Pages

Ads 468x60px

4 August 2012

நான்... கொசு!


டென்னிஸ்‌ பேட் போலிருந்த அதை காற்றில் ஒரு வீசு வீசினாள் அவள். பட் பட் என்ற சத்தம் கேட்டதும் பூரிப்பாய்த் தன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். ‘‘எப்பூடி?’’

‘‘ஆமா... நீ பெரிய சானியா மிர்ஸா! சர்வீஸ் போட்டு கேமை ஜெயிச்சுட்டே. ஏண்டி... கொசுவை அடிக்கற பேட்டை வெச்சுட்டு இத்தனை அமர்க்களம்?’’ என்றார் அவர்.

“அமர்க்களமா..? ஈ தொல்லை அதிகமா இருக்குன்னு மருந்தடிச்சுப் பாத்தேன். கொஞ்சம் தான் போச்சு. கொசுவையாவது அழிச்சுடலாம்னு பாக்கறேன்...”

“நான் ஈ பாத்தப்பறம் எல்லா ஈயும் ஹெல்மட் போட்டுக்க பழகிடுச்சுடி. அதான் அழிக்க முடியலை...” என்று சொல்லி ஈயென்று சிரித்தார் அவர்.

“அப்படிச் சிரிக்காதீங்க பயமா இருக்குது...” என்றதும் வாயை மூடினார். “நான் கடைவரைக்கும போய்ட்டு வர்றேன்...” என்றார்.

‘‘என்னது...? வடையா? நேத்துதானே பண்ணிக் குடுத்தேன். மறுபடி கேட்டா என்ன அர்த்தம்ங்கறேன்?’’ என்று அவள் அலறினாள். ‘‘கஷ்டம்டா சாமி...’’ என்று தலையில் அடித்துக் கொண்டு சத்தமாகப் பேசினார். ‘‘கடைக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னேன்டி ச.தி.சுந்தரி’’

‘‘கடைக்கா..? அதை தெளிவா சொல்றதுக்கென்ன... இப்படி என் பேரைச் சுருக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?’’

‘‘நாசமாப் போச்சு. ‌சவுந்தர்யலட்சுமி திரிபுரசுந்தரின்னு உன் பேரை முழுசாச் சொல்லி முடிக்கறதுக்குள்ள அரை நாளாயிடும்...’’

‘‘இங்க மட்டும் என்ன வாழுதாம்..? சீனிவாச சுந்தரவரத நரசிம்மன்னு உங்க பேரை யாராவது முழுசாச் சொல்லியிருக்காங்களா? கோபக்காரர்ங்கறதால சிம்மம்னுதானே கூப்பிடறாங்க?’’

‘‘சரி... சரி... ’’ என்றார் அவர். ‘‘அன்னிக்கு பாங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண ஃபார்ம் குடுத்தான். நான் திருமதின்னு போட்டு என் பேரோட உங்க பேரைச் சேர்த்து எழுதறதுக்கு எக்ஸ்ட்ரா ஷீட் கேக்க வேண்டியதாப் போ்ச்சு... சிரிக்கறான் அந்த ஆளு...’’

‘‘விடுடி! நான் ‌‌போயிட்டு அரை மணி நேரத்துல வர்றேன்... எக்ஸிபிஷன் போகணும்னியே... பசங்களை ரெடி பண்ணி வை..,’’ என்று சத்தமாகப் பேசிய (கத்திய?) வரின் மூக்கில் மோதிக் கீழே விழுந்தது அந்தப் ப்ளையிங் டிஸ்க். தொடர்ந்து ‘ஓ’வென்ற கூச்சலுடன் ஓடிவந்தன அவர் பெற்ற ஆறு செல்வங்களும்! ‘‘சனியன்களா... வீட்டுக்குள்ளயா விளையாடறது? ரோட்டுக்குப் போங்க...’’ என்று பெயருக்கேற்றபடி அவர் கத்த (கர்ஜிக்க?) கண்ணை மூடிக் கொண்டு ஓடிவிட்டன அத்தனையும்!

‘‘இன்னுமா ரெடியாகலை? அலங்காரம் பண்ண இவ்வளவு நேரம? எப்ப எக்ஸிபிஷன் போயிட்டு எப்ப வர்றது?’’ என்று சிம்மம் கத்திக் கொண்டிருந்தார். ‘‘அடாடாடா... எல்லாத்துலயும் கஞ்சியக் கால்ல கொட்டிண்ட மாதிரி அவசரம் உங்களுக்கு. போய் கார்ல உக்காருங்க. பசங்களைக் கூட்டிட்டு வர்றேன்...’’ என்று அவள் பதிலுக்குக் கத்த, அவர் போகும்போது எதிரே வந்தாள் வேலைககாரி அமிர்தவல்லி. (ஏன் வேலைக்காரின்னா, முனியம்மா, முனீஸ்வரின்னுதான் பேர் வெக்கணுமா?).

‘‘ஏம்மா... பைய நான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போகட்டுமா?’’ என்று அவள் கேட்க, அசுவாரஸ்யமாகத் தலையசைத்தபடி, ‘‘பசங்களா கிளம்புங்க. அப்பா கத்தறார் பாருங்க...’’ என்றாள் சுந்தரி. ‘‘ஓ’’வென்ற உற்சாகக் கூச்சலுடன் வாண்டுகள் வாசலுக்கு ஓட, அவளும் தொடர்ந்தாள்.

க்ஸிபிஷனில் ஸ்டால் ஸ்டாகப் புகுந்து நிறையப் பைகளை வாங்கியபடி வரும்போது யதேச்சையாகக் கவனித்த சிம்மம் சொன்னார்- ‘‘சுந்தரி... ஏதோ குறையறது போலருக்கே... சரி பாரு...’’ என்று. ‘‘இல்லியே... சரியாத்தானே வெச்சிருக்கேன்...’’ என்று அவள் பைகளை எண்ணத் தொடங்க, கோபமாக தலையில் தட்டினார்: ‘‘அடியேய்... நான் சொன்னது இதில்லை. நாம பெத்த புத்திர சிகாமணிகளை! சரியா இருக்கான்னு எண்ணிப் பாக்கச் சொன்னேன்’’

ஒவ்வொன்றாகக் கவனித்த சுந்தரி அலறினாள். ‘‘என்னங்க... சின்னவனைக் காணோம்...’’

‘‘யாரு, அந்தக் குட்டிப் பிசாசா?’’

‘‘ஆமாங்க...’’

‘‘அடிப்பாவி! திங்க்ஸை வாங்கிக் குவிக்கறதுலயே குறியா இருந்தியே... குழந்தைகளைக் கொஞ்சமாவது கவனிக்க மாட்டியா?’’ என்று அவர் கத்த, ‘‘நான் மட்டுமா பெத்தேன்? பெத்த அப்பான்னு எதுக்கு இருக்கீங்க? நீங்க கவனிச்சிருக்கலாம்ல..?’’ என்று அவள் எகிற, மற்ற பிள்ளைகள் சுற்றி நின்று கூச்சலிட, ஒரே களேபரம். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட, கூட்டத்தில் ஒருவர் தமிழ்நாட்டு மரபுப்படி இலவச ஆலோசனை சொன்னார்: ‘‘சார், எக்ஸிபிஷன் அனவுன்ஸ்மென்ட் ஸ்டால்ல போய் மைக்ல சொன்னீங்கன்னா... யாராவது பையனப் பாத்தாலும் கூட்டிட்டு வந்துடுவாங்க...’’ என்று.

இவர்கள் அனவுன்ஸ்மெண்ட் ஸ்டாலுக்குச் சென்ற சில நிமிடங்களில் ஒலிபெருக்கி அலறியது. ‘‘நீல டிராயரும், நீல கட்டம்போட்ட சட்டையும் அணிந்த ஏழு வயது குட்டிப் பிசாசு எங்கிருந்தாலும் ஸ்டாலுக்கு வரவும். அப்பாப் பிசாசு... மன்னிக்கவும், அப்பா இங்கே காத்திருக்கிறார்...’’ என்றது.

‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டாள் சுந்தரி. ‘‘ஏன்னா... கிரிதர ராஜகோபாலன்னு அவனுக்கு வெச்ச பேர்ல வீட்லதான் கூப்பிட மாட்டீங்க. இங்கயாவது அப்படிச் சொல்லியிருக்கலாம்ல? அதென்ன குட்டிப்பிசாசு?’’

‘‘குட்டிப் பிசாசுன்னு கூப்பிட்டே பழகிடுச்சா? அவனுக்கு வெச்ச பேர் மறந்து போய்டுத்துடி. ஹி... ஹி...’’ என்று பெரிதாக இளித்து அசடு வழிந்தது சிம்மம்.

அறிவிப்பு செய்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தும் பையன் கிடைப்பதாக இல்லை. போலீசில் புகார் செய்து விட்டு நொந்து நூலாகி வீடு திரும்பும் போது இரவு மணி எட்டரையாகி விட்டது.

வாசலிலேயே தோளில் தூங்கிக் கொண்டிருந்த ‘குட்டிப் பிசாசு’டன் காத்திருந்தாள் அமிர்தவல்லி.

“ஏம்மா... எக்ஸிபிஷன் போய்ட்டுவர இம்மா நேரமா? பாவம் புள்ள... பசின்னு கேட்டுது. சாப்பாடு தந்ததும் தூங்கிடுச்சு பாரு...” என்று அவள் முறையிட. குழந்தையை வாங்கிக் கொஞ்சிய சுந்தரி. அவளிடம் கோபமாகக் கேட்டாள். “உன்கிட்ட எப்படிடி குழந்தை வந்துச்சு... நீயும் எக்ஸிபிஷன் வந்தியா?”

“சரியாப் போச்சு... என்கூட என் வீட்டுக்கு வரேங்கறான். பையனை கூட்டிட்டு போகட்டான்னு கேட்டப்ப நீங்கதானே சரின்னீங்க?” என்று அவள் சொல்ல. “பையன்னா கேட்டே? பைய எடுத்துட்டு போகவான்னு கேட்டேன்னு நினைச்சுல்ல சரின்னுட்டேன்...” என்று அசடு வழிந்தாள் சுந்தரி. கைகளால் தலையில் மடேர் மடேரென்று அடித்துக்  கொண்டது சிம்மம்.


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

39 comments:

  1. நல்ல நகைச்சுவை..

    அமிர்தவல்லி - நல்ல பேரு வைக்கறீங்கப்பா! :)

    சுவையான பகிர்வுக்கு நன்றி.

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. நல்ல நகைச்சுவைன்னு நீஙக சொன்னதுல ரொம்பக் குஷியாய்ட்டேன் நான். மிக்க நன்றி ஸார்.

      Delete
  2. அப்புசாமியும் கீதா மாமியும் கதையின் சாயல் எனக்கு பிடித்த நகைச்சுவை கதைகள் .அவை .............

    அருமை டா உனக்கு நல்ல கதை எழுத வருகிறது நகையோடு வருவது அவளவு எளிதல்ல பாராட்டுக்கள்

    கதை பாத்திரங்களின் பெயர்கள் கதையின் போக்கை யூகிக்கும் அளவிற்கு இருக்கு .

    நீ நல்ல வருவா நிரு

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசிச்சதுல சந்தோஷம் எனக்கு. உங்களின் ஆசிகள் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றிக்கா.

      Delete
  3. நகைச்சுவை!
    சரளமான எழுத்து நடை!
    வேகம்!

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. என்னை வாழ்த்தி இந்தக் கதையை ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி.

      Delete
  4. ஈ பத்தி பேசிட்டு ஈனு சிரித்தது யதார்ததமான உரைநடை வைத்தே அழகா இவ்வோளோ எழுத முடியுமா? அழகு வாழ்த்துக்கள் மா.

    ReplyDelete
    Replies
    1. ஹைய.... உங்களுக்குப் பிடிச்சிருந்ததாக்கா... ரொம்ப ரொம்ப ஹேப்பி. My heartful Thanks to you!

      Delete
  5. தமாசு.. அருமை..

    ReplyDelete
    Replies
    1. தமாசு உங்களுக்குப் பிடிச்சுப் போனதுல சந்தோஷமுங்க. மிக்க நன்றிங்க.

      Delete
  6. ம்ம்ம்ம்ம்ம் ....ம் (:
    ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை

    நல்ல எழுத்து நடை
    சுவராசியமான விஷயங்கள் -மிகவும் சரித்தேன் நீரு

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சிரிச்சதுல எனக்குத்தான் சந்தோஷம் அண்ணா. மிக்க நன்றி.

      Delete
  7. மனம் ஈர்க்கும்
    நகைச்சுவை நடை சகோதரி..
    கதாபாத்திரங்களின் பெயர்
    மனதில் நிற்கிறது..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கள் எனக்கு சந்தோஷம் தருது மகிஅண்ணா. மிக்க நன்றி.

      Delete
  8. யதார்த்தமான நடையில் நல்ல நகைச்சுவை கதை! அருமை! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. பாராட்டின உங்களுக்கு சந்தோஷத்தோட என் நன்றி.

      Delete
  9. நான் இன்னும் படிக்க வில்லை தோழி தலைப்பு பார்த்தே எனக்கு சிரிப்பு வந்தது... நான் மறுபடி வருவேன் நிரூ...

    ReplyDelete
    Replies
    1. எப்ப வேணாலும வரலாம் விஜி. Hearty Welcome to you dear Friend!

      Delete
  10. நகைச்சுவையாக எழுதுவது கஷ்டம்... நீங்கள் அருமையாக எழுதி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    பகிர்வுக்கு நன்றி...
    (த.ம. 4)

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையாக எழுதிய என் முயற்சியைப் பாராட்டின உங்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  11. நான் ஈ பார்த்துவிட்டு வீட்டுக்கு நுழைந்தால் சுட சுட என்னை வரவேற்றது நான் கொசு

    வெகு சமீபத்தில் தான் கணேஷ் சாரின் பொருட்காட்சி பற்றிய சரிதா கதையைப் படித்தேன், எங்கே அதுபோல இருக்குமோ என்று நினைத்தேன், நல்லவேளையாக முற்றிலும் மாறுபட்ட எழுத்து...

    சரளமான நகைச்சுவை எழுத்துக்கள் சுவையாக உள்ளது.... இது போல் இன்னும் அதிகம் எழுதுங்கள்... உங்கள் எழுத்தில் நகைச்சுவை மிக மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. சரளமான நகைச்சுவைன்னு நீங்க பாராட்டியிருக்கறது எனக்குள்ள ஃபுல் பாட்டில் பூஸ்ட் குடிச்ச மாதிரி தெம்பா இருக்கு. My Heartiest Thanks to you!

      Delete
    2. // ஃபுல் பாட்டில்// நான் கூட பயந்துட்டேன் ஹி ஹி ஹி

      Delete
  12. ஹா...ஹா... நல்லா சிரிக்க முடிஞ்சது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சிரிச்சதுல நான் ரொம்ப ஹேப்பியாய்ட்டேன் ஸார். நன்றி.

      Delete
  13. நிரூவுக்கு நன்றாக நகைச்சுவை வருகிறதே.கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்று சும்மாவா சொல்லி சென்றார்கள்!மிகவும் ரசித்து நகைத்தேன் நிரூ.

    ReplyDelete
    Replies
    1. Dear SS. ரசிச்சு நகைத்தேன் என்ற உங்க வார்த்தைகள் பாக்கறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி.

      Delete
  14. ரொம்பவே குசும்பாயிட்டீங்க.வாலுதான் இனி வளரப்போகுது ஹிஹிஹி !

    ReplyDelete
    Replies
    1. ஹை,,, எங்கம்மா என்னை வாலுன்னுதான் கூப்டுவாங்க. நீங்களும் அதையே சொல்லி கேலி பண்றீங்களே,, ரொம்ப தாங்க்ஸ்க்கா,

      Delete
  15. என்ன? இந்த வாரம் பொருட்காட்சி வாரமா? உங்க அங்கிலும், நீயும் பேசி வச்சுப் போட்டதா? கத நல்ல செம ஜாலியா க்கீதுமே!... நல்ல நகைச்சுவை உணர்வு உனக்கு!... அருமை!...

    ReplyDelete
    Replies
    1. அதின்னா அப்டிச் சொல்லிக்கினீங்கோ... பேசி வச்சிகினு போடலிங்கக்கா... தானா அமைஞ்சு. செம ஜாலியாக்கீதுன்னதுக்கு ரொம்ப டாங்க்ஸ்ஸு.

      Delete
  16. //‘‘சுந்தரி... ஏதோ குறையறது போலருக்கே... சரி பாரு...’’ என்று. ‘‘இல்லியே... சரியாத்தானே வெச்சிருக்கேன்...’’ என்று அவள் பைகளை எண்ணத் தொடங்க, கோபமாக தலையில் தட்டினார்: ‘‘அடியேய்... நான் சொன்னது இதில்லை. நாம பெத்த புத்திர சிகாமணிகளை! சரியா இருக்கான்னு எண்ணிப் பாக்கச் சொன்னேன்’’// நான் இந்த இடத்தில் சிரித்துவிட்டேன் நிரூ..
    ஹிஹிஹி !

    ReplyDelete
    Replies
    1. அடடா... எல்லாரும இப்படி ரசிச்ச இடங்களைச் சொன்னா அடுத்த தடவை உருவாக்கறப்ப வசதியா இருக்குமே. ரொம்ப நன்றி தோழி.

      Delete
  17. அருமை அருமைடா நிரூ சூப்பர் கதை. ஆனாலும் உன் கற்பனையில் இவ்வளவு அழகான பெயர்களெல்லாம் இருக்கிறதே... ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்டா நிரூ...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்னு சொன்னதுல ரொம்ப குஷியாய்ட்டேன் விஜிம்மா... மிக்க நன்றி.

      Delete
  18. நிரஞ்சனா...
    கதை நகைச்சுவையாக நன்றாக உள்ளது.
    படமும் அருமை.
    தொடருங்கள் ஃபிரெண்ட். வாழ்த்துக்கள்ப்பா.

    ReplyDelete
    Replies
    1. என்னை வாழ்த்திய என் ஃப்ரெண்டுக்கு சநதோஷமா என்னோட நன்றிகளை தெரிவிச்சுக்கறேன்.

      Delete
  19. இயல்பாக நகைச்சுவை உணர்வு வருகிறது தங்களுக்கு ! கொஞ்சம் கடுப்பான மூடில் இருப்பவர்கள் கூட உங்கள் பதிவைப் படிக்கும் போது கலகலப்பான மனநிலைக்குத் தாவி விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. முகநூல் மூலமும் இங்கும் கருத்திட்டு என்னை ஊக்குவிக்கிற உங்களுக்கு மனநெகிழ்வோட என் நன்றி நண்பரே...

      Delete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!