Pages

Ads 468x60px

9 June 2012

கமகம கதம்பம்-2

டந்த ஒரு வாரமா ஒரு வி.ஐ.பி.யோட வருகையினால பெங்களூரு ரொம்பவே குளிர்ந்து போச்சு. அந்த வி.ஐ.பி.யோட பேரைச் சொல்லலாம்னா... தன்னடக்கம் தடுக்குது! ஆனா ஒண்ணுங்க.. (ஆனா ஒண்ணுதான். ஆவன்னாதான் ரெண்டுன்னு கவுண்டமணி மாதிரி யாரும் கடிக்கக் கூடாது) அங்கருக்குற க்ளைமேட்டுலருந்து சென்னைக்குள்ள வந்ததுமே ‘ஏன்தான் வந்தோமோ’ன்னு இங்கருக்கற வெயில் சலிச்சுக்க வெக்குது. இப்ப... நான் படிச்ச புத்தகங்களலருந்து ‘சுட்ட’ கதம்பச் செய்திகள் உங்களுக்காக...
  
                           ஐஸ்ஹவுஸின் வரலாறு

னிக்கட்டி ராஜா என்று புகழ் பெற்ற ‘பிரெடிரிக் ட்யூடர்’ என்னும் அமெரிக்கர் ஒரு சிறந்த வியாபாரி. 1783 லிருந்து 1864 வரை உலகின் பல பாகங்களுக்கும் ஐச் கட்டிகளை ஏற்றுமதி செய்தவர். நியூ இங்கிலாந்து பகுதியிலிருந்து உருவான ஐச்கட்டிகளைச் செங்கற்களைப் போல அடுக்கி அவை உருகாமலிருக்க மரத்தூள், தவிடு போன்றவை கொண்டு மூடி வைப்பார்.

இப்படி கப்பல் மூலம் கொண்டு வரும் டன் கணக்கான ஐஸ்கட்டிகளைப் பாதுகாக்க அவர் மதறாஸ், பம்பாய், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் ஐஸ்ஹவுஸ்களைக் கட்டினார். அவற்றுள் சென்னையில் மட்டுமே அவர் கட்டிய ஐஸ்ஹவுஸ் இன்னும் பாரம்பரியமிக்க இடமாக இருக்கிறது.

1880-ல் ஐஸ் வியாபாரம் தொய்வு கண்டபின் பிலிகிரி ஐயங்கார் என்ற வழக்கறிஞர் அக்கட்டடத்தை வாங்கி, தம் நண்பரான நீதிபதி கெர்னனின் நினைவாக ‘கெர்னன் மாளிகை’ என்று பெயரிட்டார்.  பின்னர் அக்கட்டடத்தில் சில மாற்றங்களைச் செய்தார் என்றாலும் குடியிருப்பதற்குத் தகுந்த காற்றோற்றம் இல்லை.

வசதியற்ற, படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் தங்குமிடமாக அதை மாற்றி 1893ல் மேலும் திருத்தங்கள் பல செய்வதற்காக ரூ.7,000 கடன் வாங்கினார். ‘மைசூர் ஐயங்கார் அறக்கட்டளை’ என்ற பெயரில் ஒரு லட்சத்த்துக்கு மேல் நிதி திரட்டி சமுதாய நலப்பணிகளும் கல்விப் பணியும் செய்துவந்தார்.

சுவாமி விவேகானந்தரின் வருகைக்குப் பின்னரே ‘ஐஸ்ஹவுஸ்’ வரலாற்றுச் சிறப்பும், பாரம்பரிய மிக்கதொரு புண்ணிய பூமியாகவும் மாறி ராம கிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றது எனலாம்.

                                                                                           - ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்

                பிள்ளையாரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

`நித்ய பூஜை' செய்யாமல் விக்ரஹங்களை வைத்திருக்கக் கூடாது. மண்ணால் செய்யப்பட்ட விக்ரஹம் என்றால் அதை நீர்நிலையில் சேர்ப்பித்துவிட வேண்டும். அதுவும் ஊர்வலமாக எடுத்துச் சென்றுதான் நீர்நிலையில் சேர்க்கவேண்டும் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, விநாயகரை கடலில் கொண்டு சென்று கரைப்பது என்பது விநாயகருக்கு இழைக்கப்படும் கொடுமை அல்ல. ஆகம விதிகளின்படி செய்யும் பக்தி வழிபாட்டின் ஓர் அங்கமே. `விசர்ஜன ஊர்வலம்' என்பது வடநாட்டில் ரொம்பப் பிரசித்தி. பத்மபுராணத்தில் கதை ஒன்று உண்டு-

ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது தன் அழுக்கைத் திரட்டி பொம்மையாக்க, அது யானைத் தலையும் மனித உருக்கொண்டும் அமைந்தது. அதை அன்னை கங்கையில் எறிய, பேருருக் கொண்டு விநாயகர் வெளிப்பட்ட தாகவும், அப்போது பார்வதியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக் கொண்டனராம். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னையராயினர். இதனாலேயே சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டதாம்.


                       வினாத்தாள் வாங்கியவுடன்
                       எழுதத் தொடங்குவது சரியா?

வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். முழுவதுமாக எழுதி முடித்தவுடன் வினாவை  மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய பதிலுக்கும் கேட்ட வினாவுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கத்தை மட்டுமே வாசித்து விட்டு எழுதியதால் வந்த வினை.

வினாத்தாளை முழுவதுமாக படியுங்கள். முதல் பத்து நிமிடங்கள் எந்த வினாவுக்கும் பதில் எழுதாமல் எல்லா வினாக்களையும் வாசித்து நன்றாகத் தெரிந்த பரிச்சயமான வினாக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வினாக்களின் தன்மை, அவற்றுக்கு எந்த விதத்தில் எந்த முறையில் பதிலளிப்பது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

பல மாணவர்கள் மிகவும் நன்றாக எழுதக்கூடிய விடையில் மட்டும் தேர்வின் பாதி நேரத்தை செலவழித்து விட்டு மற்ற வற்றிற்கு அரக்கப்பரக்க சுருக்கி விடையளித்து ஒரு சில வினாக்கள் விடுபட பரிதாபமாகத் தோல்வியைத் தழுவி யிருக்கிறார்கள்.

                                                                        -தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் 
                                                                          வழிகாட்டிப் புத்தகத்திலிருந்து...

                 எந்த உபாதைக்கும் கவலை வேண்டாம்!

லை சுற்றல்:  சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை மாலை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக:  அரச மரத்துப் பட்டையைக் காய வைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டுக் கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்துக் குடிக்க இருமல் குணமாகும்.

ஜலதோஷம்:  ஜலதோஷம் காய்ச்சல் தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்துப் பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பணால்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா இலை, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துச் சாப்பிட இரைப்பு சளிகட்டு நீங்கும்.

தலைவலி, மூக்கடைப்பு நீங்க:  நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவாக உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காய வைத்து பின் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்துக் கொண்டு மூக்கில் நுகர தலைவலி மூக்கடைப்பு விலகும்.

நெஞ்சு சளி:  தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ குணமாகும்.

                                              -எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் புத்தகத்திலிருந்து

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

39 comments:

 1. Replies
  1. உங்களுககுப் பிடிச்சிருந்ததுல ரொம்ப சந்தோஷம் + நன்றி!

   Delete
 2. Why sibi maathiri cut and paste? You can write on your own ! You can have 1 part for quoting. Others can reflect your experience and likes.

  This is my opinion. It is upto you to take it or leave it.

  ReplyDelete
  Replies
  1. ‌எனக்கு உங்க எல்லார் கூடவும் பகிர்ந்துக்க நிறைய விஷயம் இருக்கு ஸார். நீண்டதூரப் பயணத்துல சாலையோரப் பூங்காவில உக்காந்து இளைப்பாறுகிற மாதிரி எழுத அவகாசம் இல்லாதப்ப இந்தக் கதம்பம் தரலாம்னு இருக்கேன். இனி கதம்பங்களுக்கு இடையிலுள்ள தூரத்தை அதிகமாக்கிடறேன். என்மேல அக்கறை கொண்டு கருத்துச் சொன்ன உங்களுக்கு... My Heartful Thanks!

   Delete
 3. கதம்பத்தில் ஆரோக்கியத்தையும் கலந்ததில் சுகமோ சுகம் மா .
  தொடர வாழ்த்துக்கள் .
  இன்று தென்றலில் புரிதலின் வேகம் பார்க்க படிக்க வேகமாய் வாம்மா .
  http://veesuthendral.blogspot.com/2012/06/blog-post_08.html

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு கதம்பம் பிடிச்சுப் போனதில ரொம்ப சந்தோஷம்க்கா. இப்பவே தென்றலின் தளத்துக்குக் கிளம்பிட்டேன். Many more Thanks!

   Delete
 4. கதம்பம் பல்சுவையாக...

  ReplyDelete
  Replies
  1. கதம்பத்தின் பல்சுவையைப் பாராட்டின உங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தோட என்னுடைய நன்றிகளை தெரிவிச்சுக்கறேன்!

   Delete
 5. பல்சுவைக் கதம்பம் நன்று.. பெண்[ங்]களூர் சென்ற வி.ஐ.பி. பயணக் கட்டுரை போடுவாரா? :)))

  ReplyDelete
  Replies
  1. கதம்பம் நன்றுன்னு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஸார். அந்த வி.ஐ.பி.க்கு பயணக் கட்டுரைகள் எழுத வராது. அதனால போட மாட்டாருங்கோ.

   Delete
 6. வினாத்தாள் வேண்டியதும் முதலில் கிரகிக்க வேண்டும் நல்ல கதம்பம் நிரூ!

  ReplyDelete
  Replies
  1. நல்ல கதம்பம்னு சொன்ன உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றிண்ணா!

   Delete
 7. ம்ம் அறிவு சார் பல விடயங்கள் கமகமக்கின்றன. நிரூ

  ஜஸ் கவுஸ் வரலாறு கேள்விப்படாத விடயம்..


  மொத்தத்தில் அருமையான பதிவு.....

  ReplyDelete
  Replies
  1. நல்லா இருந்துச்சுன்னு சொன்னதுல ரொம்ப சந்தோஷம் எஸ்தர். மிக்க நன்றி!

   Delete
 8. கடந்த ஒரு வாரமா ஒரு வி.ஐ.பி.யோட வருகையினால பெங்களூரு ரொம்பவே குளிர்ந்து போச்சு. அந்த வி.ஐ.பி.யோட பேரைச் சொல்லலாம்னா... தன்னடக்கம் தடுக்குது!///இங்கே இங்கேதான் நிரஞ்சனா நிற்கிரார்.

  இந்த வயசிலேயே பாட்டி(சித்த) வைத்தியத்தில் ஈடுபாடா?பலே...

  ReplyDelete
  Replies
  1. கூடிய வரைக்கும் ஹாஸ்பிடல் பக்கம் போகாமயே சமாளிக்கப் பாப்பா நிரூ. சின்ன வயசுலருந்தே கை வைத்தியம், மூலிகை வைத்தியம்னா அவளுக்கு ரொம்ப பிடிக்கும்க்கா. என் நடையைப் நீங்க பாராட்டினதுல ரொம்பவே கூல் ஆயிட்டேன். My Heartful Thanks to you!

   Delete
 9. ஆம், சென்றவாரம் பெங்களூர் குளிர்ந்துதான் இருந்தது:)!

  ReplyDelete
  Replies
  1. சடனா ப்ளான் போட்டு கிளம்பினதால பெங்களூர்ல இருக்கற உங்க மாதிரி இணையதள ஃப்ரெண்ட்‌‌ஸை மீட் பண்ற வாய்ப்பை இழந்துட்டேன்கறதுல கொஞ்சம் வருத்தம்தான். அடுத்த முறை விட்ர மாட்டேன்ல்ல! My Heartful thanks to you!

   Delete
 10. பிள்ளையார் விடயம் புதிது. கதம்பம் நன்று. சொந்த ஆக்கம் பற்றி மோகன் குமார் எழுதியதும் நல்ல விடயமே. எல்லாம் மெல்ல மெல்ல வரும். நிரஞ்சனாவால் முடியும். நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com ((வேட் பிரஸ்ல் வரமுடியாது மக்கர் பண்ணுகிறது. இதனாலேயே கூகிள் கவிதையின் பெயரில்)

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் நல்ல எழுத்துக்களைத் தருகிறேன்க்கா. என்னை வாழ்த்திய உங்களுக்கு சந்தோஷத்தோட கூடிய என் நன்றி!

   Delete
 11. கதம்பம்...எல்லாமே நல்லாயிருக்கு நன்றி நிரஞ்சனாக்குட்டி.இவ குட்டி இல்ல.நிறைய அறிஞ்சு வச்சிருக்கிறா.

  பிள்ளையாரைக் கரைக்கிரது சரி...புதுசு எனக்கு.எங்கட வீட்ல பிள்ளையாரோட 4 கிராம் மோதிரமுமெல்லோ சேர்த்துக் கரைச்சினம்.சண்டையோ சண்டை.ஆனா மோதிரம் ஆத்தோட போனதுதான்.கேட்டால் நேர்த்திக்கடனாம் !

  வினாத்தாள் வாங்கியவுடன் எழுதத் தொடங்குவது சரியா?...தப்புன்னு நான் படிக்கிற காலத்திலேயே என்ர அப்பா சொல்லித்தந்தவர் !

  திப்பிலி, விலாமிச்சை வேர்...கிடைகாத மருந்தெல்லாம் சொன்னால் நானெங்க போறது.அதைவிட ஒரு மாத்திரை ஈஸி....ஹிஹிஹி...நான் சும்மா.நான் மாத்திரை போடவே மாட்டன்.இது மாதிரிக் கை மருந்துதான் முதல்ல செய்வேன்.முடியலன்னா அப்புறம்தான் டாக்டர் !

  ReplyDelete
  Replies
  1. கை கொடுங்க முதல்ல! நானும் கூடியவரைக்கும் கை வைத்தியம் பார்த்து பலிக்கலேன்னா, வேற வழியில்லன்னாதான் டாக்டர் பக்கம் போற டைப்பு. பிள்ளையாரோட உங்க மோதிரம் போன விஷயம் படிக்க இப்ப சுவாரஸ்யமா இருந்தாலும் அப்ப சண்டையோ சண்டை நடந்தப்ப மனசு கஷ்டப்பட்டிருக்கும் இல்ல... My Heartful thanks to you!

   Delete
 12. பெங்களூர் அப்படின்னு ஆரம்பிச்சு நல்லா இருக்கும்னு பார்த்தா..கடைசியில் பாட்டிவைத்தியம் ....ஹி..ஹி..ஹி.
  ஏனுங்க...பெங்களூர்ல ஒரு விஷயம் கூட கண்ணுக்கு தட்டு படலையா...உங்களுக்கு தான் நல்லா எழுத வருமே..ஏன்...?

  ReplyDelete
  Replies
  1. அங்க இருக்கற ஃப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தினதுல தனியா குறிப்பு எதுவும் எடுத்துக்கலை. நல்லா எழுத வரும் எனக்குன்னு சொல்ற உங்க வார்த்தை யானை பலம் தருது. அதுக்காகவே நிச்‌சயம் எழுதறேன்ங்க. Many Many Thanks to you from full of my heart!

   Delete
 13. கமகம கதம்பம் சூப்பரா மணக்குது ஃபிரெண்ட்.

  ReplyDelete
  Replies
  1. கதம்பம் உஙகளுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப குஷி எனக்கு. My Heartful Thanks to you!

   Delete
 14. நீங்களும் ராமகிருஷ்ண விஜயம் படிப்பீர்களா, எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். பல நல்ல விசயங்களை அதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஐஸ் ஹவுஸ் முழு வரலாறு தெரியாமல் இருந்தேன் கூறிவிட்டீர்கள் நன்றி. அதை என் பதிவில் எழுதி உள்ளேன் படித்துப் பாருங்கள்.

  சென்னையில் வெயில் கொடுமையோ கொடுமை. ஆனால் இப்போ கொஞ்சம் குறைந்துள்ளது. கதம்பம் அருமை தொடருங்கள் தொடர்கிறேன்

  சென்னை டூ சென்னை

  http://seenuguru.blogspot.com/2012/06/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க... நான் பெங்களூரிலிருந்து திரும்பி ரெண்டு நாளானப்புறம் இப்ப கொஞ்சம் பரவாயில்லை. சென்னைய நீங்க டூர் சுத்திக் காமிச்சத ரொம்ப ரசிச்சுப் படிச்சேன். கதம்பம் அருமைன்னதுக்கு ரொம்ப நன்றி.

   Delete
 15. ஆமாம் நிரூ பிரச்சனை தீர்ந்தது. எனக்காக எல்லோரிடத்தும் கேட்டு எனக்கு அப்ப அப்ப பதில் அழித்த நிரூ தோழிக்கு என்னுடைய நன்றிகள்.

  நான் இன்னும் படிக்கவில்லை கதம்பம் .நான் படித்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன் நிரூ. ஆமாம் நிரூ பெங்களூர் சென்றாயா ரொம்ப சந்தோஷம்.

  ReplyDelete
  Replies
  1. வலையில் உங்கள் பதிவுகள் பார்க்காமல் எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. நானும் இப்ப ப்ரியாயிட்டேன். இனி அடிக்கடி எழுத்தில் சந்திக்கலாம் விஜி.

   Delete
 16. பிள்ளையாரைப் பற்றிய தெளிவும் கடலில் கரைப்பதன் மகிமையும் பற்றியும் மிகவும் தெளிவாக கூறினாய் நிரூ.

  ReplyDelete
  Replies
  1. படித்ததைப் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே. மிக்க நன்றி விஜி.

   Delete
 17. ஆமாம் நிரூ உண்மைதான் தெரிந்த பதிலைக்கூட விட்டுவிடும் நிலைமை ஏற்படும் நிரூ. சித்தமருத்துவம் ம்ம்ம்ம் சூப்பர்டாடா. நிறு கதம்பம் -2 சூப்பரோ சூப்பர் .......

  ReplyDelete
  Replies
  1. கதம்பத்தை இவ்வளவு ரசித்த என் தோழிக்கு... My heartfulThanks!

   Delete
 18. Replies
  1. இந்த இளையவளை என்கரேஜ் பண்ணிருக்கற உங்களுக்கு Many Many Thanks Sir!

   Delete
 19. தாங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் புதிதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது! தேர்வு நேரத்தில் நான் உட்பட பலர் செய்யும் தவறு இதுதான் நன்றாக தெரிந்த கேள்விகளில் கவனம் செலுத்திவிட்டு ஓரளவு தெரிந்த கேள்விகளை அரைகுறையாக எழுதுவதும் விட்டுவிட்டு வருவதும்!!!!!!

  ReplyDelete
  Replies
  1. நானும் இந்த அனுபவத்துக்கு உட்பட்டிருக்கேன் யுவராணி. அதனால தான் படிச்சதும் பகிர்ந்துக்கிட்டேன். My Heartful Thanks for your visitப்பா.

   Delete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!