திரைப்படங்களில் ஆபாசமான காட்சிகளோ, ஆட்சேபத்திற்குரிய காட்சிகளோ வராமல் தடுப்பதற்கு சென்சார் போர்ட் என்ற அமைப்பு இருக்கிறது. தொலைக்காட்சிகளுக்கும் அது மாதிரி சென்சார் போர்டு ஒன்றை ஏற்படுத்தினால் தேவலைன்னுதான் தோன்றுகிறது. சீரியல்களில் முன்னெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் அழிக்க நினைக்கும், குடும்பத்துக்குள்ளேயே கொலைகாரத் திட்டம் போடும் கேரக்டர்களை வைத்து கதை பண்ணிக் கொண்டிருந்தாங்க. இப்ப... டூயட், ஃபைட் சீனெல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு. பத்தாக்குறைக்கு தண்ணியடிக்கிற மாதிரி, தம்மடிக்கிற மாதிரி சீன்கள்- இதுல கீழே இதெல்லாம் கெடுதல்ன்னு ஒரு ஸ்லைடு மட்டும் கரெக்டா போட்டுடறாங்கப்பா.
இதுங்களாவது பரவாயில்லைங்க. இதைவிடக் கேவலமா இருக்குதுங்க விளம்பரப் படங்கள். ஒரு குறிப்பிட்ட கம்பெனியோட பாடி ஸ்ப்ரேவை ஒருத்தன் யூஸ் பண்ணினால், வேற கிரகத்துலருந்தும், எங்கயோ காட்டுப் பிரதேசத்துலருந்தும் எல்லாப் பெண்களும் (அதும் எல்லா சனியன்களும் மினி டிரஸ்தான் போட்டிருக்குமாம்) இவன் வீட்டுக்கு ஓடி வந்து இவன் முன்னால அசிங்கமா டான்ஸ ஆடிக் காட்டுமாம். என்ன ஒரு கேவலமான சிந்தனை! பெண்கள்ன்னா அவ்வளவு எளிதாப் போய்டுச்சா இவங்களுக்கு? சோப்பு, ஷேவிங் க்ரீம்லருந்து எல்லா விளம்பரங்கள்லயும் பெண்களை Misuse பண்றாங்க. இதுக்கெல்லாம் மகளிர் சென்சார்போர்டு ஒண்ணு அமைச்சு கன்ட்ரோல் பண்ணினா, இதெல்லாம் மாறிச்சுன்னா... ரொம்ப நல்லா இருக்கும். ஹும்...!
அதே மாதிரி சில விளம்பரங்களோட கான்செப்ட்படி யோசிச்சா விபரீதமா அர்த்தம் வருது. ‘காம்ப்ளான் சாப்பிடற குழந்தைங்க மத்த குழந்தைங்களை விட இருமடங்கு வளர்றாங்க’ன்னு விளம்பரம் சொல்லுது. அதன்படி பாத்தா, காம்ப்ளான் குடிக்காதவங்க ஐந்தடி உயரம் வளர்றாங்கன்னா, காம்ப்ளான் சாப்பிட்டவங்கல்லாம் 10 அடி உயரமாவா வளர்ந்திருக்காங்க? அப்படி யாரும் இதுவரைக்கும் கண்ணுல படலியேங்க... ஒரே கன்ப்யூஷன்ப்பா!
===========================================
பல சந்தர்ப்பங்கள்ல நாம மனசுக்குள்ள ஒரு எண்ணம் இருந்தாலும், வெளியில வேற ஒரு பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும். இதப் பத்தி யோசிச்சதுல தோணினது இது. ஒரு ஐ.டி. கம்பெனியில இன்டர்வியூ நடக்குது. அங்க ஹெச்.ஆர். கேக்கற கேள்விங்களுக்கு இன்டர்வியூவுக்கு வந்திருககற இளைஞன் பதில் சொல்றான். நான் பிராக்கெட்டுக்குள்ள கொடுத்திருக்கறது அவன் மனசுல ஓடற பதில்கள்.
கேள்வி : ஏன் எங்க கம்பெனிக்கு அப்ளை பண்ணினீங்க?
பதில் : உங்கள் நிறுவனம் இந்தத் துறையில் முன்னணி நிறுவனமாய் இருக்கறதால. (எல்லா கம்பெனிக்கும்தான் அப்ளை பண்ணேன். நீங்க ஒண்டிதான் கூப்ட்டீங்க)
கேள்வி: எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய ஏன் விரும்புகிறீர்கள்?
பதில் : இது சவாலான வேலை என்பதாலும், என்னை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புவதாலும். (நான் எங்கய்யா விரும்பறேன்? வேலை தர்றேன்னு எவன் கூப்ட்டாலும் சேர்ந்துடுவேனே....)
கேள்வி: உங்களை நான் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
பதில் : என்னிடம் உங்கள் நிறுவனத்தின் தேவைக்கேற்ற எல்லாத் தகுதிகளும் இருப்பதால். (எப்படியும் இந்த போஸ்டுக்கு யாரையாவது எடுக்கணு்ம். என்னை எடுத்துத் தொலைங்களேன்யா...)
கேள்வி : உங்கள் பலம் என்ன?
பதில் : சின்ஸியராய் உழைப்பது. (ஃபிகருங்களைக் கரெக்ட் பண்றதுதான்...)
கேள்வி : சமீபத்தில் நீங்கள் சந்தித்த சவால் என்ன? எப்படி சமாளித்தீர்கள்?
பதில் : பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கு ஆபரேஷன் நடந்தப்ப நிறைய ப்ளட் தேவைப்பட்டது. அதுக்காக என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையம் பிடிச்சு, ப்ளட் பாங்குக்கு அலைஞ்சு ரத்தம் சேகரிச்சுத் தந்து அவங்க உயிரைக் காப்பாத்தினேன். (திடீர்னு கர்ள் ஃப்ரண்ட் போன் பண்ணி சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ணுன்னுட்டா. கைல சுத்தமா காசில்ல. அந்த தியேட்டர்ல கரப்பான் பூச்சி இருக்குதுன்னு சொல்லி, பீச்சுக்குத் தள்ளிட்டுப் போயிட்டேன். ஹி... ஹி...)
கேள்வி: உங்களுக்கு வேலை தந்தா என்ன எதிர்பார்ப்பீர்கள்?
பதில் : எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கம்பெனிக்கு ஸின்ஸியரா நான் இருந்தா, தானே எல்லாம் கிடைச்சுடும். (லேட்டா வந்தா கண்டுக்காதீங்க. சீக்கிரம் புறப்பட்டாலும் கேக்காதீங்க. மாசம் ஒரு ஹைக் குடுத்தா சந்தோஷம். வீக் எண்ட் பார்ட்டிக்கு ஸ்பான்ஸர் பண்ணினா இன்னும் சந்தோஷம்)
கேள்வி : எங்கள் நிறுவனம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
பதில் : இந்தத் துறையில் நம்பர் ஒன் என்று தெரியும். (உங்க கம்பெனில 55 கேர்ள்ஸ் வொர்க் பண்றாங்கன்றது தெரியும். கரெக்டா ஸார்?)
கேள்வி: உங்களுக்கு வேலை தராவிட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: என்னிடம் ஏதோ குறையிருக்கிறது என்பதை உணர்ந்து இன்னும் என்னை தகுதியாக்கிக் கொள்ள முயல்வேன். (பின்ன உன் சட்டையப் பிடிச்சா உலுகக முடியும்? போய்யா......ன்னு நாலு கெட்ட வார்த்தை சொல்லித் திட்டிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்!)