Pages

Ads 468x60px

4 July 2012

தோழி தந்த விருது!

லைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த பின்னர் எனக்கு நிறைய நட்புகளும் உறவுகளும் கிடைச்சிருக்குங்கறதுல ரொம்ப ரொம்ப சந்‌தோஷம் எனக்கு. அந்த சந்தோஷத்தின் சதவீதம் இப்போ அதிகமாய்டுச்சு. நல்ல நல்ல சமையல் குறிப்புகளை காய்கறிகளின் மருத்துவ பயன்களுடன் அழகிய பதிவுகளாக எழுதிவரும் என் இனிய தோழி விஜி பார்த்தி தான் பெற்ற விருது ஒன்றை எனக்குக் கொடுத்திருக்காங்க.


 ‘என் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று சொல்லி விஜி தந்திருக்கும் இந்த விருதினால எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஏன்னா இதை நான் விரும்பும் ஐந்து பேருக்குக் கொடுக்கலாம்னு சொல்லியிருக்காங்க.. நான் என்னைவிட நல்லா எழுதற என்னுடைய உறவுகள் ஐவருக்கு இதைப் பகிர்ந்து கொடுக்க ஆசைப்படறேன்..

1) தன் அன்பினால் என்னை உருக வைத்தவர், நீண்ட இடைவெளி விட்டு பதிவுகள் எழுதினாலும் சுவாரஸ்யமாக ரசிக்கும்படி எழுதுபவர்-.

                         கலை அக்கா!  (கிராமத்துக் கருவாச்சி)

2) இவர் எழுதும் அழகுத் தமிழ்க் கவிதைகள் என்னை மயங்க வைக்கும். உரைநடையில் எழுதினாலோ மனதில் பிரமிப்பை ஏற்படுத்தும் இவரது எழுத்து-

                     கோவை மு.சரளாதேவி அக்கா! (பெண் என்னும் புதுமை)

3) நான் வலையுலகில் நுழைந்தது முதல் இன்று வரை என்னைத் தட்டிக் கொடுத்து என் எழுத்தை ஊக்கப்படுத்துபவர் இவர். Sweet Sister என்று நான் அன்போடு அழைப்பவர்-

                              ஸாதிகா அக்கா! (எல்லாப் புகழும் இறைவனுக்கே)

4) இவரின் கவிதைத் திறமும், ரசிப்புத் திறமும் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் இவருடையதும் ஒன்று-

                                   மகேந்திரன் அண்ணா! (வசந்த மண்டபம்)

5) என் பதிவுகளில் இவர் கருத்துச் சொல்லியிருக்கிறாரா என்று ஆவலுடன் தேடுவேன். மற்ற தளங்களுக்குச் சென்றாலும் இவரது கருத்து இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவ்வளவு சரியாக, அழகாக கருத்துச் சொல்லி ஊக்குவிப்பவர் இவர்-

                                           செய்தாலி அண்ணா! (செய்தாலி)

இந்த ஐந்து பேரும் அன்போடு நான் தரும் விருதை ஏற்றுக் கொண்டு என்னைப் பெருமைப்படுத்தும்படி வேண்டிக்கறேன். எனக்கு விருது கொடுத்த என்னுயிர்த் தோழி விஜிக்கு ‘நன்றி’ன்னு சொன்னா... ரொம்பவே சம்பிரதாயமாக இருக்கும். நேர்ல இருந்தால் என் செய்கைகளினால அன்பைத் தெரிவித்திருப்பேன். தூரத்தில் இருப்பதால்... வேறு வழியில்லாமல்... My Heartful Thanks to VIJIMMA.

இதனை ஏற்று கொண்டவர்கள் பின்வரும் விதிமுறைகளை பின்பற்றவும்.
  1. விருதை வழங்குபவருக்கு நன்றி சொல்ல வேண்டும் 
  2. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக அதன் சின்னத்தை உங்கள் பிளாக்கில்  பொறித்து கொள்ளலாம்
  3. உங்களுக்கு பிடித்த 5 பிளாகர்களுக்கு இந்த விருதை வழங்கலாம்
 எனக்கு விருது கொடுத்த விஜிக்காக நான் கேட்ட கதை ஒன்றை இங்கே டெடிகேட் செய்கிறேன்.

ரு தமிழன் துபாய் சென்றிருந்தபோது அங்கே நடக்கவிருந்த ஒட்டக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள பெயர் கொடுத்திருந்தான். அதற்காக ஒரு ஒட்டகத்தை வாடகைக்கு எடுக்க விரும்பினான். ஒட்டகத்தின் உரிமையாளர் சொன்ன தொகை மிக அதிகமாக இருந்ததால், ‘‘ஏன்ப்பா இவ்வளவு அநியாயமாக் கேக்கறே?’’ என்று கேட்டான். அதற்கு ஒட்டக உரிமையாளன், ‘‘‌என் ஒட்டகம் சாதாரணமானதில்லைங்க. மத்தவங்கல்லாம் ஒட்டகத்தை அடிச்சு ஓட்டுவாங்க. என் ஒட்டகத்தை நீங்க அடிச்சு ஓட்ட வேண்டாம். அது காதுகிட்ட குனிஞ்சு ‘அப்பாடா’ன்னு ஒரு வார்த்தை சொன்னா வேகமா ஓடும். இந்த வார்த்தையை சொல்லச் சொல்ல ஓட்டத்தோட வேகம் அதிகமாகும். அதே மாதிரி அதோட காதுல ‘கடவுளே’ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா ஓட்டத்தை நிறுத்திடும்’’ என்றான்.

தமிழன் மகிழ்ந்து போய் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு, ஒட்டகத்தை எடுத்துச் சென்றான். பந்தயம் துவங்கியதும் அதன் காதில் ‘அப்பாடா’ என்றான். வேகமாக ஓடியது. அதையே மீண்டும் மீண்டும் சொல்ல, வேகத்தின் அளவு கூடிக் கொண்‌டே போனது. அந்த சுவாரஸ்யத்தில் பந்தயப் பாதையை விட்டு ஒட்டகம் விலகி விட்டதை சற்று தாமதமாகத்தான் கவனித்தான். அதேசமயம் ஒட்டகம் ஒரு பெரிய மணல் மேட்டின் உச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதையும் கவனித்தான். பதட்டத்தில் அவனுக்கு நிறுத்தும் வார்த்தை மறந்து‌ போய்விட, அ‌தன் லகானைப் பிடித்து இழுத்து நிறுத்த முயன்றான். முடியவில்லை. என்னென்னவோ சொல்லி கத்திப் பார்ததான். நிற்கவில்லை அது.

இன்னும் நாலடியில் ஒட்டகம் கீழே விழுந்து விடும் நிலை. தன்னை மறந்தவனாய், ‘‘கடவுளே! நான் செத்தேன்!’’ என்றான். அடுத்த கணம்... கால்களை மணலில் ஊன்றி தேய்த்துக் கொண்டு ஒட்டகம் ஓட்டத்தை நிறுத்தி விட்டது. சரியாக சரிவுக்கு ஓரங்குலம் முன்னால் நின்றிருந்தது. கீழே விழுந்திருந்தால் தானும், ஒட்டகமும் இறந்திருப்போம் என்பதை உணர்ந்ததும், அவன் தன்னை மறந்து பெருமூச்சு விட்டு, ‘‘அப்பாடா! தப்பிச்சேன்’’ என்றான்.

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

53 comments:

  1. வாழ்த்துக்கள்

    அப்பாடா.....

    ReplyDelete
    Replies
    1. அப்பாடாவை உங்களுக்குப் பிடிச்சிருந்துச்சா ஸார். மிக்க நன்றி.

      Delete
  2. விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. விஜி கிட்ட இருந்து விருது பெற்ற உங்களுக்கு என்னோட மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும், எல்லோரையும் வாழ்த்தின உங்க அன்புக்கு நன்றியையும் தெரிவிச்சுக்கறேன் ஸார்.

      Delete
  3. தங்கையின்
    அன்புக்கும் விருதுக்கும்
    என் அகம் கனிந்த நன்றிகள்
    காணிக்கை

    திடனுள்ள
    விதை விருட்சமாகும்
    எழுத்தும் அப்படித்தான்

    சிறப்பாய் எழுத இன்னும் விருதுகள் சூட
    தங்கைக்கு என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. என்னை வாழ்த்திப் பாராட்டிய செய்தாலி அண்ணாவுக்கு... My Heartful Thanks!

      Delete
  4. அன்புத் தங்கைக்கு
    விருது பெற்றமைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று
    கிடைத்த அரும்பெரும் நெல்லிக்கனியை அதியமானுக்கு
    அளித்த ஔவை போல கிடைத்த விருதை எமக்கு
    பகிர்ந்தளித்தமைக்கு எம் அன்பார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ... ஔவைப் பாட்டியோட கம்பேர் பண்ணி என்னை வயசானவளாக்கிட்டீங்களேண்ணா... (சும்மா ஜோக்) விருதைப் பெற்றுக் கொண்டமைக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் உண்மையில. மிக்க நன்றிண்ணா.

      Delete
  5. நிரஞ்சனா... விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்ப்பா....

    கதை சூப்பர்ப்பா...

    விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படிச்சு அனைவரையும் வாழ்த்தின என் ஃப்ரெண்டுக்கு ஹேப்பியா நன்றி சொல்லிக்கறேன்.

      Delete
  6. அன்பு தங்கை நிரஞ்சனா ..........உன் அன்பில் பல நேரம் நனிந்ததுண்டு எழுத்தின் மீது நீ கொண்ட நேசத்தையும் உணர்ந்ததுண்டு உன் தளத்தில் ஒரு விருது எங்களுக்கு கண்டத்தில் பெரும் மகிழ்ச்சி ...............ஊக்குவிக்கவும் கைகொடுத்து கரை தள்ளவும் வயதும் அனுபவமும் தகுதி இல்லை மனம் வேண்டும் என்று உணர்ந்துகொண்டேன் ............உன் நேச இலைகளால் பல நல்ல பூக்களை கோர்த்து வைத்து இருகிராராய் ..............உன் வாழ்வில் எப்போதும் மனம் வீச செய்யும் அந்த மலர்கள் ..........உன் விருபத்திற்கு இணங்க விருதை நானும் பகிர்கிறேன் ..........தொடர்ந்து வாழ்க்கை பாதையில் நீ பதித்து செல்ல உனக்கு என் ஆசிர்வாதங்கள் எப்போதும்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... உங்களின் ஆசிகள் உண்மையில் எனக்கு பெரிய பலம்க்கா. அன்போட நான் தந்த விருதை ஏத்துக்கிட்ட உங்களுககு My Heartful Thanks!

      Delete
  7. //‘அப்பாடா! தப்பிச்சேன்’’ என்றான்///

    ஆங்... அப்பாடா! தப்பிச்சேன்!!!

    :-)

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நீங்க கமெண்ட் போடுற ஸ்டைலே வித்தியாசமா இருக்கு ஸார். சுவாரஸ்யமான ஆளா இருப்பீங்கன்னு தெரியுது. உங்களுக்கு Many Many Thanks Sir!

      Delete
  8. வாழ்த்துகள் நிரஞ்சனா ..

    ReplyDelete
  9. கொஞ்சநாள் ஓய்ந்து இருந்த விருது வழங்கும் படலம் மீட்டும் ஆரம்பம் .. நடக்கட்டும் .. எல்லாம் நன்மைக்கே

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... என்னை மாதிரி புதுசா வர்றவங்களுக்கு இது வாங்கறதும் கொடுக்கறதும் எனர்ஜி டானிக் இல்லையா... அதனால் நல்லதாவே நடக்கட்டும் Friend!

      Delete
  10. மறக்காமல் எனக்கும் விருதளித்து மகிழ்வித்த நிரூ தங்கைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் தந்த விருதை ஏற்றுக் கொண்டு, என்னையும் வாழ்த்திய உங்களுக்கு என் அன்பும் நன்றியும்.

      Delete
  11. வாழ்த்துக்கள் நிரூ ... விருதுகள் பெற்ற ஐவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... எனக்காக தோழி நீ சொன்ன கதை மிகவும் அருமை... ஆமாம் அதிகமாக ஆசைப்பட்டால் திசை தெரியாமல் தான் நிற்கவேண்டும் .... அப்பாடா சூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. விஜி... முடிவை சரியா கவனிக்கலையா..? கடவுளேன்ற வார்த்தை காதில கேட்டதுமே நின்ன ஒட்டகம், அப்பாடான்னு அவன் சொன்னதைக் கேட்டதும் என்ன செஞ்சிருக்கும்..? திசை தெரியாமல் நிற்பதல்ல முடிவு. அழிவும்மா... அழிவு! என்னையும், மற்றவர்களையும் வாழ்த்திய என் தோழிக்கு என் நன்றி.

      Delete
  12. உங்களுக்கு விருதி வழங்கிய நல்ல உள்ளத்துக்கும் அந்த விருதினை பங்கிட்ட உங்களுடைய நல்ல உள்ளத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்....:)

    கதை சூப்பர்.............

    ReplyDelete
    Replies
    1. என்னையும் என் தோழியையும் வாழ்த்தின உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிங்க.

      Delete
  13. விருது பெற்றதற்கு வாழ்த்துகளையும் மேலும் மேலும் விருது பெற வேண்டும் என்ற உற்சாகங்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் விருது கொடுத்த பதிவுலக அன்பு உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

    //‘நன்றி’ன்னு சொன்னா... ரொம்பவே சம்பிரதாயமாக இருக்கும். // இதன் பெயர் தான் குறிப்பால் உணர்த்துதலோ!

    //‘‘அப்பாடா! தப்பிச்சேன்’’// கடவுளே! நல்ல கதை

    உற்சாகமான எழுத்துகளுடன் எங்களை வரவேற்கும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஓஓஓஓஓ... சீனு என்னோட எழுத்தை உற்சாகமான எழுத்துன்னு சொல்றாரு... ரொம்ப ரொம்ப நன்றி ஃப்ரெண்ட்.

      Delete
  14. நிரூ நான் சொன்னது திசை தெரியாத அழிவுதான் ......... கருத்திற்கு நன்றி தோழி...

    ReplyDelete
  15. Congrats to you and others ! Keep writing.

    ReplyDelete
    Replies
    1. என்னை encourage பண்ணும் உங்களுககு .. My Heartful Thanks Sir!

      Delete
  16. வாழ்த்துக்கள் நிரூ தொடர்ந்து பல விருதுகளை குவியுங்கள்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி எஸ்தர்.

      Delete
  17. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    கதை அருமை....

    ReplyDelete
    Replies
    1. கதை பிடிச்சிருந்திச்சா ஸார்... சந்தொஷம் எனக்கு. உங்களுக்கு என் நன்றி.

      Delete
  18. விருது பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைய வாழ்த்திய உங்களுக்கு என்னோட மகிழ்வான நன்றிங்க.

      Delete
  19. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  20. Replies
    1. அருமையான கதைன்னு சொன்னதுலயே குஷியாய்ட்டேன் நான். வாழ்த்து வேற சொல்லியிருக்கீங்க... உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றி.

      Delete
  21. காலை வணக்கம்,நிரஞ்சனா!!!நலமா?விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!அதனைக் கலை அக்காவுடன் பகிர்ந்து கொண்டமைக்கும்,வாழ்த்துக்கள்!மாமா(கலை "அக்கா"வுக்கு நான் மாமான்னா உங்களுக்கும் மாமா தானே?ஹி!ஹி!ஹி!!!)ரொம்பவே பெருமைப்படுறேம்மா!அப்புறம்,அந்தக் கதை அருமை!!!!!ஒட்டகம் வாங்கின ஆள் நாம தானோண்ணும் ஒரு பீலிங்!

    ReplyDelete
  22. காலை வணக்கம்,நிரஞ்சனா!!!நலமா?விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!அதனைக் கலை அக்காவுடன் பகிர்ந்து கொண்டமைக்கும்,வாழ்த்துக்கள்!மாமா(கலை "அக்கா"வுக்கு நான் மாமான்னா உங்களுக்கும் மாமா தானே?ஹி!ஹி!ஹி!!!)ரொம்பவே பெருமைப்படுறேம்மா!அப்புறம்,அந்தக் கதை அருமை!!!!!ஒட்டகம் வாங்கின ஆள் நாம தானோண்ணும் ஒரு பீலிங்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி யோகா அண்ணா. கலைக்காவை தான் இன்னும் காணோம்...

      Delete
    2. ஆஆஆஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன் ....


      கொஞ்சம் வேலை யடா அம்மு ...இணையம் சரியா கிடைக்க மாட்டேன்து....


      நிரு நீங்க தெளிவா இருக்கீங்க ...என் மாமா தான் கொஞ்சம் குழப்படில ஏதோ உளறி போட்டு விட்டார் ...அவருக்கு கருக்கு மட்டைக்கு ஆசை வந்துடுச்சி .....

      மாமா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....

      நிரும்மா என்னாது யோகா மாமா உங்களுக்கு அண்ணா வா ஆஆஆஆஆஆஆ ...ஹ ஹ ஹா யோகா அண்ணா ஒரு தரம் யோகா அண்ணா ஆஆஆஆஆ ரெண்டு தரம் நிருவுக்கு ......... ....

      Delete
  23. வாழ்த்துக்கள் நிரூ!விருது பெற்றதுக்கும் விருது பெற்றவர்களும்!

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷமா இருக்கு உங்களோட வாழ்த்துக்களை கேக்கறதுக்கு. மிக்க நன்றி நேசன் அண்ணா.

      Delete
  24. aaaaaaaaaaaaaaa நிரு செல்லத்துக்கு விருது ...


    நிரு இன்னும் நிறைய நிறைய விருது வாங்கனுமடா கண்ணு ....



    விருது கொடுத்த விஜி பார்த்தி அவர்களுக்கு நன்றி !


    ஆஆஆஆஅ என்னோட பகிர்ந்தமைக்காக நிருவின் கண்ணதுக்கு அன்பு முத்தங்கள்டா செல்லம் . ...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய விருது எனக்கு கிடைக்க வாழ்த்திய உங்களோட அன்புக்கு என் நன்றி.

      Delete
  25. அழகா நல்லா எழுதி இருக்கீங்கடா கதை ...

    அக்கா லாம் எப்பம் தான் இப்படிலாம் எழுதுவேனோ ....ஆஆஆஆஅ அது ஒருக காலத்திலும் நடக்காது ...


    நிறைய எழுதி இன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் நிரும்மா .....

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதின கதை பிடிச்சிருந்துச்சா உங்களுக்கு... ரொம்ப ஹேப்பியாயிட்டேன் நான். தாங்க்ஸ்க்கா...

      Delete
  26. அன்பின் சொந்தத்திற்கு என் வாழ்த்துக்கள்.நல்லதொரு கதை...தொடருங்கள் நீரு.சந்திப்போம்.
    http://athisaya.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. என்னை வாழ்த்தி உற்சாகப்படுத்தின உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  27. Babyliss Pro nano titanium hair dryer
    Babyliss titanium gold Pro nano titanium hair dryer. Manufacturers titanium screws of 2018 ford fusion energi titanium products; Manufacturers of products; Manufacturers of products; ridge wallet titanium Manufacturers microtouch titanium trim walmart of products.

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!