Pages

Ads 468x60px

24 May 2012

கமகம கதம்பம்!


சின்ன வயசுலருந்தே எனக்கு நெல்லிக் காய்ன்னா ரொம்பப் பிடிக்கும். அம்மா எனக்காக நிறைய நெல்லிக்காய் வாங்கி, தேன்ல ஊற வெச்சுக் கொடுப்பாங்க. நெல்லிக்காய் பத்தின சில அரிய தகவல்கள் இதோ:

ரத்தத்தைப் பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இனிப்பும் .உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு வாயுவையும், துவர்ப்பும் கைப்பும் கபத்தையும் போக்கக் கூடியவை.ஆக, வாத-பித்த-கபம் மூன்று தோஷங்களையும் போக்கக் கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால் இது மிகவும் சிறந்தது. இதில் A, B, C ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. மற்றக் கனிகளைப் போல இல்லாமல் நெல்லிக்காய் வாடினாலும் அதில் வைட்டமின் குன்றுவதில்லை. பின்ன... சும்மாவா நெல்லிககாயை ஒளவையாருக்குக் கொடுத்தார் அதியமான்?  நீங்களும் நெல்லிக்காய் வாங்கி நிறையச் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

*   *    *   *   *    *

‘மது‌ரைவீரன்’ படப்பிடிப்புக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது துணைவியார் டி.ஏ.மதுரமும் வந்திருந்த போது மதுரை மீனாட்சி கோயிலை சுற்றிப் பார்த்தார்கள். அப்போது அங்கிருந்த இசைத் தூண்களை அவர்களுக்குக் காட்டினார்கள் உடன் வந்தவர்கள். அந்தத் தூண்களைக் கையால் தட்டிப் பார்த்த என்.எஸ்.கே., ‘‘இதுக்குள்ள ஒரு செய்தி இருக்கு’’ என்று சொல்லிவிட்டு, ‘‘இது தும்தும், அது பம்பம், இது தீம்தீம், அது தோம்தோம்’’ என்று தூண்களை தட்டிக் காட்டினார்.

எல்லாரும் புரியாமல் அவரைப் பார்க்கவும், ‘‘என்ன புரியலையா? தும்தும் பம்பம் - துன்பம், தீம்தீம் தோம்தோம் - தீர்ந்தோம். சேர்த்துச் சொன்னா துன்பம் தீர்ந்தோம். அதாவது இசையை அனுபவித்தால் துன்பம் தீர்ந்து விடும் என்று இந்தக் கல்லும் கதை சொல்லுகிறது’’ என்றார் கலைவாணர். அந்த நகைச்சுவை மேதையின் பேச்சை ரசித்துக் கை தட்டினார்கள் சுற்றிலுமிருந்தவர்கள்.

*   *    *   *   *    *

ர்ஜுனனுக்கு ஒரு மனக்குறை. ‘‘நானும் என் வீடு தேடி வருபவர்களுக்கு இல்லையென்னாமல் தானம் செய்கிறேன். ஏன் என்னைக் கொ‌டை வள்ளல் என்ற சொல்வதில்லை? கர்ணனை மட்டும் அப்படிச் சொல்கிறார்களே... அவன் என்ன .உசத்தி?’’ என்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்டான். மறுதினம் காலை அர்ஜுனனை கோட்டைக்கு வெளியே அழைத்துச் சென்ற கிருஷ்ணர், கையை அசைத்து இரண்டு தங்க மலைகளை வரவழைத்தார். ‘‘அர்ஜுனா! இன்று சூரியன் மறைவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் நீ வறியவர்களுக்கு தானம் செய்துவிட வேண்டும். நீ கொடை வள்ளல் என்றால் உன்னால் முடியும்’’ என்றார். அர்ஜுனன் பறையறிவித்து மக்களை வரச் செய்து, வெட்டி வெட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தான்.

பகல் முழுவதும் சளைக்காமல் அர்ஜுனன் வெட்டி வெட்டி தானம் செய்தும்கூட ஒரு மலையில் பாதி தான் கரைந்திருந்தது. மாலை மங்குவதற்கு இன்னும் சற்று நேரம் தான் இருந்தது. அர்ஜுனன் களைப்பாகி, ‘‘என்னால் முடியவில்லை கண்ணா!’’ என்றான். கண்ணன் உடனே ஆளையனுப்பி கர்ணனை அழைத்து வரச் சொன்னார். கர்ணன் வந்து வணங்கி நிற்க, அர்ஜுனனிடம் சொன்ன அதே வார்த்தைகளைக் கர்ணனிடமும் சொன்னார் கண்ணன். கர்ணன் ஒரு கணமும் யோசிக்காமல், யாசகம் கேட்டு வந்த இருவரிடம், ‘‘இந்த மலையை நீ வைத்துக் கொள், அந்த மலையை அவன் எடுத்துக் கொள்ளட்டும்...’’ என்று சொல்ல, அவர்கள் அவனைப் புகழ்ந்து வாழ்த்தி விட்டுச் சென்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைத் திரும்பிப் பார்க்க, அவரின் பார்வையின் பொருளும், கர்ணனின் கொடைச் சிறப்பும் அர்ஜுனனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

*   *    *   *   *    *

மேஸான் மழைக் காடுகள் உலகிலுள்ள பிராணவாயுவில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. அமேஸான் நதி எவ்வளவு அதிகத் தண்ணீரைக் கடலில் பாய்ச்சுகிறது என்றால் நதி கடலில் சங்கமித்த இடத்திலிருந்து 100 மைல் தூரத்தில் கூடக் கடலிலிரந்து இனிப்பத் தண்ணீர் (Fresh Water) பெறலாம். அமேஸான் நதியிலுள்ள நீர் அதையடுத்த எட்டுப் பெரிய நதிகளின் நீரின் மொத்த அளவை விட அதிகம். அமெரிக்காவிலுள்ள எல்லா நதிகளின் நீரின் மொத்த அளவைவிட மூன்று மடங்கு நீர் அமேஸான் நதியில் உள்ளது.

*   *    *   *   *    *

ரெண்டு நாள் முன்னால நான் வீட்டுக்குப் போக டைமாயிடுச்சேன்னு ஸ்கூட்டிய வேகமா ஓட்டிட்டுப் போய்ட்டிருந்தப்ப பைக்ல வந்துட்டிருந்த ஒரு ஆளை முந்திட்டேன். நான் கடந்ததும் சிக்னல்ல ரெட் விழுந்துட்டுதனால மத்த வாகனங்கள் தேங்கிடுச்சு. கொஞ்ச தூரம் போயிருப்பேன்... ‘ரொய்ய்ய்ய்ங்’ன்ற சத்தத்தோட படுவேகமா என் வண்டிய உரசற மாதிரி வந்து ஓவர்டேக் பண்ணிட்டு, பெருமையாத் திரும்பிப் பார்த்துட்டுப் போனான் அதை ஒட்டின இளைஞன்.

 நான் பயந்துபோய் வண்டியை ஓரமா நிறுத்தி, ஆசுவாசப்படுத்திக்கிட்டு ரெண்டு நிமிஷம் கழிச்சு வண்டியை எடுத்தேன். ஆம்பளைங்களோட இந்த சைக்காலஜிதான் எனக்குப் புரியறதே இல்லை. ஒரு பெண் ஓவர்டேக் பண்ணிட்டுப் போயிட்டா எந்த விதத்துல உங்களுக்கு கிரீடம் குறைஞ்சு போகுது? ஏன் இப்படி வெறித்தனமா பைக் ஓட்டணும்? (என் மூஞ்சியை ‌‌ஸைட் அடிக்க வந்திருப்பான்னு நெனைக்காதீங்க. மீ ஹெல்மெட் போட்டு முகத்தை மறைச்சுட்டு வண்டி ஓட்டற டைப்பாக்கும்!)

*   *    *   *   *    *

O.K. Friends! நான் கிளம்பறதுக்கு முன்னாடி.... Let us end with a smile...

ராமு : ‘‘என் வொய்ஃபுக்கு சமைக்கத் தெரியும். சமைக்க மாட்டேங்கறாடா...’’

சோமு : ‘‘நீ குடுத்து வெச்சவண்டா. என் வொய்ஃபுக்கு சமைக்கத் தெரியாது. ஆனா சமைக்கறாடா..!’’


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

49 comments:

  1. வந்துட்டேஏஏஏஏஏன்

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் டியர் எஸ்.எஸ்.! முதலாவதா வந்து சந்தோஷம் தந்த உங்களுக்கு இந்தாங்க என் கையால சூடான காஃபி!

      Delete
    2. என்ன காஃபி?பில்டர் காபியா?இன்ஸ்டண்ட் காஃபியா நிரூ?

      Delete
    3. எனக்கு இன்ஸ்டன்ட் காஃபியே பிடிக்காதுக்கா. ஒன்லி ஸ்ட்ராங்கா ஷுகர் கம்மியா ஃபில்டர் காபிதான் உங்களுக்கு!

      Delete
    4. ஷேம் ப்ளட்:)

      Delete
  2. Nice Information. Continue....God bless you.

    ReplyDelete
    Replies
    1. Oh, Really I feel great pleasure. My heartful Thanks to you for your encouraging comment Sir!

      Delete
  3. நெல்லியின் மகத்தும் நம் தமிழ் புராணங்களிலும், இதிகாசங்களிலும் ஏராளம் உள்ளன நிரூ..

    பைக்க ஓட்டிக்கிட்டு வந்தவன் உங்கள பாக்கத்தான் வந்திருப்பான் பட் நீங்க ஹெல்மெட் மாட்டியிருந்தீங்க......

    கதம்பம் றொம்பவே கமகமக்குது...

    ReplyDelete
    Replies
    1. கதம்பம் ரொம்பவே கமகமக்குதுன்னு நீ சொன்னதைக் கேட்டதும் ரொம்பத் தெம்பாயிருக்கு எஸ்தர். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா!

      Delete
  4. நிரூ..இந்த நெல்லிக்காய் சாப்பிட்டுட்டு தண்ணீர் குடிச்சு பாருங்க..அத்தனை டேஸ்டாக இருக்கும்

    உஸ்மான் சாலையில் நெல்லிக்காய்களை அரிந்து உப்பு மிளகாய் சேர்த்து ஜிப் லாக் பேகில் அடைத்து விற்கின்றனர்.அதன் சுத்தத்திற்கு பயந்து முழு நெல்லிக்காய்களை வாங்கி அரிந்து காரம் உப்பு சேர்த்து பிரிட்ஜில் வைத்து அவ்வப்பொழுது எடுத்து வாயில் போட்டுக்கொண்டால் அமிர்தமாக இருக்கும்.என் அம்மா செய்து தரமாட்டார்கள்.நானேதான் செய்துக்கணும்:(

    மீ ஹெல்மெட் போட்டு முகத்தை மறைச்சுட்டு வண்டி ஓட்டற டைப்பாக்கும்!)//ஹா ஹா செம காமெடி...

    Let us end with a smile...
    //ஸ்மைல் என்ன ?சிரித்தே விட்டேன்.போதுமா?

    ReplyDelete
    Replies
    1. காரம், உப்பு சேர்த்து நான் சாப்பிட்டுப் பாத்ததில்லைக்கா. ஒன்லி ஸ்வீட்டாதான் சாப்ட்ருக்கேன். இனி இதையும் ட்ரை பண்ணிப் பாத்துடறேன். ஹையா...! சிரித்தே விட்டேன்னு நீங்க சொன்னது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு. My Heartful thanks to you Dear S.S.!

      Delete
  5. நெல்லிக்காய் எனக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் இந்த நெல்லிக்காயை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் இன்னும் சூப்பர்.
    நிரூ மிகவும் அற்புதம் இந்த கதம்பம் தொடர் ....

    ReplyDelete
    Replies
    1. கதம்பம் பிடிச்சிருக்கா விஜி..? அப்படின்னா அப்பப்ப கதம்பம் 1, 2, 3ன்னு கொடுத்துட்டே போகலாம் இல்லை... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்யா!

      Delete
  6. கர்ணன் , அர்ஜுனன் செய்தி அருமை .. கடைசி ஜோக் சூப்பர் (உன் கனவரும் சோமு போல புலம்புவார்னு நினைக்கிறேன் )

    ReplyDelete
    Replies
    1. கர்ணனின் கதையையும், ஜோக்கையும் ரசித்ததற்கு நன்றி ஃப்ரெண்ட்! இந்த விஷயத்துல உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்... சோமு மாதிரி என் (வருங்கால) கணவர் புலம்பப் போறது உறுதி. ஆனா இப்ப, என் தோழி விஜி தர்ற சமையல் குறிப்புகளைப் படிச்சு ஒண்ணு ரெண்டு ட்ரை பண்றதால அதுக்குள்ள தேறிடுவேன்னு நம்பிக்கை வந்துடுச்சு எனக்கு!

      Delete
  7. பின்ன... சும்மாவா நெல்லிககாயை ஒளவையாருக்குக் கொடுத்தார் அதியமான்?

    மண்க்கும் கம கம கதம்பம் அருமை ! பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அருமை என்று நீங்கள் சொன்னதைப் பார்த்ததுமே குஷியாயிட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி!

      Delete
  8. Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு My Heartful Thanks Sir!

      Delete
  9. super tips, usefull information, funny joke, moral story
    kalakkara niru Biramatham. Continue your writing. Best wishes.

    ReplyDelete
    Replies
    1. ஹை! ஒவ்வொரு மேட்டரையும் நீங்க ரசிச்சு பிரமாதம்னு சொல்லி வாழ்த்தியிருக்கறது ரொம்பத் தெம்பா இருக்கு குரு ஸார்! Many Many Thanks to you!

      Delete
  10. நிரஞ்சனாக்குட்டி இங்க ஒரு நெல்லிக்காய் நம தமிழ்க்கடைகளில மட்டும்தான் கிடைக்கும்.ஒரு நெல்லிகாய் கிட்டத்தட்ட 2 ஆகும்.ம்ம் எப்பாசும் ஆசைக்கு வாங்கிச்சாப்பிடுவன் !

    அந்த வண்டி விஷயம் இருக்கே......அது இங்கயும் இருக்கு.அதுவும் நம்மவங்கதான்.ரௌண்டபோட்ல எனக்குத்தான் உரிமை இருந்தாலும் ஒரு பார்வை பாத்திட்டு காரை இழுத்திட்டுப் போறாங்கப்பா.ஏனெண்டா நாங்க தமிழ்ப் பொம்பிளைகளாம்.அடங்கி இருக்கோணுமாம்.கொடுமை.இதில பெண்களுக்கு உரிமையும் சுதந்திரமும் குடுக்கினமாம் இந்த ஆம்....பிள்ளைகள் !

    கடைசி நகைச்சுவை மற்ற எல்லாமே படிச்சேன்.நல்லாருக்கு !

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் நெல்லிக்காய் பிடிக்குமா? இந்த ஆம்பளைங்க பெண்களுக்கு சுதந்திரம் குடுக்கறதப் பத்தி நல்லாச் சொன்னீங்க. சரியானபடி இன்னும் அது கிடைக்கலங்கறது என் கருத்து. உங்க ஃப்ரெண்டுக்கும் இதை அழுத்தமாச் சொல்லுங்க. அவர் ஒருத்தர் மதிப்புக் குடுத்துட்டா உலகமே பெண்களை மதிக்கறதா நினைச்சுட்டிருக்காரு! எல்லாம் நல்லாருக்குன்னு நீங்க சொன்னதுல எனக்கு குஷியோ குஷி! உங்களுக்கு என் Heartful Thanks!

      Delete
  11. எல்லாமே நல்ல தகவல்கள் தான் ஃபிரெண்ட்.
    ஆனால் எல்லாமே படிச்சது தான்.
    இன்னும் நீங்கள் நிறைய புதுபுது விசயங்களை எழுதி பேர் வாங்கனும்ன்னு நான் விரும்பரேன் ஃபிரெண்ட்.
    நாட்டில் நடப்பது... அதுவும் நம் கண்முன் நடப்பதை எடுத்து எழுதுங்கள். உங்கள் ஸ்டெய்ல் நிறையபேருக்குப் பிடிப்பதால் நீங்கள் நிறைய நிறைவா எழுதுங்க ஃபிரெண்ட்.
    வாழ்த்துக்கள்ப்பா.

    ReplyDelete
    Replies
    1. என் மேல என்னைவிட அதிகமா நீங்க நம்பிக்கை வெச்சு சொல்லியிருக்கறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ப்ரெண்ட். உங்க விருப்பப்படி இனி நிறைய எழுதறேன். ரொம்ப மகிழ்வோட மன நெகிழ்வோட உங்களுக்கு என் நன்றி.

      Delete
  12. கதம்பம் ரொம்ப சூப்பர். எனக்குக் கதம்ப பூச்சரம்,கதம்ப சாதம் எல்லாம் பிடிக்கும்
    இப்போ நிரூமாவோட கதம்பத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்;)
    நெல்லிக்காயை நீர் நெல்லியா போட்டு ஒரு நளைக்கு ஒண்ணு சாப்பிட்டா வேண வைட் சி கிடைக்கும்டா.

    ReplyDelete
    Replies
    1. நீர் நெல்லி நிறையச் சாப்பிட்டு வைட். சி சேர்த்துக்கறேன். என்னோட கதம்பம் உங்களுக்குப் பிடிச்சிருந்துச்சுன்றதுல ரொம்ப சந்தோஷம் எனக்கு. My Heartful Thanks to youmma!

      Delete
  13. நிரூ மா ஊரெல்லாம் சுத்திட்டு இப்போதான் வந்தேன் கமகம வாசம் வருதேன்னு வந்தேன் ..சூப்பர் .

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதம்பம் அவ்வளவு வாசனையா இருக்காக்கா..? வாசம் புடிச்சு நீங்க வந்ததாலதான்க்கா ஒரு ஐஸ்க்ரீம் கவிதைய நான் படிக்க முடிஞ்சுது. சூப்பர்ன்னு சொன்ன உங்களுக்கு என் அன்பான நன்றி.

      Delete
  14. அதியமானுக்கு ஔவை வழங்கிய கனி அல்லவா..
    அதன் மேல் ஈர்ப்பு இல்லாமல் இருக்குமா...

    சிந்தனை சிற்பி கலைவாணர் அவர்களின்
    வாழ்வு நிகழ்வொன்றை பகிர்ந்தமை சிறப்பு சகோதரி..

    கதம்பம் மணக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. கதம்பம் மணக்கிறதுன்னு நீங்க சொன்னதுல நான் ரொம்பவே குஷீயாய்ட்டேன் மகேந்திரண்ணா. உங்களுக்கு My Heartful Thanks!

      Delete
  15. கதம்பத்தில் இன்னும் கொஞ்சம் சேர்த்துங்க... கம கமன்னு மனக்கும்...

    ReplyDelete
    Replies
    1. அனுபவப்பட்ட நீங்க ‌சொன்னா சரியாத்தான் இருக்கும். இனி வரும் பகுதிகள்ல இன்னும் நிறையச் சேர்த்துத் தர்றேன் ஸார். உங்களுக்கு என் Heartful Thanks!

      Delete
  16. ||(என் மூஞ்சியை ‌‌ஸைட் அடிக்க வந்திருப்பான்னு நெனைக்காதீங்க. மீ ஹெல்மெட் போட்டு முகத்தை மறைச்சுட்டு வண்டி ஓட்டற டைப்பாக்கும்!)||

    உங்க நடையைப்(அதாவது நீங்க எழுதற நடை) பார்த்த போது நீங்கள் பெண் பெயரும் எழுதும் ஆணோ என்ற ஒரு சந்தேகம் இருந்தது.

    இப்போது அது தீர்ந்தது!
    :)

    ReplyDelete
    Replies
    1. My Goodness! இப்படி ஒரு சந்தேகம் இருந்துச்சா ஸார்? பொம்பளைப் புள்ள மாதிரி அடக்க ஒடுக்கமா இல்லாம ஆம்பளைத்தனமா இருக்காதடின்னு அம்மா திட்டுவாங்க. அதனாலதான் எழுத்துலயும் ஆம்பளைத்தனம் வந்துடுச்சோ என்னவோ... மிக்க நன்றி!

      Delete
    2. || பொம்பளைப் புள்ள மாதிரி அடக்க ஒடுக்கமா இல்லாம ஆம்பளைத்தனமா இருக்காதடின்னு அம்மா திட்டுவாங்க. ||

      இல்லை.அதனால் இல்லை.

      நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்ட பெண்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

      உங்களது எழுத்தில் வரும் சில பிரயோகங்கள் மயிலையில் வசிக்கும் பெண்களுக்கு வருபவை அல்ல;மயிலையில் நான் சில ஆண்டுகள் வசித்திருப்பதோடு இயல்பிலேயே இருக்கும் பலரையும் நுணுகிப் பார்க்கும் எனது ஆர்வத்தில் இதை உறுதியாகச் சொல்வேன்.

      அல்லது நீங்கள் சாந்தோமுக்கு அருகில் வசித்துக் கொண்டு மயிலை என்று சொல்கிறீர்களோ அறியேன்..

      :))

      Delete
    3. அச்சச்சோ... நான் மயிலாப்பூர் மாமின்னு நினைச்சுட்டீங்களா... நான் இப்ப வசிக்கறது கே.கே.நகர்ல. என் சின்ன வயசுலருந்து அப்பாவுக்கு அடிக்கடி ட்ரான்ஸ்பர் ஆகற வேலைங்கறதால பல ஊர்கள் மாறி மாறி படிச்சிருக்கேன். எல்லா ஸ்டாண்டர்ட்லயும் ப்ரெண்ட்ஸ் இருக்கறதால எனக்கு வீட்ல கூட இப்ப ப்ராமின் பாஷை பேச வர்றதில்ல ஸார். அதான் விஷயம்...

      Delete
  17. நாங்கெல்லாம் நெல்லிக்காய சும்மாதான் சாப்பிடுவோம்...இனிமேல்..?

    பிரயோசனமான நெல்லி பதிவு

    ReplyDelete
    Replies
    1. பிரயோசனமான விஷயம்னு பாராட்டின உங்களுக்கு... Many Many Thanks!

      Delete
  18. அறுசுவைத் தொகுப்பு மிக மிக அருமை
    வீட்டில் அனைவரும் படித்து ரசித்தோம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் அனைவரும் படிச்சு ரசிச்சீங்கன்றது என் பாக்கியம் ஸார். உங்களுக்கு ‌ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றியை தெரிவிச்சுக்கறேன்.

      Delete
  19. hello sir/madam
    i read your post interesting and informative. i am doing research on bloggers who use effectively blog for disseminate information.i glad if u wish to participate in my research. if you are interested please contact me through mail. thank u

    ReplyDelete
  20. நெல்லி மகத்துவமும் கர்ணன் தனித்தன்மையும் பிரமாதம்!

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சுப் படிச்சு பிரமாதம்னு சொல்லி சந்தோஷம் தந்த உங்களுக்கு,, My Heartful Thanks!

      Delete
  21. தலைப்பு சொன்னது போலவே கமகமக்கும் கதம்பம்.....

    கர்ணனை கொடைவள்ளல் என புகழ்ந்ததில் எந்த தவறும் இல்லை.... எத்தனை சிறப்பான உள்ளம். முன்பே படித்த கதை என்றாலும் மீண்டும் படிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    கடைசி ஜோக் ரசித்தேன். இப்படி ஆகிவிடக்கூடாதே என்று தான் அம்மா சொல்லி இருப்பாங்க! [அடுத்த உங்க அடுத்த பதிவுக்கான [விடைதெரியாத கேள்விகள்] பதில்... :)))

    ReplyDelete
    Replies
    1. Ha... Ha... அப்படியும் இருக்கலாம்னு தோணிடுச்சு நீங்க சொன்னதும். இனி ஒழுங்கா சமைக்கக் கத்துக்கறேன் ஸார். கர்ணன் கதையையும் கதம்பத்தையும் பிடிச்சிருக்குன்னு சொன்ன உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  22. கம கம கதம்பம் நல்லது. இதை விட நீட்ட வேண்டாம் ஓரளவோட இருப்பது தான் நல்லது என்பது என் அபிப்பிராயம். மேலும் சிறந்துயர நல்வாழ்த்து. நிரஞ்சனா. உமது பெயரை அழுத்தினால் வலை வரவில்லை. முகவரி எடுத்து கூகிள் போய் வந்துள்ளேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!