதிகம் இல்லை எட்டே எட்டு பகுதிகளில் எலியை ஓடவிட்டிருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. என் மாமாவுக்கே ஸீனியராச்சே அங்கிள் நீஙக! நீங்க எழுதாத சப்ஜெக்ட் இனிமேத்தான் கண்டுபிடிக்கணும். அவசியம் படிச்சுப் பாக்கறேன். பட், நிரூ கொஞ்சம் Slow... Please Adjusst Uncle. நன்றாக எழுதியுள்ளேன்னு நீங்க சொன்ன ஒரு வரியே என்னை உற்சாகம் நிரம்பின பலூனா ஆக்கிடுச்சு. My Heartful Thanks to you!

   Delete
 12. சர்வசாதாரணமாக நகைச்சுவை அள்ளித்தெளித்து வெகு அழகாய் முதல் கதையை பிரசவித்த நிரூவுக்கு வாழ்த்துக்கள்.

  நல்ல காமெடி சிறுகதை .

  ReplyDelete
  Replies
  1. சரியான வார்த்தை சொன்னீஙக S.S.! பிரசவித்த மாதிரிதான் கதையை ‘சரியாத்தான் ‌எழுதிருக்கோமோ’ன்னு மாத்தி மாத்தி திருத்தினேன். அழகாய் இருக்குன்னும் நல்ல காமெடின்னும் சொல்லி என்னை பறக்கற மாதிரி Feel பண்ண வெச்சுட்டிங்க. I Really feel happy and My Heartful Thanks to you!

   Delete
 13. நிரூ இதென்ன அனுபவ கதையா? ரங்கமணிய காதில பஞ்சு வைச்சு துாங்க சொல்லுங்க..ஓஓஓஓ எலிய ஒரு வழியா பிடிச்சது பெரிய விடயம்... (எப்படி சுகங்கள்??)

  ReplyDelete
  Replies
  1. நான் சூப்பரா நல்லா இருக்கேன் எஸ்தர்! நிரூவோட அனுபவக் கதைய எழுதறதுன்னா பல எலிகளைக் கொன்னதாத்தான் வரும். கற்பனைலதான் காமெடி நல்லா வரும் சிஸ்! Many Many Thanks to you for your enthusiastic encouraging comment!

   Delete
 14. நன்கு (நகைச்) சுவையாக இருந்தது கதை...வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ரசித்து வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என்னோட Heartful Thanks Sir!

   Delete
 15. அடுத்த கணம் அவரை நோக்கிப் பறந்து வந்த பூரிக் கட்டையை அவர் கேட்ச் பிடித்த அழகை செலக்ஷன் டீம் பார்த்திருந்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு செலக்ட் ஆகியிருப்பார் ரங்கமணி.


  அருமையாய் சிரிக்கவைத்த கதைக்குப் பாராட்டுக்கள்..

  தொடர வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் எப்போதுமே சந்தோஷம் தரும். அதுவும் உங்க கிட்டருந்து பாராட்டுங்கறது Double Pleasure. Many Many Thanks to you!

   Delete
 16. நல்ல நகைச்சுவை... வாழ்த்துகள் நிரஞ்சனா.

  ReplyDelete
  Replies
  1. நல்ல நகைச்சுவை என்ற வார்த்தையினால் எனக்கு சக்தி கொடுத்த, மனம் நிறைய வாழ்த்திய உங்களுக்கு Many Many Thanks from full of my Heart!

   Delete
 17. ம்ம்ம் .....சுஜாதா கூட இப்படித்தான் ஆரம்பித்தார் ..................... அவர் கதையில் கடைசியில் எப்போதும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். கதை முழுவதும் அந்த ட்விஸ்டை நோக்கிப் படுவேகமாகப் பயணிக்கும். பெரும்பாலும் அவரது எல்லா சிறுகதைகளுமேஅந்தக்கடைசி நிமிட ட்விஸ்ட் ரீதியிலான கதைகளே.......... தொடர்ந்து எழுதுங்கள் ......தங்களுக்கு என்று விரைவில் ஒரு ' பாணி ' வந்துவிடும்.

  ReplyDelete
  Replies
  1. கதையின் முடிவில் ஒரு ட்விஸ்ட்... அதை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும் கதையின் பயணம்... நல்லா இருக்கே இந்த ஐடியா! இதுமாதிரி ஒண்ணு ட்ரை பண்ணா என்னன்னு தோணுது. அருமையான Idea கொடுத்ததோட, பாராட்டையும் தந்து மகிழவைத்த உங்களுக்கு... Many Many Thanks!

   Delete
 18. நிரூ! கையக் கொடுங்க.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள். கன்னி முயற்சி அற்புதம்... கணேஷ் சாரோட அட்வைஸ் ரொம்பவே உதவும்... முதல் மேட்ச்லயே செஞ்சுரி போட்டுட்டீங்க...வாழ்த்துக்கள்...! கணேஷ் சாரோட டச் ரொம்பவே உங்களுக்கும் இருக்கு... அடுத்த கணேஷினி....! இருந்தாலும் உங்களுக்குன்னு தனி பாணி கிரியேட் பண்ணுங்க.... அப்பதான் நிலைக்க முடியும்...பார்க்கலாம்...தொடரும் பிரயாணத்தில்...!

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கன்னியோட ‘கன்னி’ முயற்சியை அற்புதம்னு சொன்னதுக்கு First of all என்னோட Thanks! குழந்தைங்களுக்கு அப்பா, அம்மாவோட பழக்கவழக்கங்கள் நிறையப் படிஞ்சிடும்னு சொல்வாங்க. எழுத்து விஷயத்துல அவரைப் பாத்தே, படிச்சே வந்ததால கொஞ்சம் தூக்கலா ‘டச்’ இருக்கோ என்னவோ... அடுத்த ட்ரிப் அந்த டச்சைக் கழட்டி விட்டுட்டு வேற மாதிரி வர்றேன். OK va.. அப்ப பாத்துட்டுச் சொல்லுங்க Friend! உற்சாகம் தந்த உங்களுக்கு... My Heartful Thanks!

   Delete
 19. நல்ல முயற்சி. இது ஒருக் கட்டுரையாகக் கருதலாம். கதை வடிவில் அமையவில்லை. இன்னும் முயற்சி செய்யுங்கள் நிரஞ்சனா

  ReplyDelete
  Replies
  1. இந்த முதல் முயற்சியில் பிழைகள் இருப்பதை நான் நன்கறிவேன். நிச்சயம் இன்னும் பெட்டராப் பண்ண ட்ரை பண்றேன் ஸார்! Many Many Thanks to you!

   Delete
 20. நல்லாயிருக்கிறது நிரூ நகைச்சுவையுடன்.. தொடருங்கள் பயணத்தை. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. ரசிச்சு வாழ்த்தியிருக்கீங்க. I Feel Happy and my Heartful Thanks to you!

   Delete
 21. சரியான காமடி கதை

  ஆனால் இப்ப எலிக்கெல்லாம் கே எஃப் சி சிக்கன் தான் வேனுமா

  ReplyDelete
  Replies
  1. நல்லாச் சொன்னீங்க, போங்க! வீட்ல எலி வளர்க்கறீங்களோ... இவ்வளவு சரியா கேட்டுச் சொல்றீங்களே... Ha... Ha... நல்ல காமெடின்னு பாராட்டின உங்களுக்கு My Heartful Thanks!

   Delete
 22. //நிரஞ்சனா said...
  எலியைப் பிடிச்சுடலாம்... ஆனால, சுண்டெலியப் பிடிக்க முடியுமோ..? (நடிகர் திலகம் ஸ்டைலில் படிக்கவும்) ‘எலி’ஸபெத் டவர்ஸில் உங்கள் மூலம் நடமாடியதில் கிடைத்தது மகிழ்வு. அழகாகத் துவங்கி, அருமையாய் வளர்ந்து, நிறைவாய் முடித்திருக்கிறீர்கள் Uncle! ரசனைக்குத் தீனி போட்ட உங்களுக்கு Many Thanks!//

  நேற்று 21.04.2012 இரவு படிக்க ஆரம்பித்து இன்று ஒரே நாளில் அனைத்துப் பகுதிகளையும், படித்து, ரஸித்து, சிரித்ததுடன், அனைத்துப்பகுதிகளுக்கும் தனித்தனியே பின்னூட்டம் அளித்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன் vgk

  [ http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html ’எலி’ ஸபத் டவர்ஸ்]

  ReplyDelete
  Replies
  1. ஸார்... இயல்பான நகைச்சுவைங்கறதை உங்க மூலமாத் தெரிஞ்சுக்கிட்டேன். எலிஸபெத் டவர்ஸில் நடமாடிய அனுபவம் எனக்கும் வித்தியாசமான மகிழ்வைத் தந்தது. நான்ல்ல உங்களுக்கு Thanks சொல்ல வேண்டியவ! எனக்கு உங்க Blessings போதும்!

   Delete
 23. ஹா...ஹா...ஹா... சுவாரஸ்யம்.

  ReplyDelete
 24. Niranjana.. unga pin kurippu romba azhaga irukku... nan romba rasichathum athu than unga kathaila..

  ReplyDelete
  Replies
  1. கதையைப் படிச்சு ரசிச்சதோட நிரூவோட குறும்பையும் ரசிச்சுக் கருத்திட்ட உங்களுக்கு... My Special Heartful Thanks!

   Delete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!