Pages

Ads 468x60px

9 March 2012

மனிதனுக்குள் மிருகங்கள்!

பிரம்மா பூவுலகத்தைப் படைச்சதும் அங்கு மனிதர்களையும், ஆடு மாடு முதலிய மிருகங்களையும் படைக்க விரும்பினார். முதலில் குரங்குகளைப் படைத்து, ‘‘ஓ குரங்குகளே! உங்களுக்கு நாற்பது ஆண்டு ஆயுள் தருகிறேன்’’ என்றார். குரங்குகள், ‘‘மரங்களில் தாவித் தாவி வாழ்வதும் ஒரு வாழ்வா? வெயில், மழை எதற்கும் வீடு கிடையாது எங்களுக்கு. காட்டில் புலி, சிங்கம் போன்ற துஷ்ட மிருகங்களுக்கு வேறு பயப்பட வேண்டியுள்ளது. ஆகவே எங்களுக்கு இருபது வயதே போதும் என்றன. பிரம்ம தேவர், ‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்று சொல்லி விட்டார்.

பிறகு எருதைப் படைத்து, ‘‘உங்களுக்கு நாற்பது வயதைத் தருகிறேன். உங்கள் அபிப்ராயம் என்ன?’’ என்று கேட்டார். எருது கண்களில் நீருடன் சொல்ல ஆரம்பித்தது: ‘‘இரவு பகல் என்று வேறுபாடு இல்லாமல் எங்களை வேலை செய்யும்படி மனிதர்கள் வற்புறுத்துகிறார்கள். ஏதோ நான்கு வைக்கோலை எங்கள் முகத்துக்கு எதிரில் தூவி விட்டு தண்ணீரையும் சரிவர அளிக்காமல் மனிதர்கள் மட்டும் சுகமாக வாழ்கின்றனர். ஆகவே எங்களுக்கு இருபது வயது இருந்தாலே போதும்’’ என்றன. ‘‘சரி, அப்படியே...’’ என்று விட்டு விட்டார் பிரம்மன்.

மூன்றாவதாக நாயைப் படைத்து அவற்றிடமும் முந்தையவற்றிடம் கேட்ட கேள்வியையே கேட்டார். ‘‘நாங்கள் அளவற்ற பாவம் செய்து இப்பிறவியை அடைந்திருக்கிறோம். யாரையாவது திட்ட வேண்டுமென்றால் ‘சீ நாயே’ என்றுதான் திட்டுகிறார்கள். மனிதர்களுக்கு மிக உபயோகமாக காவல் காத்து, திருடர்களைப் பிடித்து தருகிறோம். இவ்வளவு செய்தும் எங்களை வீட்டிற்குள் விடாமல் துரத்தியடிக்கிறார்கள். இத்தகைய இழிபிறவிகளான எங்களுக்கு இருபது வயதே போதும்’’ என்று விட்டன நாய்கள். அவற்றின் பேச்சில் மனமிரங்கிய பிரம்மா, ‘‘அப்படியே ஆகுக’’ என்று சொல்லி விட்டார்.

நான்காவதாக வெளவாலைப் படைத்து அவற்றிடம் முன்போலவே கேட்டார். அவையோ, ‘‘குரங்கு, நாய், எருது இவற்றைவிட நாங்கள் கீழானவர்கள். எங்களுக்கு வாக்குதம் என்று பெயர். வாயும் ஆசனவாயும் எங்களுக்கு ஒன்று. இருள் அதிகமாக உள்ள இடங்களில் வசித்து, தலைகீழாகத் தொங்குவது எங்கள் வாழ்வு. இப்படி பலவித துன்பங்களை அடைந்துள்ள எங்களுக்கு இருபது வயதே போதும்’’ என்றன. பிரம்ம தேவர் அவற்றுக்கும் இசைந்தார்.

இந்த நான்கு பிராணிகளும் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு மனிதனைப் படைத்து, இவற்றைவிட அறிவுள்ளவனாக அல்லவா படைத்திருக்கிறோம் என்று எண்ணி மனிதனிடம், ‘‘உனக்கு நாற்பது வயது வேண்டுமா? இல்லை இருபதே போதுமா?’’ என்று கேட்டார். மனிதன், ‘‘பிரம்மதேவரே! நாங்கள் மனிதர் அல்லவா? எங்களுக்கு கைகளும், கால்களும், அறிவும் உண்டு. இருபது வயதிற்குள் என்ன சுகம் அனுபவித்துவிட முடியும்? எனக்கு அதிக ஆயுள் வேண்டும்’’ என்று கேட்டான். பிரம்மதேவர் உடனே, ‘‘சரி, அந்த நான்கு பிராணிகளும் வேண்டாமென்று மறுத்த தலா இருபது வயதுகளை (4 x 20) சேர்த்து உனக்கு நூறு வயதாக அளிக்கிறேன்’’ என்றார். அரை மனதாக ஒப்புக் கொண்டான் மனிதன்.

இப்படி நான்கு ஜந்துக்களின் இருபது இருபது வயதை மனிதன் அடைந்தான் என்பதை அவை செய்யும் தொழிலை அந்த இருபது வருடங்களில் மனிதன் செய்வதனாலேயே புரிந்து கொண்டு விடலாம். முதல் இருபது வருஷங்கள் குரங்கின் வயது. எனவே குரங்கின் சேஷ்டைகள் அந்தப் பருவத்தில் இருக்கும். ஒரு இடத்தில் நில்லாமல் அங்கும் இங்கும் ஓடி அலைகிறான். ‘‘என்ன குரங்கு சேட்டைடா’’ என்று பெற்றோர்கள் திட்டுவதும் உண்டு இப்பருவத்தில்.

இருபது முதல் நாற்பது வயது வரையில் எருதின் வயது. எருது எப்படிப் பாரங்களை சுமக்கிறதோ அப்படி குடும்பத்தின் பாரத்தைச் சுமந்து, அன்ன ஆகாரம் தேடி ஊரூராக மாறி வேலைகளைச் செய்கிறான். நாற்பது வயது முதல் அறுபது வயது வரையுள்ள வயதுதான் மனிதனுக்கு என்று பிரம்மன் வகுத்த வயது. மனிதனுக்குண்டான வேலைகளை அப்போதுதான் அவன் சரிவரச் செய்கிறான். புராணங்களைப் படிப்பதும், கோவில்களுக்குச் சென்று வழிபடுவதும், புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதும், பெரியவர்களிடம் எல்லாம் மரியாதையுடன் இருப்பதும் ஆக பண்பட்ட எண்ணங்களும், பழக்க வழக்கங்களும் கொண்டு மனிதன் வாழ்கிறான்.

அறுபது வயது முதல் எண்பது வயது வரை நாயின் வயது. தேகத்தில் சக்தி குறைந்து விடுவதால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே தங்கி வீட்டைக் காவல் செய்யும்படி ஏற்படுகிறது. சிறியவர்கள், வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி விட்டு விட்டு வெளியே போய் விடுவார்கள். எண்பது முதல் நூறு வயது வரையிலோ வெளவாலின் வயது. பகலிலேயே சரியாக பார்க்க முடியாமல் போவதும், சுவாதீனமாக உட்காரவோ படுக்கவோ முடியாமல் கஷ்டப்பட்டுதான் இருக்க முடியும்.

இப்படி அந்தந்த வயதுகளில் மனிதனுக்கு ஏற்படும் சுபாவ மாற்றங்கள் எல்லாவற்றையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தனக்கு கிடைத்த வயது போதாது போதாது என்று மேலும் மேலும் மனிதன் ஆசைப்பட்டுக் கேட்டதால் தான் இப்படி அதிக காலம் வாழ்வதும், துன்பப்படுவதும் ஏற்பட்டது.

-Hai Friends..! நல்லாத்தானே இருந்தா இந்த நிரஞ்சனா? திடீர்னு என்ன ஆச்சு இவளுக்கு? சாமியாராப் போய்டப் போறாளான்னு நினைச்சுடாதீங்க... என் மம்மி வெச்சிருந்த ஆன்மீக புஸ்தகங்கள்ல ‘வைதீக ஸ்ரீ’ன்னு ஒரு புக் இருந்துச்சு. சும்மா புரட்டினப்ப இந்தக் கதையப் படிச்சேன். மேட்டர் நல்லா இருக்கேன்னு தோணிச்சு. உடனே உங்க கூடல்லாம் Share பண்ணிக்கிட்டேன். உங்களுக்குப் புடிச்சிருக்கா?
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மனிதனுக்குள் மிருகங்கள்!"

5 March 2012

நமது வருங்காலத் தூண்கள்?!!!!


நேத்து நான் டிவியில நேஷனல் ஜ்யாக்ரபிக் பாத்துட்டிருந்தப்ப ஜெயா டி.வி.ல ஜாக்பாட் பாட்தே தீரணும்னு மம்மி வந்து ரிமோட்டைப் பிடுங்கிக்கிட்டாங்க. வழக்கமா இந்த மாதிரி அவங்க பாக்க ஆரம்பிச்சா நான் நகர்ந்து வேற ஏதாவது படிக்கறதுக்குப் போயிடுவேன். நேத்திக்கு சென்னையிலருந்தும், திருவள்ளூர்லருந்தும் 10ம் கிளாஸ் படிக்கிற பசங்க ரெண்டு டீமா வந்து கலந்துக்கிட்டாங்கன்றதால நானும் மம்மி கூடவே பேசிக்கிட்டே பாக்க ஆரம்பிச்சேன். ஏன்தான் பாத்துத் தொலைச்சேன்னு ஆயிடுச்சு.

வந்திருந்த பசங்கள்ல ஒரு பொண்ணு பாட்டுப் பாடிச்சு. எதிர் டீம்ல ஒரு பொண்ணு நல்லாவே Dance ஆடிச்சு. கேள்வி - பதில் ரவுண்டு வந்தப்ப ஒரு வீடியோவைப் போட்டுக் காட்டினாங்க. காந்தியடிகள் பிரார்த்தனைக் கூடத்துக்கு நடந்து வர்றப்ப, அவரை வழியில வணங்கற கோட்ஸே சட்டுன்னு தன் பாக்கெட்லருந்து Gun எடுத்து மகாத்மாவை சுடற காட்சி அது. போட்டுக் காட்டிட்டு, ‘‘இந்த கிளிப்பிங்ல மகாத்மா காந்தி சுடப்படற காட்சியைப் பாத்தீங்க. மகாத்மாவைச் சுட்டவனோட பேர் என்ன?’’ன்னு சிம்ரன் கேள்வி கேட்டாங்க.


அதுக்கு ‘ஏ’ டீம்ல கேப்டனா இருக்கற பொண்ணு ‘முசோலினி’ன்னு சொல்லிச்சு. நான் அதிர்ந்து போயிட்டேன். Display Board Noன்னு ‌சொன்னதால (பின்ன.... அதுவுமா முட்டாளா இருக்கும்?) எதிர் டீம் கிட்ட இதே கேள்வியைக் கேட்டாங்க சிம்ரன். அங்க இருந்த பசங்களுக்கும் இதுக்கு பதில் தெரியல. ‘‘இதுங்கல்லாம் பள்ளிக் கூடத்துல என்னதான் படிச்சுதுகளோ’’ என்று என் மனதில் தோணிச்சு. அதே நேரம், ‘‘ஸ்கூல்ல உங்களுக்கு என்னதான் சொல்லித் தந்தாங்க?’’ன்னு சரியாக் கேட்டாங்க சிம்ரன். அந்த நாலு பிள்ளைகளில ஒருத்தன் தன் அம்மா ஹிஸ்டரி டீச்சர் அப்படின்னு வேற சொல்லி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அந்த டீச்சரையும் கை காட்டினான்.

பத்தாம் வகுப்பு வரை வந்து விட்ட மாணவச் செல்வங்களுக்கு மகாத்மா காந்தியின் வரலாறு சரியாத் தெரியலீங்க... My God! காந்திங்கற  தனிமனுஷனோட வரலாறா அது? நம்ம பாரத தேசத்தோட வரலாறும் அதுல கலந்திருக்கு இல்லையா? இதைக்கூட சரியாப் படிக்காம பத்தாம் கிளாஸ் வரைக்கும் இந்தப் பசங்க பாஸாகி வந்திருக்குன்னா... எங்க தப்பு இருக்கு? நம்ம Education System சரியா இல்லையா? இந்தத் தூண்களா வருங்காலத்துல பாரதத்தைத் தாங்கிப் பிடிக்கப் போகுது?

-இப்படி ஏராளமான கேள்விகள் எனக்குள்ள ஓடிக்கிட்டிருந்துச்சு. வெறுமனே பாழாப் போற கம்ப்யூட்டர் படிப்பை படிச்சு ஏதாவதொரு ஐ.டி. கம்பெனில இருபதாயிரம், நாப்பதாயிரம்னு சம்பளம் வாங்கிட்டு செட்டிலானா போதும்னு பெத்தவங்களோட எண்ணமா இருக்குமோ? அதனாலதான் இப்படி பசங்க, ‘ஹிட்லருக்கு சித்தப்பா காந்தி’ன்னு சொல்ற ரேஞ்சுல இருக்குதுங்களா? பேரண்ட்ஸ் தங்களோட பிள்ளைங்க என்னதான் படிக்குதுன்னு கவனிக்க மாட்டாங்களா...?

எங்க போயிட்டிருக்கோம் நாம?
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நமது வருங்காலத் தூண்கள்?!!!!"

3 March 2012

வணக்கம்! என் முதல் வணக்கம்!



 ஹாய் எவ்ரிபடி! வணக்கம்! வந்தனம்! நமஸ்தே! நமோஷ்கார்! நான் நிரஞ்சனா. புதுசா இன்னிக்கு உங்களுக்கு அறிமுகமாயிருக்கேன். என்னோட ரசனைகளை Share பண்ணிக்கவும், உங்களோட ரசனைகளைத் தெரிஞ்சுக்கவும் ஆசை. முதல் பதிவுங்கறதால சும்மா Funnyயா சில படங்களைப் பார்த்து ரசிங்க. அடுத்த பதிவுலருந்து நாம பேசலாம். ஓ.கே.வா?

பா.... பா.... பா.... பாம்பு!
மச்சி! Sharing பண்ணாட்டி விட்ருவமா நாங்க?
தமிழ்நாட்டுக்கு நெறைய தண்ணி விடுங்கடான்னா கேக்கறாங்களா?

டிரஸ் பண்ணினாத்தான் என் ஆளு லவ் பண்ணுவானாம். உன் டிரஸ்ஸைக் குடு!


இவங்களைப் பாத்து...
பாசத்தைக் கத்துக்கிட்டேன்!
 
இவுங்களைப் பாத்து நான்...

என் செல்லமே...!
சாப்ட்டு ஒரு வாரமாச்சு்ங்க....!

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "வணக்கம்! என் முதல் வணக்கம்!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!