ஹாய் எவ்ரிபடி! ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்க முன்னாடி வந்திருக்கேன் நிரூ! சந்தோஷத்துக்குக் காரணம் இந்த விருது...
என் அன்பிற்கும் பாசத்துக்கும் உரிய, கலை அக்கா (கிராமத்துக் கருவாச்சி) எனக்கு இந்த விருதைக் கொடுத்திருக்காங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட அன்போட விருது தந்த அக்காவுக்கு நிறைய நிறைய நி்றைய நன்றி சொல்லிக்கறேன்.
ஆனா... அவங்க இந்த விருதை ஏன் தந்தாங்கன்றது உங்களுக்கெல்லாம் தெரியாதுதானே... சொல்றேன். உங்க மானிட்டரைக் கொஞ்சம் உத்துப் பாருங்க... கரெக்ட், அப்படித்தான். இப்ப வேகமா ஒரு கொசுவத்தி சுத்தறது உங்க கண்ணுக்குத் தெரிஞ்சிருக்குமே... எஸ்! ப்ளாஷ்பேக்தான்.
மூணாம் வகுப்பு படிக்கிற சமயம் நிரூவோட ஸ்கூல்ல ஆண்டு விழா வர்றதுன்னு பல போட்டிகள் வெச்சாங்க. மாறுவேடப் போட்டின்னு சொன்னதும், அவ ரொம்ப இன்ட்ரஸ்ட்டா ‘நான் கலந்துக்கறேன் மிஸ்’ன்னு சொல்லிட்டு வந்துட்டா. வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னதும், அம்மா ‘‘காந்தித் தாத்தா வேஷம் போட்டா நல்லா இருக்கும் நிரூ. எப்படிப் பேசணும்னு நான் சொல்லித் தர்றேன்’’ன்னு சொன்னாங்க. காந்தி வேஷம் போட்டா, இடுப்புல ஒரு துண்டை மட்டும் கட்டி, கைல ஒரு தடியக் கொடுத்தாப் போதும், மாறு வேஷத்துக்கு வேற செலவு பண்ண வேணாம்கற அம்மாவோட சூப்பர் ப்ளான் அவளுக்குத் தெரியாம அப்பாவி நிரூவும் சந்தோஷமா ஒத்துக்கிட்டா.
‘‘என் பெயர் மோகன்தாஸ் கரமசந்த் காந்தி. நான் வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்க உழைத்தேன். என்னை மகாத்மா என்று அழைக்கிறார்கள்’’ இதுதான் அம்மா சொல்லிக் கொடுத்த டயலாக். இதை மூணு நாளா சொல்லச் சொல்லி ப்ராக்டிஸ் கொடுத்தாங்க. நிரூவும் சரியாவே சொன்னா. அம்மாவுக்கு செம குஷி. ஆனா ஆண்டு விழா அன்னிக்கு காலையில நிரூவுக்கு அதிர்ச்சி காத்திருந்துச்சு. காந்தி வேஷத்துக்காக மொட்டை போட்டுக்கணும்னாங்க அம்மா.
நிரூவுக்கு பயங்கர கோபம். மாட்டேன்னா. ‘‘நிரூவுக்கு அழகான ஹேர். மொட்டைல்லாம் வேணாம். தலையில துண்டைக் கட்டி மொட்டைத் தலை மாதிரி பண்ணிடலாம்’’ன்னு நிரூவுக்கு சப்போர்ட் பண்ணாரு அவ மாமா. அம்மா அதெல்லாம் கேக்காம பிடிவாதமா, ‘‘சும்மாருங்கண்ணா. வளர்ற குழந்தைதானே... சீக்கிரம் வளர்ந்துடும்’’ன்னுட்டு மொட்டை போட வெச்சுட்டாங்க.
நிரூவுக்கு கோபமான கோபம். அழுகையான அழுகை. ஃபங்ஷனுககு வந்து ஸ்டேஜ் கிட்ட காந்தியா நின்னப்பவும் அவ கோபம் அடங்கலை. அவ பேரை அனவுன்ஸ் பண்ணி, கூப்பிட்டாங்க. மெதுவா நடந்து போய் ஆடியன்ஸைப் பாத்து நிக்கறா. கைதட்டல் கிடைச்சுது. ஆனா பாருங்க... கோபத்துல பேச வேண்டிய டயலாக் மறந்துடுச்சு. ‘‘நான்... நான்... மோகன்தாஸ் காந்தி’’ன்னு சொல்லிட்டு முழிக்கிறா.

ஸ்டேஜ்ல சைட்ல இருந்த அம்மா, கோபமா, ‘‘சுதந்திரத்துக்குப் பாடுபட்டேன்னு சொல்லேண்டி’’ன்னு சின்னக்குரல்ல சீறினாங்க. நிரூ ஒரு செகண்ட்கூட லேட்டாக்காம, ‘‘சுதந்திரத்துக்கப் பாடுபட்டேன்னு சொல்லேண்டி’’ன்னு மைக்ல சத்தமாச் சொல்லிட்டா. ஆடியன்ஸ்லருந்து ஒரே சிரிப்புச் சத்தம். வெக்கப்பட்டுக்கிட்டு ஸ்டேஜுக்குப் பின்னாடி ஓடிட்டா நிரூ.
‘‘கடைசி நேரத்துல சொதப்பிட்டியேடி... உனக்கு ஒரு பிரைஸும் கிடைககாது.’’ன்னு அம்மா திட்டிககிட்டே இருக்க, அந்த நேரத்துல பரிசுகளை அறிவிச்சிட்டிருந்தாரு ஹெச்.எம். மாறுவேடப் போட்டியில நிரூவுக்கு ஆறுதல் பரிசு கிடைச்சுது. ஏன்னா... பரிசு தரலைன்னு ‘ஆங்ங்ங்...’ன்னு சைரன் குரல்ல நிரூ அழ ஆரம்பிச்சா, அவளோட சத்தத்துல பதினெட்டு பட்டி ஜனங்களும் ராவெல்லாம் தூங்க முடியாம சண்டைக்கு வருவாங்கன்னு ஹெச்.எம்.முக்குத் தெரியும். அதனாலதான் பரிசு கொடுத்தார். ‘‘அந்த பயம் இருக்கட்டும்...’’னு நிரூவும் பரிசை வாங்கிட்டு சந்தோஷமா வீட்டு்க்கு வந்தா.
இந்த விஷயம் கலைக்காவுக்குத் தெரிஞ்சதாலதான் நிரூவுக்கு விருது கொடுத்திருக்காங்க. முன்னயாவது ஸ்கூல்ல அழுதா பதினெட்டு பட்டியும் அலறும். ‘‘எனக்கு விருது தரலையே...’’ன்னு கலை அக்காவோட தளத்துல இப்ப நிரூ அழுதான்னு வைங்க... நெட் மூலமா அகில உலகமும் எதிரொலிக்குமே, உலகம் தாங்காதேன்னு பயந்து போயித்தான் கலைக்கா எனக்கு விருது தந்திருக்காங்க. ஹா... ஹா....
அச்சச்சோ... வேணாம் கலைக்கா... இதுக்கெல்லாம் கோபப்பட்டு கருக்கு மட்டையத் தூக்காதீங்க. என்னைப் பத்தி எதாச்சும் எழுதணும்னு சொன்னீ்ங்களேன்னுதான் இப்படிச் சொன்னேன். நீங்க அன்பா, பாசமாதான் கொடுத்தீங்கன்னு நம்ம மக்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும். சரிதானே ஃப்ரெண்ட்ஸ்!