Pages

Ads 468x60px

18 August 2012

மகிழ்ச்சிக்கு மேல மகிழ்ச்சி!

டந்த ஒரு வாரமா என்னால வலைப் பக்கம் அதிகம் உலவ இயலாமல் போயிடுச்சு. ஆனா அடுத்தடுத்து ரெண்டு சந்தோஷ நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில துள்ளிக் குதிக்க வெச்சிடுச்சு. என் தங்கை போன்ற யுவராணி தமிழரசன் எனக்கு ‘ஸன்ஷைன் அவார்ட்’ கொடுத்திருக்காங்க.


தைப் பார்த்து சந்தோஷமா நன்றி சொல்லி, அந்த மகிழ்ச்சி அடங்குவதற்கு முன்னாலேயே நான் ரொம்ப மதிக்கற சிறுகதை மன்னர் வை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு ‘லீப்ஸ்டர்‘ அவார்டைக் கொடுத்து இன்னும் சந்தோஷக் கடல்ல ஆழ்த்திட்டாரு.


ந்த ரெண்டு விருதுகளையும் என்மேல இருக்கற அன்பால என்னோட பகிர்ந்துட்டிருக்கற இந்த உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்னும் பொறுப்பா நல்ல விஷயங்கள் நிறைய எழுதணும்கற உணர்வு மனசுக்குள்ள இப்ப பயமா வளர்ந்துட்டிருக்கு. எனக்கு விருது தந்த இவங்க ரெண்டு பேருக்காகவும் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதியதுல எனக்குப் பிடிச்ச இந்த விஷயத்தை இங்க பகிர்ந்துக்கறேன்.

                    மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?

ன் மனம் தேவையில்லாததை எல்லாம் நினைக்கிறது. என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது? தியானம் பழக வேண்டுமென்றால் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்களே..?

முதலில் உங்கள் மனதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? கெட்ட விஷயங்களை நினைக்கக் கூடாது, மனதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும் என்றெல்லாம் ஆன்மீகவாதிகள் ‌என்று சொல்லப்படுபவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி முயற்சிக்கும் போதெல்லாம் மனம் அந்த விஷயங்களைத்தான் முழு நேரமும் நினைக்க ஆரம்பிக்கும். உங்கள் மனதின் செயலைப் பொறுத்தவரையில் வகுத்தல், கழித்தல் எல்லாம் கிடையாது. அங்கே கூட்டல், பெருக்கல் மட்டும்தான். உங்கள் மனதிலிருந்து அதிரடியாக ஓர் எண்ணத்தையாவது உங்களால் நீக்க முடியுமா? முடியவே முடியாது. இல்லையா? ஏதாவது ஒன்றைக் குறித்து இன்று நினைக்கக் கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால் அன்று முழுவதும் அதைப் பற்றியேதான் நினைப்பீர்கள். மனதின் அடிப்படைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் இப்படித்தான் தவறாக முயறசித்துக் கொண்டு இருக்கிறோம்.

தியானம் செய்யும் போது என் இதயம் துடிப்பதை நிறுத்த வேண்டும் என்று எப்போதாவது எண்ணுகிறீர்களா? என் சிறுநீரகம் தன் செயலை நிறுத்த வேண்டும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கிடையாது. அவை தத்தம் செயலைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தீர்கள் தானே? பிறக மனமும் தனது வேலையைச் செய்ய நீங்கள் ஏன் அனுமதிக்கக் கூடாது? உங்களால் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. இதுவரை யாராவது தன் மனதைக் கட்டுப்படத்தி இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாரும் அப்படிச் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் முடியாது.

இந்த மனம் ஒரு புழுவிலிருந்து, ஒரு பூச்சியிலிருந்து, ஒரு குரங்கிலிருந்து தற்போது மனிதன் வரை இத்தகைய பரிணாம வளர்ச்சி அடைய லட்சக்கணக்கான வருடங்கள் எடுத்திருக்கிறது. இவ்வளவு மகத்தான முயற்சிக்குப் பின் இத்தகைய மனம் .உங்களுக்குக் கிடைத்திருக்கும் போது அதைக் கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கிறீர்கள்? அது முழுத் தீவிரத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால் அற்புதமாக இருக்க வேண்டிய மனம் தற்போது உங்களுக்குத் துன்பத்தை உற்பத்தி செய்கிற இயந்திரமாக மாறிவிட்டத.

உங்களின் எல்லாத் துன்பங்களும் உங்கள் மனதில்தானே உற்பத்தியாகின்றன? மனதை எப்படி இயக்குவது என்று உங்களுக்குத் தெரியாததால்தான் அங்கிருந்து துன்பங்கள் உற்பத்தியாகின்றன. இதே மனதை வைத்து ஆனந்தம் எப்படி உற்பத்தி செய்வது என்று தெரிந்து விட்டால் பிறகு மனதைக் கட்டுப்படுத்த எண்ணுவீர்களா? ஒருபோதும் மாட்டீர்கள்! எனவே உங்கள் மனதை எப்படிச் சரியாக இயக்க வேண்டும் என்பதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றைக கடைப்பிடித்தால் உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் சிறிய இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை நீங்கள் உருவாக்கி விட்டால் பிறகு உங்கள் துன்பங்கள் அனைத்தும் நிரந்தரமாக முடிவுக்கு வந்து விடும்.


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

53 comments:

 1. தாங்கள் விருதுபெற்றமைக்கும்
  அருமையான பதிவினைக் கொடுத்தமைக்கும்
  நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அருமையான பதிவு என்று சொல்லி மகிழ வைத்து விருது பெற்ற என்னை வாழ்த்திய உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஸார்.

   Delete
 2. ரெண்டு விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சியோட என்னை வாழ்த்தின உங்களுக்கு ரொம்ப சந்தோசத்தோட என் நன்றிங்க.

   Delete
 3. விருதுகள் பெற்றதற்கும், நல்லதொரு கருத்தை பகிர்ந்து கொண்டதற்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

  ReplyDelete
  Replies
  1. தவறாம என்னை ஆதரிக்கற நீங்க வாழ்த்தினதுல ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியோட என் நன்றி.

   Delete
 4. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. இரண்டு விருதுகள் ஒரே நேரத்தில் பெற்றமைக்கு
  என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஃபிரெண்ட்.

  இன்னும் நீங்கள் பல விருதுகள் பெற்று வாழ
  வாழ்த்துகிறேன்ப்பா.

  ReplyDelete
  Replies
  1. நண்பனின் வாழ்த்து எப்பவுமே டபுள் ஜாலிதான். My Heartful Thanks to you!

   Delete
 6. விருதுக்கு வாழ்த்துகள்.
  சத்குருவின் ஆலோசனையைப் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போல சீனியரின் வாழ்த்து கிடைக்க கொடுத்து வச்சிருக்கேன் நான். மிக்க நன்றி ஸார்.

   Delete
 7. விருதுக்கு வாழ்த்துக்கள் நிரூ!

  ReplyDelete
 8. சத்குருவின் அனுபவம் அழகிய உண்மை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எனக்குப் பிடிச்ச கருத்துக்கள் உங்களுக்கும் பிடிச்சிருக்குன்றதுல கொள்ளை மகிழ்ச்சி எனக்கு.

   Delete
 9. விருதினை அன்போடு ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள். அடுத்த வாரம் மற்றொரு விருது தங்களுக்கு வழங்கலாம் என முடிவு செய்துள்ளேன். அட்வான்ஸ் வாழ்த்துகள். ஒரே நேரத்தில் இரண்டு விருதுகள் மிகவும் மகிழ்ச்சிகள். பாராட்டுக்கள்.

  //உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றைக கடைப்பிடித்தால் உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் சிறிய இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை நீங்கள் உருவாக்கி விட்டால் பிறகு உங்கள் துன்பங்கள் அனைத்தும் நிரந்தரமாக முடிவுக்கு வந்து விடும்.//

  பயனுள்ள பதிவு

  அன்புடன் vgk

  ReplyDelete
  Replies
  1. ஹை... இ்நத விருதுக்கே தலைகால் புரியாம குதிக்கறேன்னு மம்மி சொன்னாங்க. இன்னொண்ணுன்னா... மகி்ழ்ச்சில பூரி பூரின்னு பூரிச்சு்ப போய்டுவேன் ஐயா. வாழ்த்தினதுக்கும் விருது தந்து மகிழ்ச்சியை அள்ளித் தருவதற்கும் ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப மகிழ்ச்சியோட என் நன்றி.

   Delete
 10. விருதுகள் இன்னும் இன்னும் வாங்கிக் குவிக்க என் அன்பு வாழ்த்துகள் நிரோக்குட்டி.மனதைக் கட்டுப்படுத்துவது என்பதல்ல அதன் வேகத்தைக் குறைப்பது அவ்வளவும்தான்.நான் நிறையவே பாட்டுகள் கேட்பேன்.மனம் அமைதியாயிடும் !

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்கக்கா. மனசைக் கட்டுப்படுத்தாதீங்க, முறைப்படுத்துங்கன்னு தான் சத்குருவும் சொல்றார். இசை கேட்டு அமைதியாவது எனக்கும் உங்களுக்கும் உள்ள ஒற்றுமை. ரொம்ப மகிழ்ச்சி தந்த உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.

   Delete
 11. Replies
  1. வயசுலயும் அனுபவத்துலயும் கூடிய தங்களோட பாராட்டை நான் ஆசியா எடுத்துக்கறேன். மிக்க நன்றி ஐயா.

   Delete
 12. வாழ்த்துக்கள் நிரஞ்சனா... இந்த சின்ன வயசுல எவ்வளவு திறமை! (கவனிக்க ஆச்சரியக் குறி :-) ). சுத்திப் போடுங்க... எங்க கண்ணு பட்டுறப் போகுது... ஹா ஹா ஹா :-)

  ReplyDelete
  Replies
  1. திரு்ஸடிக்கென்ன... சுத்தி போட்டுட்டாப் போச்சு... எனக்கில்ல... என்னை மகிழ்வோட வாழ்த்தின உ்ஙகளுக்கு. மிக்க நன்றி நண்பா.

   Delete
 13. விருதுபெற்றமைக்கு வாழ்த்துக்கள்! நல்ல பகிர்வு!நன்றி!
  இன்று என் தளத்தில்
  திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
  http://thalirssb.blogspot.in/2012/08/1.html

  ReplyDelete
  Replies
  1. என்னை வாழ்த்தின உங்களுக்கு மகிழ்வான என் நன்றி.

   Delete
 14. விருதுபெற்றமைக்கும் அருமையான பதிவினைக் கொடுத்தமைக்கும்
  நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நிரஞ்சனா...
  விருதுகள் இன்னும் இன்னும் வாங்கிக் குவிக்க என் அன்பு வாழ்த்துகள் நிரஞ்சனா...

  ReplyDelete
  Replies
  1. நீ வாழ்த்தின முகூர்த்தம் எனக்கு அடுத்த விருது கிடைச்சிடுச்சு விஜி. மிக்க நன்றி.

   Delete
 15. வாழ்த்துக்கள் நிரூ

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ரொம்ப நன்றிக்கா,

   Delete
 16. தாங்கள் விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ! ஜாக்கி குரு வாசுதேவ் ஒரு நிறை நிலையை அடைந்து விட்டார். ஆகவே அவரால் தன் மனதை சுதந்திரமாக அலைய விட்டு அது பயணிக்கும் பாதைகளை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க முடியும் ! அதையே அவர் சாதாரண மனிதர்களுக்கு சொல்லும்போது, கொஞ்சம் நெருடுகிறது !
  மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று அவர் சொல்வதை ஒரு பாமரனான நான் எப்படி எடுத்துக் கொள்ளும் விதமும் சற்று பாமரத்தனமானது !
  உதாரணமாக , சிலநேரங்களில் எனக்கு என் பாஸின் மண்டையில் ஓங்கி கொட்டுக்காய் வைக்க வேண்டும் போல உள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள், என்னால் அதை செயல் படுத்த முடியுமா ? கொஞ்சம் அவரைக் கேட்டு சொல்லுங்கள் !

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி சமாச்சாரங்களில் இடம் பொருள் ஏவல் பார்த்துக் கொள்ளுங்கள் என அவர் சொல்லுவார்னு நினைக்கிறேன். ஹி... ஹி... ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்துவது நமக்கெல்லாம் மிகச் சிரமம்தான். மிக்க நன்றி.

   Delete
 17. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
  Replies
  1. My Heartful Thanks to you for your continous encouragement to me. Thankyou verymuch Madam.

   Delete
 18. உங்களது பதிவில் அனைத்து டூல் பார்களையும் ஓரிடத்தில் வருமாறு அமைத்திருக்கிறீர்களே, அது எப்படி என்பதற்கான உதவிப் பக்கம் ஏதும் இருந்தால் அறியத் தருமாறு வேண்டுகிறேன்.
  nanbann@gmail.com க்கு மின்மடலிட முடியுமென்றால் மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நண்பரே... கீழ்க்காணும் லி்ஙகைத் தொடர்ந்து சென்று படியுங்கள். இதன் படிதான் நான் செய்தது. உங்களுக்கும் பயன்படும். மிக்க நன்றி.

   http://www.tamilvaasi.com/2012/05/vote-buttons-version-2.html

   Delete
 19. இரண்டு விருதுகள் அடுத்து அடுத்துப் பெற்றதற்கு வாழ்த்துக்கள் நிரஞ்சனா!
  சத்குரு ஜக்கி அவர்களின் வார்த்தைகள் மிகவும் ஆழமானவை. திரும்பத்திரும்ப படித்தால் தான் புரியும். அவரது அறிவுரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
  என் வலைத்தளம் ranjaninarayanan.wordpress.com. வருகை தந்தால் மகிழ்வேன்!

  ReplyDelete
  Replies
  1. வயசுலயும் அனுபவத்துலயும் மூத்த நீங்க வாழ்த்தினதுல ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிம்மா. அவசியம் உங்கள் வலைக்கு நானும் வருகிறேன். நன்றி.

   Delete
 20. கடமையை செய் பலனை எதிர்பாராதே
  அப்போது பலன் உன் கைகளில் கிடைக்கும்
  இதுவும் ஞானிகளின் வாக்குதான்

  எதிர்பார்பில்லா அன்பை கொடுக்கும் போது அது இரட்டிப்பாய் நம்மிடம் வந்து சேரும் அப்படிதான் இந்த விருதுகளும் உன் அன்பிற்கான பரிசு டா .........

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகையும் வாழ்த்தும் எப்போதும் எனக்கு ஸ்பெஷலானவைதான். இப்போதும் அப்படியே ரொம்ப சந்தோஷப்படறேன்ககா.

   Delete
 21. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ

  நல்ல ஒரு கருத்தை பகிர்ந்தமைக்கும்
  நன்றிகள் சகோ

  ReplyDelete
  Replies
  1. அண்ணா... உங்களின் பாராட்டு என்னை ரொம்பவே மகிழ்ச்சி அடைய வெச்சிடுது. நன்றிண்ணா.

   Delete
 22. ம்ம்ம் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பல! பதிவு சிறப்பு! சகோ!

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பதிவைப் படிச்சு ரசிச்சு, என்னை வாழ்த்தின உங்களுக்கு மிக்க நன்றி.

   Delete
 23. நரும்மா.வாழ்த்துக்கள்.ரொம்பபெரியாளா வருவீங்க பாருங்க.உங்க பூரிப்பில கலந்து கொள்ளுறதில இரட்டிப்பு மகிழ்ச்சி.அட்வான்ஸ் விருதுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  மனசு முதல்ல அடம்பிடிக்கும்.அப்புறம் அன்னா கொஞசம் அதட்டலா கொஞ்சம் கெஞ்சலா கொஞ்சம் சொன்னா அதுவும் ஒத்துக்கும்.அடக்குறத விட்டுட்டு கட்டுப்படுத்திறது தான் சிறந்த வழி.இதை அழகா சொல்லிருக்கீஙக.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஜகியின் வார்த்தைகளை ரசிச்சு என்னையும் வாழ்த்தின உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

   Delete
 24. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. எனக்காய் தகவல் சொல்லி வாழ்த்தின உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஸார்.

   Delete
 25. உங்கள் வலை பூவை வலைசரத்தில் அறிமுகம் செய்திருகிறேன் வந்து பார்த்து கருத்திட்டு செல்லுங்கள் .....புதிய உறவுகளை நட்பாக்குங்கள்

  ReplyDelete
  Replies
  1. புதிய உறவுகளை நட்பாக்க இதோ கிளம்பிட்டேன்க்கா.

   Delete
 26. உங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்
  http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_28.html
  என் தளம்
  http://kovaimusaraladevi.blogspot.in/

  ReplyDelete
 27. மிகுந்த தாமதமான பதிலுக்கு மன்னித்துவிடுங்கள் அக்கா! எனது அன்பான விருதினை ஏற்றுக்கொண்டமைக்கும் அருமையான பதிவிற்கும் எனது நன்றிகள் அக்கா! நான் தொடர்ந்து செல்லும் பக்கங்களின் விட்டு போன பதிவுகளை தவிர்த்து புதிய பதிவுகளை முடித்துவிட்டு இப்பொழுதுதான் விட்டுப்போன பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்! தாமதத்திற்கு மன்னிக்கவும்!
  நானும் பலமுறை மனது வேதனை படும்படியான சில சம்பவங்களை விட்டு விலகி இருக்க போராடி இருக்கிறேன்! முடியாமல் தோற்றும் இருக்கிறேன்! பின் என்னுள் இருந்தே என்னை வேறுபடுத்தி என்னையே அலச ஆரம்பித்தேன்!!! இப்பொழுது என்னக்குள்ளாகவே பல நல்ல மாற்றங்களை உணர்கிறேன்! இதை பற்றி ஒரு பதிவு எழுதவே நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன்! தாங்கள் முதல் புள்ளியை வைத்துவிட்டீர்கள்!

  ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!