Pages

Ads 468x60px

11 July 2012

கம கம கதம்பம் - 3


                        ஆஹா... பிரம்மச்சாரிகள்!

ரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். சில ட்ரெண்டுகளும் கூட அப்படி ஆகுமோ என்னமோ... தெரியலை. பழைய படங்கள்லயும் சரி, சினிமாக்கள்லயும் சரி ஒரு விஷயத்தை நான் கவனிச்சிருக்கேன்- ‘‘பேச்சிலர்க்கெல்லாம் வீடு கொடுக்கறதில்லப்பா. ஃபேமிலிக்குத் தான் நாங்க வீடு கொடுப்போம்’’ என்று ஹவுஸ் ஓனர்கள் சொல்வதாக வரும். அந்த நிலைமை இப்போது அப்படியே உல்டாவாகி விட்டிருக்கிறது. ‘‘ஃபேமிலிக்கெல்லாம் நாங்க வீடு தர்றதில்லை. பேச்சிலர்ஸ் வந்தாப் பரவாயில்லை’’ என்று ஹவுஸ் ஓனர்கள் அறிவிக்காத குறைதான்.

ஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங்க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். இப்டில்லாம் கணக்குப் ‌போட்டு வீட்டு ஓனர்கள் இப்பல்லாம் அதிகமா பேச்சிலர்ஸ்க்கே வீடுதர ஆரம்பிச்சிட்டாங்க. இந்த ட்ரெண்ட் மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா? (நான் இருக்கற ஏரியாவுல கவனிச்சுப் பாத்ததை வெச்சுத்தான் இந்த மேட்டர் எழுதியிருக்கேன். உங்க ஏரியாவுல அப்படி இல்லன்னா சந்தோஷம்தான்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

                சோம பானம் தெரியுமா?

சோமம் என்றால் பச்சை இலை. இமயமலை அருகில் உள்ள சிறு மலைகளில் வளர்ந்து செழித்துக் கிடக்கிறது! சோமம் என்ற வார்த்தைக்கு போதை-ம்யக்கம் என்று பொருள். இந்த சோமச் செடியைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து புளிக்கச் செய்து வைத்துக் குடிப்பார்கள். இதுதான் ஆரம்ப காலத்து மது! அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர்! இதைக் குடித்து அரசர்களும் மந்திரிகளும் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்டார்கள். நாடும் நட்பும் இழந்து கஷ்டமும் பட்டார்கள். பகை வளர்த்து அடிக்கடி சண்டை இட்டும் கொண்டார்கள்.

இந்த சோமபானம் உடலுக்குத் தீங்கு தராதது! .உடல் பலத்தையும், நலனையும் பாதுகாக்க வல்லது. இதைப் பின்பற்றி கள் பானம் மனிதன் கண்டுபிடித்தான். இதுவும் உடல் பலம் அளித்தது. அளவோடு குடித்தால் ஆயுளும் தந்தது! இன்றைக்கு விஞ்ஞான யுகத்தில் கெமிக்கலில் மது தயாரித்து வேக மரணத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டான் மனிதன்! இந்த கெமிக்கல் மதுக்கள் இளமையை ஊஞ்சலாடச் செய்து- மரணத்தைக் கூடவே வைத்துக் கொள்ள உதவுகிறது.

      -எதேச்சையா கண்ல பட்ட ‘ஸ்ரீகாளி முரசு’ங்கற புத்தகத்துல இருந்த தகவல்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

         சங்கரன் பிள்ளையின் பேசும் நாய்

த்குரு ஜகி வாசுதேவ் சொல்லும் சங்கரன்பிள்ளை ஜோக்குகள் நிறையவே பிரபலம். அதிலிருந்து ஒன்று இங்கே .உங்களுக்காக:

பேசும் நாய் விற்கப்படும்’ என்று சங்கரன் பிள்ளை வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நாய்ப் பிரியர், ‘‘நாயைப் பார்க்கணும்’’ என்றார். ‘‘கொல்லைப் பக்கம் கட்டிப் போட்டிருக்கிறேன். போய்ப் பாரும்!’’ என்றார் சங்கரன் பிள்ளை.

வந்தவர் கொல்லைப் பக்கம் போய் நாயைப் பார்த்து, ‘‘நீ பேசுவியாமே’’ என்று கேட்டார்.

நாயும், ‘‘ஆமா... ஆமா... ’’ என்றது.

‘‘உன்னைப் பற்றிச் சொல்லேன்’’ என்றார் நாய்ப் பிரியர்.

‘‘சின்ன வயசிலயே என்னால் பேச முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அரசாங்கத்துக்கு உதவ நினைச்சேன். அவங்க என்னை நாய் உளவுப் பிரிவில் சேர்த்துக்கிட்டாங்க. விமானத்தில் நாடு விட்டு நாடு அனுப்புவாங்க. உலகத்தின் பல தலைவர்களின் வீட்டு வாசலில் போய்க் காத்திருப்பேன். யாருமே நாயை உளவாளின்னு நினைக்க மாட்டாங்கல்ல... எட்டு வருஷம் இப்படி உலகம் முழுக்க சுத்தினேன். அப்புறம் ரொம்பக் களைபபாயிடுச்சு. அதனால விமான நிலையத்திலேயே சந்தேகப்படுற மாதிரி ஆளுங்களை வேவு பார்த்து உதவி செஞ்சேன். பதக்கம்லாம் கொடுத்துக் கெளரவிச்சாங்க. அப்புறம் ஒரு பெண் நாயைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் நிறையக் குட்டிகள் போட்டோம். இப்ப நான் ரிட்டயர்ட் ஆகப் போ்றேன்’’ என்றது.

வந்தவர் வியப்பில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட திறமையான நாய் இது என ஆச்சரியப்பட்டார். உடனே அதை வாங்க முடிவு பண்ணி சங்கரன் பிள்ளையிடம் விலை கேட்டார். அவர், ‘‘250 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா? 250 ரூபாய்தானா? ஏன் இவ்வளவு மலிவான விலை?’’ எனக் கேட்டார்.

‘‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

    நெல்லி சாப்பிடுங்கோ ஃப்ரெண்ட்ஸ்!

வீட்டில் நெல்லி மரம் வளர்ப்பது மிகுந்த நன்மை தரும். பெருமாளுக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்யலாம். அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் நெல்லிக் கனி. வீட்டின் வாசலில் நெல்லி மரம் இருந்தால் பில்லி, சூனியம் ஆகியவை நெருங்காது என்பது நம்பிக்கை. ஏகாதசியில் நெல்லிக் கனியை தண்ணீரில் போட்டு வைத்து, மறுநாள் துவாதசி அன்று எடுத்துச் சாப்பிட்டால் காசியில் குடியிருப்பதற்கு ஒப்பான பலன் கிடைக்கும். நெல்லி மரம் உள்ள வீட்டில் லட்சுமி தங்குவாள் என்பது ஐதீகம்.

-வேற வேற புத்தகங்கள்லருந்து நான் திரட்டின தகவல்கள் இது. எனக்குப் பிடிச்ச நெல்லிக் கனியைத் தரும் மரத்தை வீட்ல வளர்த்தா எவ்வளவு நல்லது பாருங்க... நெல்லிக்காயை வெச்சு சமையல்கூட பண்ணலாம்னு இந்தப் பதிவுல பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீஙகளும் நெல்லிக் கனியை.... வெயிட்... வெயிட்... ஓவரா நெல்லி புராணம் பாடற இவளை நெல்லியாலேயே அடிச்சா என்னன்னு யாரோட மைண்ட் வாய்ஸோ எனக்குக் கேக்குது. அடுத்த மேட்டருக்கு எஸ்கேப்...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

           ஐயோ பாவம் முதியவர்கள்!

சில வயசானவங்க தங்களோட முதுமையை ஏத்துக்க மறுக்கறது ஏன்னே புரியலை உதாரணத்துக்கு எங்க பக்கத்து வீட்ல இருக்கற ஒரு பாட்டி. அவங்களை மகனும் மருமகளும் எந்தக் குறையும் சொல்லாம தாங்கறாங்க. ஆனா இவங்களுக்குள்ள ‘நமக்கு வயசாய்டுச்சே. முன்ன மாதிரி எந்த வேலையும் செய்ய முடியலையே‘ன்ற காம்ப்ளக்ஸ் இருக்கும போல... அதனால அவங்க சொல்லச் சொல்லக் கேக்காம எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாங்க. அதனால ஏதாவது தப்பாகி திட்டும் வாங்கிப்பாங்க.

உதாரணத்துக்கு நேத்து மகனும் மருமகளும் கிளம்பிப் போனதும் தன் செல்லுக்கு ரீசார்ஜ் பண்றேன்னுட்டு கடைக்குப் போயி நம்பர் எழுதிக் குடுத்திருக்காங்க. வீட்டுக்கு வந்து அரை மணி நேரம் கழிச்சும் ரீசார்ஜ் ஆகலையேன்னு கடையில போய் கேட்டப்ப. கடைக்காரர் இவங்க எழுதின நம்பரைப் படிக்க, அப்பத்தான் தான் கடைசி நம்பரை 5க்கு பதிலா 3 எழுதிக் கொடுத்துட்டது புரிஞ்சது. அப்புறம் என்ன... அந்த நம்பருக்கு போன் பண்ணினா ஒரே ’ஸ்விட்ச் ஆஃப்’ மெஸேஜ்தான். கடைக்காரரும் கை விரிச்சுட்டாரு. சாயங்காலம் மகன் வந்ததும் 300 ரூபா நஷ்டமானதைச் சொல்லிப் புலம்ப... ‘என்ட்ட சொல்லிருந்தா நான் பண்ணியிருக்க மாட்டேனா’ன்னு மகன சத்தம் போட்டாரு. அந்தப் பாட்டியைப் பாக்கவே பாவமா இருந்துச்சு எனக்கு. முதுமைய ஏத்துக்கிட்டு இயல்பா அமைதியா இருக்க இந்த மாதிரி சில முதியவங்களால ஏன் முடியலைன்னுதான் தெரியலை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

    ச்சும்மா... கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ்!

* கொதிக்கும் எண்ணெய் காலில் பட்டுப் புண்ணாகி விட்டதா..? பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள். புண் ஆறி விடும்.

* உருளைக்கிழங்கு வாயுப் பொருளல்ல. குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகத் தேவையானது. உருளைக் கிழங்கிலுள்ள புரதப் பொருள், தானியங்களிலுள்ள புரதப் பொருள்களை விடச் சிறந்தது. உருளைக் கிழங்கு மற்ற தானியங்களைவிட சுலபமாக ஜீரணமாகும். சோறை வைத்துக் கொண்டு உதவி காய்கறிகளை வைத்துக் கொள்வது போல உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டு உதவிக்கு காய்கறிகளை வைத்துக் கொள்ளலாமே! உருளைக் கிழங்கு மனிதன் உணவில் தவிர்க்க முடியாத பங்கினைப் பெற்றிருக்கிறது.

* பல் ஈறுகளில் வீக்கம் இருக்கிறதா? உப்புப் பொடியையும், மஞ்சள் பொடியையும் சம பாகமாகக் கலந்து பல் துலக்கிய பிறகு ஈறுகளில் வைத்துத் தேய்த்துவிட்டு வாயைக் கொப்புளித்துக் கொண்டு வந்தால் ஈறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் நீங்கி விடும்!

                                            -இந்தத் தகவல்களையெல்லாம் எனக்குச் சொன்னது
                                                                                       ‘கல்கண்டு’ புத்தகமுங்கோ!


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

58 comments:

  1. கம கம கதம்பம் வாசம் வருதுங்ககே◌ா...

    ReplyDelete
    Replies
    1. கதம்பத்துல வாசம் வருதுன்னு உடனே வந்து சொல்லி Encourage பண்ணின உங்களுக்கு தேங்க்ஸோ தேங்க்ஸ்ங்கோ...

      Delete
  2. // மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா?// ஹா ஹா ஹா கண்டிப்பா வந்து கமென்ட் பண்றேன். கில்லி விஜய் சொல்லற மாதிரி உங்க ஏரியா எங்க ஏரியா அந்த ஏரியா இந்த ஏரியா எல்லா ஏரியாளையும் அப்படி தான்...

    //அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர்!// நல தகவல். பெயர் தெரிய புத்தகங்கள் கூட படிகிறீர்கள் மகிழ்ச்சி ....

    //ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் // சங்கரன் பிள்ளை கதாபத்திரம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவற்றில் இருந்து சொல்லும் கருத்துகள் அழகு.

    // ‘‘200 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா? 250 ரூபாய்தானா? ஏன் இவ்வளவு மலிவான விலை?’’ // வாக்கியம் சரிதானா எனக்குத் தான் புரியவில்லையா

    மொத்தத்தில் கதம்பம் அருமை. எங்களுடன் பகிர்ந்ததும் பகிர்ந்த விதமும் சூப்பர். கலக்குங்க

    ReplyDelete
    Replies
    1. எந்த ஏரியாவுலயும் நிலைமை அப்படித்தானா சீனு... சோம பான மேட்டரையும் எனக்குப் பிடிச்ச சங்கரன் பிள்ளை கதை உங்களுக்குப் பிடிச்சிருந்ததுலயும் சந்தோஷப்பட்டேன் நான். ஆனா கதையில ஒரு 250 ஐ 200ன்னு போட்டு உங்ககிட்ட பல்பு வாங்கிட்டனே... அவவ்வ்வ்வ்... இப்ப திருத்திட்டேன் சீனு. My Heartful Thanks to you!

      Delete
  3. கதம்பம் ரெம்ப அருமை
    சுவராசியமான எழுத்து நடை அருமை
    நிறை விஷயங்கள்

    தங்கைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற வார்த்தைகளுக்கு என்கிட்ட மதிப்பு அதிகம். Encouragingஆ கருத்து செர்ல்லிருக்கற உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  4. கதம்பம் கமகமவென்று நல்ல வாசனையாகவே உள்ளது.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    //ஒரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்.//

    இதைப்பற்றி நான் ஒரு அழகான கதையே வெளியிட்டுள்ளேன். அதையும் படித்தால் உங்களுக்கு எழுத மேலும் சில பாய்ண்ட்கள் கிடைக்கலாம், அது ஒரு காதல் கதை. தலைப்பு: “காதல் வங்கி”

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_30.html

    முடிந்தால் நேரமிருந்தால், படித்துவிட்டுக் கருத்துக்கூறுங்கள்.

    vgk

    ReplyDelete
    Replies
    1. இப்போதான் உங்க சிறுகதையைப் படிச்சுட்டு வர்றேன். மிகமிக அருமை. என்னோட கதம்பம் நல்ல வாசனையா இருக்குன்னு நீங்க சொன்னதுல ரொம்பவே குஷியாய்ட்டேன் நான். உங்க ஆசிகளா இதை எடுத்துக்கறேன் ஸார். My Heartful Thanks to you!

      Delete
  5. படித்ததை பகிரும் போதும் படிக்க சுவாரசியத்தையும் சுவையையும் கொடுக்கும் அளவிற்கு வளர்த்து நிற்கிறாய் நிரஞ்சனா

    ReplyDelete
    Replies
    1. ஹை... சரளாக்காக்குப் பிடிச்சிருக்குங்கறதுல I Feel verymuch of Pleasure! My Heartful Thanks to youkka!

      Delete
  6. //ஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங்க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். //

    மிகவும் அருமையாக எடுத்துக்காட்டியுல்லாய் நிரூ .... உன்னுடைய 50 - வயது பதிவிற்காக நான் காத்திருக்கிறேன்......

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்... என்னுடைய 50வது வயது பதிவு வரைக்கும்... ஏன், அதற்கப்புறமும் என் தோழி உடனிருப்பாய் என்றால் அதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு?

      Delete
  7. சோமபானத்தை பற்றி படித்ததை பகிர்ந்த நிரூவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அந்தத் தகவல் வியப்பாயிருந்துச்சு எனக்கு. அதை நீங்களும் ரசிச்சதில நான் ரொம்ப ஹேப்பி.

      Delete
  8. பல்சுவையாக வந்திருக்கு நிரூ! முதியவர்கள் சொல்வழி கேட்பது இல்லை சில சமயம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா... ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்பறம் அடம் பிடிக்கற விஷயத்துல மறுபடி குழந்தைகள் ஆயிடறாங்க இல்ல.. என்னை தவறாம என்கரேஜ் பண்ற உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  9. //நிறையப் பொய் பேசும்// மிகவும் அருமையாக இருந்தது நாய் காமெடி.....

    ReplyDelete
    Replies
    1. சங்ககரன் பிள்ளை ஜோக்ஸ் நிறைய சேத்து வெச்சிருக்கேன் விஜி. எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவை. அப்பப்ப எடுத்து விட்லாம்னு இருக்கேன்.

      Delete
  10. மிகவும் அருமையாக நெல்லிக்கனியைப் பற்றி கூறியிருப்பதும் அதன் இணைப்பில் என்னுடைய வலைப்பூவை கொடுத்ததற்கும் இந்த தோழியின் மனம் நிறைந்த நன்றிகள் நிரூ....

    ReplyDelete
    Replies
    1. நான் ரசிச்சுப் படிச்சு செய்து பாத்தே ஆகணும்னு தீர்மானிச்ச நல்ல விஷயம் நீ சொல்லிருக்கறது விஜி. எனக்கெதுக்கு நன்றில்லாம் தோழி?

      Delete
  11. ஆமாம் நிரூ முதியவர்கள் அப்படிதான் நடந்து கொள்கிறார்கள்.. அதனால் அவர்கள் வேதனையும் படுவார்கள்... எப்படி இருந்தாலும் எனக்கு முதியவர்களைப் பார்த்தால் ரொம்ப பிடிக்கும்... நிரூ....

    ReplyDelete
    Replies
    1. நானும பெரியவங்களை மதிப்பேன். மரியாதை கொடுப்பேன் விஜி. ஆனா இவ்வளவுக்கும் வீண் செலவாயிடுச்சேன்னு அம்மாவைத் திட்டாம. ஏன் கஷ்டப்படுற, நான் பண்ண மாட்டனான்னு அந்த அங்கிள் கோவிச்சுக்கிட்டது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது விஜி.

      Delete
  12. ஹெல்த் டிப்ஸ் படித்துவிட்டு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி......

    ReplyDelete
    Replies
    1. இதோட ஒவ்வொரு பகுதியையும் நீ ரசிச்சுப் படிச்சு கருத்துச் சொல்லியிருக்கறதைப் பார்த்ததும் உற்சாகத்துல துள்ளிக் குதிச்சிட்டிருக்கேன் விஜிம்மா... Many Many Many Many Thanks to youda!

      Delete
  13. றொம்பவே கம கமக்குது நிரூ கதம்பம்..

    சரி ஒரு டவுட் சோம பானம் இப்போது கிடைக்குமா???

    ReplyDelete
    Replies
    1. இல்ல எஸ்தர். முன்ன ஒரு காலத்துல சோமபானம்னு இருந்திருக்காம். இப்ப கிடைக்காது. கதம்பம் கமகமக்குதுன்னு சொன்னதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்ம்மா.

      Delete
  14. சங்கரன் பிள்ளை.ஜோக் சூப்பர் ...

    ReplyDelete
    Replies
    1. ஜோக் பிடிச்சிருந்துச்சு நீங்க சொன்னதுல சந்தோஷமாயிட்டேன். தாங்க்ஸ் ஃப்ரெண்ட்.

      Delete
  15. கதம்பம் அருமை.

    //பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள்// எனக்குத் தெரிந்து எல்லா உருளைக் கிழங்குமே மஞ்சளாகத் தான் இருக்கிறது. :-)

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... வேக வைக்காத உருளைக் கிழங்குன்னு அர்த்தம் ஸார். கதம்பம் அருமைன்ன உங்களுக்கு... My Heartful Thanks.

      Delete
  16. கதம்பத்தில் தொடுத்த ஒவ்வொரு மலரும்
    தனிப் பதிவு போடும் அளவுக்கு நிறைய விஷயங்கள்
    அடங்கியது சகோதரி...
    நெல்லிக் கணியில் அளவில் அடங்காத அளவுக்கு
    மருத்துவ குணங்கள் உள்ளன...
    இன்றைய கதம்பம்
    மணக்கிறது.. .....

    ReplyDelete
    Replies
    1. அழகான விஷயங்களைத் தந்திருக்கேன்னு நீங்க சொல்றதுல ரொம்ப ரொம்ப உற்சாகம் ஊற்றெடுக்குது எனக்குள். ரொம்ப ரொம்ப நன்றிண்ணா.

      Delete
  17. நிரு....தொகுப்பு அருமை...!
    எழுத்தாடல் கூட அழகாக இருக்கிறது...!தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள் சொந்தமே...!
    (நீரு கலக்கறம்மா)

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்து ஸ்டைல் நல்லாருக்குன்னு நீங்க சொன்னதுல சந்தோஷ்த்துல துள்ளிக் குதிச்சிட்டேன் அதிஸயா. என்னை Encourage பண்ற உங்களுக்கு நிறைய நிறைய நன்றி.

      Delete
  18. Replies
    1. சுருக்கமான வார்த்தையால பாராட்டி நிறைய சந்தோஷத்தை எனக்குத் தந்த உங்களுக்கு... Many Many Thanks Sir!

      Delete
  19. அருமையாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் சகோதரி மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அருமையான தொகுப்புன்னு பாராட்டின ஹேப்பியா என் நன்றி.

      Delete
  20. சோமபானம் போல பதிவு மிக மிக அருமை
    மயக்கவும் செய்யுது.பயனுள்ளதாகவும் இருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றவர்கள் நல்லா இருக்குன்னு சொல்லும்போது எனக்குக் கிடைக்கற மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. ரொம்ப ரொம்ப நன்றி ஸார்.

      Delete
  21. Replies
    1. படித்துப் பாராட்டின உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என்னோட நன்றிகள் ஸார்.

      Delete
  22. கதம்பம் மிக நன்று. நல்வாழ்த்து. ஆனாலும் 3க்குப் பிறகு நிறுத்தவா நிறுத்தவா என்று ஒரு மாதிரி இழுத்து வாசித்து முடித்து விட்டேன். இப்போ களைப்பாக இருக்கிறது. ம்.... வயசாயிடிச்சுல்ல.....
    உமது முயற்சிக்கு மறுபடியும் வாழ்த்து.....நிரஞ்சனா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. சற்று கஷ்டப்பட்டேனும் எனக்காக முழுமையாகப் படித்த உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்துவிட முடியும் நான். உங்களின் ஆசி கிடைத்த மகிழ்வில் என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.

      Delete
  23. வணக்கம் நிரூ உங்களுக்கு ஒரு விருதை பரிந்துரைத்துள்ளேன். என் தளத்திற்கு வந்து பெற்று கொள்ளுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. இதோ புறப்பட்டுட்டேன் எஸ்தர். என்மீது அன்பு கொண்டு அளித்த உனக்கு நிறைய நிறைய நன்றிம்மா.

      Delete
  24. As usual interesting. Pl. continue

    ReplyDelete
    Replies
    1. Oh... I feel enthusiastic and energetic when i read your valuable comments sir! My Heartful Thanks to you!

      Delete
  25. தஞ்சாவூர் கதம்பம்!

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமா ஒரு வரியில விமர்சனம் பண்ணி எனக்கு நிறைய சந்தோஷத்தை கொடுத்துட்டீங்க. நன்றி ஸார்.

      Delete
  26. சங்கரன் பிள்ளை கலக்கல்..

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்ன்னு பாராட்டி என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட வெச்சுட்டிங்க. உங்களுக்கு Many Many Thanks Sir!

      Delete
  27. //‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.//

    சூப்பர்....

    சுவையான தகவல்கள் தந்த கதம்பம்... தொடர்ந்து கதம்ப மணம் கமழட்டும்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆதரவும் ஆசியும் இருக்கற வரையில கதம்ப மணம் நிறையக் கமழும் ஸார். எனக்கு தெம்பு தந்த உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  28. நிரஞ்சனா.... பதிவு பிரமாதம்ப்பா....

    நாய் குட்டி படம் படுசூப்பர். அதன் முகமே ரொம்ம்ம்ம்ப அழகா இருந்தது.
    வாழ்த்துக்கள் ஃபிரெண்ட்!

    ReplyDelete
  29. நிரஞ்சனா,
    என்னால் எல்லாம் வலைப்பூவில் தொடர்ந்து பதிப்புக்கள் இட
    முடியவில்லை, பணிச்சுமை, சோம்பல், குடும்பச்சூழல் போன்றவை காரணங்களாக
    இருக்கலாம். எனது வலைப்பூவை எட்டிப் பார்த்தே எனக்கு வெகுநாட்களாகி
    விட்டன. ஆனால் தாங்கள் தொடர்ந்து தங்கள் படைப்புக்களை வழங்கி வருவது
    மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

    1 . இப்போதெல்லாம் சொந்த வீடு கட்டுவது, சாமானிய மனிதர்களுக்கு கடைசிவரை
    இயலாத ஒன்றாகவே போய்விடுகிறது. வாடகையிலாவது காலத்தை ஓட்டலாமென்றால்,
    அதையும் இந்த பிரம்மச்சாரிகள் கொடுத்துத் தொலைக்கிறார்கள். அதிலும்
    குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பிரம்மச்சாரிகள் தான்
    வாடகையை அநியாயத்துக்கு ஏற்றி விடுவது. அவர்களைச்சொல்லிக் குற்றமில்லை,
    நம் நாட்டில் காலூன்றியுள்ள அயல்நாட்டு நிறுவனங்களைச் சொல்ல வேண்டும்.

    2 . அந்த சோமபான இயமயமலை பச்சை இலை எங்காவது கிடைக்குமா ? சொல்லுங்களேன்.

    3 . நாய் பற்றிய ஜோக் கடைசியில் குபீர் சிரிப்பை வரவழைத்தது.

    4 . நெல்லிக்காயில் இவ்வளவு மகத்துவமா ? ஆமாம் ! வெள்ளிகிழமை
    நெல்லிக்காய் சாப்பிடகூடாதென்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே.....இது
    பற்றி ஏதாவது தெரியுமா ?

    5 . முதுமை பற்றிய தங்கள் கருத்து சிந்திக்க வைக்கிறது

    6 . ஹெல்த் டிப்ஸ் அருமை.

    ReplyDelete
  30. கதம்பம் பல உபயோககரமான தகவல்களி உள்ளடக்கியுள்ளது! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!