Pages

Ads 468x60px

30 April 2012

சுஜாதாவின் சூப்பரான நாடகம்!

சுஜாதாவின் கதைகளைப் படிச்சு ரசிச்சு நான் எழுதின பதிவுல நண்பர் அ.குரு சுஜாதாவோட படைப்புகளை டவுன்லோட் பண்ணிப் படிக்கலாம்னு இந்த லிங்க்கைக் கொடுத்திருந்தார். டவுன்லோட் பண்ணிப் படிச்சேன். அதுல என்னை அசரடிச்ச சுஜாதா ஸாரோட ஒரு நாடகத்தைப் பத்தி இங்கே உங்களோட பகிர்ந்துக்கப் போறேன்.

                    Dr.நரேந்திரனின் வினோத வழக்கு

டாக்டர் நரேந்திரன் அரசாங்க மருத்துவமனையில் அடுத்த டீனாக வரவேண்டியவர். வெளிநாடுகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர். அவர் மீது ஒரு நோயாளியின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி மூச்சை நிறுத்தியது, தன் கீழ் வேலை செய்த கல்யாணமாகாத பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க உதவியது, தடை செய்யப்பட்ட மருந்து ஒன்றைக் கொடுத்த ஒரு சிறுவன் சாகக் காரணமாயிருந்தது என்று மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டு கோர்ட்டில் கேஸ் துவங்குகிறது.

வழககில் வினோதம் என்னவென்றால் டாக்டர் நரேந்திரன் மூன்று குற்றங்களையும் ஒப்புக் கொளகிறார். இது ஏற்கனவே முடிவு தீர்மானிக்கப்பட்ட வழக்கு, அதனால் வக்கீல் இல்லாமல் நானே வாதாடிக் கொள்கிறேன் என்கிறார். நீதிபதி அதை ஒப்புக் கொள்ளாமல் லாயர் கணேஷிடம் நரேந்திரன் வழக்கை எடுத்து வாதாடச் சொல்கிறார். டாக்டர் ஒத்துழைக்க மறுத்தாலும் கணேஷும் வஸந்தும் விசாரணையில் இறங்கி அவர் குற்றமற்றவர் என்பதைக் கண்டறிகின்றனர். கோர்ட்டில் வழக்கு நடக்க, டாக்டரைக் காப்பாற்ற தங்களால் இயன்றவரை வாதாடுகின்றனர்; போராடுகின்றனர்.

வழக்கின் போக்கில் டாக்டர் நரேந்திரன் அவர்களிடம் மனம் திறந்து பேசுகிறார். முதல் இரண்டு கேஸ்களிலும் தன் மீது தவறில்லை என்றாலும் மூன்றாவதான அந்தச் சிறுவன் ஒரு Child Prodigy. அவன் இறக்கும்படி விட்டது தனககுத் தோல்வி, அதனால் தான் தண்டனை அடைய விரும்புவதாகச் சொல்கிறார். இதனிடையில் கணேஷ்-வஸந்த் பொறிபறக்க திறமையாக வாதாடுவதைக் கண்டு இளவழகன் என்ற அரசியல் அல்லக்கை ஒருவன் வந்து அவர்கள் கேஸிலிருந்து விலக பேரம் பேசுகிறான். கணேஷ்-வஸந்த் வெகுண்டு அவனைத் திட்டி அனுப்பி விடுகின்றனர். ஒரு அரசியல்வாதி ஒரு பிரச்னையிலிருந்து மீள கண் துடைப்பிற்காக பொய் வியாதியைச் சொல்லி ஆஸ்பத்திரியில் அட்மிட்டாவதற்கு வர, அட்மிட் செய்ய நரேந்திரன் மறுத்தனால் வஞ்சம் வைத்து பழிவாங்கப்படுகிறார் என்பதை உணர்கின்றனர்.

கோர்ட்டில் நரேந்திரனுக்கு ஆதரவாக கணேஷ்-வஸந்த் சமர்ப்பிக்கும் சாட்சிகள் எல்லாம் பயமுறுத்தல் + பணம் காரணமாக பல்டி அடிக்கின்றனர். தீர்ப்புக்காக ‌கோர்ட் கலையும் போது முன்பே தண்டனை தீ்ரமானிக்கப்பட்டது என்றும் தனக்கு என்ன தண்டனை விதித்து தீர்ப்பு வரும் என்பதை டாக்டரே சொல்கிறார். அப்போது இளவழகனுக்கு மாரடைப்பு வர, வஸந்தின் எதிர்ப்பையும் மீறி, டாக்டர் சிகிச்சை செய்கிறார். பின்னணியில் டாக்டர் சொன்ன அதே தீர்ப்பு நீதிபதியின் குரலில் ஒலிக்கிறது. நாடகம் நிறைகிறது.

நாடகம் என்பது பெரும்பாலும் வர்ணனைகள் குறைவாக வசனங்களிலேயே நகர்வதல்லவா..?  அதிலும் கதையில் பாதி்க்கும் மேல் கோர்ட்டிலேயே நடப்பதால், வாதப் பிரதிவாதங்கள் அனல் பறககின்றன. சுஜாதவின் ஷார்ப்பான வசனங்கள் நாடகம் முழுதுமே மிகப் பிரமாதமாக இருக்கிறது. அசரவைக்கிறது. வஸந்த் கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம். பொதுவாக ‌ஜோக்கெல்லாம் அடித்துக் கொண்டிருககும் ஜாலியான இளைஞன் என்பதற்கும் மேலாக சமூக அக்கறையுள்ள ஒருவன் என்பதை நாடகம் அழகாகச் சித்தரிக்கிறது. கண்ணெதிரே பொய்ச் சாட்சிகளும், உண்மை மறைக்கப்பட்டு அநீதி கோலோச்சுவதைப் பார்த்து ஒரு கட்டத்தில் வஸந்த் கோபப்படுகிறார் பாருங்கள்... 

நீதிபதி: மிஸ்டர் வஸந்த்! நீங்க சொல்றது எல்லாம் டோட்டலி இர்ரெலவன்ட் டு தி கேஸ்.

வஸந்த்: யுவர் ஆனர்! நீங்க எவ்வளவு வாங்கியிருக்கீங்க?

 -எக்ஸலண்ட்! படிக்கும்போதே பிரமிக்க வைத்தது என்னை.  வஸந்த் கேரக்டரை உயர்த்திப் பிடித்த இந்த நாடகம், டாக்டர் நரேந்திரனின் கதாபாத்திரமும் மனதில் இடம் பிடிக்கிறது. நீதியையும் நேர்மையையும் அரசியங்கற சக்தி (சாக்கடை?) எப்படியெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறது என்கிற சமகால அவலத்தை அழுத்தமாய் மனதில் பதியவைத்தது இந்த நாடகம்.  நாவல் என்ற வடிவத்தில் சுஜாதா இதை எழுதியிருந்தால் இந்த Impact கிடைத்திருககாதோ என்றுதான் எனக்குத் தோன்றியது. Hats Off to Sujatha Sir! நீங்களும் இதைத் தவறாமல் பதிவிறக்கம் பண்ணி தவறாம படிச்சு ரசிககணும்கறது என்னோட சிபாரிசு மற்றும் விருப்பம். இனி, நான் ரசித்த வ்சனங்களில் சில:

* * *

வஸந்த் : பிராஸிகியூஷன் படி பாத்தா ஆஸ்பத்திரியில ருத்ரதாண்டவம் ஆடியிருக்கீங்க போலருக்கே...

* * *

டாக்டர் : எனக்கு டாக்டர்கள் மேல நம்பிக்கையில்ல.

வஸந்த் : அப்படிச் சொல்லிட்டா எப்படி? எனக்குக் கூடத்தான் டாக்டர்கள் மேல நம்பிக்கையில்ல. இருக்கிற டாக்டர் எல்லாம் கொள்ளை அடிக்கிறவங்கன்னு அபிப்ராயம். அதுக்காக என்னால சொந்தமா ஒரு கத்தியை எடுத்துண்டு அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணிக்க முடியுமா?

* * *

வஸந்த் : காப்பதற்கு ஆண் துணை இல்லாத பெண்களை ரேப்புதல் சுலபம்னு வள்ளுவர் சும்மாவா சொன்னார்?

கணேஷ் : ஏய்... உனக்கு விவஸ்தையே கிடையாதுடா. வள்ளுவர் உனககாக ஸ்பெஷலா குறள் எழுதி வெசசிருககாரா?

* * *

மஞ்சுளா : இப்ப வந்தது யாரு? அவரை எங்கேயோ பாத்த மாதிரி இருககு.

வஸந்த் : அவரை நீங்க எங்கே வேணாலும் பாக்கலாம்.

மஞ்சுளா : பேரு?

வஸந்த் : அரசியல்!

* * *

கணேஷ் : டாக்டர்! இந்த மூணு கேஸ்லயும் உங்க மனச்சாட்சிக்கு விரோதமா எதாவது நடந்திருககா?

டாக்டர் : இல்லே. மறுபடி இதே சூழ்நிலையில, இதே காரியங்களைத்தான் செய்திருப்பேன். மை கான்ஷியஸ் இஸ் க்ளியர்!

* * *

நீதிபதி : மிஸ்டர் வஸந்த்! என்னதான் சொல்ல விரும்பறீங்க? அந்த மருந்து யாரைக் குணப்படுத்தினா என்ன? எத்தனை விலையா இருந்தா என்ன? இந்தக் கேஸ்ல காலை வாரிடுத்து. இல்லையா?

வஸந்த்: (சற்று அலுப்புடன்) யுவர் ஆனர்! நான் காட்ட விரும்பறது... சொல்ல விரும்பறது... எல்லாம் ஒரே ஒரு...

நீதிபதி: (சிரித்து) நீங்க காட்ட விரும்பறதெல்லாம் நல்லா எனக்குத் தெரியுது. சுத்தி வளைக்காமே நேராக் கேளுங்க.

வஸந்த்: (கோபத்துடன்) ஆல்ரைட். நேராகவே கேக்கறேன். டாக்டர் பாலகிருஷ்ணன், இந்தக் கேஸை போலீஸ் எடுத்துக்கிட்டு கோர்ட்லே கொண்டு வர்றதுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தீங்க?

நீதிபதி: (அதட்டி) மிஸ்டர் வஸந்த்! திஸ் இஸ் தி லிமிட்!

* * *

விட்டா... முழு நாடகத்தையுமே எழுதிடுவேன் போலருக்கு. பதிவு நீண்டுட்டதால இத்தோட ஃபுல்ஸ்டாப் வைக்கறேன். நிரூ நல்ல தமிழ்ல எழுதிப் பழகணும்னு ஒரு Friend கருத்துச் சொல்லியிருந்ததால ரொம்ப கஷ்டப்பட்டு, முடிஞ்சவரை ஆங்கிலம் தவிர்த்து இந்தப் பதிவை நல்ல தமிழ்ல எழுதியிருக்கேன். இந்த Writing Style ஓ.கே.வா?

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

47 comments:

  1. படித்திருக்கிறேன். விருவிருப்பாக்ச் செல்லும்....

    உங்கள் விமர்சனம் நன்று. சுஜாதா அவர்களின் எழுத்தினை மேற்கோள் காட்டி விமர்சனம் எழுதுவதென்றால் முழு புத்தகத்தினையும் எடுத்துக்காட்ட வேண்டும்.... எதை விடுவது எதை எழுதுவது என்ற குழப்பம் தான்.... :)

    லிங்க் கொடுத்ததற்கு நன்றி. மீண்டும் ஒரு முறை படிக்க வசதி அல்லவா.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தீவிர சுஜாதா விசிறி என்பதை சென்ற முறை தலைவர் என்று குறிப்பிட்ட போதே ‌தெரிந்து கொண்டேன். எனக்கு Energy தந்த உங்கள் வருகைக்கு Many Many Thanks!

      Delete
  2. நிரூ உங்களுக்கு சுஜாதாவை றொம்ப பிடிக்கும் போல.. சென்ற ஒரு பதிவில் அவர் புத்தகங்களை அறிமுகப்படுத்தனீகள் போல.. இப்போது நாடகம். இவர் பத்தகங்களை நான் வாசிக்க சந்தர்ப்பம் இது வரை கிடைக்கவில்லை கிடைத்தால் சந்தோஷம். உங்கள் விமர்சனம் சூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எஸ்தர். சமீப காலமாய் அவரது படைப்புகளைப் படிக்கப் படிக்க இன்னும் தேடித் தேடிப் படிக்கணும்கற உணர்வு ஏற்படுது. வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பாரும்மா. சூப்பர் என்றதற்கு ரொம்ப தாங்க்ஸ்!

      Delete
  3. நானும் இந்த நாடகத்தை படித்திருக்கிறேன், குறிப்பாக, முடிவு, அருமை. உங்கள் விமர்சனமும் அருமை

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் அருமை என்ற உங்களுககு... My Heartful Thanks!

      Delete
  4. நான் படித்த முதல் நாடகம். கணேஷ் வசந்தின் அடிமை நான். அதற்காகவே எல்லா புத்தகங்களையும் வாங்கிவிட்டேன் (நான் வேலைக்குச் செல்வதற்கு முன்பே). கணேஷ் வசந்தின் பத்ரி அமைப்பு இருவர் போல் தொடரும் அனால் எழுத்து ஒருவருடையது இது போன்ற பிரமிப்பை சுஜாத்த ஒருவரால் மட்டுமே தர முடியும்.

    காந்தளூர் வசந்த குமரன் கதைகள் படித்துப் பாருங்கள், கணேஷ் வசந்த்தை சங்க காலத்தில் சித்தரித்து கதை நகர்த்தியிருப்பார்.

    உங்கள் பாணியில் விமர்சனம் அருமை. சுஜாதா என்றால் அந்த பதிவை நான் குறைந்த்தது இரண்டு முறை படிப்பது வழக்கம். உங்கள் பதிவை பலமுறை படித்து விட்டேன். நன்றி.

    நேரம் இருந்தால் இந்தக் கதையை படித்துப் பாருங்கள்

    http://seenuguru.blogspot.in/2012/04/blog-post_30.html

    ReplyDelete
    Replies
    1. என் பதிவைப் பல முறை படித்தீர்களா Friend! விமர்சனம் அருமைன்னு வேற சொல்லியிருக்கீங்க. I Feel Glad. Many Many Thanks to you!

      Delete
  5. சுஜாதா மீது உண்மையிலேயே அன்பு இருப்பவர்கள் அவருடைய எழுத்துகளை இப்படிச் சட்டத்துக்குப் புறம்பாக விநியோகிக்க முன்வர மாட்டார்கள்! இந்த மின்னூல் நீங்கள் தரவேற்றியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் இப்படிப்பட்ட சுட்டிகளைப் பரப்பி சுஜாதாவுடைய எழுத்துகளை நவராத்திரி சுண்டலாக்காதீர்கள்!!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. சமீப காலமாத்தான் சுஜாதா ஸாரோட எழுத்துககளைப் படிச்சு அவரோட ரசிகையானேன். இது உங்களுக்கு வருத்தத்தை தந்திருந்தால்... I'm Sorry!

      Delete
    2. அன்புள்ள நிரஞ்சனா,

      நீங்கள் மன்னிப்புக் கேட்கும்படி தவறு ஏதும் செய்யவில்லை. உங்கள் மனம் புண்படவில்லை என்று நம்புகிறேன்.

      வலையுலகத்திற்குப் புதியவரும், நண்பர் கணேஷ் மூலம் அறிமுகம் ஆனவருமான உங்களுக்கு என் அன்பும், ஆசிகளும்... உங்கள் சேவை தொடரட்டும்...

      Delete
  6. நானும் படிச்சிருக்கேன். அருமையான கதை. நீங்களும் ரசிச்சு எழுதிருக்கீங்க !

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே ரசிச்சுப் படிச்சேன் நான். உங்களுககும் பிடிச்சதுன்னு தெரியறப்ப இன்னும் சந்தோஷம். Many Many Thanks!

      Delete
  7. அன்புள்ள தோழி நிரஞ்சன அவர்களுக்கு DR.நரேந்திரனின் வினோத வழக்கு அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த நாவல் . விஞ்ஞானத்தை பாமரனுக்கு கொண்டு சென்ற பெருமை சுஜாதாவையே சாரும் . அவர் எழுத்தில் தொடாத துறைகளை இல்லை . DR.நரேந்திரனின் வினோத வழக்கு எந்த காலத்துக்கும் ஏற்ற ஒரு நாவல் . பதிவுலகில் தற்போது நீங்கள் வித்தியாசமான முறையில் எழுத முயற்சித்து வருகிறீர்கள் வாழ்துகள் உங்களின் எழுத்து அனைவராலும் பராட்டப்பட வேண்டும் எனில் அதிகம் சுஜாதாவை அதிகம் படியுங்கள் உங்களின் சிந்தனை விரிவடையும் . மேலும் புதுமைபித்தன், சுந்தரராமசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், கி.ராஜநாரயனன், நாஞ்சில்நாடன், கு.அழகிரிசாமி, ச.கந்தசாமி, தி.ஜானகிராமன், எஸ்.ராமகிருஷ்ணன், போன்றோரின் படைப்புகளை படியுங்கள் நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி ஆவீர்கள் . என்னை மதித்து கருத்துரை தந்து உங்களின் பதிவில் என்னை அறிமுகம் செய்து வைத்ததிற்கு என்றென்றுன் நன்றி உடையவனாக இருப்பேன் . அதிகமாக படியுங்கள் , அதிகமாக எழுதுங்கள் வலையுலகில் மென்மேலும் வளர வாழ்துகள்

    அன்புள்ள நண்பர் balhanuman அவர்களுக்கு சுஜாதாவின் தீவிர ரசிகன் நான் நிரஞ்சன அவர்கள் என் வலையில் இருந்து தான் டவுன்லோட் செய்து படித்து எழுதியுள்ளார்கள் . சுஜாதா வின் நூல்களை எனது சொந்த முயற்சியில் மின் நூலாக பதிவேற்றம் செய்யவில்லை வலையுலகின் மிகப்பெரும் ஜாம்பவான்களால் வலையேற்றம் செய்யப்படதை நான் தொகுத்து ஒரு இடத்தில் தந்து உள்ளேன் . சுஜாதாவின் நூல்கள் கிடைக்கப்பெறாத நண்பர்களுக்கு அவரின் ஆளுமையை தெரிவிக்கவே இந்த நூல்கள் வலையேற்றம் செய்யப்பட்டு உள்ளது . இது அந்த மாபெரும் கலைஞனுக்கு அவரின் எண்னற்ற வாசகர்கள் செய்யும் அஞ்சலிதான் . நீங்கள் கோபப்படுவது போல சுஜாதாவின் எழுத்துக்கள் நவராத்திரி சுண்டலாக்கும் முயற்சி அல்ல அவரின் மின்நூல்களை படிக்கும் அனைவருக்கும் அவரின் அனைத்து படைப்புகளையும் புத்தகமாக வாங்கி படிக்கும் ஆர்வம் மேலிடும் . சுஜாதாவின் மேல் உங்களுக்கு இருக்கும் மரியாதையை நினைத்து பெருமை அடைகிறேன் . இணையத்தில் தேடிப்பாருங்கள் என்னைப்போல பல நூறு பேர் சுஜாதாவின் படைப்புகளை பதிவேற்றம் செய்துள்ளனர் உங்களுக்கு வேண்டுமானால் அவற்றின் சுட்டிகளை தருகிறேன் சோதித்து கொள்ளுங்கள் . சுஜாதாவின் நூல்களை தரவேற்றம் செய்ததினால் நான் ஐந்து பைசா நன்மையை கூட பெறவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவரின் நூல்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளும் நண்பர்களின் அன்பை மட்டுமே விலை மதிப்பில்லா வெகுமதியாக பெற்றுளேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குரு உங்கள் பொறுமையான விளக்கத்திற்கு. உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

      Delete
    2. அன்புள்ள நண்பர் balhanuman உங்களின் வலைத்தளம் பார்த்தேன் நீங்கள் கோபபட தகுதியான ஆள்தான் சுஜாதா என்ற மாபெரும் கலைஞனுக்கு நீங்கள் செய்திருக்கும் மரியாதை அதிகம் உங்களின் தொண்டில் நான் ஒரு சதவீதம் கூட செய்யவில்லை யாராலோ பதிவேற்றப்பட்ட நூல்களின் லிங்குகள் மட்டுமே என்னால் கொடுக்கப்பட்டது தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்காள் .

      Delete
    3. ந்ண்பர் குரு அவர்களே... நீங்கள் பரிந்துரைத்திருப்பவர்களை ஒவ்வொருவராய் அவசியம் படிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு நீங்கள் தரும் ஊக்கத்துக்கு நன்றி. பால ஹனுமான் ஸாரைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்ததும் அவரின் தளம் சென்று படிக்கும் ஆர்வம் என்னையும தொற்றிக் கொண்டது. உடன் சென்று பார்க்கிறேன். My Heartful Thanks to Both of you!

      Delete
    4. @குரு,
      நீங்கள் ஒரு ஆசிரியர் என்று அறிந்ததில் கூடுதல் மகிழ்ச்சி.. என்னுடையது கோபம் அல்ல. ஒரு ஆதங்கம் தான். புரிதலுக்கு நன்றி.

      @நிரஞ்சனா
      எனது தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

      Delete
  8. சொல்ல மறந்து விட்டேன் தோழி மின்னல் வரிகள் கனேஷ் இந்தவாரம் வலைச்சரத்தில் எழுதுகிறார் அவருக்கு என் வாழ்துதலை தெரிவியுங்கள்

    ReplyDelete
  9. தமிழ்மணம் 4 இன்ட்லி 3

    ReplyDelete
  10. சமிபத்தில் தான் படித்தேன் .. அருமை ..
    அதுபோல மேலும் ஒரு குற்றம் , மேற்கே ஒரு குற்றம் இந்த கதைகளையும் படித்து பாருங்கள் .. கடைசி பத்து பக்ககங்களில் கதையின் போக்கே தலைகிழாக மாறிவிடும் .. அருமையான எழுத்தாளர் சுஜாதா ...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன இரண்டு குற்றங்களையும் அவசியம் படிக்கிறேன் Friend. Thanks!

      Delete
  11. //நிரூ நல்ல தமிழ்ல எழுதிப் பழகணும்னு ஒரு Friend கருத்துச் சொல்லியிருந்ததால ரொம்ப கஷ்டப்பட்டு, முடிஞ்சவரை ஆங்கிலம் தவிர்த்து இந்தப் பதிவை நல்ல தமிழ்ல எழுதியிருக்கேன். இந்த Writing Style ஓ.கே.வா?
    //

    உங்க தமிழ் என்னை புல்லரிக்க வைக்குது நீரூ ...

    ReplyDelete
    Replies
    1. Hello Friend! பதிவுல ஒரே ஒரு ஆஙகில வார்த்தைதான் (தமிழ்ல சொல்லத் தெரியாம) Use பண்ணிருக்கேன். இது பின்னுரையில என்னோட இயல்பான எழுத்து. இதையும் கலாய்ச்சா நியாயமா?

      Delete
  12. சிறப்பான அறிமுகம் நிரஞ்சனா. படிக்கத் தூண்டும் படியாக உள்ளது. நீங்க எழுதும் ஸ்டைலும் டபுள் ஓகே தான். தொடர்ந்து எழுதி கலக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹையா... என்‌னோட Writing Style டபுள் ஒ.கேன்னு நீங்களாவது பாராட்டினீங்களே... இந்த சந்தோஷத்துலயே நி்ச்சயமா நிறைய எழுதுவேன்ல... My Heartful Thanks to you!

      Delete
  13. எனக்கு கணேஷை விட வஸந்த் குறும்புகள் பிடிக்கும் நிரூ. என் ஃபேவரிட் வசந்தை பற்றி நினைவு படுத்தியமைக்கு நன்றி நிரூ

    ReplyDelete
    Replies
    1. இப்ப படிக்கப் படிக்க எனக்கும் வஸந்த்தை ரொம்பவே பிடிகக ஆரம்பிச்சிட்டுது. உங்களுக்கும் பிடிச்சதுங்கறதுல ரொம்ப சந்தோஷம். My Heartful Thanks!

      Delete
  14. நிரஞ்சனாக்குட்டி கையில சுஜாதா மாட்டிக்கிட்டரா இந்தமுறை.நானும் வாசித்தேன்.ரசித்தேன்.நன்றி !

    ReplyDelete
    Replies
    1. சுஜாதா கையில நான்தான்க்கா மாட்டிக்கிட்டேன். தேடித் தேடி அவர் படைப்புகளைப் படிக்கற ஆசைய உண்டாக்கிட்டார். இதை ரசிச்சேன்னு நீங்க சொன்னதுல I Feel Happy and Many Thanks to you!

      Delete
  15. அருமையான அறிமுகம்
    லிங்க் கொடுத்தமைக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வரவும் புதியவளான என்னை நீங்கள் பாராட்டியதும் ரொம்ப சந்தோஷமாயிருக்கு. உங்களுக்கு மிக்க நன்றி!

      Delete
  16. HI niranjana,if you have the chance to read devan's kalyani,pls post your comments on that book.I am sure you will like it.Because no one talk about devan sir.if you read one of his book than i am sure you will search for all of his books.I don't have tamil font.thats why wrote in english.

    ReplyDelete
    Replies
    1. தேவன் என்கிற பெயர் கேள்விப்பட்டதுண்டு. ஒரு வரிகூடப் படித்ததில்லையே... நீங்க சொன்னதால இனி கூடிய சீககிரம் தேடிப் படிக்க முயற்சிக்கிறேன். My Heartful Thanks to you!

      Delete
  17. எழுத்தினிலே ஒரு முதிர்வு தெரிகிறது நிரஞ்சனா...
    ஒரு சமயம்... நீ வளர்ந்துவிட்டாயா...?

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னும் வளரலைங்க. தமிழும் இங்கிலீஷும் கலந்து எழுதற என் ஸ்டைலை கேலி பண்றாங்களேன்னு ‌நிறைய டைம் எடுத்துக்கிட்டு பல முறை எடிட் பண்ணி இந்தப் பதிவை எழுதினேன். முதிர்‌ச்சின்னு நீங்க சொல்றதால இனி இப்படி‌யே தொடர ட்ரை பண்றேன். My Heartful Thanks to you!

      Delete
  18. சுஜாதாவின் படைப்புகளில் இருக்கும் மின்சாரம் இந்த நாடகத்திலும் இருக்கிறது. அதை அற்புதமாக விவரித்த தாங்கள் எழுத்து நடையிலும் அதே மின்சாரம் இருக்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்திலயும் மின்சாரம் இருக்கா... கேக்கவே ரொம்ப Happy-யா இருக்கே. உங்களுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ஸார்...

      Delete
  19. ஹி நிரஞ்சனா!!

    நலமா ...சுப்பரா இருக்கு நீங்கள் எழுதுறது ...கலக்குங்க ....குட்டிப் பொண்ணா இப்புடிலாம் எழுதுறது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


    உங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கேன் என்ர பிளாக் வந்து நீங்கள் வாங்கிக் கொள்ளனும் எண்டு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ......

    ReplyDelete
    Replies
    1. ஸ்வீட்டோட கையால žஸ்வீட் கிடைச்ச மாதிரி உங்களோட கையால விருதுங்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷம் தர்ற விஷயமாச்சே கலைக்கா. இதோ வந்துட்டேன்...

      Delete
  20. சுஜாதவின் ஷார்ப்பான வசனங்கள் நாடகம் முழுதுமே மிகப் பிரமாதமாக இருக்கிறது. அசரவைக்கிறது.

    சுஜாதாவின் பிறந்தநாள் நினைவலைகள் ..
    பகிர்வு அருமை .. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. சுஜாதா ஸாரோட நினைவுகளைக் கிளறிடுச்சா? பாராட்டின உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  21. நானும் படிச்சிருக்கேன். ஆனாலும் உங்கள் விமர்சனம் படிச்ச உடனே திரும்ப படிக்கணும் போல இருக்கு. லிங்க் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படியுங்கோ சிஸ்டர்... சுஜாதாவை மறுபடி படிச்சாலும் ரசிக்க முடியும்னு தான் தோணுது... My Heartful Thanks to you!

      Delete
  22. அருமையான் பகிர்வு. இந்த நாடகத்தை முன்பே படித்திருக்கிறேன். தொலைக்காட்சயில் தொடராக வந்தாதாக ஞாபகம்.
    சுஜாதா என்றாலே பிரமிப்பு.

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!