
பிரம்மா பூவுலகத்தைப் படைச்சதும் அங்கு மனிதர்களையும், ஆடு மாடு முதலிய மிருகங்களையும் படைக்க விரும்பினார். முதலில் குரங்குகளைப் படைத்து, ‘‘ஓ குரங்குகளே! உங்களுக்கு நாற்பது ஆண்டு ஆயுள் தருகிறேன்’’ என்றார். குரங்குகள், ‘‘மரங்களில் தாவித் தாவி வாழ்வதும் ஒரு வாழ்வா? வெயில், மழை எதற்கும் வீடு கிடையாது எங்களுக்கு. காட்டில் புலி, சிங்கம் போன்ற துஷ்ட...