Pages

Ads 468x60px

28 May 2012

விடை தெரியாக் கேள்விகள்!


ங்கம்மா எனக்கு ஃப்ரெண்ட் மாதிரி. எந்த விஷயம்னாலும் மனம் விட்டுப் பேசக்கூடிய சுதந்திரம் எனக்கு உண்டு. ஒருநாள் அம்மாகூட பேசிட்டிருந்தப்ப, இப்படிச் சொன்னாங்க. ‘‘நிரூ! நீ படிப்பை முடி்க்கப் போற ஸ்டேஜ்ல இருக்க. இனி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடணும் உனக்கு. அதனால கொஞ்சம் கொஞ்சமா சமைக்கக் கத்தக்கோ...’’ அப்படின்னாங்க.

எனக்கு நிஜமாவே புரியலை. ‘‘கல்யாணம் பண்ணிக்கறதுக்கும் நான் சமைக்கக் கத்துக்கறதுக்கும் என்னம்மா சம்பந்தம்?’’னனு நான் கேட்டேன். அம்மா என்னை வினோதமாப் பாத்துட்டு, ‘‘என்னடி நீ... கல்யாணமாகி புருஷன் வீட்டுக்குப் போயிட்டேன்னா, அங்க உள்ளவங்களுக்கு சமைச்சுப் போட வேண்டாமா? அதுக்கு நீ கத்துக்கணும். இல்லையா?’’ன்னாங்க. ‘‘ஏம்மா... ஒரு சுரேஷ் கிட்டயோ, இல்ல ரமேஷ் கிட்டயோ அவங்கம்மா வந்து, நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டடா. கல்யாணம் பண்ற வயசு வந்துடுச்சு. அதனால சமைக்கக் கத்துக்கோன்னு சொல்வாங்களாம்மா? என்னை மட்டும் ஏன் சொல்றே?’’

‘‘லூஸ் மாதிரி உளறாதடி. நான் என்ன உலகத்துல இல்லாததையா சொல்லிட்டேன். இதான்டி நடைமுறை... கல்யாணமாச்சுன்னா நீதான் புருஷன் வீட்டுக்குப் போகணுமே தவிர, அவன் உன் வீட்டுக்கு வரப் போறதில்ல. புரிஞ்சுதா?’’

‘‘அதுலதாம்மா பல விஷயங்கள் புரியலை. கல்யாணமானா என் லைஃபே மாறுது. நான் அவங்க வீட்ல இருந்து வேலக்குப் போய் சம்பாதிச்சுத் தரணும், அவங்க வீட்ல உள்ளவங்ககிட்ட மரி‌யாதையா நடந்துக்கணும், தவிர அவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சும் போடணும். ஆனா ஆம்பளைங்க மட்டும், கல்யாணமாகிடுச்சுன்னா தங்களோட ரொட்டீன்ல எந்த மாற்றமும் இல்லாமதான் இருப்பாங்க. இது எப்படி சரியாகும்?’’

‘‘நாங்க இப்படில்லாம் கேள்வி கேட்டதில்லை. ஆசைப்பட்டு உங்களையெல்லாம் நிறையப் படிக்க வெக்கறோம் பாரு... அதான் இப்படிலலாம் பேசற...’’ன்னாங்க அம்மா.

‘‘அது இல்லம்மா... அனு அககாவைப் பாத்துட்டிருக்க தானே... (அவங்க எங்க குடும்ப நண்பரோட மகள்) விஸ்காம் படிச்சாங்க. நல்ல திறமைசாலி, அருமையான க்ரியேட்டர்.  ஷார்ட் ஃபிலிம் பண்ணினாங்க. சினிமா டைரக்டராகனும்ணு எத்தனை கனவுகள் அவங்களுகு்கு! கல்யாணம் பண்ணி வெச்சப்ப நல்ல சம்பளத்துல வேலைக்குப் போயிட்டுத்தான் இருந்தாங்க. கல்யாணமாகி ஒன் இயர்ல குழந்தை உண்டானதும், ‘பிரசவத்துக்கும், அதுக்கப்புறம் குழந்தையப் பாத்துக்கவும் நிறைய லீவு போடணும். அதனால வேலைய ரிசைன் பண்ணிடு. குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் வேலைக்குப் போயிக்கலாம்’னு அவங்க ஹஸ்பெண்ட் வீட்ல சொன்னாங்க. சரின்னு வேற வழியில்லாம அவங்களும் வேலைய ரிஸைன் பண்ணினாங்க. குழந்தை பிறந்து வளர்ந்து ஒரு வருஷம் முடிஞ்சதும், வேலைக்கு மறுபடி போகலாமான்னு நினைக்கறப்ப, திரும்ப வயித்துல குழந்தை. இப்பக் கேட்டா, ‘ரெண்டு குழந்தைங்களையும் பாத்துக்கிட்டாப் போதும்டி. வேலைக்குப் போற இன்ட்ரஸ்ட்டே போயிடுச்சு’ங்கறாங்க. இப்படி தன்னைத் தொலைச்சுட்டு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழறது அவசியம்தானாம்மா?  கல்யாணம்னு ஒண்ணைப் பண்ணிக்காம பிரம்மச்சாரியாவே இருந்துட்டா ரொம்ப நிம்மதியா இருக்கலாமேன்னுதான் எனக்குத் தோணுது’’ன்னேன்.

இந்த முறை நிஜமாவே அம்மாவுக்கு கடுமையா கோபம் வந்துட்டுது. என் தலையில ஒரு தட்டு தட்டி, ‘‘உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சுடி. இன்னொரு தடவை இப்டில்லாம் உளறிட்டு இருந்தயின்னா தொலைச்சுடுவேன் நிரூ. உனக்கு எப்ப எதைச் செய்யணும்னு எங்களுக்குத் தெரியும். எதித்துப் பேசாம சொன்ன பேச்சைக் கேக்கக் கத்துக்கோ’’ன்னு கோபமாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க. நானும் கோபமா அதுக்கப்புறம் நாலு நாள் அம்மாகூடப் பேசலை. அதுக்கும் மேல கோபம் செல்லுபடியாகாம அம்மாவோட கொஞ்சிட்டுத்தான் இருக்கேன்னாலும் கேள்விகள் மட்டும் எனக்குள்ள சுத்திக்கிட்டேதான் இருக்குது.

நான் நினைச்சதும் பேசினதும் தப்பா? சரியா? நீங்க என்ன நினைக்கறீங்கன்றதைச் சொல்லுங்க ப்ளீஸ்! அதுலருந்தாவது எனக்கு ஒரு தெளிவு கிடைக்குதான்னு பாக்கறேன்!

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

36 comments:

  1. உங்களுடைய சுதந்திரமான சிந்தனையிலிருந்து நீங்கள் நினைப்பது முழுக்க முழுக்க சரியே. ஆனால் இந்திய கலாச்சாரம் என்பது கணவன் மனைவியைச் சார்ந்து அமைந்துள்ளது என்ற கட்டமைப்பைப் புரிந்து கொண்டால் நீங்கள் தேடும் கேள்விக்கான பதில் நேரிடையாகக் கிடைக்கும். இதை ஆணாதிக்க எண்ணத்திலிருந்து சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள், இந்திய சமுக கலாச்சாரத்தில் வாழ்ந்து வரும் ஒரு இளைஞன் ஆகவே இதை கூறுகிறேன்.

    உங்கள் வாழ்க்கை அதை தீர்மானிக்கும் காரணி என்ற எண்ணம் சரி தான், ஆனால் தாய்மையும் குழந்தையும் பெண்ணைச் சார்ந்தது, தாய் வளர்க்காமல் குழந்தையை ஒரு தகப்பனால் நன்றாக ஆரோக்கியமாக வளர்க்க முடியாது. கணவனுக்கு பிரசவ கால விடுப்பு தேவை இல்லை காரணம் அவன் ஆண். ஆனால் ஒரு குடும்பம் முழுக்க முழுக்க பெண்ணை நம்பியும், ஆண் குழந்தையை பார்த்து சமையல் செய்து வேட்டை கவனிப்பவனாக இருப்பவனாக இருந்தால் நடைமுறைச் சிக்கல் பல. புகுந்த வீடு சம்பிரதாயம் உங்களுக்கு விளக்கம் குடுக்கும் அளவிற்கு பக்குவம் எனக்குப் போதாது

    நான் சிறுவன் தான் , உங்கள் சந்தேகம் தீர்க்க என்னால் முடியாது, ஆனால் நான் நடைமுறையில் நான் கவனித்து வந்த்ததி உங்களோடு பகிர்ந்து கொண்டேன். பிழை இருப்பின் எடுத்துக் கூறவும் திருத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை உணர்கிறேன் நான். உங்களின் எண்ணத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஃப்ரெண்ட்.

      Delete
  2. உங்கள் மனதில் தோண்டியதை அப்படியே பதிவாகிய விதம் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உங்களையெல்லாம் விட நல்ல துணை உண்டா? வாழ்த்தியதற்கு என் நன்றி.

      Delete
  3. அழகான பதிவு நிரூ.. எம்மனதின் எண்ணங்கள் எழுத்துரு பெறும் போது அவை என்னும் அழகாகும். அம்மாவும் நீங்களும் நண்பர்கள் போல பழகுகின்றீர்கள் என்றீர்களே மிக சந்தோஷம். எல்லா அம்மாமாரும் இப்படி இருந்தால் பெண்கள தவறுவது மிக குறையும் நிரூ ......

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எஸ்தர். என் பெற்றோர் எனக்குக் கிடைத்த வரம்தான். மிக்க நன்றிம்மா...

      Delete
  4. வேணாம்ங்க...இந்த விபரீதம்.ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து வாழ்வதே இல்லறம் என்றாகி விட்டது.ஒருவேளை உங்களுக்கு நல்லா சமைச்சு போட கூடிய அளவில் யாரவது மாட்டினா சந்தோசம் தான்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சமைச்சுப் போடணும்னு நான் சொல்ல வரலை ஸார். என்னால முடியாதப்ப செய்யத் தெரிஞ்சிருக்கணும்கறதுதான் எனக்கு ஆசை. அமைஞ்சா லக்கிதான். உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  5. உங்களின்
    சில பதிவுகள்தான் படித்து இருக்கிறேன்
    அதிலேயே புரிந்துகொண்டேன் உங்கள் எழுத்து நடையும்
    சுவராசியமாக கொண்டுசெல்லும் வித்தையும் அழகு அற்புதம்

    அம்மாவுடனான (நட்பு) உரையாடல் அழகு
    உண்மையில் அம்மா பிள்ளை உறவு இப்படித்தான் இருக்கவேண்டும்
    தற்பொழுதைய பெண்கள் விரும்புவதும் இதுதான்
    அம்மா சொன்னதில் தவறு இல்லை
    உங்களின் கண்ணோட்டப் பார்வையும் தவறில்லை காரணம்
    இது நம் நாட்டின் நடைமுறைகள்

    ஒரு அக்காவின் உதாரணத்திற்காக
    பிரம்மச்ச்ரியாக இருக்கப் வேண்டாம் அது அழகல்ல சகோ

    அம்மா உடனான உங்களுக்கு இருக்கும் இந்த நல்ல நட்பு
    உங்களுக்கு வரும் பாட்னர் அவங்கட்டையும் தொடர்ந்தால் வாழ்க்கை ரெம்ப ஈசி
    நம் வாழ்க்கை நாம் அமைத்து கொள்வதில்தான் இருக்கு

    நமக்கான தகுந்த தருணங்கள் பார்த் திருமணமும் பின் முதல் குழந்தையும்
    இரண்டாம் குழந்தைக்கு சிறு இடைவெளியும் இப்படி இருந்தால்
    உங்கள் வேலைக்கும் நீங்கள் வாழ நினைக்கும் வாழ்கையும் உங்களுக்கு கிடைக்கும்

    அந்த அக்க போல் நீங்களும் உதரணமா இருக்க வாய்ப்பு இருக்காது சகோ

    நிறைய எழுதிவிட்டேன் தவறு இருப்பின் பொறுத்துக்கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. அம்மாவுடன் இருக்கும் இந்த நல்ல நட்பு எனக்கு வரும் பார்ட்னருடனும் தொடர்ந்தால் வாழ்க்கை ரொம்ப ஈசி என்கிற உங்களின் வார்த்தைகள் எனக்குத் தெம்பா இருக்கு. அன்புக்கு ஏங்கும் என்னால் அப்படி அமைச்சுக்க முடியும்னு நம்பிக்கை நிறைய இருக்கு. எனக்காக அக்கறையாய் கருத்துச் சொன்ன உங்களுக்கு என்னோட மகிழ்வான நன்றி!

      Delete
  6. அப்பவே பின்னூட்டம் போட ஆரம்பித்தேன். பவர்கட் ஆகிவிட்டது.
    நிரூமா அம்மாவும் நீயும் சரியான விஷயங்களைத்தான் யோசிக்கிறீர்கள்.
    படிப்பு முடித்துக் கொண்டு வேலையும் கிடைத்ததும் வரன் பார்க்க ஆரம்பித்தால் உங்கள் மனதுக்குப் பிடித்த உங்கள் எண்ணங்களோடு ஒத்துப் போகிறவரைக் கல்யாணம் செய்துக்கோங்கமா. இந்த மாதிரி நல்ல பொண்ணு யாருக்குக் கிடைக்கும்:)
    நல்ல மாமியார்,நல்ல மாப்பிள்ளை கிடைக்க வாழ்த்துகள்.
    வாழ்வில் ஜோடி அவசியம்டா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்வில் ஜோடி அவசியம்னு அனுபவப்பட்ட நீங்க சொன்னால் ரொம்பவே சரியா இருக்கும்னு மனப்பூர்வமா நம்பறேன். அதனால நீங்க சொன்னபடியே நடக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன் வல்லிம்மா. My Heartful Thanks to you!

      Delete
  7. நிரூ மா முதலில் கைய குடுங்க இப்படி ஒரு அம்மா பெண்ணா இப்படிதான் இருக்கணும் எல்லா விசயங்களையும் பேசி ஒரு முடிவுக்கு வரணும் . என்னைய கேட்ட அம்மா சொல்ற பேச்சை கேளுங்க அவங்க கிட்ட உங்க விருப்பதை சொல்லுங்க பிறகு அமையும் வாழ்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்வது நம் செயலில் தான் உள்ளது விட்டுக்கொடுத்து போவது நல்லது . ஊரோடு ஒத்துப்போகனும் என்று பழமொழி இருக்கு அதுக்கு ஏற்ற மாதிரி நாமும் நாம காலாச்சார முறைப்படி வாழனும் இது என்னோட கருத்து சரியா மா .

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்‌கைய சந்தோஷமாக அமைத்துக் கொள்வது நம்ம செயலில் தான் இருக்குன்னு நீங்க சொல்லியிருக்கறதை ஏத்துக்கறேன்க்கா. விட்டுக் கொடுத்துப் போகவும் பழகிக்கிட்டவள்தான் நான். அதனால எனக்கு ‌தைரியம் தந்த கருத்தை என் மேல அன்போட சொன்ன உங்களுக்கு Many Many Thanks!

      Delete
  8. Dear sister via mobile so Thaminkilish dont mistake me . Namathu kalacharamum panpadum Thirumanathirku sila kattupadukalai vithithu irukirathu Ilamaiel namku thontrum fredom thinking naam seivathu Sari Entru thontra vaikum but muthumaiel namaku Oru thunai Dhevai entru unarum pothu life nammai vidu enko poividum . So Respect ur parents advice .Nalla kanavanai perends helputan thernthedu Kalyanam katiko but dont fall in love .Its my kind request sister. Marakma kalyanathirku kupuduma ok.

    ReplyDelete
    Replies
    1. இல்லை குரு ஸார்... காதல்ங்கற சமாச்சாரமே எனக்குப் பிடிக்காத ஒண்ணு. அதுபக்கமே போக மாட்டேன். அப்பா அம்மாவை மதிக்கணும்ங்கற உங்க கருத்தை முழுமையா ஏத்துக்கறேன். எனக்காய் அன்புடன் கருத்துச் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி. (இன்னும் சில வருஷங்கள் ஆகும். நிச்சயமா உங்களுக்கு அழைப்பு உண்டு)

      Delete
  9. வணக்கம் சகோதரி..
    விடையுள்ள கேள்விகள் தான்
    விடைகள் சிலரது வாழ்வில்
    கண்ணாமூச்சி விளையாடுகிறது...

    திருமணம் என்ற பந்தத்திற்கு பின்னர்
    பல பெண்கள் தங்கள் இயல்பை இழந்து
    குடும்பம் என்ற சிறு வட்டத்துக்குள் அடங்கிவிடுகிறார்கள்
    மற்றும் அடக்கப் படுகிறார்கள் என்பது மிகவும் உண்மை...

    ஆனால் அதையும் தாண்டி கணவனின் துணையுடன்
    வாழ்வில் சாதித்துக் காட்டிய பல மங்கையர் மாணிக்கங்கள்
    இருக்கிறார்கள்.. நினைவில் கொள்ளவும்...

    சரியான துணை உங்களுக்கு அமையட்டும்
    மென்மேலும் தங்கள் வாழ்வும் வளமும்
    தங்கள் எண்ணங்களும் அதற்கான வெற்றிகளும் பெருகட்டும்...

    ReplyDelete
    Replies
    1. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுலருந்து பல உதாரணங்கள் பத்தி தெரிஞ்சு வெச்சிருக்கேன். அந்த மாதிரி அமையறது அபூர்வமாச்சே. நமக்கு அமையணுமேங்கறதுதான் என் கவலை. ‘சரியான துணை உங்களுக்கு அமையட்டும்’கற உங்க வாழ்த்தினாலேயே நல்லதே நடந்திடும் அண்ணா! My Heartful Thanks to you!

      Delete
  10. நிரூ அம்மா சொல்லும்படி கேட்டுக்கொண்டால் நல்லதுடா. நீ சொல்லுவது வெறும் பேச்சிக் கென்றாள் நல்ல இருக்கும் அது நடைமுறை வாழ்க்கைக்கு சரி வராதுடா . நிரூ நீ சமையல் கற்றுக்கொண்டால் அது உனக்குத்தான் பெருமை. ஏனென்றால் சமையல் என்பது ஒரு வேலை அல்ல அதுவும் ஒரு கலைதான் . நிருவுக்கு அனைத்து கலைகளும் தெரிந்தால் தானே அம்மாவும் என்னுடைய பொண்ணுக்கு அனைத்து கலைகளும் தெரியும் என்று பெருமையுடன் சொல்லமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. இப்பல்லாம் நானாவும் உன்னுடைய மற்றும் சவிதாவுடைய பதிவுகள் பார்த்தும் சமையல் கலையில இறங்கிட்டேன் விஜிம்மா.

      Delete
  11. நிரூம்மா நீ கூறியப்படி மாப்பிள்ளை நம்முடைய வீட்டிற்கு வருவதில்லைதான் உண்மை. அப்படியே நீ கூறும் படி நடந்தாலும் ......... பெண்களுக்கு உள்ள பொருமையும் சகிப்புத்தன்மையும் ஆண்களுக்கு இருக்காது.

    நிரூ கல்யாணத்திற்கு பிறகு எல்லோரும் கூறும்படி கடினமான வாழ்வோ , வேலைக்கு போக கூடாது என்ற போக்கோ கிடையாது . கிடைத்த வாழ்க்கையில் நாம் எப்படி கடந்து செல்கிறோமோ அது மாதிரி மகிழ்ச்சியாக இருக்கும் ...... அதனால நிரூ கல்யாணம் செய்து கொள்ளலாம் .

    நிரூவுக்கு நல்ல துணைவன் கிடைக்க வேண்டும். வாழ்க ........... என்னுடைய வாழ்த்துக்கள் நிரூ...........

    ReplyDelete
    Replies
    1. என் மீது அக்கறை கொண்டு நீ சொன்ன நல்ல ஆலோசனையை நான் சந்தோஷமா ஏத்துக்கறேன் விஜிம்மா. மிக்க நன்றி.

      Delete
  12. நிரஞ்சனா நீ வளர்ந்த குழந்தை என்பது புரிகிறது இப்போதெல்லாம் பெண் திருமணதிற்கு பின் மாமியார் வீடு செல்வது மாறி வருகிறது மாப்பிள்ளை வந்து நம்ம வீட்ல தன்கிடரங்க ஆகவே உங்களுக்கு அப்படி ஒரு ஆள் கிடைப்பர்ர் அப்படி இல்லைஎன்ற்றலும் கவலை வேண்டாம் பெண்கள் நாம் எப்போதும் யாரையும் சார்ந்து இல்லை நம்மை சார்ந்துதான் எல்லோரும் இருகிறார்கள ஆகவே நமக்கான வாழ்கையை நாம் வாழ கற்றுகொள்வோம் ..........எதையும் அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளகூடிய மனநிலையை வளர்துகொள்ளலாம் ...........பிரச்சினைகளை சமாளிக்க கற்றுக்கொண்டு கற்றுகொடுகலாம் ......திருமணம் என்பது அவசியமான ஓன்று அதை பற்றி தீவிர யோசனை இல்லாமல் நடப்பது நடக்கும் நடக்காதது நடக்காது என்ற சூப்பர் ஸ்டாரின் வார்தைகினங்க ...............ஏற்றுகொள்வோம் மேலும் எது நடந்ததோ அது நன்றாக நடந்தது எது நடக்குமோ அதுவும் நாற்றாக நடக்கும் என்ற கீதை வழியில் என்னத்தை செயலை போகவிட்டு வேலையை கவனிப்போம் ( என்ன குட்டி பாப்பாவுக்கு புரிந்ததா?)

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகையாய் வந்திருக்கற உங்களுக்கு என் நல்வரவு சரளாக்கா. நாம் யாரையும் சார்ந்தில்லை என்றும், நல்லதையே எதிர்பார்ப்போம் என்கிற உங்களின் என்மீது அன்புடன் கூறப்பட்ட கருத்தும் இந்தக் குட்டிப் பொண்ணுக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு. My Heartful Thanks to you!

      Delete
  13. உங்களது சுதந்திரமான எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்!!!
    உங்கள் சுதந்திரம் பிறரை பாதிக்காதவரைக்கும், அது தவறு என கருத முடியாது!! அவ்வகையில் எந்த முடிவாகிலும் தெளிவுடனும், தொலை நோக்க சிந்தனையுடனும் எடுப்பது சிறந்தது!

    உங்களது தனிப்பட்ட விருப்பம், அம்மாவின் நியாமான விருப்பம்
    இரண்டையும் சம விகிதத்தில் ஏற்றுகொள்ள உங்களால் முடியாது எனில்!!

    ஒன்றை இழக்கத்தான் வேண்டும்!! அது என்ன என்பது உங்கள் தெளிவான முடிவில் .....

    சில இலக்குகளை அடைய இழப்புகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!!!

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை இரண்டையும் சம விகிதத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் நான் எடுத்திருக்கும் முடிவு. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஃப்ரெண்ட்!

      Delete
  14. ஃபிரெண்ட்.... உனக்கு கல்யாண வயசு வந்துடுச்சா...?
    கேட்கவே ஒரே சிரிப்பா இருக்குது.

    நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா...?
    காதை கொண்டா... யாரிடமும் சொல்லாதே...

    வந்துப்பா... கல்யாணம் ஆனதும் உன் புருஷனை
    வீட்டு வேலையெல்லாம் செய்யச் சொல்லிட்டு
    நீ வேலைக்கு போ.
    அவர் நானும் தான் வேலைக்கு போவேன் என்று
    அடம்பிடித்தால் போனால் போவுதுன்னு வேலைக்கு அனுப்பு.

    குழந்தைக்குட்டியெல்லாம் ஒரு பாரமோ தடைகல்லோ கிடையாது.
    நம் நாட்டு இந்திராகாந்தி பிள்ளைபெற்றவர் தான்.
    தன்னம்பிக்கை இருந்தால் போதும்.
    தவிட்டையும் தங்கமாக்லாம்.
    தைரியமா கல்யாணம் பண்ணிக்கொண்டு தன்னிலையை விட்டுக்கொடுக்காமல் இருந்தாலே போதும்.
    உன் வாழ்க்கை உன் கையில் தான் நிரஞ்சனா.

    பலபேருக்கு உதவுவது போல பதிவிட்டமைக்கு
    வாழ்த்துக்கள்ப்பா.

    ReplyDelete
    Replies
    1. இன்னும இல்லப்பா... சில வருஷம் ஆகும். இது பத்தின பேச்சு வந்ததால என் மனசுல தோணினதை உடனே பேசிட்டேன். அப்பவும் குழப்பம் தெளியாததாலதான் உங்க மாதிரி நட்புகள்ட்ட கேட்டேன். Now. I'm Cleared! தன்னிலைய விட்டுக் கொடுக்காம என்னால இருக்க முடியும்னு நம்பிக்கை வந்துடுச்சு ஃப்ரெண்ட்! அதை விதைச்ச உங்களுக்கு சந்தோஷத்தோட என் ந்ன்றி.

      Delete
  15. பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள். இவ்வளவு தெளிவா நினைப்பது, மிகவும் நல்ல முன்னேற்றம். பல யுவதிகளும் உங்களை மாதிரியே சிந்திப்பது, சமூகத்துக்கு நல்லது.

    ReplyDelete
    Replies
    1. என்னை உற்சாகப்படுத்தும் நல்ல கருத்துச் சொன்ன உங்களுக்கு... My Hearful Thanks!

      Delete
  16. நிரஞ்சனாக்குட்டி....இதுதான் எங்கள் அம்மாக்களின் குணம்.மனம் விட்டுக் கேட்கிற கேள்விகளுக்கு மனம் விட்டே பதில் சொல்றது நல்லது.கேள்வி கேட்கக்கூடிய வயது இருந்தால் பதிலைப் புரியும் வயதும் இருக்கும்.நல்லதா கெட்டதாவென எமக்குள் ஒரு முடிவு எடுக்கவும் நல்ல சந்தர்ப்பம்.’உனக்கொன்றும் தெரியாது.அதற்கான வயசில்லை..’என்று சொல்லிச் சொல்லியே குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்ட வைத்துவிடுவார்கள்.....உடைத்தெறிவோம்......பிடியுங்கோ சொக்லேட்.திட்டு வாங்கினாலும் கேக்க நினைக்கிறதை கேட்டுப்போடுங்கோ.பதில் தராவிட்டாலும் அம்மா யோசிப்பா.அதற்காக ஏதாவது ஒரு உதாரணச் சம்பவங்களை வச்சுக்கொண்டு அதுதான் இயல்பென்று அடம் பிடிக்கக்கூடாது....சரியோ !

    ReplyDelete
    Replies
    1. நல்லாப் புரிஞ்சதுக்கா. கேள்விகள் கேட்டால்தான் பதில் கிடைக்கும், தெளிவு பிறக்கும். ஆனா அதுக்காக நான் புடிச்ச முயலுக்கு மூணே கால்ன்னு நான் இருக்க மாட்டேன். சரியா..! உங்க கையா சொக்லேட் கிடைக்கறப்பல்லம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. My Heartful Thanks to you!

      Delete
  17. நல்ல அம்மா நல்ல பொண்ணு.... :)

    யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க, நிறைய யோசிச்சாலும் கஷ்டம் தான் நிரு.. ஒரே ஒரு உதாரணம் வைத்து Spinster ஆக இருக்க நினைப்பது சரியல்ல நிரு..

    அம்மா சொன்னா சரியாதான் இருக்கும்...

    நல்ல துணை கிடைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சார்... என் மேல அக்கறையோட அழகா எடுத்துச் சொல்லியிருக்கீங்க. அதைவிட நல்ல துணை கிடைக்க நீங்க வாழ்த்தினது மனசுக்கு சந்தோஷமாம இருக்குது... Many Many Thanks to you!

      Delete
  18. தோழி சரளாவின் வலைப்பக்கத்தில் உங்கள் பதிவைப் பார்த்து உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன். இளைய தலைமுறைக்கேயான் சிந்தனை இது. என்னைப் பொறுத்த வரை இன்றைய தலைமுறை ஆண்கள் நல்ல முற்போக்கு சிந்தனையுள்ளவர்களாக உள்ளனர். புரிந்து அப்படி இருக்கிறார்களா அல்லது காலத்தின் கட்டாயம் அந்தப் புரிதலுக்கு அவர்களை கொண்டு சென்று விட்ட்தா எனத் தெரியவில்லை. ஏதோ ஒன்று, வீட்டு வேலையை பகிர்தல் என்பதை ஒரு ஈகோவாக எண்ணாமல் நம் வீடு என்ற அருகாமை ,இருவரும் வேலைக்குச் செல்கிறோம் வேலையைப் பகிர்ந்து கொள்வோம் என்ற புரிதல் இன்றைய சமுதாயத்திடம் அதிகம். மேலும் பெரியார் சொல்லியபடி பெண்களுடைய கல்வி இந்த சமூகத்திற்கு பகிரப்படவேண்டும் எனவே அடுக்களையை விட்டு பெண்கள் வெளியே வரவேண்டும் அந்த வேலைகளுக்கு ஆள் போட்டுக் கொள்ளலாம். அவ்ர் கூறியது 80 வருடங்களுக்கு முன்னர். இன்று கூட செயல்படுத்த முடியாதா என்ன? அதே போல் சமூகத்திற்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் குழ்ந்தை பிறப்பும் நம் கையில் தானே உள்ளது. அளவோடு பெற்று வளமாக வாழலாம். வாழ்க்கையில் ஆண் துணை அவசியம். கணவனாக,நண்பனாக,நம் எண்ணங்களை பகிர்பவனாக. ஒரு சில சிக்கல்களைக் கொண்டு திருமணம் குறித்த தவறான எண்ணம் கொள்ள வேண்டாம். எங்கு தான் சிக்கல்கள் இல்லை. அதனைப் பிரித்தெடுக்கும் பக்குவம்தான் தேவை.

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!