Pages

Ads 468x60px

16 May 2012

நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!


போன வாரம் ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்துச்சு. இன்னும் அந்த ஷாக்லருந்து நான் மீளலை. அதைப் பத்தி எழுதலாமா வேணாமான்னு ரொம்பவே யோசி்ச்சுட்டு, எழுதலாம்னு முடிவு பண்ணி, இப்ப உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.

என் ஃப்ரெண்ட் ஒருத்தி (பேர் போட வேணாம்னு கேட்டுக்கிட்டா) அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் போகப் போறதா சொன்னா. நான் இதுவரைக்கும் போனதில்லை. ரொம்ப பிரம்மாண்டமான நூலகம்னு கேள்விப்பட்டிருக்கேன். அவகிட்ட எங்க கோர்ஸ்க்குத் தேவையான ஒரு ரெஃபரன்ஸ் எடுத்துக்கிட்டு வரச் சொன்னேன். சரின்னுட்டுப் போனவ, ஒரு மணி நேரம் கழிச்சு எனக்குப் போன் பண்ணினா.

‘‘நிரூ... என்ன பண்ணிட்டிருக்கே?’’

‘‘அம்மாவோட ஒரு ஃபங்ஷனுக்கு வந்திருக்கேன்டி...’’

‘‘அம்மா அங்க இருந்துக்கட்டும். நீ உடனே புறப்பட்டு லைப்ரரிக்கு வா. உனக்காக நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். ரொம்ப முக்கியமான மேட்டர்...’’ அப்படின்னு கூப்பிட்டா. சரின்னு அம்மாட்ட சொல்லிட்டு, ஸ்கூட்டிய எடுத்துட்டு வேகமா அங்க போனேன்.

 உள்ள நுழைஞ்சு வண்டிய பார்க் பண்ணினதும்  டூ வீலர்க்கு பார்க்கிங் கட்டணம் எதுவும் கிடையாதுன்னு அங்க பாத்ததும் ரொம்ப குஷியாயிடுச்சு எனக்கு. லைப்ரரி வாசல்லயே என் ஃப்ரெண்ட் காத்திருந்தா. ‘‘எதுக்குடி அவ்வளவு அவசரமா கூப்பிட்ட?’’ன்னு கேட்டதுக்கு, ‘‘முதல்ல உள்ள வந்து லைப்ரரிய கொஞ்சம் சுத்திப் பாரு. அப்றம் சொல்றேன்’’ன்னா.

லைப்ரரி ரொம்ப அமர்க்களமா இருக்குது. ஃபுல்லா ஏ.ஸி. பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு ஃப்ளோர்லயும் சப்ஜெக்ட் வாரியா புத்தகங்கள் அடுக்கப்பட்டு, இன்டெக்ஸ்லாம் பண்ணியிருந்தது பார்க்கறதுக்கே ரம்மியமா இருந்துச்சு. அங்க இல்லாத சப்ஜெக்ட்‌‌ஸே இல்லங்கறதுதான் உண்மை. இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்காங்களா, இத்தனை சப்ஜெக்ட்ல புத்தகங்கள் இருக்கான்னு பிரமிப்பு உண்டாச்சு எனக்கு. சரி, இனி வாரா வாரம் ஸன்டேல இங்க விஸிட் பண்ணி, நிறைய புத்தகங்கள் படிச்சு (கொஞ்சநஞ்சம் இருக்கற) அறிவை டெவலப் பண்ணிக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.

அவ, என்‌னை தனியா ஒரு பகுதிக்கு கூட்டிட்டுப் போயி, அங்கருந்த ஷெல்ப்லருந்து ஒரு புக்கை உருவி, ‘‘இதைப் படிடி’’ன்னு ஒரு பக்கத்தைப் பிரிச்சுக் காட்டினா. ஒரு பாரா படிச்சதுமே உறைஞ்சு போய் நின்னுட்டேன். ஆங்கிலப் புத்தகமான அதுல ஆண் பெண் உறுப்புகளையும், உடலுறவையும் பச்சை பச்சையான வார்த்தைகள்ல எழுதியிருந்துச்சு. லைஃப்ல இதுநாள் வரைக்கும் அப்படி ஒரு ஆபாசமான விஷயத்தை நான் படிச்சதில்லை. என்னைச் சுதாரிச்சுக்கறதுக்கு ரெண்டு நிமிஷமாச்சு எனக்கு. அவ முதுகுல பளார்னு ஒரு அறை வெச்சு, ‘‘சனியனே! சப்ஜெக்ட்டுக்கு ரெஃபரன்ஸ் எடுத்துட்டு வான்னா, இப்படி கர்மத்தைப் படிச்சுட்டு, என்னை வேற கூப்பிட்டுக் காட்டறியேடி....’’ன்னு குரலை உசத்தாம திட்டினேன்.

‘‘என்ன நிரூ... நான் படிச்சு ரசிச்சேன்னா நினைச்சே..? உன்னை படிச்சு ரசிக்கறதுக்கா கூப்பிட்டேன்? இங்க இருக்கற புத்தங்கள் எல்லாமே அரசு நியமிச்சிருக்கற ஒரு குழுவால பரிந்துரை செய்யப்பட்டு வாங்கி வைக்கப்பட்டிருக்கு. இந்த புக்ஸ் லல்லாம் பாரு... சப்ஜெக்ட்ல EROTICன்னு போட்டிருக்கான். இந்த வார்த்தைக்கு அர்த்தம் உனக்கும் எனக்குமே புரியுது. கவர்மென்ட்ல உள்ளவங் களுக்குப் புரியாதா? அட்லீஸ்ட், ஒரு புத்தகத்தை வாங்கி வெக்கறதுக்கு முன்னால சில பாராக்களாவது படிச்சு அது என்ன சப்ஜெக்ட்ன்னு தெரியாமலா வாங்கி வெபபாங்க?’’ன்னு கேட்டா.

‘‘நிஜம் தான்டி. படிக்கிறவங்க மனசுல வக்ரத்தை விதைக்கிற இந்த மாதிரி புத்தகங்கள் அரசு லைப்ரரியில எப்படின்னு எனக்கும் புரியலையே...’’ன்னேன் அதிர்ச்சியா.

 ‘‘உன்னைக் கூப்பிட்டுக் காட்டினதுக்கு காரணம் என்னன்னா... நீ ப்ளாக்ல எழுதறேன்னும், உன்னை (கூட) 40 பேர் படிக்கறாங்கன்னும் பெருமைப்பட்டுப்பியே... இதை நீ எழுதணும்கறதுக்காகத்தான். முன்னொரு காலத்துல அரசாங்கம் மது குடிக்கவே கூடாதுன்னு பூரண மது விலக்கை அமல் பண்ணியிருந்தது. எம்.ஜி.ஆர். காலத்துல, கள்ளு, சாராயத்துக்கு மட்டும் தடை விதிச்சுட்டு, ஒயின் ஷாப்க்கு அனுமதி கொடுத்து பார்ஷியலா மதுவிலக்கு அமல் பண்ணினாங்க. இப்ப அரசாங்கமே சந்துக்கு சந்து கடையத் திறந்து வெச்சு, தமிழக மக்களை ‘குடி’ மகன்களாக்கி அழகு பாத்துட்டிருக்கு. அது மாதிரித் தான்டி.... முன்னொரு சமயத்துல ஃபோர்னோகிராபி புக்ஸ்லாம் ப்ரிண்ட் பண்றதும் தப்பு, படிக்கிறதும் தப்புன்னு சட்டம் இருந்துச்சு. மறைச்சு வெச்சுப் படிப்பாங்களாம். இப்ப அதையும் அரசாங்கமே லைப்ரரியில வெச்சு மக்களைப் படிச்சு சந்தோஷப்படுங்கன்னு சொல்லுது. சந்தோஷமான இந்த நல்ல தகவலை நீ உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ஷேர் பண்ணிக்க வேணாமாடி? அதான் உன்கிட்ட காட்டினேன்’’அப்படின்னு சொன்னா.

இதை அவ சிரிச்சுக்கிட்டே சொன்னாலும், அதுக்குப் பின்னாடி இருந்த வேதனையும், கோபமும் எனக்கு தெளிவாப் புரிஞ்சுச்சு. எனக்கே புரிஞ்சிடுச்சுன்னா, என்னை விட அறிவில பெரியவங்களான உங்களுக்கெல்லாம் புரியாமப் போய்டுமா ‌என்ன...

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

58 comments:

  1. அட ராமா!!!!!!

    உள்ளூர் பதிப்பகத்தார் எல்லாம் மூணு வருசமா லைப்ரரி ஆர்டர் கிடைக்கலைன்னு புலம்பும்போது இந்தப் புத்தகங்களுக்கு எப்படி அங்கே இடம் கிடைச்சதாம்?

    தமிழில் இருந்தால் ஆபாசமா இருப்பது, ஆங்கிலத்தில் இருந்தால் ஆ 'பாசமா ' இருக்குதோ:(

    ReplyDelete
    Replies
    1. எப்படி இந்தப் புத்தகங்களுக்கு இடம் தந்தாங்கன்னு புரியாமதான் நானும் முழிச்சுக்கி்ட்டு இருக்கேன் டீச்சர்! தமிழோ, ஆங்கிலமோ படிக்கும் போதே வாந்தி வர்ற ஃபீலிங்! Horrible. Many Thanks for your visit and encouraging comment Teacher!

      Delete
  2. குடம் பாலில் துளி விஷம்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஐயா! அமிர்தம் மாதிரி நிறைய நல்லறிவை வளர்க்கற புத்தகங்களை அங்க பாத்து சந்தோஷப்பட்டேன். கூடவே கொஞ்சம் இந்த நஞ்சும் இருக்கறது தான் சோகம்! My Heartful Thanks to you!

      Delete
  3. இந்த புத்தகங்கள் விடயத்தில றொம்ப யாக்ரதை தேவை நிரூ
    நிறைய அமிர்தத்தில் கொஞ்ச விஷம் கலந்தாலும் அமிர்தமும் நஞ்சாகும் அல்லவா???
    ம்ம்சூப்பர் பதிவப்பா....

    ReplyDelete
    Replies
    1. ‌சரியாச் சொன்னே எஸ்தர். ‌அமிர்தத்தி்ல் கொஞ்சம் விஷம் கலந்தாலும் மொத்தமும் நஞ்சுதான். நல்ல கருத்துச் சொன்னதுக்கு... My Heartful Thanks to you!

      Delete
  4. இந்த நூலகத்தை பற்றி நானே பதிவிட வேண்டும் என்று இருந்தேன. அற்புதமான நூலகம். எனக்கு மிக மிக பிடித்திருந்த்தது. படிப்பதற்கு ஏற்ற இடம்.

    நீங்கள் கூறிய விஷயம் அந்த இடத்திற்கு திஷ்டி போட்டார் போல் உள்ளது. அரசாங்கம் இவற்றில் அக்கறை செலுத்தினால் நலம் தான்.

    சமூக அக்கறையுள்ள உங்கள் பதிவிற்கு நான் தலை வணகுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே... நான் அந்த நூலகத்தை மிக ரசித்தேன். படிப்பதற்கு ஏற்ற சூழல். மிக அருமையான பராமரிப்பு. அவசியம் எழுதுங்கள். இவ்வளவு நல்ல இடத்தில் இப்படி ஒன்றா என்கிற ஆதங்கம் மட்டுமே எனக்கு. என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு My Heartful Thanks!

      Delete
  5. அந்த நிர்வாக குழுவை ஒரு வாங்கு வாங்கினால் எல்லாம் சரிபட்டு வரும்... அவர்களின் அலட்சியம் தான்...

    ReplyDelete
    Replies
    1. மிகமிகச் சரி. அலட்சியம் காரணமாகத்தான் இப்படிப்பட்ட தவறுகள் நிகழ்கின்றன. உங்களுக்கு என் நன்றி.

      Delete
  6. நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம் கட்டுரைக்கு ஏற்ற தலைப்பு...

    பொது இடம் என்றால் நான்கு தவறுகள் இருக்கத்தான் செய்யும்... நிச்சயம் இதை எல்லா இடங்களிலும் களை எடுக்க இயலாது...

    இந்த மாதிரி நூலகம் அமைந்ததற்கே நாம் பெருமைப்படவேண்டும்... இவ்வளவு பெரிய அழகான, அதிக புத்தகம் உள்ள நூலகம் நிச்சயம் இந்தியாவில் இருக்க வாய்ப்பில்லை....

    ReplyDelete
    Replies
    1. Sorry Sir, உங்க கருத்தோட நான் முரண்படறேன். இவ்வளவு அழகான. அதிக புத்தகமும். நல்ல பராமரிப்பும். படிப்பதற்கு ஏற்ற சூழலும் உள்ள நூலகத்தை நினைச்சு பெருமைப்படணும்கற உஙகள் கருத்துல எனக்கு உடன்பாடு. ஆனா... இந்த மாதிரி நான்கு தவறுகள் இருக்கத்தான் செய்யும்னு நாம்ப Compromise பண்ணிக்கறது சரியில்லைங்கறது என் கருத்து. இதனால தான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணினாலும் ஜனங்க கண்டுக்க மாட்டாங்கன்ற தைரியமே வருது. விடலைப் பசங்கள்லருந்து பல்லுபோன தாத்தா வரைக்கும் யாருக்குமே இது நல்ல விஷயமில்லையே... மத்தபடி என்னை மதித்து கருத்துச் சொன்ன உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
    2. //இந்த மாதிரி நான்கு தவறுகள் இருக்கத்தான் செய்யும்னு நாம்ப Compromise பண்ணிக்கறது சரியில்லைங்கறது என் கருத்து//

      நான் சொன்னது எனது கருத்து என்பதை விட நம்ம ஊரின் நடைமுறையாகத்தான் இது இருக்கு...

      நேர்மையாக வாழநினைத்து எனது சுயதொழில் அப்படியே இருக்கு... வெறும் 5000 லஞ்சம் கொடுத்திருந்தால் நானும் ஒரு சிறு தொழில்லுக்கு அதிபர் ஆகி இருப்பேன்...

      நாம் என்ன தான் எழுதினாலும் தவறு செய்பவன் திருந்துவதற்கான வாய்ப்புகள் குறைவு தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்....

      //மத்தபடி என்னை மதித்து கருத்துச் சொன்ன உங்களுக்கு... My Heartful Thanks!//

      நீங்களும் என் சகபதிவர் தான்... எனது அஞ்சறைப்பெட்டியில் உங்கள் பதிவைத்தான் இந்தவாரம் அறிமுகப்படுத்தி உள்ளேன்.. நாளை காலை 12 மணிக்கு முடிந்தால் என் அஞ்சறைப்பெட்டியை படிக்கவும்...

      Delete
    3. அவசியம் படிக்கிறேன் ஸார். மிக்க நன்றி.

      Delete
  7. அதிகாரிங்க எல்லாம் என்ன பன்னுராங்க, வாங்குற சம்பளத்து கொஞ்சமாவது வேலை செஞ்சா இந்த மாதிரி தப்பெல்லாம் நடக்குமா..?

    ReplyDelete
    Replies
    1. தெரியலையே சார்... அதான் எனக்கும குழப்பம். உங்களுக்கு என் நன்றி.

      Delete
  8. வணக்கம் நிரு!ஒரு வேளை இலவசமாக கொடுக்கிறார்களோ,என்னமோ?வாங்கி விட்டு காசு கொடுத்து வாங்கியது என்று கணக்கும் முடிப்பார்களாயிருக்கும்.நிர்வாகத்தில் படித்தவர்கள் இருக்க வாய்ப்பில்லையோ?ஏதோ ஒரு தவறு நடக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மாமா... எங்கயோ தப்பிருக்கு. என்னன்னு தான் புரியலை. என்னை Encourage பண்ணி சந்தோஷம் கொடுத்த உங்களுக்கு நிறைய நிறைய நன்றி.

      Delete
  9. செல்லம் நூலகத்துக்குலாம் நான் போறதே இல்லை ..

    ReplyDelete
    Replies
    1. ஏன்க்கா... புத்தகங்கள் மேல என்ன கோபம் உங்களுக்கு..?

      Delete
    2. நிரு எனக்கு புத்த்கதுக்குலாம் ஏணி வைத்தலும் எட்டாது டா ...

      அக்கா க்கு புத்தகம் என்டலே அலர்ஜி

      Delete
  10. இரோட்டிக் புத்தகங்களுக்கும் காமம் பற்றிய தெளிதலுக்காக உள்ள புத்தகங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது.

    ட்ரிபிள் எக்ஸ் வலைப் பக்கங்களில் இருப்பது போன்ற குமட்ட வைக்கும் புத்தகங்கள் அச்சில் வரவோ அல்லது நூல்நிலையத்தில் வைக்கப்படவோ வாய்ப்பில்லை.

    ஷாலினி,காமராஜ் போன்ற மருத்துவர்கள் எழுதிய கேள்வி பதில் புத்தகங்களைப் படித்தால் பெரும்பான்மை நடுத்தரவர்க்கம் காமம் பற்றிய எந்த அளவிற்கு அரைகுறைப் புரிதல்களுடன் இருக்கிறார்கள் என்பது புரியலாம்.

    அந்த வகையில் அத்துறை அறிவுக்கான புத்தகங்கள்-மாஸ்டர்ஸ் அன்ட் ஜான்சன்ஸ், வாத்சாயனரின் காம சூத்திரம் போன்றவை- தேவை என்றே நான் நினைக்கிறேன்.அவற்றைத் தேடுவோர்க்கு அவை கிடைக்க வாய்ப்பிருக்க வேண்டும். எளிதாக எடுத்துப் படிக்க வாத்சாயனரின் காமசூத்திரம் கிடைக்கும் போது, தெருவில் விற்கப்படும் சரோஜாதேவி போன்ற புத்தகங்கள் ஒழிவதோடு,காமம் பற்றிய சரியான அறிவு கிடைத்த சமூகமாக சமூகம் மாறும்.

    அவற்றை ரெஃபரன்ஸ் பிரிவுக்கோ அல்லது வயது வந்தவர்கள் மட்டுமோ எடுக்கலாம் என்று விதிகளை அமைக்கலாம்.முழுக்கவே இருக்கக் கூடாது என்பது சரியான பார்வை அல்ல.

    மற்றபடி பாலியல் கல்வி, காமம் பற்றிய அறிவு என்ற பொருள்களில் எனது பதிவுகள் எனது நிலைப்பாடைத் தெளிவாக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹய்யோ ஸார்.. உங்களுக்கு எப்படிச் சொல்லுவேன்... He put his fingers in my ..... மாதிரி வார்த்தைங்கள்லாம் நீங்க சொல்ற அறிவு சார்ந்த இந்த விஷயத்துல அறிவு தர்ற புத்தகங்கள்ல வராதே. அதைல்லாம் ரெபரன்ஸ் மற்றும் வயது வந்தவர்களுக்கான பிரிவில வைக்கலாம் என்பதுல மாற்றுக் கருத்தே இல்லை. எங்க கண்ணுல பட்டது Third Rate Story. அதான் எனக்கு வருத்தம். அழகான கருத்துச் சொன்ன உங்களுக்கு என்னோட நன்றி.

      Delete
    2. ||He put his fingers in my ..... மாதிரி வார்த்தைங்கள்லாம் நீங்க சொல்ற அறிவு சார்ந்த இந்த விஷயத்துல அறிவு தர்ற புத்தகங்கள்ல வராதே. ||

      இது ஒரு கதை விவரணை என்றால் நீங்கள் சொல்வது சரி. அவை தேவையற்றவை.

      இல்லையென்றால் நான் சொன்னது சரி.

      மாஸ்டர்ஸ் அன்ட ஜான்சன்ஸ் படித்தால் புரியும்.

      Delete
  11. அப்படி இல்லை,இந்தப் புத்தகங்கள் தூய இரோட்டிக் வகை என்றால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவைப் படலாம் என்று வாங்கியிருக்கலாம்..
    :))

    ReplyDelete
    Replies
    1. Ha... Ha.... இருக்கலாம் போல....

      Delete
  12. நிரூ உனக்கு இப்படி ஒரு அனுபவம் !கஷ்டமாத்தான் இருக்கு. இத்தனை நாள் வெளியிலிருந்து ரசித்ததோடு சரி .உள்ளே போனது இல்லை.
    குழந்தைகள் கண்ணில் பட்டுவிட்டால்..பயமாக இருக்கிறது.:(

    ReplyDelete
    Replies
    1. நோஓஓஓ.. வல்லிம்மா. இதுக்குப் பயந்து லைப்ரரியில கிடைக்கற அருமையான படிப்பனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க. எவ்வளவோ நல்ல விஷயங்கள் அங்க கொட்டிக் கிடக்கு. அதை மட்டும் ரசிக்கலாமே. நீங்கள் சொன்ன பயம் எனக்கும் வந்ததுனால தாம்மா எங்கள் ஆதங்கத்தை இங்கே பதிந்தோம்... நன்றிம்மா.

      Delete
  13. நிரு செல்லமே !

    என்னை மன்னிச்சிடு கண்ணம்மா ...நிஜமா என்னால அதை தாங்கிக்கவே முடியல டா ....நீங்க என்னை புரிஞ்சிபீங்கன்னு நினைக்கிறேன் .....

    ReplyDelete
    Replies
    1. எனக்கு உங்க மனசு நல்லாவே புரியுது. அதுல எனக்கொரு இடம் இருக்கறதும் தெரியுது. அது போதுமே... சந்தோஷம் தானே...!

      Delete
  14. நிரூ தோழி சரியான தலைப்பு " நிறைய அமிர்தம் கொஞ்சம் விஷம் " கொடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்ததும், படிச்சுப் பாராட்டினதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு விஜி. மிக்க நன்றி!

      Delete
  15. பூஜையறையும், கழிவறையும் ஒரே வீட்டில்தான் இருக்கு. எங்கு நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம் எனற விசயத்தில்தான் நம்ம மனநிலை சரியா இருக்கான்னு தெரியும்ன்னு எங்கோ படிச்சதா ஞாபகம். அதனால, நிரூ போனோமா, உனக்கு தேவையான நல்ல விசயத்தை படிச்சோமான்னு வந்துக்கிட்டே இரு.

    இந்த கொடுமைலாம் சகிக்க முடியலைன்னா புகார் பெட்டில ஒரு புகார் எழுதி போட்டுட்டு வந்துக்கிட்டே இரு செல்லம்.

    ReplyDelete
    Replies
    1. Excellent! நாம எந்த அறையில ரொம்ப நேரம் செலவழிக்கணும்னு நாமதான் முடிவு பண்ணணும். சரியாச் சொன்னீங்கக்கா. என்னது... புகார் பெட்டியா? அதுல போடறதுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கறதாயிருந்தா நம்ம நாடு எப்பவோ இன்னும் முன்னேறியிருக்கும்! Ha... Ha... உங்கள்ட்டல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டது எனக்கு புகார் பெட்டில சொன்னதுக்கு சமமானது! Many more Thanks for your encouraging comment!

      Delete
  16. ம்ம்ம்.... நல்ல தெளிவான உள்ளம் உங்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ஸார்!

      Delete
    2. என்ன ஸாரா....?????

      என்னோட பதிவுல “இதோபாருடா...“ அப்படின்னு நீங்கள் எழுதி இருந்த போது எவ்வளவு கந்தோஸப்பட்டேன் தெரியுமா....
      இப்போ திடீர்ன்னு சாருன்னு சொல்லுறீங்களே... மனசுக்கு கஷ்டமா இருக்குது நிரஞ்சனா அக்கா...

      Delete
    3. என்னதுதுதுது? அக்காவாவாவாவா..? வாபஸ் வாங்குங்க முதல்ல... பிச்சு! பிச்சு!

      Delete
    4. மன்னிச்சிடுங்க...
      இனிமேல் அக்கான்னு சொல்ல மாட்டேன் நிரஞ்சனா மேடம்.

      Delete
  17. அது சரி... இது வேறையா? வெளங்கிடும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... உங்களின் வருகைக்குக்கும் கருத்துக்கும் மகிழ்வோட நன்றி சொல்லிக்கறேன்.

      Delete
  18. நீங்க வேற இளைஞர்களை கவர்வதற்காக அரசாங்கத்தின் திட்டமாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற பாலா ஸார்... இளைஞர்களை மட்டும் கவர்றதுக்கு அது என்ன பாரா, இல்ல சினிமா தியேட்டரா? எல்லா தரப்பு மக்களும் வரவேண்டிய இடமில்லையா? அப்படி இருககாதுன்னு நினைக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனப்பூர்வமான நன்றி!

      Delete
  19. விரும்பினவங்கள் தேடிப்படிக்கட்டும் என்பதால் இருக்கும் அதைப் படிப்பதும் கிழிப்பதும் அந்த வாசகர்கள் தகமை அதில் தவறு இருப்பதாக எனக்குத்தெரிய வில்லை. அமுதமும் விசமும் அவர்களின் தெரிவு நூலகம் என்றால் எல்லாம் இருக்கத்தான் செய்யும் அதை கட்டுப்பாடு போடத்தான் அங்கே ஒரு கண்காணிப்பாளர் இருப்பார் முன்னம் இப்போது அவர்கள் இருக்க விடாதது அரச குற்றம் நிரூ !

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஒரு கருத்தைச் சொன்னீங்க அண்ணா! உங்களுக்கு ‌மிக்க நன்றி!

      Delete
  20. நிருக் குட்டி உங்களோட மீண்டும் பகிர்ந்துக்க ஆசைப் படுகிறேன் ஒரு விருதை ....நீங்கள் வாங்கினால் அக்கா சந்தோசம் கொள்வேன் டா

    ReplyDelete
    Replies
    1. பாத்தேன்... நீங்க குடுத்தால் நான் ரெட்டிப்பு சந்தோஷத்தோடல்ல வாங்கிக்குவேன். மிக்க நன்றிககா!

      Delete
  21. வணக்கம் சின்னப் பொண்ணே!கலை அக்காவிடமிருந்து விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!இது போல் இன்னுமின்னும் மேலான விருதுகள் பெறுவீர்கள்,சின்னப் பொண்ணே!வாழ்த்துக்கள்,மீண்டும்!!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க யோகாண்ணா! உங்களின் ஆசிகள் எனக்கு தெம்பாயிருக்கு, சந்தோஷமாயிருக்கு. மிக்க நன்றி!

      Delete
  22. நல்ல சமூக அக்கறையுடன் கூடிய பதிவு சகோதரி நிரஞ்சனா...

    நம் கலாசாரத்துக்கு தற்சமயம் ஒத்து வராத எதுவுமே அரசால் புகுத்தப்படக்கூடாதென்பது என்பதே என் கருத்தும்...

    இணையத்தில்/தனிப்பட்ட வாழ்வில் நம்மவர்கள் சொந்த செலவில் சூனியமோ அல்வாவோ...அது அவரவர் பிரச்னை...

    சீக்கிரமே பிரபல பதிவராக வாழ்த்துக்கள்...கருவாசியிடம் விருது பெற்றமைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது சரிதான். இணையத்திலயும் பல பச்சையான சைட்டுகள் கண்ணில் பட்டன. அதையெல்லாம் நாம தவிர்த்துடற மாதிரி, இங்கயும் நடந்துக்கிட்டாப் போச்சு. வாழ்த்துச் சொல்லி என்னை மகிழ்வித்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  23. உங்க பதிவும் உங்க ஆதங்கமும் நியாயமானது தான்...அவ்வாறான புத்தகங்களை விரும்புவோருக்கு அதனி வைத்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்..விகடன் குமுதம் போன்று தெருக்கடைகளில் அதனை வாங்க முடியாததால் இவ்வாறு செய்திருப்பார்களோ என நினைக்கிறேன்...

    எனக்கு இந்தியாவில் உள்ள புத்தக கடைகளில் எவ்வாறான புத்தகங்கள் விற்கப்படுகிறது என்று தெரியாது...?சிந்தனையில் உதித்ததை சொன்னேன்.

    ReplyDelete
    Replies
    1. இத்தகைய புத்தகங்கள் கடைகளில் விற்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை வாங்கிப் படிப்பது அவரவர் விருப்பம். ஆனால் பொது இடமான நூலகத்தில்...? அதுதான் என் கேள்வி.

      Delete
  24. அதுசரி இந்திய...சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தினுள்ளே அப்படிப்பட்ட படங்களையும் புத்தகங்களையும் பார்க்க அனுமதி இருக்காமே...?:)

    லைப்ரரில இருந்தாமட்டும் தப்பா போயிடுமா என்ன..

    ReplyDelete
    Replies
    1. சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலயே கெட்ட படம் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களுக்கு அனுமதி இருந்தா என்ன கெட்டுடும்? லைப்ரரியில் அப்படியா..? என்னை மாதிரி சின்னப் பெண்களிலருந்து சிறுவர்கள், தாத்தா பாட்டிகள்னு எல்லாரும் வர்ற இடமாச்சுதே... உங்கள் வருகைக்கும கருத்துக்கும் என்னுடைய Heartful Thanks Friend!

      Delete
  25. நிரூ உமது பொது நலத்திற்கு வாழ்த்துக்கள்.
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ............... கலக்குரடாடாடாடாடா.................

    ReplyDelete
    Replies
    1. விஜி.... எனக்காக வந்து வாழ்த்துச் சொல்லி சந்தோஷப்படுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ்மா செல்லம்!

      Delete
  26. நூலகம் என்றால் அனைத்து சப்ஜெக்ட் புத்தகமும் கிடைக்க வேண்டும் என நாம் விரும்புவதை தவறால் செயல்படுத்தியுள்ளார்கள்... விரும்புபவர்கள் தான் அதை எடுத்து படிப்பார்கள் எனவே அதைப்பற்றி நல்ல உள்ளம், நல்ல மனசு, நல்ல பார்வை... பூஜையறையிலேயே இருப்பவர்கள் ( ஏம்மா, படுக்கையறையும் வீட்டுக்குள்ளே தான் இருக்கு ) அரற்றாமல் இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்...தானே... ( அய்யய்யோ இதெல்லாம் சொந்த கருத்துத்தாங்க அடிக்க வராதீங்கண்ணா, வராதீங்கக்கா...)

    பார்கவி

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!