Pages

Ads 468x60px

8 August 2012

நல்லதாய் நாலு விஷயம்!


‘‘சும்மா மொக்கைக் கதையா எழுதிட்டு இருக்காதடி, படிக்கறவங்களுக்கு பிரயோஜனப்படற மாதிரி நல்லதா நாலு விஷயம் சொல்லு. உருப்படியா இதுவரைக்கும் நீ என்னமாவது எழுதியிருக்கியாடி?’’ அப்படின்னு சும்மாச் சும்மா கிண்டல் பண்ணி எங்க அம்மா ரொம்ப வெறுப்பேத்தறாங்க மை லார்ட்! அதனால இநத சிங்கம் சிலுத்துக்கிட்டு சிங்கிளாக் கௌம்பிருச்சு...

 இந்தத் தடவை உங்களுக்கு நல்லதா நாலு விஷயம் சொல்லப் போறதா முடிவு பண்ணிட்டேன்... ‘ஹும்...! உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை’ன்னு யாரோ முனகறாங்க. என்னங்க பண்றது... ஆல் இஸ் Fate! நீங்க தப்பவே முடியாது.  ஆனா பாருங்க... எனக்குப் பிடிச்ச நெல்லிக்காய்தான் இதுலயும் ஹீரோயின்! நெல்லியைப் பத்திச் சொல்லப் போறா இந்த கில்லி! எப்பூடி...? ஹி... ஹி... ஹி...

                                                                      (1)

லையில முடி கொட்டுதேன்னு கவலையா உங்களுக்கு? இல்ல... நிரூ மாதிரி அடர்த்தியான தலைமுடி வேணும்னு ஆசைப்படறீங்களா? ரெண்டுக்கும் நான் வழி சொல்றேன். உங்களோட தலைக்குள்ள ஏராளமான எண்ணங்கள் தொடர்ச்‌சியா ஓடறதால தலை சூடாயிடறது இயல்பான விஷயமுங்க. (இந்த வம்புக்குத்தான் நான் எதையும் சிந்திக்கறது இல்லன்னு நீங்க சொன்னா, அதுக்கு நான் பொறுப்பில்ல) முடி கொட்டறதையும் நிறுத்தி, தலைக்கு குளிர்ச்சியையும் தந்து கூந்தலின் வளர்ச்சியைத் தூண்டி... இப்படி த்ரீ இன் ஒன் வேலைய நெல்லிக்காய் பண்ணுதுங்கற தகவலை நான் சொன்னா ஆச்சரியப்படுவீங்களா!

முடி கொட்டுதேன்னு கவலைப்பட்டுக்கிட்டு கூரையப் பாத்துட்டு உக்காந்துட்டு இருந்தீங்கன்னா.. அந்தக் கவலையாலேயே இன்னும் அதிகமா முடி கொட்டிப் போகுமுங்க. அதனால கவலைய விட்டுட்டு, நான் சொல்ற இந்த நெல்லிக்காய் தைலத்தை தயார் பண்ணி தலையில தேச்சுப் பாருங்க... ‘இதென்ன மாயாஜாலம்?’ன்னு ஆச்சரியப் படுவீங்க நிச்சயமா!

பச்சை நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றிய கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்துக்கங்க. என்ன.. எடுத்துக்கிட்டாச்சா? இப்ப நாலையும் சேர்த்து கிரைண்டர்ல போட்டு / மிக்ஸில போட்டு நன்றாக அரையுங்க. அரைச்சதும் கிடைக்கற விழுதை மெல்லிய துணியில் மூட்டையாக் கட்டித் தொங்க விடுங்க. அதுக்கு நேர் கீழா ஒரு பாத்திரத்தை வையுங்க. அதுலருந்து துளித் துளியா சாறு சொட்டும். அந்தச் சாற்றைச் சேமிச்சு, அதோட அளவுக்கு மூன்று மடங்கு தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சுங்க. இந்தக் காய்ச்சி, ஆறிய எண்ணெயைத் தினமும் தலையில் தடவி தலைசீவினீங்கன்னா, முடி கொட்டறது நின்னு போறதோட மட்டுமில்லீங்க...அடர்த்தியா வளரவும் ஆரம்பிச்சுடும்.

                                                                        (2)

னிக்காலம் வந்துடுச்சுன்னா.... பெரும் கொடுமைங்க! சில பேருக்கு தலையில பனித் துளியைப் போல பொடுகுகள் வந்து இம்சையக் கொடுக்கும். இந்த இம்சையிலிருந்து விடுதலை கொடுத்து நிம்மதியைத் தருகிறது நான் சொல்ற இந்த நெல்லிக்காய் பேஸ்ட்:

வெந்தயப் பொடி - 1 ஸ்பூன், கடுக்காய் பொடி - அரை டீஸ்பூன், கடலை மாவு -  1 டீஸ்பூன்... இவ்வளவு தாங்க... எடுத்துக்கிட்டீங்களா? ரைட், இப்ப இந்த மூணையம் கலக்கற அளவுக்கு கொஞ்சம் எலுமிச்ச்பழச் சாறு, அந்தச் சாறோட அளவுக்கு நெல்லிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் ஆக்குங்க. இந்த பேஸ்ட்டை தயார் பண்ணினதும், தலைக்கு இதை ‘பேக்’ ஆகப் போட்டு 10 நிமிஷம் கழிச்சு தண்ணி விட்டு அலசுங்க. இப்படி ரெண்டு, மூணு தரம் செஞ்சு பாருங்களேன்... ‘நோ பொடுகு! இட்ஸ் கான்! போயே போச்சு! போயிந்தி!’ம்பீங்க.

இந்த பேஸ்ட்ல இருக்கற மூலப் பொருட்கள்ல வெந்தயம், கடுக்காய், கடலை மாவு மூணும் தலையை சுத்தப்படுத்தி செதிள்களை நீக்கற சக்தி கொண்டவைங்க. நெல்லிக்காய் தலைமுடியின் நுனிப் பிளவை நீக்கி முடியை கருகருன்னு வெச்சுக்கற சக்தி கொண்டதுங்க. எலுமிச்சைச் சாறுக்கு தலையில அரிப்பு எதுவும் வராம தடுக்கற சக்தி இருக்கு. அதனால இந்த பேஸ்ட்டை உபயோகிச்சா அனாவசியமா தலையச் சொறிய மாட்டீங்க. (அம்மாகிட்ட பணம் கேட்டு தலையச் சொறியறது இந்தக் கணக்குல வராது, சொல்லிப்புட்டேன்)

                                                                         (3)

நிறையப் பேருக்கு பெரிய பிரச்சனையா இருக்கறது இளநரைங்கற விஷயமங்க. தலைக்கு டை அடிச்சாலோ, அதுனாலயே பக்கவிளைவுகள் வேற வரலாம். இதுக்கும் கூட நெல்லிக்காய் ஒரு கை கண்ட மருந்தா இருக்குதுங்க. என்னது... எப்படின்னா கேக்கறீங்க?

மருதாணி இலை - 1 கப், கொட்டை நீக்கின பெரிய நெல்லிக்காய் - 5, முழு சீயக்காய் - 4, சுத்தம் செஞ்ச புங்கங்கொட்டை - 1 இதெல்லாத்தையும் நைட் ஃபுல்லா தண்ணியில ஊறப் போடுங்க. அடுத்த நாள் இதையெல்லாம் அரைச்சு விழுதாப் பண்ணிக்குங்க. இந்த விழுதை தலைக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிஷம் கழிச்சு அலசுங்க. வாரத்துக்கு ஒரு முறை இந்த மாதிரி குளியல் போட்டீங்கன்னா... இளநரைமுடி அத்தனையும் நல்லா கருகருன்னு ஆயிடும். அப்புறம் இளநரைன்ற பேச்சையே உங்க தலைமுடி எடுக்காதுங்க.

                                                                         (4)

ங்களுக்குப் பல் துலக்கற பழக்கம் உண்டுதானே...! நோ.. நோ... இதுக்கெல்லாம் கைய ஓங்கக் கூடாது. ஒத்துக்கறேன்... நீங்க ஒழுங்கா பல் துலக்கறவங்கதான்! சில பேருக்கு என்ன காரணத்தினாலேயோ பற்கள்ல காவி ஏறி, சிரிச்சாங்கன்னா மத்தவங்க பயப்படற மாதிரி இருக்கும் பற்கள். அதுனாலேயே உம்மணாமூஞ்சியா சிரிக்காம இருப்பாங்க. அவங்களை சிரிக்க வெக்கற சக்தி நம்ம நெல்லிக்காய்க்கு உண்டுங்கறேன்...

கடுக்காய் தோல், ‌தான்தோன்றிக்காய் (நாட்டு மருந்துக் கடைகள்ல கேட்டா கிடைக்குமுங்க), நெல்லிக்காய் மூணு ஐட்டத்தையும் சம அளவுக்கு எடுத்துக்கங்க. இதுங்களை வெய்யில்ல நல்லாக் காய வையுங்க. அப்புறம் நல்லா அரைச்சு, பொடியாக்கி வெச்சுக்கங்க. -இந்த பல்பொடியை உபயோகிச்சுப் பல் தேய்ச்சு வந்தீங்கன்னா... ‘முத்துப் போல பற்கள்’ன்னு சொல்லுவாங்களே... அந்த மாதிரி பளீர் வெண்மையில பற்கள் பிரகாசிக்குமுங்க. அப்புறமென்ன... ஒரே ஹி... ஹி... தான்!

எழுத்தாக்கம் : நிரூ,
ஆதாரம் : ஹெல்த் & பியூட்டி மாத இதழ், மே 2012.


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

62 comments:

 1. நாலும் நல்ல விசயங்கள்...
  (முக்கியமா நாலு-நாளும் செய்ய வேண்டும்)

  நன்றி… தொடர வாழ்த்துக்கள்... (TM 2)

  ReplyDelete
  Replies
  1. நல்ல விஷயங்களை ரசிச்சுப் பாராட்டின உங்களுக்கு மிக்க நன்றி ஸார்.

   Delete
 2. அற்புதமான பயன்படு தகவல்கள்..

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நல்ல தகவல்கள்ன்னு சொல்லி நன்றி சொன்ன உங்களுக்கு... My Heartful Thanks!

   Delete
 3. நல்லதாக நாலு விடயங்களை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி

  ஆமா யோசிச்சா முடி கொட்டுமா?

  ReplyDelete
  Replies
  1. நிறைய யோசிச்சா மூளை சூடாகி முடி கொட்ட வாய்ப்புண்டுன்னு புத்தகத்துல படிச்சேன் ஸார். அதனாலதான் நான்லாம் அதிகம் யோசிக்கறதில்லை... ஹி... ஹி....

   Delete
 4. நல்லதாய் நாலு விஷயத்துக்கு 4வது தமிழ்மண ஓட்டு போட்டது நாந்தனுங்கோ

  ReplyDelete
  Replies
  1. கருத்துச் சொல்லி என்னை ஊக்குவிச்சதோட வாக்கும் போட்ட உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஸார்.

   Delete
 5. நல்லத சொல்லற அளவிற்கு வளந்துட்ட இனி உன்னை குட்டி பெண்ணாக பார்ப்பதை விடுத்து வளரும் பெண்ணாக பார்கிறேன் ........

  எனக்கே உபயோகமாகியது உன் பதிவு
  எனக்கு முடி உதிருகிறது என்று மன கண்ணாடியில் பார்த்தாயோ நிரு ( வளரும் பெண்ணே )

  ReplyDelete
  Replies
  1. ஆமாக்கா... உடம்பு வளர்றதை விட அதிகமா அறிவை வளர்க்கணும்னுதான் ஆசைப்பட்டு முயற்சி பண்ணிட்டிருக்கேன். என் பதிவு உங்களுக்கும் பயன்பட்டால் ரொம்ப ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி.

   Delete
 6. டிப்ஸ் அருமைங்க...

  ReplyDelete
  Replies
  1. சீனியரான உங்களோட பாராட்டு எனக்கு தெம்பு தருது ஸார். மிக்க நன்றி.

   Delete
 7. // எழுத்தாக்கம் : நிரூ,// நிரூபணம்

  அருமை, நெல்லிக்காயின் பெருமை பற்றி தெரியும் இவ்வளவு பெருமைகளை இன்று தான் அறிந்து கொண்டேன்... பதிவு முழுவதும் நெளியில் மனம் கமளுகிறது, இயல்பான எழுத்து நடை அருமை ... படித்து ரசித்து வாக்களித்துவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. டியர் ஃப்ரெண்ட்... ரசிச்சுப் படிச்சு வாக்கும் கொடுத்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு, ரொம்ப ரொம்ப நன்றிப்பா,

   Delete
 8. எதை
  சொன்னாலும் அதை நகைச்சுவையுடன்
  கையாளும் தங்கை நீரூவின் வித்தை அழகு

  நல்ல விஷயங்கள் தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. போன பதிவுல உங்களைக் காணமேன்னு வருத்தப்பட்டேன். இப்ப நீங்க பாராட்டினதுல டபுள் குஷியாய்ட்டேன் அண்ணா. மிக்க நன்றி.

   Delete
 9. அருமையான நாலு நல்ல தகவல்கள்
  அதுவும் அழகான நகைசுவையுடன்... ம்ம்ம்ம் நிரூ சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. என்னை உற்சாகப்படுத்தற கருத்துக்கள்ல உங்க கருத்துக்குத் தனியிடம் உண்டு விஜிம்மா. பாராட்டினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

   Delete
 10. சிறப்பான பயனுள்ள தகவல்கள்! நன்றி!

  இன்று என் தளத்தில்!
  சென்ரியுவாய் திருக்குறள்
  எம்புள்ளைய படிக்கவைங்க!
  உடைகிறது தே.மு.தி.க
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. உங்க பாராட்டுல ரொம்ப ஹேப்பியாய்ட்டேன் ஸார். மிக்க நன்றி.

   Delete
 11. பியூட்டிபுள்..

  ReplyDelete
 12. அடடே...இப்பிடியும் சொல்றீங்களா???அசத்திட்டப்பா...!எங்க போனாலும் இந்த நகைச்சுவை உணர்வு கூடவே வருகிறது.வாழ்த்துக்கள் நிரு!!!சந்திப்போம்.!

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவை உணர்வோட எழுதியிருக்கேன்னு ரசிச்சுப் படிச்சு எனக்கு தெம்பளிச்ச நட்பே... ரொம்ப ரொம்ப நன்றி.

   Delete
 13. நிச்சயமாக பயனுள்ள பதிவு
  அவசியமான பதிவும் கூட
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அருமையா எழுதற உங்க கிட்டருந்து பாராட்டு பெறுவதற்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும். வாக்கும் அளிச்சு உற்சாகப்படுத்தற உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஸார்.

   Delete
 14. தலைமுடி வளர...நல்ல விஷயம் சொன்ன நிரஞ்சனாக்குட்டிக்கு இன்னும் நிறையத் தலைமுடி வளர வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... எனக்கும் அதுதான் ஆசை. இப்ப இருக்கறதைவிட அடத்தியா இடுப்பையும் தாண்டி வளரணும்னு. வாழ்த்தின உங்களுக்கு My Heartful Thanks!

   Delete
 15. நல்ல தகவல்கள். நானும் இங்கு முடி எங்கும் உதிராமல் இருக்க ஒரு ஐடியா சொல்லுறேன் நல்லா கேட்டுகுங்க . முடி உதிராம இருக்க மொட்டை போட்டுகொள்ளுங்கள் அப்புறம் பாருங்க முடியே உதிராது/ என்ன என் ஐடியா சூப்பரா இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... இந்த மாதிரி அரிய ஆலோசனை சொல்ல உங்களைத் தவிர வேற யார் ஸார் இருக்கா? ஜுப்பரு! ரொம்ப நன்றி ஸார் வந்து கருத்திட்டு என்க்கு தெம்பளிச்சதுக்கு.

   Delete
 16. நெல்லிக்காய் என்றால் இங்கு பெரிய நெல்லிக்காயைத்தானே குறிக்கும் நிரஞ்சனா? மிகவும் அருமையான குறிப்புகள். என்னைப் போல் பலருக்கும் உபயோகமா இருக்கும். நன்றிம்மா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாக்கா... பெரிய நெல்லிக்காய் தான். அரைநெல்லி அல்ல. பயன்படுத்திப் பாருங்க. ரொம்ப ரொம்ப நன்றி.

   Delete
 17. நல்ல டிப்ஸ்,வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ரொம்ப நன்றி ஸார்.

   Delete
 18. சூப்பர் டிப்ஸ். நிரூமா.

  டப்பா செட்டிக் கடையை வளைத்துப் போடவேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. டப்பா செட்டிக் கடைங்கறது எதும் நாட்டு மருந்துக் கடையாம்மா? வளைச்சுப் பிடிச்சு பயன்படுத்திப் பாருங்க. என்னை உற்சாகப்படுத்தின உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

   Delete
 19. அருமையான பதிவுங்க! பகிர்வுக்கு நன்றி! முடி உதிரும் பிரச்சனைக்கு எண்ணெயை தயார் செய்யப்போகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் பலன் கிடைக்கும யுவராணி. ரசிச்சு வாழ்த்தின உஙகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

   Delete
 20. நிரு எப்படி அம்மு இருகுரிங்க ....மீ லாம் ஓயே ஓயாத உழைப்பு ....

  யோகா மாமா ஆளையே காணுமே தேடுநீங்கன்களா எங்கயாவது ....ஹ ஹாஹ் ..மாமா பார்த்தாங்க பிச்சு பிச்சு ...

  சரி டா பதிவு அழகா உருக்கு ...அழகா எழுதுங்க அம்மு ....

  பயனுள்ள பதிவு ஆனா மீ க்கு லாம் முடியே கொட்டுறது இல்ல டா ...நோ திங்கிங் ....

  துளசி இலை லாம் அம்மா கிட்ட சொல்லுறேன் நிரு பார்க்கணும் ...


  ஹேய் நிரு சென்னை பதிவர்கள் சந்திப்புக்கு போறிங்களா நீங்க ...

  ReplyDelete
  Replies
  1. உங்களை இங்க பாக்கறதே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு கலைக்கா. முடிறயப்பல்லாம் வாங்க. உங்களுக்கும் என்னைப் போல முடி கொட்டற பிரச்னை இல்லங்கறதுல ரொம்ப சந்தோஷம் எனக்கு, சென்னை பதிவர்கள் சந்திப்புக்கு நான் வரலைக்கா. 19ம் தேதின்னா வரதா இருந்தேன். 26ல குடும்பத்தோட வெளியூர் போக வேண்டியிருக்கு. முன்னாலயே முடிவு பண்ணதால மாத்த முடியாத பயணம். அதனால எல்லாருக்கும வாழ்த்துக்களை மட்டும் சொல்லிக்கறேன். ரொம்ப நன்றிக்கா,

   Delete
 21. அவ்வையார் காலத்திலிருந்தே நெல்லிக்காய் பிரபலம்தான்

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா. நிரஞ்சனா காலத்திலும் நெல்லிக்கனி பயனுள்ளதாகவே இருக்கிறது. என்க்கு உற்சாகம் தந்த உங்களோட வருகைக்கு ரொம்ப சந்தோஷததோட என் நன்றி.

   Delete
 22. முதல் குறிப்பில், கடுக்காயை கொட்டை நீக்கினாலும் நேரடியாக மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ அரைப்பது சிரமம்.

  ஒன்று கல் அம்மியில் அரைக்கலாம் அல்லது நெல்லி,கருவேப்பிலை சாறெடுத்து அதில் கடுக்காயை ஊறவைத்து பின் அரைக்க வேண்டும்.

  இரண்டாவதாக..
  என் ஜன்னலுக்கு வெளியே என்று உங்கள் வலைமனையின் பெயரை இப்போது மாற்றியிருக்கிறீர்களா என்ன? முதலிலேயே பார்த்த நினைவு இல்லை.ஏற்கனவே மாலன் என் ஜன்னலுக்கு வெளியே என்ற பெயரில்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்.பதிவுலகில் வேறொருவரின் பதிவுத் தலைப்பைத் தவிர்ப்பது ஒரு மரபு !

  ஒரு தகவலுக்காக.

  ReplyDelete
  Replies
  1. அவர் வலை சென்று பார்த்தேன். என் ஜன்னலுக்கு வெளியேன்னு ஒரு பகுதி தான் எழுதியிருக்கார். தளத்தோட பேர் மாலன்னுதானே இருக்கு. எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கறதால மாத்த விரும்பலை ஸார். மிக்க நன்றி.

   Delete
 23. உபயோகமான குறிப்புகள்!

  ReplyDelete
  Replies
  1. சந்தோஷம் தந்த உங்களின் வருகைக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியோட என் நன்றிங்க.

   Delete
 24. உபயோகமான குறிப்புகள். நீங்கள் படித்ததை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று நினைத்த எண்ணத்திற்கு சபாஷ்.

  அறிவன் சார்.... மாலன் வலைத்தள லிங்க் கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. உங்களோட பாராட்டு எனக்கு ரொம்பவே சந்தோஷமாயிருந்துச்சு ஸ்ர் மிக்க நன்றி.

   Delete
 25. http://www.maalan.co.in/topiclist.php?catid=10

  மாலன் பக்கம் கூகிளிட்டு தேடி எடுத்து விட்டேன். நன்றி!

  ReplyDelete
 26. உண்மையிலேயே உபயோகமான குறிப்புகள ! இந்த கடுக்காய், தாந்தோன்றிக்காய் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கேட்டால் கொடுப்பார்களா ? அதோடு சென்னையில் இந்த நாட்டுமருந்துக் கடைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று தனி ஒரு பதிவு இடுமாறு ' முடியால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் ' சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் ! உங்கள் பதிவுகளைப் படித்து எனக்கும் கொஞ்சமாக நகைச்சுவையுணர்வு எட்டிப்பார்க்கிறது ! நன்றி !

  ReplyDelete
  Replies
  1. நாட்டு மருந்துக் கடைகள் எங்கெங்க இருக்குன்னு தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறேன் ஸார். பெசண்ட் நகர் சிக்னல் கிட்ட ஒண்ணும். வெஸ்ட் மாம்பலத்துல ஒண்ணும் பெரிய கடைங்களை பார்த்திருக்கேன். ரொம்ப ரொம்ப சந்தோஷம் தந்த உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 27. தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! என் வலைப்பூவிற்கு வருமாறு தங்களை அழைக்கிறேன்!
  http://dewdropsofdreams.blogspot.in/2012/08/blog-post_12.html

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் யுவராணி. உங்களின் அன்பில் மகிழ்ந்து என் நன்றியை தெரிவிச்சுக்கறேன்.

   Delete
 28. உண்மையிலேயே உபயோகமான குறிப்புகள !

  ReplyDelete
  Replies
  1. பயனுள்ள குறிப்புகள்னு சொன்ன உங்களுக்கு சந்தொஷத்தோட என் நன்றி.

   Delete
 29. மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.


  http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.ht

  அன்புடையீர். விருது ஒன்றைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
  தயவுசெய்து வருகை புரிந்து ஏற்றுக்கொள்ளவும்.

  நன்றி,

  அன்புடன்
  VGK

  ReplyDelete
  Replies
  1. என் மதிப்புக்குரிய நீங்கள் என்னையும் நினைவில் கொண்டு விருதினைப் பகிர்ந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது. உங்களுக்கு மனசெல்லாம் நிறைஞ்ச சந்தோஷத்தோட என் நன்றி ஐயா.

   Delete
 30. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
  Replies
  1. விருது பெற்ற என்னை வாழ்த்திய விருது பெற்ற உங்களுக்கு மிக்க நன்றி.

   Delete
 31. ஹாய் நீரு!! சூப்பரான பதிவு.. எனக்கு ரொம்ப உபயோகம் 1 & 2 , இதற்க்கு முன்பு இப்படி சோதித்ததில்லை எதையும், முதல் முறையாக இதை செய்து பார்க்க போகிறேன்!!!
  அடுத்த 3 & 4 எனோட friends அண்ட் Colleague கு உபயோகமா இருக்கும் நினைக்கறேன்!!!!


  மிக்க நன்றி.. பயனுள்ள பதிவிற்கு!!!!

  ReplyDelete
 32. நெல்லி பத்தி அள்ளிவிட்ட கில்லியே, பயனுள்ள பதிவு!

  ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!