Pages

Ads 468x60px

27 July 2012

உங்களுக்கு பிளட்பிரஷர் இருக்கா?

ன்மீகம் பற்றிய என் கருத்துக்களை நான் சென்ற பதிவில் வெளியிட்டது என் நண்பர்களில் பலருக்கு கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது. அதில் இருந்த தவறுகளை பொருட்படுத்தாமல் கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி! நண்பர்களின் கருத்துக்களிலிருந்து நான் கற்றுக் கொண்டதும் தெளிவடைந்ததும் பற்றி தனியாகப் பதிவே எழுதுகிறேன். அதனால் கோபமும் வருத்தமும் அடைந்த அனைவருக்கும்.... ஸாரி! வெரிவெரி ஸாரி! கருத்துக்கள் மாறுபட்டாலும் வார்த்தைகளைக் கையாள்வதில் கவனம் வேண்டும் என்பது நான் கற்ற பாடம். (நீரூ... டைரியத் தூக்கிக் கடாசுடி லூசு!). அடுத்து ஒரு அதிபயங்கர மொக்கையோட வர்றேன்.... இப்ப இங்க உங்களுக்கு உபயோகமான ஒரு மேட்டர் தர்றேன்!

                           ரத்த அழுத்தத்தை விரட்டும் வழி

ம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விஷயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவ நிபுணர் குமரன் அப்புசாமி. ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னது அந்தக் காலம். இப்போது 25 வயதிலேயே ஹார்ட் அட்டாக் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை.

ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னைதான். வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹார்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது. சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

முதலில் உங்கள் உடல் எடை, உயரத்துக்கு ஏற்றதுதானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும். சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும். இதேபோல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும். மதுவை விட முடியாதவர்கள் மதுவின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும்.

ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.

தவறான உணவு முறை காரணமாக உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றுகிறது. மன உளைச்சல், டென்ஷன் மற்றும் அதிகபட்ச கோபமும் ரத்த அழுத்த பிரச்னையை உருவாக்குகிறது. நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் வரலாம். இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, பக்கவாதம்கூட ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்னைகளை துவக்கத்திலேயே தடுக்க அதிக உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு டயட்டில் கவனம் செலுத்தவும். உடலில் நல்ல கொழுப்பு சேருவதற்கான உணவுகளை கண்டறிந்து சேர்த்துக் கொள்ளவும்.

உப்பு அதிகமாக சேர்க்கப்படும் ஊறுகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு தயாரிப்பில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைக்கவும். அசைவ உணவு அடிக்கடி எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்தவும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்ப்பது அவசியம். பால் மற்றும் பால் பொருட்களின் அளவையும் குறைப்பது நல்லது. கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளவும். பீசா, பர்கர் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் வாக்கிங் அவசியம்.


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

51 comments:

 1. அனைவருக்கும் பயன்படும்
  அருமையான பதிவு
  தொட்ர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பதிவை முதல்ல படிச்சு நல்லாருக்குன்னு சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி ஸார்.

   Delete
 2. பலருக்கும் பயன் தரும் பதிவு.

  இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. என்னைப் பாராட்டின உங்களுக்கு.. My Heartful Thanks Teacher!

   Delete
 3. // நீரூ... டைரியத் தூக்கிக் கடாசுடி லூசு// அது உங்க பொக்கிஷம் யாருக்காவும் அதயெல்லாம் தூக்கி போட்ராதீங்க...

  //ரத்த அழுத்தத்தை விரட்டும் வழி// டைரி எழுதறதும் ஒரு முக்கியமான வலி நு நான் படிச்சிருக்கேன்... மனசில் இருக்கும் கவலைகள் குறைன்ஜாலே பாதி அழுத்தம் குறைஞ்சிரும்....

  நல்ல அழுத்தமான பதிவு வாழ்த்துக்கள்

  த ம என் வோட்டும் சேர்ந்து கொண்டது

  ReplyDelete
  Replies
  1. என் எழுத்தை ரசிச்சுப் படிச்சதோட வாக்கும் அளித்த உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சீனு,

   Delete
 4. Very Good Information...

  எனக்கு இருக்குங்க.. இந்த உணவை முயற்சிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் பலன் கிடைக்கும சங்கவி ஸார். முயற்சிக்கிறேன்னு சொன்னதுல ரொம்ப ரொம்ப சந்தோஷததோட உங்களுக்கு என் நன்றி.

   Delete
 5. பயன் உள்ள தகவல் நிரூ!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டின உங்களுக்கு மிக்க நன்றி நேசன் அண்ணா...

   Delete
 6. பயன் தரும் பதிவு...
  அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்...
  இவ்வளவையும் செய்தால் கூட பலருக்கு பிளட்பிரஷர் குறைவதேயில்லை... ஏன்...? (அதற்கு ஒரு பதிவு எழுதணும்)... நன்றி...
  (த.ம. 5)

  ReplyDelete
  Replies
  1. ஆம்... அதற்கு மனதும் ஒத்துழைக்க வேண்டும். எதற்கும் பதட்டப் படாமல் மிஸ்டர்/மிஸ் கூல் ஆக இருக்க வேண்டும் என பலது இருக்கிறது. சரியான கருத்துச் சொன்ன உங்களுக்கு ரொம்ப நன்றி.

   Delete
 7. உன் பதிவை படிச்சாலே ரத்த அழுத்தம் அதிகரிக்குமே அதுக்கு என்ன பண்றதுன்னும் கொஞ்சம் சொல்லிப்புடு தாயீ

  ReplyDelete
  Replies
  1. அவசர குடுக்கை சகோ ராஜி நான் போட வேண்டிய பின்னோட்த்தை நீங்க திருடி போட்டூட்டிங்க இப்ப நான் என்ன பின்னூட்டம் போடனுமுனு யோசிக்கையிலே பிரஷர் சும்மா ஏறுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

   Delete
  2. அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது ராஜிக்கா.., It's all Fate!

   மதுரைத் தமிழன் ஸார்... அவங்க மதுரை மீனாக்ஷின்னு நீங்கதானே சொன்னீங்க... அதனால நோ ப்ரஷர்... கூல்!

   Delete
 8. நல்ல பயனுள்ள பதிவு
  நல்ல ஒரு நலக் குறிப்பு நீரு

  ReplyDelete
  Replies
  1. சந்தோஷம் தந்த உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணா.

   Delete
 9. சரி தவறு என்று எதுவும் கிடையாது. ஒருவருக்கு சரி என்பது இன்னொருவருக்கு தவறு. ஆனால் சரியோ தவறோ, மன்னிப்பு கேட்கும் குணம் யாருக்கும் வராது. அந்த வகையில் உங்களுக்கு ஒரு சல்யூட்.

  ரத்த அழுத்தத்தை பற்றி அருமையான தகவல்களோடு பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. சல்யூட் மற்றும் வாழ்த்தியதில் மகிழ்வோடு உங்களுக்கு நன்றி சொல்லிக்கறேன் நண்பரே...

   Delete
 10. பயனுள்ள பகிர்வு நிரஞ்சனா. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பயனுள்ள பகிர்வென்று சொல்லிப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

   Delete
 11. கருத்துக்கள் மாறுபட்டாலும் வார்த்தைகளைக் கையாள்வதில் கவனம் வேண்டும் என்பது நான் கற்ற பாடம்.“ நல்ல பாடம் தான் ஃபிரெண்ட்.

  இரத்த அழுத்தத் தகவல் நல்ல பயனுள்ள பதிவு நிரஞ்சனா.
  வாழ்த்துக்கள்ப்பா.

  ReplyDelete
  Replies
  1. உங்களோட கருத்தும் வாழ்த்தும் சந்தோஷம் தந்தது அருணா. ரொம்ப நன்றி ஃப்ரெண்ட்!

   Delete
 12. மிகவும் பயனுள்ள தகவல் தொகுப்பு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பயனுள்ள தகவல் தொகுப்பிற்காக எனக்கு நன்றி தெரிவித்த உங்களுக்கு என்னோட மனம் நிறைய நன்றி.

   Delete
 13. ம்ம்ம்ம் கலக்குற நிரூ இரத்த அழுத்தத்திற்கு கொடுத்துள்ள டிப்ஸ் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். அப்படியே சமையலையும் அழகாக வருணித்து உள்ளது சூப்பர் நிரூ..... வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. ஓ... நீ பாராட்டி ரசிச்சு எழுதியிருக்கறது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா தெம்பா இருக்கு தோழி. ரொம்ப ரொம்ப நன்றி.

   Delete
 14. எந்த நோயின் அறிகுறிகளைப் பற்றிப் படித்தாலும், அந்த அறிகுறிகள் எல்லாம் தனக்கும் இருப்பது போலக் கற்பனை செய்வது இயல்பானதா ? அல்லது அதுவும் ஒரு நோயா ?
  உண்மையிலேயே, உபயோகமான பதிவு !

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் பல நோய்களுக்கு நம் மனமும் ஒரு காரணம். அந்த நோயின் அறிகுறிகளைப் படித்து விட்டு அதற்கிணையான ஏதாவது ஒரு அறிகுறி தெரிந்தாலும நம் மனம் தனக்கு அந்த வியாதி வந்து விட்டதோ என்று எண்ணத் தொடங்குவது விசித்திரம் தான். உபயோகமான பதிவென்று பாராட்டினதுக்கு ரொம்ப நன்றி.

   Delete
 15. நல்ல பயனுள்ள சகோதரி..
  பகிர்வுக்கு நன்றிகள் பல...

  ReplyDelete
  Replies
  1. பயனுள்ளதென்று பாராட்டின உங்களுக்கு மனம் நிறைய நன்றி மகேந்திரண்ணா...

   Delete
 16. உபயோகமான பகிர்வு நிரூ.எனக்கு மிகவும் உபயோகமான பகிர்வு:)

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு இதிலுள்ள விஷயங்கள் பயன்பட்டால் அதைவிட எனக்கு மகிழ்வான விஷயம் வேறென்ன Dear SS! My Heartful Thanks to you!

   Delete
 17. நல்ல பயனுள்ள பதிவு.... ஏன் இந்த மன்னிப்பு எல்லாம் விடுங்க எல்லா கருத்து சொல்லவும் நமக்கு உரிமை இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... என்னைத் தெம்பாக்கிடுச்சு உங்களோட கருத்து. உங்க வலைச்சர வாரத்துல என்னை அறிமுகப்படுத்தினதுக்கும இப்ப கருத்துச் சொல்லி தெம்பு தந்ததுக்கும் சந்தோஷத்தோட என் நன்றி.

   Delete
 18. உங்கள் விருப்பத்தை எதிர்பார்த்து ஒரு பதிவு ... படித்து உங்கள் உங்கள் விருப்பம் கூறுங்கள்
  http://seenuguru.blogspot.in/2012/07/blog-post_27.html

  ReplyDelete
  Replies
  1. அழைப்புக்கு மிக்க நன்றி சீனு. நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லீங்க... நன்றி.

   Delete
 19. பயனுள்ள நல்ல தகவல் நிரூ
  இரத்த அழுத்தம் பொல்லாத வியாதி..

  அருமை....

  ReplyDelete
  Replies
  1. அருமைன்னு சொல்லி பாராட்டின எஸ்தருக்கு சநதோஷததோட என் நனறி.

   Delete
 20. நிரூ டாக்டரம்மா ஆயாச்சு!!!!!!!!!!!!!!!!
  அத்தனை டிப்ஸுக்கும் நன்றி கண்ணா.
  யாராவது செய்து கொடுத்தால் நல்லா இருக்கும்:)))))))))))000

  ReplyDelete
  Replies
  1. இந்த டாக்டரம்மாவை ரசிச்சு வாழ்த்தற உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுக்கில்லாததா...? நான் செஞ்சு தர்றேம்மா...

   Delete
 21. பயனுள்ள பதிவு... உனவில் பூண்டு கொஞ்சம் தூக்கலா செத்துக்கிட்டா, உயர் ரத்த அழுத்தம் குறையும்... அப்பரம் நல்ல மென்மையான இசை கேட்டால் stress குறையும்... தொடருங்கள்! நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நீங்க சொன்னதும் சூப்பர் யோசனையா இருக்கே. மிக்க நன்றி.

   Delete
 22. டாக்கடர் நீரு.....!இப்டி சொல்ல நல்லாருக்கல்ல.நான் சொல்றனம்மா..:)
  பயனுள்ள பதிவு நிரு.போன பதிவோட தெளிவு வந்திருச்சு போல...:வாழ்த்துக்கள் சொந்தமே!

  ReplyDelete
  Replies
  1. என் இனிய சொந்தமே... நீங்கள் படித்து வாழ்த்தியதுல ரொம்பவே பூரிப்பு எனக்கு. ரொம்ப நன்றிம்மா.

   Delete
 23. முழுப்பதிவுமே பிரயோசன்மாய் இருக்கு நிரஞ்சனாக்குட்டி.எனக்கு தெரிஞ்ச அக்கா ஒரு ஆளுக்கு ரத்த அழுத்தம் குறைவு.அடிக்கடி மயக்கம்.நீங்கள் சொன்ன அறிவுரைகளைச் சொல்லி வைக்கிறேன்.நன்றி !

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் பயன் கிடைக்கும்க்கா. உங்களோட அன்பில மகிழ்ந்து போய் என்னோட மனசு நிறைய நன்றியை சொல்லிக்கறேன்.

   Delete
 24. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றிச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.நேரமிருந்தால் பாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போன்ற பெரியவர்கள் என்னையும் கவனிக்கறீங்கன்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ஸார். வலைச்சரத்துல என் பதிவு பத்திப் படிச்சதுல துள்ளிக் குதிச்சிட்டேன் உண்மைல. மிக்க நன்றி.

   Delete
 25. ஒரு குழந்தை பேச்சில் இத்தனை குறுந்தகவல்களா ?

  அருமை டா

  எப்போதும் எதற்காகவும் உன் தனித்துவத்தை இழக்காதே .........

  நீ நீயாக இருப்பதில் அழகு மிளிர்கிறது டா

  ReplyDelete
 26. நிரஞ்சனா....
  இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ப்பா....

  என்ன ஃபிரெண்ட்... நான் கதை எழுதுவது உங்களுக்குத் தெரியாதா...!!! போப்பா....
  உங்களுக்குத் தொடர்கதை படிக்கப் பிடிக்குமா....? நேரம் கிடைத்தால் வந்து படித்துப்பாருங்கள். உங்களுடைய வாழ்த்திற்காக நான் காத்துக்கொண்டே இருப்பேன்.

  ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!