Pages

Ads 468x60px

6 July 2012

உங்களுக்காக ஒரு குட்டிக் கதை!


                   மகிழ்ச்சிக்கு வழி...

“நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன்.

“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.

“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்”

“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்”

“அப்படியா சொல்கிறீர்கள்?“

“ஆமாம்!”

“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”

“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”

“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.

“இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் - “ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,

இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவுமில்லை; வருந்தவுமில்லை.

எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.

தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” -அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.

துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

-கதையும் கருத்தும் நல்லா இருக்கே. இவ்வளவு புத்திசாலியா நிரூன்னு ஆச்சரியப்படறீங்களா... இல்லிங்க... ‘உள்ளமே உலகம்’ங்கற புத்தகத்துல தென்கச்சி கோ.சுவாமிநாதன் எழுதியிருந்த இந்தக் கதை படிச்சதும் பிடிச்சது. ஷேர் பண்ணிக்கிட்டேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கா...?



பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

43 comments:

  1. “யாம் பெற்ற இன்பம்
    பெறுக இவ்வையகம்“ - என்ற கருத்துடன் சேர்த்து உங்கள் மிகழ்ச்சியை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதால் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் செயல் அல்லவா ஃபிரெண்ட்...
    வாழ்த்துக்கள் நிரஞ்சனா.

    ReplyDelete
    Replies
    1. முதலாவதாய் வந்து நல்ல கருத்தைச் சொல்லி என்னை வாழ்த்திய என் ஃப்ரெண்டுக்கு மிக்க நன்றி.

      Delete
  2. சாமிநாதன் அய்யாவின் kadaisi வரி பஞ்ச் மிகவும் பிடிக்கும். ஒருகாலத்தில் என் வீட்டில் வானொலி மட்டுமே உண்டு. பள்ளிக்கு கிளம்பும் முன் அவர் பேச்சைக் கேட்டுவிட்டு கிளம்புவது தான் வழக்கம். நல்ல பகிர்வு.

    இப்போதும் இருக்கும் BLOG TEMPLATE நன்றாக உள்ளது என்றாலும் முன்பு இருந்த்தது போல் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இது பிடிச்சிருந்துச்சுன்றதுல I Feel Happy. Thankyou verymuch!

      Delete
  3. Replies
    1. Oh! I feel happy to hear this from you Madam! My heartful thanks to you!

      Delete
  4. நல்லதொரு பகிர்வு.....

    புதுசா இருக்கு நல்லாவும் இருக்கு டெம்ளேட்

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்குன்னு சொன்ன உங்களுக்கு... Many Many Thanks Friend!

      Delete
  5. அருமை பிடிச்சிருந்தது (TM 2)

    ReplyDelete
    Replies
    1. என்னை Encourage பண்ற உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  6. நல்ல கதை. புது டெம்ப்ளேட் நல்லா இருக்கே... எங்கே இருந்து டவுன்லோட் பண்ணீங்க நிரூ...

    ReplyDelete
    Replies
    1. டெக்னிகலா எனக்குத் தெரிஞ்சது கொஞ்சம் ஸார். இந்த தளத்தோட புது அமைப்பை என் மாமாவோட ஃப்ரெண்ட் எனக்காக செஞ்சு தந்தாரு. அவருக்கும் கதை நல்லாருக்குன்னு சொன்ன உங்களுக்கும்... My Heartful Thanks!

      Delete
  7. நல்ல நடையில் படிக்க அருமையாக உள்ளது!

    ReplyDelete
    Replies
    1. Oh! I Feel Happy to hear this! Many Many Thanks to you Sir!

      Delete
  8. ஆசையே துன்பத்துக்கு காரணம் ,,, சுயநலம் தான் இனப் துன்பங்களை நிர்ணயிக்கின்றது என்பதை அழகாக கூறிவிட்டீர்கள் .. அருமை

    ReplyDelete
    Replies
    1. அருமைன்னு பாராட்டின உங்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  9. துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.

    “மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்//

    அனைவரும் அவசியம் மனதில் கொள்ளவேண்டிய
    அருமையான கரு கொண்ட கதை
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
    Replies
    1. ஸார்... நீங்க பிடிச்சிருக்குன்னு என்னை என்கரேஜ் பண்றதுக்கு நான்தான் நியாயமா நன்றி சொல்லணும். Many Many Thanks to you Sir!

      Delete
  10. இந்தக் கதை படிச்சதும் பிடிச்சது. ஷேர் பண்ணிக்கிட்டேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கா...?///காலை வணக்கம்,நிரூ!///புடிச்சிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் யோகாண்ணா... கதை புடிச்சிருக்குன்னு நீங்க சொன்னதுல ரொம்ப ஹேப்பியாய்ட்டேன் நான். மிக்க நன்றி.

      Delete
  11. ம் ம் ரொம்ப பிடிச்சிருக்கு மா. எங்க போனீங்க வலைப்பக்கம் நிறைய நாளா பார்க்கமுடியள சொல்லுட்டு போற பழக்கம் இல்லையா மா.

    ReplyDelete
    Replies
    1. ஸாரிக்கா... இனி காணாமப் போனா சொல்லிட்டுப் போறேன். இனி வலையில ரெகுலரா இருப்பேன். வீசும் தென்றலை அனுபவிக்கவும் வருவேன். பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ்.

      Delete
  12. அருமையான கதை! மிகவும் பிடிச்சிருக்கு! நன்றி!நிரூ!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. என்னைத் தட்டிக் கொடுத்து பாராட்டற உங்க அன்புக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றி ஐயா.

      Delete
  13. அட இது றேடியோவில கேட்ட கதையல்லவா என நினைச்சுக்கிட்டு கடைசில பார்த்ததாக்க தான் தெரிஞ்சுது...

    கட்டாயம் இந்த ஆள் மனங்கள் அறியவேண்டிய கதை தான் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ரேடியோவிலேயே கேட்டிருக்கீங்களா... லக்கி சார் நீங்க. என்னை என்கரேஜ் பண்ணதுக்கு தாங்க்ஸ்.

      Delete
  14. நீரு அருமையா கதை சொல்றீங்க....!
    இன்னும் நிறைய கதை எழுதுங்க.ரசிக்க அதிசயா இருக்கிறேன்..!
    வாழ்த்துக்கள் சொந்தமே..சந்திப்போம் சொந்தமே....!

    ReplyDelete
    Replies
    1. அதிசயாவின் கருத்து எனக்கு ரொம்பத் தெம்பா இருக்கு. ரொம்ப நன்றி ப்ரெண்ட்.

      Delete
  15. Replies
    1. என்னை வாழ்த்தினதுல ரொம்ப ஹேப்பி ஆய்ட்டேன் நான். Thankyou Verymuch Sir!

      Delete
  16. படித்தது பிடித்திருக்கிறது. வலை முகப்பும் அழகாக உள்ளது. அனைத்திற்கும் நல்வாழ்த்து நிரஞ்சனா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... வலை நல்லாயிருக்குன்னு சொல்லி என்னை துள்ளிக் குதிக்க வெச்சுட்டீங்கக்கா. நான் பகிர்ந்தைதயும் ரசிச்ச உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  17. நல்ல அருமையான கதையை பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நிரூ .... நான் இக்கதையை படித்ததும் ரொம்ப பிடித்தது .... வாழ்த்துக்கள் நிரூ.....

    ReplyDelete
    Replies
    1. என் டியர் ப்ரெண்டுக்கு இந்தக் கதை பிடிச்சிருந்ததுல I Feel Happy. My Heartful Thanks to you VIJIMA!

      Delete
  18. நல்லதொரு குட்டிக்கதையை செலக்ட் செய்து பகிர்ந்து இருக்கீங்க நிரூ.புது டெம்ப்ளேட் அழகோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. குட்டிக்தையை ரசித்ததோட இல்லாம புது டெம்ப்ளேட் அழகுன்னு வேற சொல்லி என்னை குஷியாக்கிட்டீங்க Dear S.S. My Heartful Thanks to you!

      Delete
  19. மனதின் பாரபட்ச நிலையையும், துன்பத்தைத் துரத்தும் வழியையும் அழகான கதை மூலம் புரியவைத்த தென்கச்சி ஐயாவுக்கும் அதை எங்களுடன் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் மனமார்ந்த நன்றி நிரஞ்சனா.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் பிடிச்சிருந்ததுன்றதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் கீதாக்கா. Many Many Thanks!

      Delete
  20. குட்டி கதை என்றாலும் அருமை நிரூ...

    தொடருங்கள்......

    ReplyDelete
    Replies
    1. oh, Dear... உனக்கு இது பிடிச்சிருந்ததாம்மா... தொடர்றேன் நிச்சயமா. நன்றி எஸ்தர்

      Delete
  21. எனக்கு குட்டிகதைகள் மிக பிடிக்கும்.. தற்செயலாக இப்பதிவை பார்த்தேன்.. நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. நிச்சயம் எல்லாருக்குமே பகிரப்பட வேண்டிய கதைதான்! அருமை... தொடர்க உனது தொண்டு!

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!